(Reading time: 14 - 27 minutes)

04. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

கோபமாக கீழே வந்த ஆதி சிறு வேலை இருப்பதாகவும் டின்னருக்கு வந்து விடுவதாகவும்  வித்யாவிடம் சொல்லி விட்டு காரை எடுக்க சென்றான். ஏனோ அந்த நிலையில் கார் ஓட்ட மனம் வரவில்லை ஆதிக்கு. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இரவின் அழகையும் சப்தத்தையும் மீறி வண்ண  லைட்டுகளும்  வாகனங்களும் ஏனோ அந்த செயற்கை அவனுக்கு பிடிக்கவில்லை.

' ஏன் எதுவுமே எனக்கு பிடிக்க மாட்டேங்குது? ச்சே எல்லாம் அவளால தான்.. நான் ஏன் அவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம்  தரேன் என் வாழ்க்கையோட சம்மந்தமே இல்லாத ஒருத்திக்காக ஏன் நான் என்னையே வருத்திட்டு எல்லாரையும் வருத்தப்பட வைக்கணும்?'

 இவை எதற்குமே பதில் கிடைக்கவில்லை... பாவம் அவனும் எவ்வளவு  நாள்  தான் இதையே நினைத்து குழப்பி கொள்வான்.

Nenjamellam kathal

"போதும் எல்லாம் போதும்" என்று ஒரு முடிவிற்கு  வந்தவனாய் திரும்பி வீட்டிற்கு நடந்தான்.

அங்கே ஸ்வேதா இன்னமும் அந்த பெயிண்டிங்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம் என உணர்சிகளை அவள் முகம் காட்டிக் கொண்டிருந்தது. அதை பார்த்த ஆதிக்கு தன் மீதே கோபம் வந்தது.

 ' கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி சிரிச்சு பேசிட்டு இருந்தா, பாவம் இப்படி கத்திட்டு போயிட்டனே, ஆதி திஸ் இஸ் டூ பேட் , யூ ஷுட் கண்ட்ரோல் யுவர்செல்ப் ' என்று தனக்குள் பேசிக்கொண்டே மெல்ல அவள் அருகில் சென்றான்.

தொண்டையை செருமிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். என்ன என்பது போல் பார்த்தவளை ஒரு சில வினாடிகள் பார்த்தவன் "ஐயம் ரியல்லி சாரி ஸ்வேதா.. நான் அப்படி…. உன்கிட்ட அப்படி கத்தி இருக்க கூடாது, உன்மேல எந்த தப்பும் இல்ல என்ன மன்..... "

"ஐயோ என்ன அத்தான்.. சாரி ஆதி, நீங்க போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு உங்களுக்கு அது பிடிக்கல அதான் கோவத்துல அப்படி நடந்துகிட்டிங்க இதுக்கு போய் சாரி அதுவும் என்கிட்ட விடுங்க, எல்லாம் இந்த பெயிண்டிங்நால தானே இத தூக்கி எங்காவது மறைச்சு வெச்சுடறேன் உங்க கண்ணுலேயே படாத மாதிரி ஓகே வா?"

என்று அவனை பேச விடாமல் பட படவென பேசி விட்டு மெல்லிய புன்னகையுடன் அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் !!

"என்ன பெண் இவள், நிஜமாவே அப்பா சொன்ன மாதிரி என்மேல உயிரா இருக்காளோ? ஒரு சின்ன சாரி தான  கேட்டேன் அதுக்கே இப்படி பேசிட்டு போறலே ரொம்ப நல்லவ தான், உன்ன மாதிரி இல்லாம ஒரு நல்ல பொண்ண ஆண்டவன் எனக்கு கொடுத்துட்டான் டி மது இனி உன்ன பத்தியே நினைக்க மாட்டேன்" என்று மனதுக்குள் சொன்னவன், தன் அழகான சிரிப்புடன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சென்னையில்....

" ஓகே சார் நான் அப்படியே கெளம்பறேன், மது  உன் காண்டக்ட் நம்பர் மிஸ் பண்ணிட்டேன், உன் நம்பர் கொஞ்சம் கொடுக்கறியா?"

மது அசையாமல் அப்படியே நிற்க, நம்ம ரகு இன்னமும் பிரகாஷை முறைத்துக் கொண்டு இருக்க, அதுக்குள்ள நம்ம திவாக்கர் "இந்தாங்க பிரகாஷ் என் நம்பரும் வெச்சுகோங்க" அப்படின்னு அவரு நம்பரையும் சேர்த்து கொடுத்துட்டாரு. அவ்ளோ தான் நம்ம ரகு  கோவத்துல மது கை பிடிச்சு நடக்க எத்தனிக்க 'என்னடா நடக்குது இங்க'நு நம்ம மதுவும் பே பே நு முழிச்சுட்டு போனா, திவாக்கர் பிரகாஷ் கிட்ட பை சொல்லிட்டு கிளம்பினான். அவனும் விடை பெற்றுக் கொண்டான்.

"ஐ மிஸ் யூ மது, லவ் யூ சோ மச்" என்று மானசீகமாக  பிரகாஷ் சொல்ல, அவனையும் அறியாமல் கண்கள் கரித்தது.

 ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு போகும் வரை திவாக்கரும் ரகுவும் பேசிக் கொண்டே வர மது ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.அதை கண்ணுற்ற ரகுவிற்கு ஏனோ வலித்தது.

திவாக்கர் வீட்டை அடைந்து தஞாவுடன் சிறிது நேரம் பேசி விட்டு மாடியில் தனக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு  ஓய்வெடுக்க சென்று விட்டான் ரகு. அனைவருக்கும் மதிய உணவு தயார் செய்யும் வேலையில் காலையில் நடந்ததை மறந்திருந்தாள் மது. பரிஷன் வேறு தன்னை அறியாமல் அவளை இயல்பு நிலைக்கு திருப்பிக் கொண்டிருந்தான்.   

ரகு எழுந்தவுடன் அனைவரும் சேர்ந்து உணவு உண்ட பின், ப்ரிஷனும் தன்யாவும் ஒரு குட்டி தூக்கம் போட, திவாக்கர் தன் நண்பனுடன் வெளியில் சென்று விட்டான். சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு ரகுவோடு பேச எண்ணி மது ரகுவின் ரூமிற்கு சென்றாள்.அவன் தூங்கிக் கொண்டு இருக்க அமைதியாக அவன் அருகில் அமர்ந்து தலை முடியை வருடி விட்டாள்.

ஐந்து வயதில் பார்த்தது போல் அப்படியே இருந்தான். எந்த சலனமும் இல்லாமல் அவன் தூங்கும் அழகை பார்த்துக் கொண்டு இருந்தவள், அவன் அலைபேசியின் திரை  மின்னவும் அதை எடுத்து பார்த்தாள். யாரோ குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள். அதை பார்த்து விட்டு மீண்டும் அதை கீழே வைக்கும் போது தான் கவனித்தாள் அவள் போட்டோவை அவன் வால் ஆக வைத்திருப்பதை. சிறு புன்னகையுடன்,

தனக்குள்ளே சொல்லி கொண்டாள்,

மணமுடிக்கவில்லை,

கருவுறவில்லை,

பிரசவ வலி கூட அறியவில்லை,

ஆனாலும் தாயக தான் வாழ்கிறேன்

என் நண்பனிற்கு!!!

துவிற்கு நான்கு  வயது இருக்கும் போது தான் ரகுவின் குடும்பம் கோவையில் குடியேறினர்.வந்த கொஞ்ச நாட்களில் இரு குடும்பமும் உறவினர் போல் பழக ஆரம்பித்து விட மது ரகு நட்பும் வளர்ந்தது.

 சில நாட்களுக்கு பின் ரகுவின் அப்பா  தற்கொலை செய்து கொண்டு விட அந்த அதிர்ச்சியில் ரகுவின் அம்மாவிற்கு கை கால் வராமல் போக, ரகு தான் தவித்து போய் விட்டான். மூர்த்தி- லலிதா தம்பதியும் மதுவும் தான் அவனுக்கு எல்லாமே என்றாகி போயினர். அத்தை மாமா என்று எப்போதும் இவர்கள் வீட்டிலே தான் இருப்பான். மதுவும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

இருவரும் வளர வளர மதுவின் துணை ரகுவிற்கு பெரிதும் தேவை பட்டது. அவளும் அவனுக்கு இரண்டாம் தாய் போல் பார்த்துக் கொள்ள அவன் உலகமே மது தான் என்றாகி போனது. ( இப்போ தெரிஞ்சுக்கிடீங்கள ஏன் நம்ம ரகு எதிர் காலத்தையே வேண்டாம்னு தூக்கி போட்டு வந்தான்னு)

பெங்களூரில் ரகுவின் அப்பா தொழில் முடங்கி குடும்பத்துடன் கோவை வந்து அந்த வேதனை தாங்க முடியாமலே தற்கொலை செய்து கொண்டார் என பின்னே மது தெரிந்து கொண்டாள். அதனால் அவனுக்கு படிப்பிலும் பெரிதும் உதவினால் தன்னை விட அவன் நலனில் தான் அதிக அக்கறை அவளுக்கு!

அவன் மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற பின் நடந்த அனைத்தும் அவளை தலை கீழாக புரட்டி போட, ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அவளுக்காக அவள் சந்தோசத்திற்காக இன்று இங்கு வந்திருக்கிறான். இப்படி ஒரு தோழமை யாருக்கு கிடைக்கும் கண்களில் நீர் பெருக அதை ஒரு கை துடைக்கவும் நிகழ உலகிற்கு வந்தாள்.

"என்னடா அம்மு ஆச்சு ?" என்று கவலையுடன் ரகு வினவ,

அவளுக்கு பெருமையை இருந்தது இம்மெனும் முன் எனக்காக இப்படி உருகுகிரானே!!

"ஒண்ணுமில்ல டா, நீ எப்போ எழுந்த"

"மேல பாத்துட்டு அழுதுட்டு இருந்தியே அப்போ தான்"

"ஹே இல்ல டா அது ஆனந்த கண்ணீர்"

"தோடா என்னடி புதுசா இருக்கு, உனக்கு இப்படி எல்லாம் கூட பீலிங் வருமா?"

"என்னடா நக்கலா?"

"இல்லடி விக்கல்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.