(Reading time: 37 - 74 minutes)

17. காதல் பயணம்... - Preethi

சொல்லு தேஜு என்ன திடிர்னு கால் பண்ணிருக்க?”

“சும்மா தான் அனு, இப்பதான் திருப்பூர்ல சேர்ந்து இருந்திட்டு வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இவ்வளவு நாள் போயிடுச்சு… எப்போடா திரும்பி சேருவோம்னு இருக்கு.”

Kaathal payanam

“ம்ம்ம்ம் ஆமா தேஜு எனக்கும் அப்படிதான் இருக்கு, அந்த ட்ரிப் விடு நம்ம இப்பதான் காலேஜ் சேர்ந்த மாதிரி இருக்கு ஆனா 4 வர்ஷம் முடிய போகுது பாரு... கடைசி 3 மாசத்துல இருக்கோம்.”

“ம்ம்ம்ம்...”

“என்ன தேஜு ஒரு மாதிரி பேசுற? ஏதாவது பிரச்சனையா?”

“....”

“சொல்லுமா, என்ன ஆச்சு?”

“நிரு இப்போல்லாம் சரியே இல்லை அனு. ஒழுங்கா பேசுறதே இல்லை. எப்பப்பார்த்தாலும் உங்க அம்மா அப்பா கண்டிப்பா என்ன ஏற்துக்க மாட்டாங்க. உங்க status வேற, என்ன மன்னிச்சிருனு உளறுறான். எவ்வளவு தான் நானும் சமாதானம் செய்யுறது. நான் சொல்லும் போது மட்டும் சரி சரின்னு கேட்டுகிட்டு அதையே நினைச்சு குழம்புறான், அது அவனோட பேச்சிலேயே தெரியுது. ஒரு விதமான ஒதுக்கம் இருக்கு அனு” என்று பேசிக்கொண்டிருந்தவள் அழ துவங்கிவிட்டாள். அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு நம்பவே முடியவில்லை, நிரு ஏன் இப்படி மாறிவிட்டான் அவன் மனதை யார் இப்படி மாற்றியது. எவ்வளவோ துயர் எதிர் நோக்கி வந்தவன் இந்த பிரச்சனையை கண்டு ஏன் பயப்படுகிறான் என்றெல்லாம் எண்ணங்கள் ஓடியது. மறுபுறம் அழுவது தன் உயிர் தோழி ஆயிற்றே... “தேஜு அழதாடி நான் வேணும்னா பேசி பார்க்குறேன்”.

“வேண்டாம் அனு, யார் சொன்னாலும் அவன் மாறுவானு எனக்கு தோணலை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதான் உனக்கு போன் பண்ணேன்.”

“கவலை படாத தேஜு ஏதோ கஷ்டத்துல பேசிருப்பான். நீ தேவையில்லாம மனசை குழப்பிக்காத” என்று அரை மனதாக ஆறுதல் கூறினாள் அனு.

“எப்படி அனு கவலை படாம இருக்க, இந்த யோசனையெல்லாம் என்னை பார்க்கும் போது எங்க போச்சாம்? இந்த மாதிரி இவன் பேசும் போது வருத்தத்தை விட கோவம் தான் அதிகமா வருது. எங்க கோவத்தில ஏதாவது சொல்லிடுவேன்னு இப்போல்லாம் அதிகமா பேசுறது கூட இல்லை.”

விழங்கிச்சு இதுக்கும் ஏதாவது தப்பா நினைச்சுக்க போறான் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டவள், “விடு தேஜு எல்லாம் சிக்கரமே சரியாகிடும்” அனுவுடன் பேசியது கொஞ்சம் மனபாரத்தை குறைக்க, தன் வேலையை துவங்க சென்றுவிட்டாள்.

ஆனால் அனுவிற்கு ஏதோ போன்றிருந்தது. நிரு இப்படி நடந்துக்கொள்ள காரணம் புரியாமல் மிகவுமே குழம்பிபோயிருந்தாள். அவனுடன் பேசிப்பார்க்கலாம் என்று தோன்றிவிட, அவனை கைபேசியில் அழைத்தாள்.

“ஹலோ”

“அட அனு என்ன அதிசயமா எனக்கெல்லாம் போன் பண்ணிருக்க? அர்ஜுன் டைம் குடுத்தானா?”

அவனது குரலை கேட்டவளுக்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது, இப்படி உற்சாகமாக பேசுபவனா அவளிடம் வெறுப்பது போல் பேசுவது என்று எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் விட்டாச்சு... எங்க நாங்களாம் ஃபோன் பண்ணி நீங்க எடுப்பிங்கலானு ஒரு சந்தேகம் தான்” என்று நக்கலாகவே பதில் கூறினாள்.    

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது, சொல்லு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்... நீ?”

“எனக்கென்ன உன் friend என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குறாள்...”

இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தார் போல், “அப்பறம் நீ மட்டும் ஏன் அவளை கஷ்ட்ட படுத்திற நிரு?” என்று மனதில் இருந்த வருத்தத்தை வெளிபடுத்தினாள்.

அவளிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்காதவன் கொஞ்சம் வியந்து தான் போனான். அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, அனுவே தொடர்ந்தாள். “உனக்கு எதுனால இந்த மாதிரி inferiority complex வந்திச்சுன்னு எனக்கு தெரியலை ஆனால் அதுக்கு கண்டிப்பா தேஜு காரணமா இருக்க மாட்டாள்னு மட்டும் எனக்கு தெரியும். இத்தனை வர்ஷத்துல ஒரு தடவை கூட அவள், என்கிட்ட பணக்கார பொண்ணா நடந்திகிட்டது இல்லை. உனக்கு அவளை பத்தி நல்லாவே தெரியும் புதுசா சொல்ல எதுவும் இல்லை தயவு செஞ்சு இனிமேலும் அவளை ஹுர்ட் பண்ணாத... நான் இப்போ ஃபோன் பண்ணதுக்கூட அவளுக்கு தெரியாது. உனக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் அதை பேசி தீத்துக்கோங்க இப்படி தள்ளி போய் அவளை கஷ்ட்டபடுத்தாத நிரு.... exams வேற வர போகுது, அவள் இன்னும் பிரச்சனையை நினைச்சே குழம்பிகிட்டு இருக்காள். அவளை மாத்துறது உன் கையில தான் இருக்கு நிரு.” வேறு எதுவும் பேச தோன்றாமல் தொடர்பை துண்டித்தாள் அனு.

இவ்வளவு பேசியதற்கும் நிருவிற்கு கோவம் வந்திருக்க வேண்டும் என்று அனு எதிர்பார்த்தாள் ஆனால் அவன் அமைதியாக தன் சோகத்தை எல்லாம் கண்ணீராக வெளியிட்டான்.

“தெரியும் அனு அவள் ஒரு தடவை கூட அந்த பணக்கார திமுறை காட்டினது இல்லை. அது அவளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இது கற்பனை இல்லை வாழ்க்கை, இவ்வளவு பெரிய வாழ்க்கையை அனுபவிச்சிட்டு தேஜு என்கூட வந்தாள் அவளுக்கு என்னால பாதி சந்தோஷம் கூட தரமுடியுமான்னு தெரியலை. அதுக்கு அவள் இப்பவே என்னை மறக்குரதுதான் சரின்னு தோணுது” என்று தனக்குளே எண்ணிக்கொண்டு யாரும் அறியாமல் அழுதான்.

காதல் எவ்வளவுக்கு எவ்வளவு இனிமையான மயக்கத்தை தரக்கூடியதோ, அதே அளவிற்கு கொடூரமான வலியையும் தரக்கூடியது... அந்த வலியின் சோர்வாள் தூங்காமல் இரவுகளை கடத்தினாள் தேஜு. வெகு நேரம் தூங்காமல் இருந்து காலையில் அயர்ந்து தூங்கியவளால் காலையில் விழிக்க முடியவில்லை. தூங்கிக்கொண்டிருந்தவளின் சிந்தையை களைத்துக் கொண்டு அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது.

“ஹாய் தேஜு... good morning...”

முதலில் அதை கண்டவளுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வெகு நாட்கள் கழித்து எப்பொதும் போல் நிரஞ்ஜனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அந்த இதமான உணர்வே மனதை வருடிசெல்ல, வேகமாக கிளம்பி அவனை காண சென்றாள். சில வகுப்புகள் முடிந்த பின்பு எப்போதும் பார்க்கும் இடத்திற்கு அவனை வர சொல்லி பார்க்க சென்றாள். சென்றவளுக்கு அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளை முன்பை போல் புன்சிரிப்போடு வரவேற்றான் நிரஞ்ஜன். என்னதிது காலையில இருந்து ஒரே அதிர்ச்சி மேல அதிர்ச்சியா இருக்கே... நிஜமா அது நிரஞ்ஜன் தானா... என்று தன் மனம் தன்னை பல கேள்விகள் கேட்டாலும் அவனை கண்ட ஆர்வமே அவனிடம் தானாக இழுத்து சென்றது. அவள் அவன் அருகே வந்து நிற்கவும், “எப்படி இருக்க தேஜு?” என்றான்.

“ம்ம்ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டி தன் நலத்தை கூறினாள். அதை மட்டும்தான் அவளால் பதிலாக தர முடிந்தது, இத்தனை நாள் அவன் தந்த வேதனைகள் எல்லாம் தானாக மறந்துபோக பேசமுடியாமல் அமைதியாக இருந்தாள்...

“வா அப்படி ஒக்காந்து பேசலாம்...” இருவரும் அமர்ந்த பின்னரும் அமைதியாக இருக்க, தேஜுவே துவங்கினாள்...

“என்ன நிரு? என்ன ஆச்சு?”

“ம்ம்ம்ம்... ஒன்னும் இல்லை உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எப்படி எடுத்துப்பனு தெரியலை...” என்று அவன் இழுக்க, “இன்னும் என்ன இருக்கு நிரு நீ சொல்லு” என்று தன் வேதனையை வார்த்தையில் காட்டினாள்...

“இன்னும் 3 மாசம் தான், எனக்கு காலேஜ் லைப் முடிய போகுது... அது உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான்... ஆனால், எனக்கு எக்ஸாம் சீக்கரம் முடிஞ்சிடுது, சோ என்னை உடனே மும்பைல வந்து சேர சொல்லிட்டாங்க... அதாவது இன்னும் 2 மாசத்துல...” என்று கூறி இடைவெளி விட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.