(Reading time: 34 - 68 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 07 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

ர்ஜுனன், தன் தாயாருடனும் ஜானகியுடனும் உள்ளே வர, அவனை முதலில் கண்டு கொண்டவள் சுபத்ரா தான். ( அட லவ்வுல இதெலாம் சகஜம் தானுங்க ... லேசா காற்று வீசும், எங்க இருந்தோ இளையராஜா சார் இல்லேன்னா ஏ ஆர் ரஹ்மான் சார் வயலின் வாசிப்பாங்க, எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நம்ம கண்ணு டக்குன்னு நமக்கு புடிச்சவங்க மேல தாவிடுமே..இதெல்லாம் நம்ம சுபாவுக்கு மட்டும் விதி விளக்கா? எப்போதுமே சிட்டிவேஷன் சாங் பாடுற சுபா இப்போ என்ன சாங் பாடினா தெரியுமா ? ...பயப்படாதிங்க மனசுக்குள்ளேதான் மேடம் பாட்டு பாடினாங்க )

தெரியாம பார்த்துபுட்டேன்

உன்னை தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்

என்ன நடக்க போகுதா ?

ராமா

எங்க முடியபோகுதோ

ஆமா

தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

என்னதான் சந்தோஷமாக இருந்தாலும், இங்கே என்ன நடக்குமோ என்ற கலவரத்தில் அவள் எதிரில் அமர்ந்திருந்த கிருஷ்ணனை பார்க்க அவனோ எதுவுமே நடவாததை போல என்ன என்றபடி புருவம் உயர்த்தி பார்த்தான் ...

எல்லாம் என் நேரம்டா சாமி என்று நொந்து கொண்டவள் கைகளால் நெற்றியை அடித்துகொள்ள,

" ஹே என்னடி பழக்கம் இது ? ஏதோ வயசான கெழவி மாதிரி ? ஒன்னு கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்துல கை வெச்சுகுறது இல்லேன்னா நெத்தியில அடிச்சுக்கிறது " என்று சிவகாமி தன் சுப்ரபாதத்தை ஆரம்பித்தார் ( ஓகே ஓகே அதிர்ச்சியில் இருந்த அந்த ரெண்டு பேரு யாருன்னு இப்போ சொல்றேன் )

ஜானகியை அங்கு பார்த்த அபிராமி அதிர்ச்சியில் உறைந்தார். அன்று அவளை பார்த்த கோலமும் இன்று பார்கின்ற கோலமும்  அவருக்குள் பேரதிர்ச்சியை தர, இது ரகுவின் கண்களில் பட்டுவிட கூடாதே என்று  பயந்தபடி அவர் அவனை பார்த்தார். தாயின் பார்வையை கண்டுகொண்ட  ரகுராமிற்கு  முதலில் எதுவும் புரியாமல் அவர் பார்த்த திசையை பார்க்க  ( ச்ச்ச இதை இப்படி மறந்தேன் ) என தன்னை தானே கடிந்து கொண்டவன் சட்டென எழுந்து தன் தாயின் அருகில் அமர்ந்தான்...

" அம்மா "

" ரகு ..... அ....அந்த பொண்ணு "

" ஜானகிதான் மா "

" உனக்கிது முன்னாடியே தெரியுமாடா? "

" ம்ம்ம்ம் அர்ஜுனுக்கு அண்ணாவை தெரியும் அவங்க மூலம்தான் நானும் ஜானகியை பத்தி தெரிஞ்சுகிட்டேன்"

" அப்போ அர்ஜுன் தான் ஜானகியின் புருஷனா ? "

" அம்மா நீங்க வேற  புது கதையை ஸ்டார்ட் பண்ணாதிங்க ... ஜானகிக்கு இன்னும் கல்யாணம் ஆகலம்மா ... அர்ஜுன் ஜானகியோடு அத்தை பொண்ணு ... இப்போதைக்கு அர்ஜுன் பாமிலி தன் ஜானுவுக்கு உறவு .... அர்ஜுனுக்கு அவ தங்கச்சி மாதிரி ... ஷார்ட்டா சொல்லனும்னா எனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு ... மிச்சத்தை  வீடுல சொல்றேன் " என்றவன் தன் தாயை ஆதரவாக தோளோடு அனைத்து சமாதானப்படுத்தி புன்னகைத்தான்....

 அதே நேரம் அவர்களை பார்த்த பானுவோ சிவகாமியை பார்த்த இன்ப அதிர்ச்சியில் இருந்தார். தன் மகளை திட்டி கொண்டிருந்த சிவகாமி அர்ஜுனனின் தாயாரை கவனிக்கவில்லை.  அவர்களை தூரத்தில் இருந்த பார்த்த பானுவிற்கோ தன் நெருங்கிய தோழியின் மகள்தான் சுபத்ரா என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தன்னை அழைத்து வந்த மகனைகூட  கவனிக்காமல் அவர் அங்கே செல்ல,

" மருமகள் பார்த்ததும் நம்மளை மறந்துட்டாங்க பார்த்தியா ஜானு" என்று பெருமூச்சு விட்டான் அர்ஜுனன். 

"ஆமா இதுல உங்களுக்கு ரொம்ப சோகம்தான் போல ... நான் நம்பிட்டேன் மாமா ... எதுக்கு வீண் டிராமா ? நீங்களும் இதுக்குதானே ஆசைப்பட்டிங்க ? சரி வாங்க அங்க பேச்சு சுவாரஸ்யமா போய்ட்டு இருக்கு  போல ..நாமளும் ஜோதியில் ஐக்கியமாவோம் " என்று சிரித்தபடி நடந்தவளை புதிதாக பார்ப்பது போல பார்த்தது  அர்ஜுனன் மட்டும் அல்ல ரகுராமும் தான் ...

" ஹே சிவா "

" ஹே  பானு "

" எவ்வளோ நாள் ஆச்சு பார்த்து ...எப்படி இருக்கே ? "

" எனக்கென்ன நல்ல இருக்கேன்... இவங்கதான் அபிராமி அக்கா ...அக்கா இவ பானு ... நானும் பானுவும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ்.... பட்  கல்யாணம் ஆனதும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் வந்துருச்சு..ஆமா நீ இங்க எப்படி " என்று சிவகாமி கேட்கவும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் தோள் மீது கை போட்டுகொண்டு நாங்களும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ் தான் என்று நகைக்க, ரகுவும் சுபாவும் வாயை பிளந்துகொண்டு பார்த்தனர் .... அர்ஜுனனின்  லீலைகளை தினம் தினம் பார்க்கும் ஜானகிக்கு இதெல்லாம் வெறும் ட்ரேளர் என்பது புரிய சிறு புன்னகையுடன் வேடிக்கை பார்த்தாள்.. பெரியவர்கள் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு தங்கள் பிள்ளைங்களை அறிமுகப்படுத்தி  வைக்க , அன்றுதான் புதிதாய் பார்பதுபோல் சுபத்ரவிற்கு வணக்கம் கூறி கை குவித்தான் அர்ஜுன் ....

" இதல்லாம் உலகமாக நடிப்புடா சாமி " என்று முணுமுணுத்த ரகுவின் கற்பனையில் ( அன்று அர்ஜுனன் காதில் அவன் வைத்த பூவை இன்று அர்ஜுனன் ரகுராமிற்கு வைத்ததுபோல் நினைத்து பார்த்து  அதிர்ந்தான் ..அடபாவிங்களா  அப்போ நாமதான் அவுட்டா ? )

அவனின் முக மாறுதலை பார்த்த அர்ஜுனன் ரகுவை பார்த்து கண் சிமிட்ட " ம்ம்ம்கும்ம் நான் என்ன சுபாவா ? நல்ல வேளை நான் பொண்ணா பொறக்கல ..இவன்கிட்ட இருந்து தப்பிச்சேன்" என்று முணுமுணுத்தவன் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தான் ... ( கற்பனையில் ஒரு புறம் சுபத்ரா நிற்க, மறுபுறம் ரகுராம் பெண்ணாக நிற்க இருவரின் இடையே அர்ஜுனன் நின்றான் .... அதோடு நிறுத்தாமல் அர்ஜுனனை நடுவில் நிற்க வைத்து சுபாவும் ரகுவும் கை கோர்த்து " மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு " என்று ஆடி பாடினர் ) இந்த அபார கற்பனையை முற்றுபுள்ளி வெச்சது நம்ம ஜானகிதான.

" என்ன ரகு சார் ? பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க ? என்னாச்சு "

 அப்போதுதான் ஜானகியை பார்த்தவன் புன்னகைத்தபடி " ஒண்ணுமில்ல ஜானு நீ இங்க உட்காரு அம்மா கூட"என்று சொல்லி அவன் சுபத்ராவின் அருகில் அமர்ந்தான்.

( ஆனா ஒன்னு .... உலகத்துலேயே மனசுக்கு புடிச்ச பொண்ணை நேருல வெச்சுகிட்டு ஒரு பையனோடு டூயட் பாடின பெருமை நம்ம ரகுவைத்தான் சேரும்)...

 சிவகாமியுடன்  பேசிகொண்டிருந்த அர்ஜுனன் அவ்வப்போது சுபத்ராவை பார்வையால் விழுங்க அவளோ அவனின் பார்வையில் தடுமாறினாள்... அபிராமி ஜானகியுடன் பேசிகொண்டிருக்க ,

" அம்மா பசிக்கிதுன்னு  சொன்னிங்களே ..முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணலாம் " என்றான் கிருஷ்ணன் ..

தன் தாயாருக்கு வேண்டிய உணவை பொறுமையாய் தேர்ந்தெடுத்த அர்ஜுன் மற்ற இரு தாயாரின் மனதில் நன்மதிப்பு பெற்றான்.

" ம்ம்ம்ம் இந்த சுகர் வந்தாலும் வந்திச்சு ..இதை சாப்பிடு அதை சாப்பிடாதே நு ஒரே கண்டிஷன்  பாருங்க "

" அதுகென்ன பானு அதான் அர்ஜுன் இருக்காரே " என்ற அபிராமி நிறைந்த புன்னகையுடன் சிவகாமியை பார்க்க , இருவரும் பார்வையாலே பேசிக்கொண்டனர்.

" ஜானு நீ ஏன் ஸ்வீட்ஸ் ஆர்டர் பண்ணல? "

" அதில்ல ஆன்டி "

" என்னம்மா ஆன்ட்டினு...தமிழ் ல  அத்தைன்னு கூப்பிடேன்" என்றார் அபிராமி....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.