(Reading time: 10 - 19 minutes)

12. என்னுயிரே உனக்காக - சகி

ண்களில் மின்னும் குறும்புத்தனம் தொலைந்துப் போய் சிந்தனையின் ரேகைகள் கண்ணில் படரும்படி அமர்ந்திருந்தான் ஆதித்யா.

ஏதோ ஒரு நெருடல் அவனுள் வாட்டி வதைக்கின்றது....ஆழ்ந்த அவன் சிந்தனையை அவன் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல் கலைத்தது.எடுத்துப் பார்த்தான்,

'பெட்டர் ஆஃப்'என்றிருந்தது.(அட!வேற யாரும் இல்லைங்க நம்ம ஹீரோயின் தான்.)

Ennuyire unakkaga

என்ன தகவல் என்று எடுத்துப் பார்த்தான்,

"ஆதித்யனின் கதிரொளியாக மண்ணில் பிறந்த ஆதித்யாவிற்கு,இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!இப்படிக்கு தங்கள் அன்பு மனைவி!"-என்றிருந்தது.

'இவளுக்கு கவிதை எல்லாம் எழுத வருமா?'-என்று எண்ணியவன்,'தன் பிறந்தநாளை மறக்காமல் இருக்கிறளே! நமக்கே காலையில அம்மா சொல்லி தான் ஞாபகம் வந்தது.'-என்று மகிழ்ந்தான்.

அவனது பதிலாக,

'அடியேனது பிறந்தநாளை மறக்காமல்,வாழ்த்து அனுப்பியதுக்கு நன்றி இளவரசி!இப்படிக்கு தங்களின் காதலுக்குரிய யுவராஜன்."-என்று அனுப்பி வைத்தான்.5 நிமிட இடைவேளைக்கு பின்,"என்ன அதிசயம்!என்னவர் இன்று சூரிய உதயத்திற்கெல்லாம் விழித்துக் கொண்டாரே!!!நித்திரா தேவி மீது தங்களுக்கென்ன கோபம் இளவரசே?"

"அதிகாலையில் என்னை துயில் எழுப்ப என் ஆருயிர் மனைவி அருகே இல்லாததால்,எங்கோ கத்தும் குயில்களின் பாடலைக் கேட்டு,கண் விழித்தேன்.இதுவே,அவள் என்னருகே இருந்தால்,அவளை சீண்டி விட..எழ தாமதமாகி இருக்கலாம்.!"-என்பது அவன் பதில்.

அழகிய காதல் உரையாடல்....அவனது இளவரசியின்,அன்பினால்,அவன் அதுவரை சிந்தித்துக் கொண்டிருந்த பழைய நினைவுகளை விட்டு வெளியே வந்தான்.

"மச்சான்..."

"............."

"ஏ...ஆதி....கதவை திற!"-குறுந்தகவலில் மூழ்கி இருந்தவன் நிரஞ்சனின் குரல் கேட்டு,கதவை திறந்தான்.நிரஞ்சனும்,ரகுவும் நின்றிருந்தனர்.

"என்ன நண்பா! ரொம்ப பி.ஸி.யா?"

"எப்படா மும்பையில இருந்து வந்திங்க?"

"பத்து நிமிஷமாகுது...கார் வந்து நின்றதை கவனிக்காத அளவுக்கு உள்ளே என்ன பண்றீங்க?"

"..............."-அவன்  மெல்லியதாய் சிரித்தான்.

"டேய்....ஐயோ!கொடுமையா இருக்குடா!இந்த பாவனையை தயவு செய்து மாற்றிடு!என்னால தாங்க முடியலை..."-நிரஞ்சன் அழுவதை போல் பாவனை செய்தான்.

"போதும் ரொம்ப மொக்க போடாதே!உள்ளே வாங்க!"-என்று அவர்களின் கரத்தைப் பிடித்து வலிய உள்ளே இழுத்தான்.

"அப்பறம்....என்னங்க சார்..!கேஸ் விஷயம் எப்படி போகுது?"-என்றான் ரகுவைப் பார்த்து,அதற்குள் நிரஞ்சன்,

"இவன் என்னடா!திடீரென்று என் அப்பாவுக்கு  'டூப்' போட்டா மாதிரி பேசுறான்?"

"என்னது?"

"இல்லை...அவர் தான்  எப்ப பார்த்தாலும்,ஹிட்லர் மாதிரி விறைப்பா...கேஸ் எப்படி போகுது?எத்தனை நாள்ல முடியும்?அப்படி,இப்படின்னு கேட்டுட்டு இருப்பாரு அதான்."

"ஐ...!செம காமெடி நான் நாளைக்கு சிரிக்கிறேன்."

"சரி தான் போடா!!"

"டேய்...நீ போடா!"-அதைப் பார்த்திருந்த ரகு,

"இப்போ நான் போக போறேன்."-என்றான் கடுப்பாக.

"வேணாம் வேணாம்.நீ சொல்லு!"

"அப்துல்லா...காஷ்மீர் போயிருக்கான்."

"ஏன்?"

"ஏன் போவான்?எல்லாம் ஸ்ரீநகரை கலங்கடிக்க தான்."

"இப்போ...."

"யாராவது காஷ்மீர் போகணும்."

"நான் போகட்டா மச்சான்.?"

"ஏன்டா...பவிக்கூட வாழ ஆசையில்லையா?"

"இருக்குத் தான்...ஆமா...உனக்கு எப்படி தெரியும்?"

"ரொம்ப முக்கியம்..."

"நான் போறேன் ரகு!"

"அவசியமில்லை...ஏற்கனவே எனக்கு ஃப்லைட் டிக்கெட் போட்டாச்சு...நீ இங்கேயே இரு!"

"அப்போ...உனக்கு வாழணும்னு ஆசை இல்லையா?"

"என் வாழ்க்கை என் கூட இல்லைடா!"-என்றான் சிறு கசப்பான நகையோடு.ஆதித்யா எதையோ கூற வாயெடுத்து,பின் "ராகுல் இல்லை?"என்றான்.

"இருக்கான் தான்...பார்க்கலாம்...காஷ்மீர் போயிட்டு வந்து பேசிக்கலாம்...."

"ரகு...உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்."

"சொல்லு..."

"இல்லை...சாயங்காலம் பேசலாம்."

"ஏன்?"

"அப்போ பேசிக்கலாம்!"

"சரி...ஹேப்பி பர்த் டே டூ யூ ஆதி!"

"ம்....தேங்க்ஸ்."

"நண்பா....ஹேப்பி பர்த் டே நண்பா!"-என்று நிரஞ்சன் அவனை அணைத்துக் கொண்டு,

"அப்பறம் நைட் ட்ரீட் இருக்கா?"

"நினைக்கிறேன்."

"சரி தான்...எனக்கு வேணும்பா!"

"தந்துட்டா போச்சு.நீ எப்போ பேச்சுலர் பார்டி தர போற?"

"சம்மதிக்கிறவங்க சம்மதிச்ச உடனே!"

"ம்......இந்த தடவை ரகுக்கும் சேர்த்து..."

"என்ன?"-ரகு.

"சும்மா...என்ஜாய் பண்ணு நண்பா!"

"ஆளவிடுங்கடா!"-என்று அவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டான் ரகு.

அவர்களில்,ஆதித்யாவை தவிர யாரும் அறிந்திருக்கவில்லை நடக்க இருக்கும் விபரீதத்தை!!!!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.