(Reading time: 40 - 80 minutes)

18. காதல் பயணம்... - Preethi

திருமணம் முடிந்து அணைத்து விருந்துகளும் விமர்சையாக நடந்தது நவீன் அர்ச்சனாவுக்கு. (சொன்ன விஷயத்தையே 4 ஜோடிகளுக்கும் சொன்னா எங்களுக்கு போர் அடிக்குதுன்னு நீங்க சொல்றது கேட்குது... ஆனாலும் நடக்கவேண்டியது நடந்து தானேங்க ஆகும்) விருந்துகள் என்று அர்ஜுன் அஹல்யா சென்ற அளவுக்கு இவர்கள் செல்லாவிட்டாலும் நேரம் போவதே தெரியாமல் போனது அவர்களுக்கு.

“என்ன அத்தை அதுக்குள்ள எழுந்திருச்சிட்டீங்க? இன்னும் ஒரு தோசை வச்சிக்கோங்க..”

“நீங்க எங்க மாமா நான் கிட்சேன் உள்ள போயிட்டு வரதுக்குள்ளேயே கைக்கழுவிட்டீங்க?? இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டால் எப்படி stronga இருக்குறது?”

Kaathal payanam

“நீ என்னமா இப்படி சொல்லுற? எப்பவுமே நான் 3 தோசை தான் சாப்பிடுவேன். நீ என்னடானா இன்னும் ஒன்னு இன்னும் ஒன்னுன்னு 5 தோசை சாப்பிட வச்சிட்ட...” என்று குறையாக கூறுவது போல பெருமிதமாக கூறினார். தன் தங்கையின் புறம் திரும்பி, “இப்போதான் தெரியுது நீ ஏன் இன்னும் உடம்பு குறையாமல் இருக்கன்னு” என்று கண்களில் பெருமிதத்தோடு கூறினார்.

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நவீனின் தாயாருக்கும் பெருமிதம் தான், எங்கே வர போகும் மருமகள் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவாளோ என்று நினைத்து பயந்ததுக்கு மாறாக அர்ச்சனா அவர்களை பெற்றோர்கள் போல பார்த்துக்கொண்டது, நெஞ்சை நெகிழ செய்தது. அனைவரின் முகத்திலும் பெருமையும் மகிழ்ச்சியும் தெரிய, இதை நுன்னியமாக கவனித்த நவீனின் முகத்தில் மட்டும் புன்னகை இல்லை. ஓடி ஓடி அனைவரையும் கவனிக்கும் தன் மனைவியையே அவன் கண்கள் தொடர்ந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேரம் கொஞ்சம் வேகமாக தான் சென்றது.. காலை உணவு முடிந்ததும், அனைவர்க்கும் இடையில் காபி கொண்டுவந்தாள் அர்ச்சனா.

அனைவர்க்கும் கொடுத்த பின் தன் கணவனை தேடி அவர்களது அறைக்கு சென்றாள் அர்ச்சனா. உள்ளே வரும் தன் மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் கையில் இருந்த புத்தகத்தில் முகம் புதைத்தான். அவனது செய்கை ஆச்சர்யமாக இருக்க கையில் இருந்த காப்பியை நீட்டினாள். அவன் நிமிர்ந்துகூட பார்க்காமல் இருக்க, “மாமா காபி” என்றாள்.

“டேபிள் மேல வச்சிட்டு போ..”

காபியை வைத்தப்பின்னும் நகர மனம் இல்லாமல், “ஏன் மாமா கோவமா இருக்கீங்க?”

“தெரியாது...”

“சொல்லுங்க மாமா...”

“தெரியாத மாதிரி நடிக்குரவங்கள்ட்டலாம், நான் பேச மாட்டேன்...”

“எனக்கு நிஜமாவே தெரியாது மாமா” என்று கூறுகையில் குரல் கம்மிவிட்டது அவளுக்கு. அதை கண்ட உடனே சிரமப்பட்டு தயார் செய்த வசனங்கள் எல்லாம் மறந்து போக.. “ஒய் இப்போ எதுக்குடி அழுகுர என் அத்தை பொண்ணே...” என்று தன்னோடு இழுத்துக்கொண்டான் அவன்.

அவன் செய்கையில் வீம்பு பண்ண மனம் தூண்ட, “விடுங்க திட்டுறதை திட்டிட்டு என்ன கொஞ்சல்ஸ்” என்று பேச்சுக்கு அவன் பிடியை உதறினாள்.

“அடிப்பாவி இதெல்லாம் ஒரு திட்டா? உனக்கு சண்டைனா என்னன்னே தெரியலை அதான்... முன்னாடியே சொன்னேன் கொஞ்ச நாள் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசலாம்டினு, அப்படி பேசிருந்தாலாவது கொஞ்சம் சண்டை போட்டிருப்போம் உனக்கும் சண்டைன்னா என்னனு தெரிஞ்சிருக்கும்...”

அவன் கூறியதற்கு ஒன்றும் கூற தோன்றாமல் “ம்க்கும்” என்று வாய் சுளித்தாள். பின்பு ஏதோ நியாபகம் வந்துவிட, “ஆமா ஏன் மாமா என்கிட்ட அப்படி கேட்டிங்க? நான் எங்க நடுச்சேன்?” என்று புரியாமல் கேட்டாள். அவளை தன் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டு “பின்ன, என்னதான் மந்தரம் பண்ணி மயக்கிட்ட இப்போ எங்க அம்மா அப்பாவையும் மயக்கிடுவ போலவே... நீ அவங்களை விழுந்து விழுந்து கவனிக்குறதும் அவங்க உன்னை பெருமிதமா பார்க்குறதும்.. எப்பப்பா தாங்க முடியலை...” என்று முகத்தில் பெருமிதத்தோடும், குரலில் கிண்டலோடும் பேசினான்.

அவன் கூறியது சிரிப்பாக இருந்தாலும், “நான் ஒன்னும் யாரையும் மயக்கலைப்பா” என்று தோரணையாக சொல்லிக்கொண்டாள். அவள் இதழ்கள் சுளித்து சுளித்து பேசுவதை கவனித்த நவீனுக்கு ஆசை தூண்ட, “ஹ்ம்ம்ம்... எல்லாரையும் நல்லா தான் கவனிச்சுக்குற ஆனால்... என்னை தான் கண்டுக்குற மாதிரியே தெரியலை...” என்று அவள் இதழ்களில் வருடியவாறே கூறினான்.

அவன் கைப்பட்ட இடமெல்லாம் சிலிர்க்க, இதழ்கள் தானாக மலர்ந்தது... “லேசாக எக்கி அவன் கன்னங்களில் இதழ் பத்தித்து, போதுமா???” என்று வினவினாள். அவன் தலையை இடம்வலமாக ஆட்டி “ம்ம்ம்ம் ஹ்ம்ம் பத்தவே பத்தாது...” என்று உதட்டை பிதுக்கி பாவமாக பார்த்தான்.

“போதும் போதும் மீதி வீட்டோட due முடிஞ்சதும் தான்.”

“ஹே இதெல்லாம் அநியாயம்டி...”

“நீங்க தானே வீட்டு கடனை சீக்கரம் முடிக்கணும் சனா அதுலேயே சம்பளம் போகுதுன்னு சொன்னீங்க...”

“சொன்னேன் தான் அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்???”

“ம்ம்ம்ம்... பாப்பா வந்த அப்பறம் இன்னும் நிறைய செலவு இருக்கும், சோ due முடியுற வரைக்கும் ஷு....” என்று வாய் மீது விரல் வைத்து அழுத்தினாள்...   

“அட கடவுளே...” என்று தலையில் கைவைத்துவிட்டு, “உன்கிட்ட சொன்னேன் பார்த்தியா என்னை சொல்லனும்?”

அவன் முகம் வாடவும் பாவமாக தோன்ற, “என் செல்ல மாமால....” என்று கன்னம் கில்லி கொஞ்சினாள், அவனின் முகம் உடனே மாறிவிட, “சரி... அட்லீஸ்ட் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஒரு கிஸ்ஸாவது குடேன்டி...” என்று கெஞ்சுதாலாக கேட்டவாறே அவள் இதழ்கள் நோக்கி குனிய, அதை மறுக்க மனமின்றி வெட்கத்தோடு அமைதியானாள். (adults போதும் thinkinga ஸ்டாப் பண்ணுங்க)

ன்னதான் அலாரம் வைத்து எழுந்து... தூங்கி தூங்கி விழுந்து படித்து, பரீட்சைக்கு தயார் ஆனாலும் தேர்வுக்கு செல்லும் முன் மனதில் ஏறுகின்றதோ இல்லையோ சும்மாவேனும் போகும் வழியெல்லாம் புத்தகத்தை புரட்டிக்கொண்டு போகாவிட்டால் மாணவர்களுக்கு ஏனோ திருப்தி அடையாது. என்னவோ அந்த 2, 3 நிமிடத்தில் கண்ணில் படுவதெல்லாம் வந்து மதிப்பெண்ணை கூட்டிவிடும் என்ற நம்பிக்கையில் படிப்பர்.

“அனு இதை படிச்சிட்டீல? எக்ஸ்ப்ளைன் பண்ணு”

“......” (நம்ம படிப்புல கொஞ்சம் வீக் சோ நம்ம இதை mute பண்ணிடலாம்)

“ஆர்த்தி இது உனக்கு தெரியும் தானே....” என்று அபி கேட்க, அவளை முறைத்தாள் ஆர்த்தி. “நான் என்னைக்குடி ஃபுல்லா படிச்சிருக்கேன், எல்லாம் கதை தான்... நீ என் ஐடியா follow பண்ணுறனா சொல்லு உனக்கு 2 வரில கதை சொல்றேன் அதை develop பண்ணிக்கோ...” என்று படிப்பு கோட்பாடுகளை கூறினாள்.

“எம்மா தாயே எனக்கு உன்னை மாதிரி கதை எழுதெல்லாம் தெரியாது. ஆளை விடு” என்று வணக்கம் போட்டு பிருந்தாவை நோக்கி சென்றுவிட்டாள் அபி.

பேசிக்கொண்டே அனைவரும் தேர்வு அறையை அடைந்துவிட, எதிரில் வந்த அஸ்வத்திற்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி உள்ளே சென்றாள் அனு. சிரமப்பட்டு படித்ததெல்லாம் ஒரு முடிவிற்கு வருவது போல் ஒவ்வரு தேர்வும் முடிந்தது.

“என்ன மேடம் எப்படி எக்ஸாம் எழுதுனீங்க?” என்று கூடே நடந்தவாறு அஸ்வத் விசாரித்தான்.

“நல்லா எழுதிருக்கேன்... நீ?”

“ஏதோ பண்ணிருக்கேன்..” என்று அலுத்துக்கொண்ட அஸ்வத்தை நோக்கி, “அப்போ ஒரு 97% வரும்னு சொல்லு” என்று நக்கலாக கூறினாள் அனு.

“ஏய் என்ன நக்கலா?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.