(Reading time: 21 - 42 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 06 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ன்ன அண்ணா வீட்டுக்கு போகாம காரை பீச் ல நிறுத்திடிங்க ? " கேள்வியுடன் தமையனை நோக்கினான் ரகுராம் .....

" ரகு நான் உன் கிட்டே ஒன்னு கேட்பேன் ..மறைக்காம உண்மைய சொல்லு "

" என்ன அண்ணா ? ":

VEVNP

( கிருஷ்ணா என்ன கேட்டாரு  அதற்கு ரகு என்ன சொன்னாரு ? அதெல்லாம் சீக்ரெட்...ஏன்னா ட்விஸ்ட் வைக்கிறதுன்னா நமக்கு அம்புட்டு இஸ்டம் .... ஹா ஹா ஹா ..... சரியான சூழ்நிலையில இந்த ரகசியத்தை சொல்றேன் அது வரை என்னை செல்லமா திட்டிகிட்டு வைட் பண்ணுங்க..சரியா?  இதுக்கு லஞ்சமா நான் இன்னொரு ரகசிய முடிச்சை இப்போ அவிழ்த்து விடுறேன் .... போன எபிசொட் ல நிறைய பேரு கேட்டதுனாலே   ! )

" சோ , இப்போ என்னடா பண்ண போறே ? "

" தெரில அண்ணா ..பட் எதுவாக இருந்தாலும் ரொம்ப யோசிக்கணும் ... ஜானுவுக்கு தேவை காதல் இல்ல அண்ணா.... ஜானு மனசுல  மீண்டும் காதல் வர்றது கஷ்டம்னு எனக்கும் தெரியும் .... நான் அவளுக்கு நல்ல நண்பனா கடைசி வரைக்கும்  அவ கூட இருக்கணும் நெனைக்கிறேன் ..... எனக்கு வேண்டியது அவளுடைய ஸ்பரிசம் இல்ல ... அவளுடைய சந்தோசம் போதும் .... அதுமட்டும் இல்ல யாரு   மனசும் கஷ்டப்பட கூடாது ... அண்ட் நாம இன்னும் இத பத்தி  நம்ம வீட்டு பெரியவங்க கிட்ட பேசல.... எனக்கு அதுவே கொஞ்சம் பயம்மாதான் இருக்கு...ரொம்ப ஸ்பீடா போறோமோ ? ! " ( இந்த கதைய படிக்குற எல்லாருக்குமே அதே டவுட்டுதான் ரகு !)

" விடுடா .... இதெல்லாம் நாமளா நடத்துறோம் ....ஆண்டவன்  எழுதுற நாடகத்துல நாமெல்லாம் நடிகர்கள்ன்னு நெனைச்சுக்கோ " (ஹலோ ஹலோ மிஸ்டர் கிருஷ்ணா , கஷ்டபட்டு நான் கதைய எழுதுனா நீங்க கடவுளை சொல்றிங்களே ... இதெல்லாம் ஓவர் ... இருங்க இருங்க உங்க ஜோடி புறா இன்னும் என் கையில தானே இருக்காங்க ..கவனிச்சுக்குறேன்)

" அதிருக்கட்டும் அண்ணா .... உங்க திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் புரியலையே .... நீங்க கேட்டதும் நான் மறைக்காம  சொன்னேனே அந்த மாதிரி நீங்களும் கொஞ்சம் இறங்கி வந்து உண்மைய சொன்னா  நல்ல இருக்கும்ல ? "

" ஹ்ம்ம்ம்ம்ம் " என்று யோசனையுடன் தம்பியை பார்த்த கிருஷ்ணா,

" சரி சொல்லுறேன் பட் பாதி தான் சொல்லுவேன் .... இடையில மானே தேனே பொன்மானே லாம் நீயே போட்டுக்கோ "

( ம்ம்ம்கும்ம்ம் பெரிய குணா கமல்ஹாசன் )

" இன்னும் 3 மாசத்துல நம்ம சுபாவுக்கு படிப்பு முடிய போகுதுலே ..அதான் நான் சந்தோஷமா இருக்கேன் "

" அவ படிப்பு முடியவும் நீங்க சந்தோஷமா இருக்கவும் என்ன சம்பந்தம் ? "

" பின்ன நம்ம நீலாம்பரிக்கிட்டே யாரு பேசுறது ? அண்ட் முன்னைய விட இப்போ நீலாம்பரி  கொஞ்சம் இறங்கி வந்துட்டான்னு மனசுல பட்சி சொல்லுது "

" நீலாம்பரி? நீ ....லாம் ..... ப....ரீ ................? ஹ்ம்ம்ம்ம் நீலாம்பரி ? "

" டேய் உனக்கு ஏதும் டவுட்ன்னா கேட்டு தொலை...... அதை விடுட்டு ஏண்டா இப்படி டிடெக்டிவ் ரேஞ்சுக்கு தின்க் பண்றே ? "

" இல்ல நீலாம்பரி ராகத்துல தாலாட்டு பாடுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன் .. ஒரு வேளை  அண்ணிக்கு தாலாட்டு பாடும்போது பேரு வெச்சிட்டாங்களோ?  ஆனா பேரே ரொம்ப வில்லத்தனமா இருக்கே  ! "

" டேய் உனக்கு தெரிஞ்சவங்களை நீயே இப்படி சொல்லலாமா? "

" எனக்கு தெரிஞ்ச பொண்ணா ? எனக்கு படையப்பா நீலாம்பரியை தவிர யாரையும் தெரியாதே "

" அப்போ நீ அவ பேரை நீலாம்பரின்னு நம்பிட்டியா? "

" அண்ணா? இதுக்கு மேல பீடிகை போட்டிங்க நான் காரை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்தே போய்டுவேன் "

" கூல் டவுன் மேன்.... அவ பேரு மீரா  "

மறுபடியும் தமையனை எரிப்பதுபோல் பார்த்தான் ரகு ...

" டேய் இப்போ என்னடா? "

" உண்மையான பேரை சொல்லுங்க அண்ணா... எனக்கு மீரான்னு யாரையுமே தெரியாது "

" வசு அக்காவை தெரியுமா? "

" வசு  அக்கா? ஆமா நம்ம பக்கத்து வீடு ...வசந்தரா ..... நீங்க கூட உங்க பிரண்ட் சஞ்சய் கம்பனில ஜாய்ன் பண்ணிருக்காங்க .... அவங்களுக்கு உடனே வீடு தேவை ..சோ சஞ்சய் அண்ணாகாக நம்ம பக்கத்து வீட்டுல  வாடைகைக்கு இருக்கட்டும்னு  அம்மா கிட்ட பேசுனிங்களே.... அம்மாகூட அந்த வீடு நாம கல்யாணம் பண்ணதும் நமக்கு கிப்ட் நு  சொன்னாங்க ... நீங்க விடாம அம்மாகிட்ட வாதாடி   இப்போதைக்கு அட்லீஸ்ட்  மாடியில மாஸ்டர் பெட்ரூமை அந்த பொண்ணுக்கு வாடகை விடுவோம்னு சொன்னிங்களே ! ஆனா அவங்க வசந்தரா தானே ! "

" ம்ம்ம்ஹ்ம்ம் இல்ல  அவ பேரு வசந்தர மீரா "

" வாட் எ நேம் ? இப்படி கூடவா நேம் இருக்கு ? அப்படினா ? அவங்கதான் அண்ணியா ? பட் நீங்க சொல்லவே இல்லையே அண்ணா ? இப்போதான் புரியுது ..... நீங்க சைலெண்ட்டா மாறினபிறகு நீங்க அவங்களை பார்க்க போறதை கூட அவாய்ட் பண்ணிட்டிங்க....... ஒரு  வார்த்தை சொல்லி இருந்தா நான் அவங்களை அக்கான்னு கூப்பிடிருக்க மாட்டேன் ....என்ன   பிரச்சனை அண்ணா?  இவ்வளோ பக்கத்துல இருக்காங்க ..இவங்களையா சரி பண்ண முடியாம வைட் பண்றிங்க ? "

" ரகு எல்லாரும் ஒரே மாதிரி இல்லை.... ஒரு பாட்டு தெரியுமா?

ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்தாரு

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

எல்லா பொண்ணுகிட்டேயும் எதாச்சும் ரகசியம் இருக்கும் .... இத்தனைக்கு ஏன் ? நம்ம சுபா நம்ம  கிட்ட அவ காதலை மறைக்கலையா?  அந்த மாதிரி  மீரா லைப் ல ஒரு ரகசியம் .... அது தெரிஞ்ச பிறகுதான் அவ ஏன் இவ்வளோ அடமேன்ட்டா இருக்கானு தெரியுது .,.... என்னால அவளை மாத்த முடியும் பட் மேடம் வழி விட்டா தானே ? அதெல்லாம் பெரிய கதை டா

 அதை இன்னொரு நாள் சொல்றேன் ரகு ........ ஆல்ரெடி நமக்கு நிறைய ஷாக் இருக்கு .......... லேட்டாச்சு ..... சுபா படிப்பு முடியட்டும் நாம மூணு பேரும் ஒண்ணா பேசுவோம் .... சரி அர்ஜுனுக்கு போன் பண்ணி எங்க இருக்காங்கனு கேளேன் .... "

அர்ஜுனனின் காரில் ,

" என்ன அர்ஜுன் ...என் வீடு இந்த பக்கம் இல்லையே ..... "

" உன் அண்ணாதான் பீச் ல மீட் பண்ணலாம்னு  சொன்னாரு சுபி .... அவங்க முன்னாடி போய்ட்டு நீ லேட்டா வந்தா வீட்டுல பிரச்சனையாம்... அதுக்காக உன்னை அவசரப்படுத்தி கூட்டிடு போக வேணாம்னு அங்கேயே வைட் பண்றாங்க... நாம வந்ததும் கால் பண்ண சொன்னாங்க "

( இதை கேட்ட ஜானகி சுபத்ரா இருவருக்குமே பதட்டமாகத்தான் இருந்தது ... !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.