(Reading time: 12 - 23 minutes)

03. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

"யோ பாத்து வர மாட்டியா மது, அடி பட்டிருந்தா என்ன ஆகிறது இப்படி கண்ணு மண்ணு தெரியாமல் யாரா பாக்க ஓடி போற?" என்று குரலில் சிறிது எரிச்சலுடனும் அதீத அக்கறையுடனும் வினவினான் அவன்.

அவளை பற்றியிருந்த அவனின் வலிய கரங்கள் இன்னும் அவளை விடுவிக்காதது கண்டு சந்தேகமும் கோபமுமாக திவாக்கர் அவனைப் பார்த்துக் கொண்டே மதுவிடம் சென்றான்.

Nenjamellam kathal

கை முஷ்டி இறுக, தன் மதுவை இவ்வளவு நாட்கள் கழித்து பார்க்கும் தருணத்தில் இவன் எவன் இருவருக்கும் இடையில் என்று பொருமிக் கொண்டிருந்தான் ரகு!! ( அதாங்க நம்ம ரட்சகன் படத்துல வர நாகர்ஜுன் மாதிரி).

சில வினாடிகளுக்கு முன்....

 மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த மது ரகுவை மட்டுமே பார்த்துக் கொண்டு வர அவனும் அவளை நோக்கி "அம்ம்ம்மூ" என்று விரைந்து வர, இருவருக்கும் இடையில் தன் ட்ராலி பேக்கை இழுத்து கொண்டு ஒருவன் கடந்து போக கால் இடறி கீழே விழப்போன மதுவை அந்த வலிய கரங்கள் தாங்கி பிடித்து நிறுத்தின.

ஆச்சர்யமும்  கேள்வியும் கலந்த ஒரு உணர்வை மதுவின் முகம் வெளிக் காட்ட அவனோ அழகாக சிரித்து நின்றான்.

"என்னடா எப்போ தான் நீ மாறுவ, சின்ன கொழந்த மாதிரியே இருக்கியே பாது நடக்க மாட்டியா?" என்று அவன் மேலும் கேட்கவும், ரகுவிற்கு கோபம் தலைகேறியது.

அது என்னவோ ரகுவிற்கு எப்போதுமே அவனை பிடித்ததில்லை. முதன் முதலில் அவனை மது அறிமுக படுத்தி வைத்ததிலிருந்தே ஏதோ அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. இதை மதுவிடமும் அவன் சொல்லி இருந்தான்.ஆனால் மது அதை கண்டுகொள்ளவே இல்லை.

இரு கைகளால் தாங்கி பிடிக்கா விட்டாலும் இன்னும் அவன் ஒரு கையால் மதுவை பிடித்திருந்தது ஏனோ ரகுவிற்கு வலியைக் கொடுத்தது. ஒரு வேலை தன் மது அழுவதற்கு இவன் தான் காரணமோ என்று நிறைய சந்தேகங்கள் அவனுக்கு இருந்தன. எல்லாவற்றையும் தன்னிடம் முதலில் சொல்லும் அவள் தன் காதல் பற்றிய விபரங்களை மட்டும் அவ்வளவு சீக்கிரம் சொல்லவில்லை. அதுவும் சென்னை விட்டு கோவை போனதற்கான காரணத்தை கேட்டால் உடனே சண்டை அழுகை என ஓய்ந்து விடுவாள் அவன் மது. அதனால் அவனும் அதை தோண்டி துருவி ஆராய்வதை விட்டு விட்டான். இருந்தாலும் இவன் மீது எப்போதுமே சந்தேகம் தான்.  

மதுவின் அருகில் சென்று தன் பேக்கை கீழே வைத்து விட்டு, அவனுக்கே தெரியாமல் அவன் கையை விலக்கிவிட்டவாறு மதுவை தன் புறம் திருப்பினான். இதை செய்யும் பொது அவனை முறைக்க ரகு தவறவில்லை, அவனும் அதை கவனிக்காது இருக்கவில்லை.

இப்போது புரிந்தது அவனுக்கு எல்லாம் புரிந்தது இவனை பார்க்க தான் அவள் அப்படி வேகமாக வந்திருக்கிறாள். அதை நினைக்கும் போதே அவனுக்கும் உள்ளம் கொதித்தது அவர்கள் இருவரின் காதலுக்கு தடையாக வந்தவனே அவன் தானே!!!  தன் நினைவு பெற்றவளாக ரகுவின் முகத்தை பார்த்தாள் மது.

"பாத்து வந்திருக்கலாம் தானே அம்ம்மூ"

"பரவாயில்ல டா, ஐ மிஸ்டு யூ சோ மச் டா" என்று அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டவளுக்கு கவலையினலோ அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகு தன் உயிர் தன்னிடமே வந்து சேர்ந்ததாலோ கண்கள் கரித்தது.

" ஹேய் செல்லம் அதான் நான் வந்துட்டேன்ல இன்னுமும் ஏன் டா அழற, ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்"

"ம்ம்ம் போ இத்தன நாள் என்ன விட்டுட்டு போய்ட்ட நீ இருந்திருந்த இப்படி எல்லாம்" என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் தேம்பினாள்.

"ப்ளீஸ் டா நீ அழறதை பார்க்க தான் எல்லாத்தையும், ஏன் என் பியுட்சரையே விட்டுட்டு உனக்காக வந்தேனா?"

"ம்ம்ம்ம்"

"என் செல்ல அம்மு தான ப்ளீஸ் சிரிங்க" என்று அவன் அவளைப் போல  பலித்து காட்டவும், கண்களை துடைத்த வாறே பெரிதாக சிரித்தாள் மது.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த திவாக்கருக்கோ அவர்களின் நட்பை பார்த்து சின்ன பொறாமையும் வியப்பும் தோன்ற அதே நேரம் நெகிழ்ந்தும் போனான். ஆனால் அந்த புதியவனோ இவனால் தான் எல்லாம் இவனை விரட்டி விட்டால் என் மது என்னிடம் வந்து விடுவாள் அங்கள் இருவருக்கும் திருமணமும் நடந்து விடும் என்று மனதில் கருவினான்.

"ஹாய் அத்தை, என்ன பண்றீங்க"  

"அடடே ஆதி வா வா, எப்படி இருக்க? இப்போ தான் இந்த அத்தை வீட்டுக்கு வலி தெரியுது போல உனக்கு"

"அப்படி எல்லாம் இல்ல அத்தை" என்று அசடு வழிந்தான்.

" போதும் போதும், நீ அமெரிக்கா வந்தப்போ ஒரு வாரம் எங்க வீட்டுல தங்குன அதுக்கப்பறம் இந்த பக்கமே எட்டி பாக்குறது இல்லை, உனக்கு செலக்டிவ் அம்னிசியா வந்துடுசோனு உங்க மாமா கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவாரு" என்று அவனை வாரினார் வித்யா.

" ம்ம்ம் சாரி அத்தை"

"ஏய் பரவாயில்ல நான் சும்மா ஜோக் பண்ணேன்"

"ம்ம்ம் அப்பா நேத்து போன் பண்ணி இருந்தார்" என்று கல்யாண விஷயத்தை எப்படி கூறுவது என்று அவன் தயங்கியவாறே இழுக்க, அதை புரிந்து கொண்டவர்.

"ஆமா அன்ன எனக்கும் போன் பண்ணி இருந்தார் காலையில, எல்லா விஷயத்தையும் சொன்னார் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆதி"

"ம்ம்ம்"

" என்ன வெட்கமா?" என்று அவனை மேலும் சீண்டினார்.

வெட்கமா அவனுக்கா அவன் இருக்கும் நிலையில் புது மாப்பிளைக்கு உரிய வெட்கமும் ஆர்வமும் சந்தோசமும் அவனுக்கு கனவில் கூட வராது அல்லவோ ?

" அதெல்லாம் இல்லை அத்தை, ஸ்வேதா இருந்தா பாத்து பேசிட்டு போலாம்னு வந்தேன்" என்றான் அமைதியாக.

என்ன பேசுவான் பெண்கள் என்றாலே நாடகம், பொய், பித்தலாட்டம், முதலைக் கண்ணீர் வடிக்கும் வர்க்கம் என்று நினைக்கும் ஆண்பிள்ளை தானே அவன். அவன் அம்மா கூட அப்படி தானே அவன் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று பிடிவாதமும் அழுகையும் அப்பப்பா.. ஆனாலும் பெற்றவள் ஆயிற்றே அதனால் அவளை வெறுக்க இயலவில்லை.

ஆராதனா… அவள் தான் உலகிலேயே வித்யாசமான பெண் இந்த லிஸ்டில் அவளை சேர்க்க முடியாது. ( ஏனென்றால் அவனுக்காகவே உருகும் ஒரே பெண் அவள் தான் என்று நினைப்பவன் தானே ஆதி!)

இப்போது அப்படி பட்ட ஒரு பெண்ணுடன் தானே திருமணம்!! அத்தான் அத்தான் என்று என்னையே சுற்றி வருகிறாளாம். இதுவும் பெண்களின் ஒரு அங்கம் தானே. ஆனாலும் இந்த எண்ணம் தன் மனதில் தோன்ற ஆணி வேறாய் இருந்தவளை பலி வாங்க வேண்டுமே. ஒரு வேலை அவள் மட்டும் தான் அப்படியோ தன் அக்காவை போல நல்ல பெண்களும் உள்ளனரோ? இந்த ஸ்வேதா கூட அப்படி தான் இருப்பாளோ? என்ற எண்ணம் எரிச்சலை தர  மனதில் சலித்துக் கொண்டு அத்தையை பார்த்தான் ஆதி.

அவன் தலை தாழ்த்தி அமர்ந்திருந்ததை வெட்கம் என்று நினைத்த அவர் கேலி புன்னகை இழையோட அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு

"அவ மேல தான் இருக்க பொய் பாரு பா, நைட் இங்கயே சாப்பிட்டு போ உனக்காக எதாச்சும் ஸ்பெசலா பண்றேன்"

" இல்ல அத்தை அதெல்லாம் வேண்டாம்" என்று சொன்னவனின் வார்த்தைகளை காதிலேயே வாங்காமல் கிட்சனிற்கு சென்று விட்டார் வித்யா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.