(Reading time: 13 - 25 minutes)

04. என்னுயிரே உனக்காக - சகி

காலையில் விடியும் கதிரவன் இன்பம்,துன்பம்,கஷ்டம்,நஷ்டம் என பல சமன்பாடுகளை மனிதன் போடுவதற்காக அளிப்பான்,வாழ்க்கையின் சுவாரியத்தை அனுபவிக்க ஆசை கொள்பவர்கள் சமன்பாடுகளை தீர்த்து விடுகின்றனர்.ஆனால்,அதை வெறுப்பவர்கள் நிதம் கவலையில் வசிக்கின்றனர்.

Ennuyire unakkaga

நேற்று இரவு சம்பவமானது,சரண் மது இருவருக்குள்ளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.மதுபாலா அன்று மருத்துவமனைக்கு செல்லவில்லை.அவளை நினைத்தால் அவளுக்கே பிடிக்கவில்லை.இத்தனை வருடங்களாக அவனை வெறுத்து விட்டதாய் தானே எண்ணியிருந்தாள்?ஆனால்,நேற்று இரவு அவன் அவ்வாறு நடந்துக் கொண்ட விதத்திற்கு ,அவள் மறுப்பேதும் கூறவில்லை ஏன்?இன்னும் அவன் மேல் உண்டான அன்பு அழியவில்லையா??சிறு வயதில் விழுந்த விதை இன்று விருட்சமாகி இம்சிக்கின்றதே!இவ்வளவு மன போராட்டங்களை மீறியும் அவள் மனம் அவன் உடல் நிலை சரியாகி இருக்குமா?என்பதையும் சிந்தித்தது.என்ன விந்தையடா?இந்த காதல்....சொர்க்கம்,நரகம் இரண்டுக்கும் இடையே உள்ள சோலையா?நீருக்கும்,நெருப்பும் விழுந்த மாலையா?விருப்புக்கும்,வெறுப்புக்கும் இருக்கும் சாலையா??புரியாத புதிரே அது!!!!இங்கே இப்படி என்றால்,அங்கே....இரவு நடந்த நிகழ்வு அவளுக்கோ துன்பம்,இவனுக்கோ இனபமாய் இருந்தது.பல ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அவளது அந்த நெருக்கம் அவனுள் மழைச் சாரலை வீசியது.ஆனாலும்,அவளது நடவடிக்கை துன்பத்தை தந்தது.அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று மனம் ஏங்கியது.அவன் நேற்று அவ்வாறு நடந்துக் கொள்ளாமல் இருந்தால்,பரவாயில்லை.அவளும் பெண் தானே! தவறையும் செய்துவிட்டு,தவறாகவும் நடந்துக் கொண்டால் அவள் என்ன செய்வாள்?விலகி தான் செய்வாள்.ஆனால்,12 வருட இடைவேளை விட்டு,காதலியை காணும் வாலிபன் செய்வதையே தான் அவனும் செய்தான்.அவனும் ஆண்மகன் தானே!!அடடா!!!காதல் காதலிப்பவர்களை மட்டுமில்லை.அவர்களை சுற்றி இருப்பவர்களை அல்லவா சேர்த்து குழப்புக்கிறது!!!!

"மச்சான்..."-நிரஞ்சன் அவனை நான்காவது முறையாக அழைத்தான்.

"ஆ...என்ன?"

"என்னதா?என்ன ரகு இது?ஏன்டா...மனச்சாட்சியை தொட்டு சொல்லு நான் நாலு முறை மச்சான் மச்சான்னு கத்தினது,உனக்கு கேட்கலை?"

"எனக்கு மனச்சாட்சின்னு எதுவும் இல்லை."

"சரிதான்....நீ என்ன லூசா?எங்கிருந்து பிடிச்சிங்க இவனை ஹிட்லருக்கு டூப் போட்டா மாதிரியே பேசுறான்??"-அதற்குள் ரகு,

"உன்னை எங்கே இருந்து பிடிச்சாங்களோ!அங்கே தான் அவனையும் பிடிச்சாங்க."

"ஐயோ!! செம காமெடி ஆனா,சிரிப்பு வரலை."

"சும்மா இருடா...!"-என்று சரண் அருகில் அமர்ந்தான் ரகு.

"உடம்பு எப்படிடா இருக்கு??"

"பரவாயில்லை..."-ரகு அவன் பேச்சை நம்பாது அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.அது அனலாய் தகித்தது.

"டேய்! என்னடா இது??இப்படி சுடுது?"

"அப்படியா மச்சான்?அப்போ கமலாம்மாவை இவன் மேலே வைச்சு சமையல் செய்ய சொல்லலாமா?"-நிரஞ்சன்.

"டேய்!"

"சரி....டேய்!கொஞ்ச நேரம் உன் திரு வாயை மூடிக்கோ"-என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான் நிரஞ்சன்.

"என்ன ஆதி??என்ன பண்ணுது??"

"ஒண்ணுமில்லை..."

"டாக்டர்கிட்ட போகலாமா?"

"................"

"நேற்று வந்த டாக்டர் இல்லை.வேற டாக்டர்கிட்ட போகலாமா??"

"வேணாம்."

"ஆதி...உனக்கு என்னதான்டா தோணுது,உனக்கும்,மதுக்கும் என்ன தான் பிரச்சனை..."

"................"

"இப்போ சொல்லப் போறியா??இல்லையா??"-சரண் அப்படியே சாய்ந்து,கண்களை மூடிக் கொண்டான்.ரகுவும்,நிரஞ்சனும் பொறுமை இழந்து கிளம்பும் போது.

"எதைப்பற்றி சொல்ல சொல்ற ரகு?"-என்றான் சரண்.இருவரும் அப்படியே அமர்ந்தனர்.

"மதுவுக்கும்,உனக்கும் பிரச்சனை தான் என்ன?"

"உனக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும்.அதாவது,12 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது,என் அம்மா இறந்தது...ஆனா,எனக்கும்,அம்மூக்கும் நடந்த விஷயத்தை மட்டும் நான் யாரிடமும் சொன்னதில்லை..காரணம்,நான் அப்போ மனுஷனாகவே இல்லை....அன்னிக்கு "என்று ஆரம்பித்தான்.

"தி....ஆதி....எங்கேடா இருக்க?"-என்று தேடி வந்தாள் மது.தாயை இழந்த சோகத்தில்

சோகமே உருவாய் அமர்ந்திருந்த அவனைக் கண்டாள்.

"ஆதி...என்னடா ஆச்சு??"

"அம்மூ....என்னால அம்மாவை மறக்க முடியலைடி..."-அவள் செய்வதறியாது திகைத்தாள்.

"ஆதி...நடந்ததை நினைத்து கவலைப்பட்டு என்ன பயன்??"

"....................."

"உன்னைவிட்டு யாரும் போகலைடா...ஆன்ட்டி உன் கூட தான் இருக்காங்க...நீ அழுதா அவங்களும் அழுவாங்கடா...!"

"என்னால முடியலைடி..."

"............"

"அம்மூ.."

"ம்...."

"உன்கிட்ட ஒண்ணுக் கேட்கட்டா?"

"என்னடா?"

"நான் கொஞ்ச நேரம் உன்னை கட்டிப் பிடிச்சிக்கட்டா,எனக்கு ஏதாவது கஷ்டம்னா அம்மாவை கட்டிப்பிடிச்சிப்பேன்...இன்னிக்கு அவங்க இல்லை...."

"லூசு...என்ன நீ..?வா...!"-அவள் அவனை மிருதுவாக அணைத்துக் கொண்டாள்.அந்த அணைப்பானது,என் உயிரே உனக்காக தானே! என்று கூறாமல் கூறியது.சிறிது நேரம் கழித்து,அவனே அவளிடமிருந்து விலகினான்.

"தேங்க்ஸ் அம்மூ.."

"என்னடா....நீ?என்கிட்ட போய் தேங்க்ஸ் சொல்லிட்டு..?"

".................."

"எதாவது சொல்லணும்னு நினைக்கிறீயா??"

"ஆமா...."

"சொல்லுடா..."

"நீ கடைசி வரைக்கும் என் கூடவே இருப்பியா?என் விட்டு போக மாட்டல்ல?"

"என்னடா நீ??நான் ஏன் உன்னைவிட்டு போக போறேன்??எங்கேயும் போக மாட்டேன்..ரகு,நிரஞ்சன் எல்லாம் எங்கே?"

"அந்த வீட்டில இருக்காங்க..."

"இங்கே?"

"ரகுவும்,நிரஞ்சனும் வருவாங்க.."

"சாப்பிட்டியா??"

"இல்லை..."

"ஏன்டா??"

"பிடிக்கலை.."

"லூசு...பிடிக்கலைன்னா??சாப்பிட மாட்டியா? எழுந்திரு.."

"வேணாம்டி.."

"வாடா..!"-என்று அவனை எழுப்பி டைனிங் டேபிளில் அமர வைத்து,சாப்பாடு போட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.