(Reading time: 10 - 20 minutes)

12. என் இதய கீதம் - Parimala Kathir

மிதமான குளிர் காற்று உடலை மெல்ல தழுவிச் சென்றது.  கைகளை ஒன்றோடு  ஒன்று உரசியவாறே அஸ்வின் காரில் இருந்து இறங்கினான்.  கலியாண வீடு கோலாகலமாக  அலங்கரிக்கப் பட்டுக்கொண்டு இருந்தது.

En ithaya geetham

“திவாண்ணா.....  இந்த தாம்பூலம் போட அண்ணி பை வாங்கி வரச் சொன்னாங்களே வாங்கிட்டீங்களா?  எங்க வச்சிருக்கீங்க அண்ணி  வாங்கி  வரவாம்.   சீக்கிரம்.”  என  கைகளில் வளையோசை ஒலிக்க  கார் கூந்தலில் சூடிய  குண்டு மல்லி  மணம் பரப்ப  அழகிய கொடி இடை தெரிய  அழகான  பட்டுடுத்தி  திவாகரின் அருமைத் தங்கை யாழினியின் நாத்தனார்  யதுக்‌ஷிகா , தமையனை அவசரப் படுத்திக் கொண்டிருந்தாள். 

“ப்ச் இல்லடி மறந்தே  போனேன்.  நீ  மதனிட்ட போய் சொல்லுறியா?  அவன்  ஐந்தே நிமிடத்தில வாங்கி வந்திடுவான்  பிளீஸ்டீ உன்னோட அண்ணிக்கு மட்டும் விஷயம் தெரியாமல் பாத்துக்கோ.  நான் இப்ப  கடைக்கு போக முடியாதடி  இங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ப்ளீஸ்டீ  ” என்று தங்கை யதுக்‌ஷிகாவிடம்  கெஞ்சிக் கொண்டிருந்தான் அவள் தமையன் திவாகர்.

“ம்... உன்னைப் பார்த்தால் பாவமாய் இருக்கு சரி ஒழிந்து போ நான் அத்தானிடம் சொல்லிக் கொள்கிறேன். “ என்று தமையனை பரிகசித்தாள்.

“உன்னை.. என்னையே கிண்டல் செய்றியா?” என்று தங்கையை அடிக்க கையோங்கினான் திவா.  தமையனிடம் இருந்து தன்னை காப்பாத்தி கொள்ள பின்னால் இரண்டடி எடுத்து வைத்தவள் தடுமாறி விழப் போனாள்.  அவளை கீழே விழவிடாது  வலிய கரம் ஒன்று அவளை பிடித்து நிறுத்தியது. 

“என்னங்க! பாத்து  ஏதாவது அடி கிடி பட்டு விட்டதா? என்று விசாரித்தான் அஸ்வின்.

ஒரு வித கூச்சத்துடனே  அவனிடம் இருந்து  விலகி  நின்று  அதெல்லாம் ஒன்னும் ஆகலைஅது  தான் ஆபத் பாண்டவன் மாதிரி நீங்க இருக்கீங்களே.” என்று வெட்கத்துடன் கூறிச் சென்றாள்.

அவனும்  சிரித்து  விட்டு ”என்ன மாமா யாழினி அக்காவுக்கு இவ்வளவு பயமா?  தெரிந்திருந்தால்  இந்த  பயத்தை வைத்தே  நிறைய  சாதித்திருப்பேனே! “ என அப்பாவியாய் கூறினான்.  

“ஏண்டா சொல்ல மாட்டாய் நீ?  அவகிட்ட பயமெல்லாம் இல்லடா அதுவும்..”

“யாருகிட்ட அளந்திட்டிருக்கீங்க மாமா?” என்று யதுக்‌ஷிகாவுடன் படி இறங்கிய படியே மாமாவிடம்  மதன் கேட்டான்.

திவாகருக்கு முன்னின்று  அவனுடன் கதை பேசிய அஸ்வின் எட்டிப் பாத்தான்.

“ ஹே அஸ்வின் எப்படா வந்து சேர்ந்தாய்  யாரும் என்கிட்ட சொல்லலியே. வாடா உள்ள  ஏன் வாசலிலேயே நிக்கிறாய். “ என்று தோழனை ஆரத் தழுவிக் கொண்டான்.  மாதவன் என்கின்ற மதன், மது.  

தனது  தோழனை  ஒரு முறை ஆரத் தழுவி விட்டு “இல்லடா மாமா ஏன் அக்காவைப் பார்த்து இவ்வளவு  பயப்படுறீங்க  என்று கேட்டேன் அதுக்கு அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டு  இருக்கும் போது  தான்  நீ வந்து சேர்ந்தாய். ஆமா யது  நீ  இவன் கிட்ட சொல்லல” என்று யதுக்‌ஷிகாவிடம் கேட்டான் அஸ்வின். 

“ அஸ்வின் பேசுவதையே  இமைகொட்டாது  பார்த்துக் கொண்டிருந்தவள்.  அவன் தன்னையும் பேச்சில் அழைப்பான் என்று  தெரியாததால்  சற்று  தடுமாறிப் போனாள்.

”அ....  அ.. அது  வந்து  மறந்து  போனேன்.”  என்று வாய் கூசாது பொய் சொன்னாள்.

”உனக்கு இப்ப கொஞ்ச நாளா மறதி  கூடிப் போச்சு எப்ப  பாத்தாலும்  ஏதாவது  சிந்தனை  என்னடி  ஆச்சு உனக்கு?  அப்பிடி என்ன மறதி உனக்கு இந்த் வயசில?  அப்பிடிஎன்ன யோசனை?

“ இவன்  நினைப்பில  தானே  எல்லாம்  மறந்து  போய்  இருக்கிறன்.  அப்புறம்  எப்பிடி அவனை மறக்க  முடியும்.  அத சொனால் நீங்க ஒத்துக்குவீகளா? அது தான்  இந்த  பொய். 

“ம்...  திரும்பவும்  எங்கையோ  போய்ட்டாள்.  ஏ...   யது...  யது.”

“என்ன? எதுக்கு இப்ப இப்பிடி கத்துறீங்க? எத்தனை  தடவை  சொல்றது  என்னை  இப்பிடி  யது  என்று கூப்பிட வேண்டாம்  என்று.” என கோபமாக  தனது தமையனை  கடிந்தாள்.  அவளுக்கு  அஸ்வின் முன்  திவா  எல்லாவற்றையும் சொல்லி விட்டான் என்று ஆத்திரம்.

“ஏண்டி நான்  கேள்வி  கேக்கறன் நீ  திரும்பவும்  யோசனையில  ஆழ்ந்து  போய்  இருக்கிறியே  என்று  கூப்பிட்டால்  நடு ஹாலில் நின்று  இப்பிடி கூச்சல் போடுறாய்?  பாக்கிறவங்க  என்ன நினைப் பாங்க ?” என  கோபமாக தங்கையை கடிந்து கொண்டான் திவாகர்.

அவளுக்கு  தமையன் அஸ்வின் முன் தன்னைப் பற்றி போட்டுடைத்ததுவே அவமானமாக இருந்தது அதற்க்கு மேல்  அவன் முன்னே இப்பிடி கத்துகின்றான்  என்று  அவள் சினம் தலைக் கேறியது  அவன்  முன் காட்டக் கூடாது என தன்னை அடக்கி கொண்டு   அண்ணி  கூப்பிடுறாங்க  நான் போறன் என்று  சொல்லி அங்கிருந்து  அகன்று விட்டாள். 

“பாத்தியா  எப்பிடி நடந்து கொள்கிறாள் என்று  அவள் நடவடிக்கை கொஞ்சமும்  சரியில்லை,  அவ  முன்னை எல்லாம்  இப்பிடி இல்ல கொஞ்சம் பிடிவாதம்  கூடத்தான்  ஆனால் இப்பிடி கோபப்பட்டு கத்த மாட்டா?   என்ன தான் என்றாலும் என்கிட்ட அமைதியா  தான் பேசுவா,  இப்ப ஒரு வருஷமா  தான் இப்பிடி நடந்துக்கிறா. “  என்று ஒரு தமையனாக  திவாகர் கவலைப் பட்டார்.  அஸ்வினும் மதனும் அவனை சமாதானப் படுத்தினர்.

“என்ன மாமா நீங்க  இப்ப எதுக்கு இவளவு கவலை அவ சின்ன பொண்ணு  ஆறுதலா  எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவா  நீங்க கவலைப் படாதீஙக” என்றான் அஸ்வின்.

“அது தாண்டா எனக்கு கவலையா இருக்கு இவ கொஞ்சம் துடுக்கானவ  ஏதாவது காதல் அது இது என்று  கவலை.  யாராவது  இவளை...” 

“சாச்சா என்ன மாமா நீங்க  அவ அப்பிடி எல்லாம் செய்ய மாட்டா.  அவ நெருப்பு  மாமா யாரும் அவ கிட்ட வாலாட்ட முடியாது. இத நினைத்து  நீஙக கவலைப் பட வேண்டிய அவசியமே இல்ல. ஐயையோ மறந்தே போனேன்...”  என்று திடீரென பதறினான் மதன்.

“என்னடா என்னாச்சு..”

“இல்ல மாமா அக்கா உங்களை அடி பின்னி எடுக்க போறா” 

“என்னடா சொல்றாய்...” என்று  நிஜமாகவே  பதறினான்  திவா

“இல்ல மாம்ஸ்  அக்கா தாபூளம் போட பை கேட்டிருந்தா இன்னும் அவகிட்ட பை போய் சேரல இப்ப நேர இங்க வந்து உங்களபின்னி எடுக்க போறா  அது  தான் நீங்க கூட பயத்தில யதுக்‌ஷிகாவிடம் கெஞ்சினீங்களாமே” என்றன் . 

கழுதை இதயும் சொல்லிட்டாளா என்று சிரித்தான் திவா.

“ம்...  இப்ப  நீங்க சிரிக்கிறதை பார்க்க  எவ்வளவு அழகாய் இருக்கீங்க அத விட்டிட்டு சும்மா கவலைப் பட்டிட்டு,,  சரி நாங்க மாடிக்கு போறம்  மாமா பை”

“ஏய் ஏய் பாத்தியா நிஜமாவே  யானிகிட்ட என்னை அடி வாங்க வைக்க போறியாடா”

“ஏன் மாமா”

“பிறகு தாம்பூளப் பை எங்க என்று கேட்டாள் நான் எங்டா போவன்.”

“ம்ம் அவளவு பயம் இருக்கு!! அப்புறம் எதுக்கு என்கிட்ட கதை அளந்திட்டு இருந்தீங்க” என்றான் அஸ்வின்.

“ஹீ......  இல்லடா அது பயம் இல்ல காதல்.  அவ என்கிட்ட நான் எப்பவும் அவ மேல அவ்வக்‌ஷனா இருக்கனும் என்று எதிர் பாக்கிறா நானும் அவ  என்கிட்ட அப்பிடி இருக்கனும் என்று எதிர் பாக்கிறன்.  அவ அப்பிடி தான் இது வரை நடக்கிறா அப்போ நானும் அவகிட்ட அப்பிடி தானே நடக்கணும் அது தானே உண்மையான காதல்.  இப்பிடி அவகிட்ட பயப்பிடுற மாதிரி நடிக்கிறது கூட ஒரு வகை காதல் தாண்டா. அதுக்காக அவளுக்கு என் மேல காதல் மரியாதை எல்லாம்  இல்லன்னு இல்ல.  நான் ஒன்னு சொன்னா அவ  அத தட்ட மாட்டா.  அது போல நானும் அவ ஒன்னு சொன்னால் தட்ட மாட்டன். அது  பாகிரவங்களுக்கு வித்தியாசமாய் தெரியுது. காரணம் அவங்க  எல்லாம் தன் பொண்டாட்டி  தான் சொன்னா கேக்கணும்   என் காலடியில பொண்டாட்டி  மிதி பட்டு  கிடக்கணும் என்று நினைக்கிற றகம். இதனால  மத்தவங்க  என்னை பொண்டாட்டி தாஷன் அது இது என்று என்ன  சொன்னாலும் எனக்கு கவலை இல்ல.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.