(Reading time: 6 - 12 minutes)

10. என்னுயிரே உனக்காக - சகி

காலச்சக்கரமானது, என்ன வேகமாக உழன்றுக் கொண்டிருக்கிறது? அதற்கு ஈடாக நம்மால் ஓட முடியும் என்பது அசாத்தியத்தியமான ஒன்றாகிவிட்டது.ம்....இத்தனைக்கும் காலத்திற்கு உயிர் கிடையாது!!!!! மாறிய சுழற்சியில் பல்வேறு எதிர்ப்பாரா மாற்றங்கள் நடந்தது! இனி....நடக்கப் போகும் மாறுதல் என்ன???

Ennuyire unakkaga

"கண்ணா...!"

"............"

"கண்ணா...எழுந்திருப்பா மணி பத்தாகுது! எழுந்து காப்பி குடி!"-எதிர்ப்பார்த்த மாற்றமா இது??

"ம்....அம்மா...இன்னும்  பத்து நிமிஷம்மா..."

"என்ன கண்ணா?சின்ன பையன் மாதிரி?எழுந்திருப்பா...!"

"ஒரு அஞ்சு நிமிஷம்மா!"

"எழுந்திருப்பா..."

"2 நிமிஷம்மா..."-அப்போது-

"அவன் எந்திரிக்க மாட்டான்ம்மா...சரியான சோம்பேறி கழுதை.."-இதைக் கூரிய குரலைக் கேட்டவுடன்,துள்ளி எழுந்தான் ஆதித்யா.

"குரு?எப்படி இருக்க?"

"மண்ணாங்கட்டி...நீயெல்லாம் அண்ணாடா??மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா?"

"டேய்...என்ன பேசுற நீ?"

"நீ சும்மா இரும்மா...நேரா அவன் தங்கச்சிக்கிட்ட மட்டும் பேசிட்டு வந்துட்டான்.தம்பி அவன் கண்ணுலையே படலை!"-ராஜேஸ்வரி கேள்வியோடு ஆதித்யாவை பார்த்தார்.அவன் மெல்லிய புன்முறுவலை விடுத்தான்.

"பல்லை பல்லை காட்டாதே! மவனே...இங்கே பதில் சொல்லு...!"

"இல்லடா...."

"பேசாதே வாயை திறந்த...."

"இப்போ தானடா பதில் சொல்ல சொன்ன?"

"ஆஹா....ரொம்ப பெரிய புத்திசாலி."

"தேங்க் யூ..."

"அறிவுக்கெட்டவனே!"

"குரு...."-ராஜேஸ்வரி.

"என்னம்மா?"

"என்ன நீ என் பையனை இப்படியெல்லாம் திட்டிட்டு இருக்க?"

"அய்யயோ....அப்போ நான்?"

"இவன் தான் முதல்ல..."-அதைக்கேட்டு குருவிற்கு கோபம் வரவில்லை.ஆனந்தமே தந்தது அச்சொற்கள்.

"நீ காப்பி குடி கண்ணா..."-என்று கோப்பையை ஆதித்யாவிடம் நீட்டினார் ராஜேஸ்வரி.

"ஒரு மனுஷன் இப்படி கத்திட்டு இருக்கான்.நீ இவனுக்கு காப்பி கொடுக்கிறீயா?"-என்று கோப்பையை அவனிடமிருந்து பிடுங்கி அருந்தினான் குரு.

"டேய்....கொடுடா!"-என்று சரண் குருவிடமிருந்து வாங்கி அருந்தினான்.கண் முன் விரிந்த காட்சிகளை கண்ட ராஜேஸ்வரியின் மனமானது,

"இப்படியே இவன் நடந்ததை விடுத்து,இவன் தந்தையிடமும் பேசி விட மாட்டானா?"-என்ற ஏக்கம் கொண்டது.

"தாத்தா...இது பேர் என்ன தாத்தா?"-தன் தாத்தா அருணாசலத்திடம் வினவினான் ராகுல்.

"இதுவாப்பா...இது பேர் வாய்கால்."

"இது எதுக்கு கட்டி இருக்கீங்க?"

"இது கட்டலைப்பா...வெட்டி இருக்காங்க.பயிருக்கு போகிற தண்ணி அங்கே தேங்கினா பயிர் அழுகிடும்.அது மாதிரி ஆகாம இருக்கத்தான் இதை வெட்டி இருக்காங்க."

"சரி தாத்தா...."

அப்போது....

"மாமா...."

"வாம்மா ஸ்ரேயா...."

"நீங்க கூப்பிட்டீங்கன்னு அம்மா சொன்னாங்க."

"சும்மா தான் ஸ்ரேயா.நான் உன் கல்யாணத்தைப் பற்றி பேசதான் கூப்பிட்டேன்."

"...................."

"இன்னும் எத்தனை நாள் தான் என் பையனையே நினைச்சிட்டு இருப்ப?உன் வாழ்க்கையும் பார்க்க வேண்டும் தானே!ரகு,அவன் பாதையை பார்த்துட்டு போயிட்டான்.இனி அந்த பாதை உன் வாழ்க்கையில இணைவது சந்தேகம்மா!"

"தெரியும் மாமா...ரகு மாமாவை இனி நான் நினைச்சிக்கூட பார்க்க முடியாது தான்...பார்க்கலாம் மாமா!"-நடந்தவற்றை எல்லாம் ஒன்றும் புரியாதவாறு பார்த்துக்  கொண்டிருந்தான் ராகுல்.ஸ்ரேயா அவனை கவனித்தாள்.

"சார் யாரு?"-என்றாள் அவனிடத்தில் குனிந்தவாறு.

"ராகுல்."

"அப்படிங்களா?"

"ரகுவோட பையன்மா."-ஸ்ரேயா சின்ன புன்னகையை உதிர்த்து...

"அப்படியே அவரை மாதிரியே இருக்க."

"அதே ரத்தம் அப்படிதான் இருக்கும்.ஆமா நீங்க யாரு?"

"நானா?நீ என்ன நினைக்கிற?"

"நான் உங்களை பார்த்ததில்லை.அப்பறம் எப்படி எனக்கு தெரியும்?தப்பா சொன்னா...அது பொய்யாயிடும்!"

"அப்படியா?இப்போ என்னை ஸ்ரேயானே கூப்பிடு!சரியா?"

"சரி ஸ்ரேயா...."

"சரிப்பா...வீட்டுக்குப் போகலாமா?"

"சரி...தாத்தா."-ராகுலுக்கு ள்ரேயாவை பிடித்துப் போயிருந்தது.ஸ்ரேயாவிற்கும்,ராகுலுக்கும் இடையே ஏதேனும் பந்தம் பிடிப்படுமா?????அதை ரகுவிடம் தான் கேட்க வேண்டும்.

"து...."-ராஜேஸ்வரி

"ஆன்ட்டி...வாங்க உள்ளே வாங்க!"

"..........."

"உட்காருங்க ஆன்ட்டி!"

"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்.நீ அதை செய்யணும்."

"சொல்லுங்க ஆன்ட்டி!"

"முதல்ல என்னை ஆன்ட்டின்னு கூப்பிடுறதை நிறுத்து!அதான் ஆதித்யா அவன் வாயாலையே உனக்கும்,அவனுக்கும் என்ன உறவுன்னு சொல்லிட்டானே!இனி அத்தைனே கூப்பிடலாம்."-அவள் தலைக் குனிந்தவாரே!

"சரிங்க அத்தை!சொல்லுங்க...."

"மது....சரணை ராஜசிம்மபுரம் கூட்டிட்டு வரணும்."-என்றார் அவர் தயங்கிவாரே!

"நான்......எ....எப்படி?"

"உன்னால மட்டும் தான்மா முடியும்.அன்னிக்கு நடந்ததை அவன் உன்கிட்ட சொல்லி இருப்பான்.எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா....கொஞ்ச நாள் அவன் அங்கே இருக்கறது நல்லதுன்னு படுது! ரகு கூட அதான் சொல்லிட்டுப் போனான்.இப்போ இருக்கிற நிலைமையில அவன் என் பேச்சை கேட்பான்னு எனக்கு தோணலை.நீயும்,பேசுனா கண்டிப்பா கேட்பான்."-அவள் முன்பு நடந்த நிகழ்ச்சியை எண்ணினாள்.முன்பு இதைப் போல் செய்ததால் தானே,12 வருடம் பிரிவின் வாசம்??????மீண்டும் அதைப் போல் நடந்தால்????

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.