(Reading time: 24 - 47 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி

னைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, கிருஷ்ணா ரகுவை பார்த்த சுபத்ரா கேள்வியும் அதிர்ச்சியுடன் அர்ஜுனை பார்த்தாள்.... அவன் எதுவுமே நடவாததைபோல்  கண் சிமிட்ட ,

VEVNP

(ம்ம்ம்கும்ம்ம் இந்த ரணகளத்துலயும் இவனுக்கு கிளுகிளுப்பு கேக்குது ) என்று மனதிற்குள் பொருமினாள் சுபத்ரா... ஜானகி இன்னும் முகத்தை மூடி அழுது கொண்டே இருக்க , கிருஷ்ணனை இறைஞ்சளுடன் ஒரு பார்வை பார்த்தாள் சுபத்ரா. அவன் ஒரு கணம் கண்களை அழுந்த மூடி திறந்து சமிக்ஞை காட்டிட,

" ஜானு " என்றழைத்து கை நீட்டினாள் சுபா....

அவள் எதிர்பார்த்ததுபோல், தாயை தேடிய பிள்ளைபோல் நொடி பொழுதில் தன தோழியை அணைத்து அழுதாள் ஜானகி.

சூழ்நிலையை இலகுவாக்க பானு ,

" சுபி, ஜானுவை அவ ரூமுக்கு கூட்டிடு போ ....

அர்ஜுன், தம்பி எல்லாரும் உள்ள வாங்க " என்றார்.

" அம்மா, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க .... நாங்க மாடிக்கு போறோம் ......வாங்க கிருஷ்ணா , ரகு " என்றவன் யாரின் பதிலுக்கும் காத்திருக்காமல் முன்னே நடந்தான் ... அழுகையின் ஊடே ஜானகி ஒரு முறை வருத்தத்துடன் ரகுவை பார்க்க, அவனோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் அர்ஜுனனுடன்  நடந்தான்......

அனைவருமே அமைதியாக இருக்க அந்த மௌனத்தை  கலைத்தது அர்ஜுனனுவும் சுபத்ராவும் தான் !!

 (எப்படியும் ரெண்டு பக்கமுமே ஒரே விஷயம் தான் பேச போறாங்க ... இங்கி பிங்கி போட்டு யாரோட பேச்சை முதல்ல கேக்கலாம் சொல்லுங்க? சரி நாம  ஜானு ரூமுக்கு போவோம் ..மெஜாரிட்டி படி பார்த்தா அர்ஜுன் பக்கம் மூணு பேரு ..சுபி பக்கம் ரெண்டு பேரு ..சோ கம்மியான டைலோக்ஸ் கேப்போம் ...சுபி ஸ்டார்ட் ...கேமரா..... ஆக்க்ஷன்...)

" ஜானு ................. ஜானு இங்க பாரேன் " இந்த வசனத்தை பல முறை சொல்லியும் சுபத்ரா மடியில் முகம் புதைத்த ஜானகி எழவும் இல்லை பதில் சொல்லவும் இல்லை ..

"  பேச பிடிக்கலன்னா சொல்லிடு ஜானு ...நான் கெளம்பறேன் " எனவும் கேவலுடன் நிமிர்ந்தாள் ஜானகி....

" கோச்சுக்காதே சுபி ...நீயும் என்னை விட்டுடு போறியா ? "

" நான் அப்படியா சொன்னேன் ..... "

" பின்ன எப்படியாம் " என்று குறை பட்டுகொண்டவளை பார்த்து சுபத்ரா  சிரிக்க ,

" ஏண்டி நான் அழறது உனக்கு சிரிப்பா இருக்கா? "

" அதில்ல என் அண்ணாவை பார்த்து நானே பயந்து அழுததில்ல .... நீ ஏண்டி அழுத ? "

" என்னடி சொல்லுற அவர் உன் அண்ணனா ? "

" ஆமா என்னோட ரெண்டாவது அண்ணா ரகுராம் "

" அவர் பெயர் ரகு ..ராமா? "

" அடிப்பாவி என் அண்ணா பேரு கூட தெரியாம எதுக்குடி அவர் பேரை சொல்லி அந்த கத்து கத்துனே நீ ? அதுவும் ராம்னு சொல்லி ? நான் கூட ஒரு செகேன்ட்ல ராம்தான் உன்னை ஏதோ பண்ணிட்டானோனு பயந்துட்டேன் ..... "

" அச்சோ உன் அண்ணாவுக்கு ரொம்ப எம்பரசிங்கா இருந்திருக்கும்ல டீ "

" விடு அதெல்லாம் அவனுக்கு சகஜம்தான் ..என்னாச்சுன்னு சொல்லு "

(வைட் வைட் இங்க நம்ம ஜானகி தோட்டத்துல நடந்ததை சொல்றதை அப்படியே பௌஸ் பண்ணிட்டு அங்கே ரகுராம் அவரோட கதைய சொல்ல வர்றதை கேட்போம் )

மாடியில் ,

" முதல்ல இந்த ஜூஸ் குடிங்க ரெண்டு பேரும் "

" சோ சாரி " என்று ஒரே நேரத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் சொல்லி , ஒரே நேரத்தில் சொன்னதை எண்ணி  சிரிக்க சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் ரகு .

" ரகு ... தோட்டத்துல என்னாச்சு ? ஜானகி ஏன் உன்னை பார்த்து அழுதாங்க ? உனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா ? "

" ப்ச்ச் அண்ணா இந்த கேள்வியை அர்ஜுன் கேட்டா கூட ஒரு நியாயம் இருக்கும் ..... ஏன்னா அவருக்கு என்னை பத்தி தெரியாது .... நீங்க போயி என்னை இப்படி கேக்கலாமா ? " ( கிட்ட தட்ட நீயா பேசியது சாங் ல நம்ம விஜய் அண்ணா மாதிரி முகபாவனையை காட்டி கேள்வி கேட்டார் ரகுராம் )..

கிருஷ்ணா ரகுவை சமாதனம் சொல்லுமுன்னே அர்ஜுன்,

" உங்களை எனக்கு தெரியாதா ரகுராம் ? " என்று விஷமமாய்  சிரித்தான் ...

 " ஐயோ பாஸ் உங்க வீட்டுல யாருமே தெளிவா பேச மாட்டிங்களா ? அந்த பொண்ணு என்னடான்னா என் பேரை கூப்பிட்டு அழுதுட்டு இருக்கு  ...நீங்க என்னடான்னா என்னை தெரியும்னு சொல்றிங்க ? " என்று கோபத்தில் பேசியவன் ( அய்யயோ கொஞ்சம் ஓவரா கோப பட்டு பேசிட்டோமோ ) என திரு திருவென விழிக்க,

" ஹா ஹா சோ கியூட்...முதல் முதல்ல சுபத்ரா கூட ஜானுகிட்ட பேசும்போது இப்படித்தான் பார்த்தா.... நீங்க ரெண்டு  பேரும் ஒட்டி பிறக்க வேண்டிய ரெட்டை குழந்தைங்க ! " என்றான் .

" ரகு காம் டவுன் மேன்....... அர்ஜுன் கொஞ்சம் தெளிவா  பேசலாமே ...முதல்ல எங்களை எப்படி எதிர்பார்திங்க? எப்படி தெரியும்னு  சொல்றிங்களா ? "

ஒரு புன்னகையுடன் சுபத்ராவை சந்தித்த முதல் நாளிலிருந்து அவர்களின் காதல் வரை எதையுமே மறைக்காமல் தனது இயல்பான பாணியில் நடந்தவற்றை சொல்லி மற்ற இருவரின் மனதிலும் நன்மதிப்பை பெற்றான் அர்ஜுனன். கோபப்பட வேண்டிய இருவரும் அமைதியாய் இருப்பதன் மூலமே அவர்களின் சம்மதத்தை அறிந்தவன் அமைதியாய் அவர்களின் வார்த்தைக்காக காத்திருந்தான் ....

" நடந்தவரை சரிதான் அர்ஜுன் ...பட் எங்களுக்காக  எப்படி வைட் பண்ணிங்கன்னு நீங்க சொல்லவே இல்லையே ! " என்று கேள்வி கேட்ட ரகு இப்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான் ....

ஒரு மந்தகாச புன்னகையை சிந்தியவன்,

" அதை சொல்லுறேன் பட் அதுக்கு முன்னாடி ப்ரண்ட்ஸ் ?"  என்று சந்தோஷ் சுப்ரமணியம் ஹாசினி மாதிரி கை நீட்ட  கிருஷ்ணனும் ரகுவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு சிரித்தனர் ....

" ஓ மை காட்..... அர்ஜுன் நிஜமாவே நீங்க ஒரு ஒரிஜினல் பீஸ் ....எங்க வீட்டு  வானரத்துக்கு  உங்களை ஏன் பிடிச்சதுன்னு இப்போ புரியுது "

" அதென்ன சுபத்ரா மட்டும் ? உங்க ரெண்டு பேருக்கும் கூட என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியுமே ! "

" போச்சுடா ஆரம்பிச்சுட்டியா ? " என்று உரிமையுடன் ஒருமையில்  அழைத்தது நம்ம கிருஷ்ணா தானுங்க ! (பாவம் அவரும் எவ்வளோ நாளுதான் ஸ்ட்ரிக்ட் ஆப்பிசர் மாதிரி இருக்குறது ? அதுவும் நம்ம அர்ஜுன் பக்கத்துல இருக்கும்போது சைலெண்ட்டா இருக்குறது சாத்தியமா என்ன? ரைட்டு ! எல்லாரும் ஒன்னு கூட்டிடாங்க )

" நீங்க வெச்ச டிடெக்டிவ் விஜய் என்னை பத்தி என்னோட நம்பகத்தன்மையான அங்கிள்  கிட்ட விசாரிசுருக்கார் .... அவரு என் அப்பாவோட பெஸ்ட் ப்ரண்ட்.... அப்பறம் என்ன? விஜய் போனதுமே எனக்கு கால் வந்திச்சு ... நான் எனக்கு தெரிஞ்ச அஜித்னு ஒரு டிடெக்டிவ் செட் பண்ணி யாருடா அர்ஜுனுக்கே பொறி வைக்குறா செக் பண்ண சொன்னேன் .... பார்த்தா நம்ம மச்சான்ஸ் தான் ..... நீங்க ரெண்டு பேரும் என்னை பத்தி தெரிஞ்சு கோபப்படாம விசாரிக்கும்போதே எனக்கு நம்பிக்கை வந்துருச்சு.... சுபியும் உங்க ரெண்டு பேரை பத்தி ரொம்ப சொல்லி  இருக்கா .,.... இன்பாக்ட் நீங்க ரெண்டு பேரும் பாசிடிவ்வா இருந்த பிறகுதான் நான் கோவில்ல சுபி கிட்ட என் மனசையும் சொல்லி அதே நேரம் அவ படிப்பு  முடியும்வரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன் .... அதுக்கப்பறம் நம்ம அஜித் உங்க  பின்னாடிதான் வந்துட்டு இருந்தார் .,...நீங்க இங்க வர போற நியுஸ் கூட அஜித் சொல்லித்தான் தெரியும் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.