(Reading time: 11 - 22 minutes)

01. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

“நீ என் வாழ்வில் வரும் வரை

காதலைத் திட்டிக் கொண்டிருந்தேன்

பைத்தியக்காரத்தனம் என்று

நீ என் வாழ்வில் வந்த பின்பும் கூட திட்டுகிறேன்

என்னை பைத்தியமாக்கி விட்டதென்று!!!

Nenjamellam kathal

லோ கோவை!! டைம் சரியா 10 மணி, இந்த இனிமையான இரவு நேரத்தில உங்க இதயங்கள தட்டி எழுப்பி காதல் உலகத்துக்கு கொண்டு போக வந்துருக்கேன் நான் உங்க மதுமிதா நீங்க கேட்டுட்டு இருக்கறது ‘நெஞ்சமெல்லாம் காதல்’ உங்க Chillzee FM-இல் மட்டும்

நாள் முழுக்க வேலை செஞ்சு களைச்சு அப்பாடான்னு படுக்கும் போது, காதுகளுக்கு இனிமையா காதல் பாடல்களும் கூடவே காதல் கதைகளும் கேட்டா எவ்வளவு நல்லா இருக்கும், அந்த சுகமான அனுபவத்த உங்களுக்கு கொடுக்க தான் நான் உங்களோட இணைஞ்சிருக்கேன். இன்னைக்கு நிகழ்ச்சியில காதல பத்தி நம்ம பேசறதுக்கு முன்னாடி 2 காதல் பாடல்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில வருது கேட்டு ரசிங்க..... நீங்க கேட்டுட்டு இருக்கிறது chillzee FM  இது செம cooooolllll… Stay tuned….”

அன்றைய நிகழ்ச்சியை தன் இனிமையான குரலில் வழக்கம் போல் துவங்கி விட்டு, முன்பே தேர்வு செய்த இளையராஜாவின் பாடலை ஓட விட்டாள் மதுமிதா (கண்டு பிடிச்சுட்டீங்களா, மது தாங்க நம்ம ஹீரோயின்).

“காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்" என்று பாடல் ஒலிக்க அவளையும் மீறி ஏனோ நாட்கள் பின்னால் நகர்ந்தன அவள் மனத்திரையில், அந்த பாடல் முடியும் வரை சிந்தனையில் மூழ்கி கண் மூடி இருந்தவளை அவளுடன் பணி புரியும்  மேகா பார்த்துக் கொண்டிருந்தாள். அழகிய முகம் கலையிழந்து சிந்தனையின் ரேகைகள் ஓட வாடிய மலர் போல் அமர்ந்திருந்தவளை பார்க்கவே மேகாவின் மனதிற்குள் ஏதோ பிசைந்தது.அடுத்த பாடல் முடியும் தருவாயில் மேகா தான் மதுவை நிஜ உலகிற்கு கொண்டு வர வேண்டியதாயிற்று.

" என்ன இன்னைக்கும் கனவா? நீ திருந்தவே மாட்டியா டி , நானும் நீ இந்த FM ல சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன் எப்பவும் இப்படி தான் இருக்க, ஏன் டா புரிஞ்சுக்க மாட்டேங்கிற இதுல இருந்து வெளிய வா ப்ளீஸ்"

“-------“

" உன் பெர்சனல் விஷயம் தான் ஆனா என் அழகான Friend இப்படி இருக்கறது என்னால பாக்க முடியல டி அதான் சொன்னேன் அப்புறம் உன் இஷ்டம்"

"........."

" இனிமேல் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் மா தாயே ஆள விடு பை பை"

கோவமாக கிளம்ப எத்தனித்த மேகாவின் கையை அழுந்த பற்றி " ஐ யம் ரியலி சாரி டா சும்மா விளையாடினேன், உனக்கு இல்லாத உரிமை யாருக்கு டா இருக்கு?"

"---------"

"மேடம்க்கு கோபம் வந்துடுச்சா அதான் சாரி கேட்டுட்டேன்ல நான் உன்கூட விளையாட கூடாதா?"

" கோபம் அதனால இல்லடி இனி கனவுலகத்தில இருக்காதா டி, மார்னிங் ஆன்ட்டி கால் பண்ணங்க உன்ன நினைச்சு ரொம்ப கவலை படறாங்க ப்ளீஸ் அவங்களுக்காக நீ உன்ன மாத்திகலாம்ல"

" அவங்களுக்கு தான் என் மனசு புரியல என்கூடவே இருக்க  உனக்கு கூடவாடி என்ன புரிஞ்சுக்க முடியல"

மேகா எதையோ பேச வாயெடுக்க, ஷோ முடிஞ்சு பேசலாம் வெளியில வெயிட் பண்ணு என்று விட்டு தன் வேலையை தொடர்ந்தால் மது.

ரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவள் வேலை அனைத்தும் முடித்து விட்டு மது வந்த போது மேகா பால்கனியில் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

யாரென்று சைகையிலே கேட்டாள் மது, "அம்மா... ஒரு 2 மினிட்ஸ் வந்துடறேன்" என்று அலைபேசியில் மூழ்கினால் மேகா. எப்படியும் அவள் வர நேரம் ஆகும் என்று மதுவிற்கு நன்றாகவே தெரியும், அதனால் அருகில் போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

மேகா சொன்னதையும் காலையில் தன் அப்பா சொன்னதையும் அசை போட துவங்கினாள். அப்பாவும் வெகு நாட்களாக இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆனால் நான் தான் என்ன செய்ய முடியும் தன்னையே நொந்து கொண்டாள் மது.

"அம்மா பாவம், அவங்கள ரொம்பவும் கஷ்ட படுத்தரேன், இனியாவுது ஒழுங்கா இருக்கணும்" நினைக்கும் போதே அவள் மனசாட்சி உறுத்தியது. " இதே உறுதி மொழிய எத்தன தடவை தான் நீ எடுப்பியோ" என்று ஏளனம் செய்வது போல் தோன்றியது மதுவிற்கு.

பழைய நினைவுகளையும் குழப்பங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டு மேகாவை பார்த்தாள், அவளும் பேசி முடித்து விட்டு மதுவின் அருகில் வந்தாள்.

" போலாமா” என்றபடி தன் பேக்கை எடுத்துக் கொண்டு எழுந்தாள் மது. “போலாம், ஆனால் அதுக்கு முன்னாடி உன்கிட்ட நிறைய பேசணும் ஆனால் இங்க வேண்டாம் வா கான்டீன் போகலாம்” என்று மதிவின் பதிலுக்கு கூட காத்திராமல் நடந்தால் மேகா.

காண்டீனிற்கு சென்று இருவரும் காபியை வாங்கிக் கொண்டு அமர்ந்தனர். ஒன்றுமே பேசாமல் காபி கப்பை தன விரல்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள் மது. மேகா எதை பற்றி பேச போகிறாள் என்று அவளுக்கே தெரியும் அதற்கான பதில் கூட தயாராக தான் வைத்திருந்தாள், இருந்தாலும் அவளே தொடங்கட்டும் என்று மௌனமாக இருந்தாள்.

ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த மதுவை பார்க்க பார்க்க மெகாவிற்கு கோவமும் கவலையும் அதிகமானது. அவளைத் திட்டவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் இந்த சில மாதங்களாய் அவள் திணறிக் கொண்டு  இருக்கிறாள். அவளை மாற்ற தனக்கு தெரிந்த யுக்திகளை எல்லாம் கையாண்டு இறுதியில் இதோ இந்த முடிவை மனமில்லாமல் தான் எடுத்திருக்கிறாள்.

" மது, நான் பேசறது கேட்டு கவலை படாத டா"

"........." ( "தினமும் பேசறது தான இன்னைக்கு புதுசா கவலை பட என்ன இருக்கு" மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.)

" மது இங்க தான் இருக்கியா? கேட்டதுக்கு பதிலே காணோம்"

"ஆங்.. சொல்லு மேகா என்ன இன்னைக்கு பில்ட் அப் எல்லாம் பலமா இருக்கு"

"மது பீ சீரியஸ், உன் எதிர்காலத்த பத்தி என்ன முடிவு எடுத்துருக்க?"

(நினைச்சேன் ஐயோ ஸ்டார்ட் பண்ணிட்டாளே) "என்ன முடிவு பண்ணனும் மேகா"

" என்னடி இப்படி கேட்கிற உனக்கு எந்த ப்ளானும் இல்லையா உன் லைப் பத்தி"

" அது இப்போவே எதுக்கு மெதுவா முடிவு பண்ணலாம் மேகா, ப்ளீஸ் இந்த டாபிக் வேண்டாம்"

"மெதுவான எப்போ நீ பாட்டி ஆனதுக்கு அப்புறமா"

"..........."

"நீ இந்த வேலைய விட்டுடு மது, இந்த ஜாப் உனக்கு சரியாய் வராது இது உன்ன மாற விடாது"

"என்னது??!!! வேலைய விடணுமா?"

எப்பொழுதும் போல் கல்யாணத்தை பத்தி தான் பேசுவாள் வேலையைக் காரணம் காட்டி தள்ளிப் போடலாம் என்று நினைத்த மதுவிற்கு இது பேரதிர்ச்சி தான். மேகா தான் இந்த வேலையை மதுவிற்கு வாங்கி தந்தவள். மதுவும் அவள் அம்மாவும் வேண்டாம் என்று எவ்ளவோ கூறியும் கேட்காமல் அவளை வற்புறத்தி சம்மதிக்க வைத்தாள். ஆனால் கால போக்கில் மதுவிற்கு இந்த வேலை மிகவும் பிடித்துப் போனது. எதை அவள் மறக்க வேண்டும் என்று எண்ணி மேகா இதை செயல்படுத்தினாலோ அதுவே மதுவிற்கு சாதகமாக அமையவும் மேகாவிற்கு  ஐயோ என்றானது.

"ஆமாம் மது வேலைய விட்டுடு, சீக்கிரமா யோசிச்சு முடிவு பண்ணு உனக்காக வேற வேலை கூட ரெடி பண்ணிட்டேன்"

"......"

"சரி நீ ரெண்டு நாள் யோசி ஆண்ட்டிக்கு கூட இது தான் சரின்னு படுது அவங்கள இனியும் அழவைக்க மாட்டேனு நம்பறேன் வா போகலாம்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.