(Reading time: 31 - 61 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

" ன் கிட்ட பேசவே புடிக்கல " என்று கிருஷ்ணன் சொன்னதே செவியில் ரீங்காரமிட , சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணராமல் அந்த தோட்டத்திலே மண்டியிட்டமர்ந்து  அழுது கொண்டிருந்தாள் மீரா. யாரோ ஒருவரின் கரம் அவள் தலையை வருட

" மீராம்மா" என்ற அழைப்பு அவளை திடுக்கிட செய்ய நிமிர்ந்து பார்த்தாள். அக்குரலுக்கு சொந்தகாரர் சுபத்ராவின் தந்தை சந்திரப்ரகாஷ்.

" அ..... அ ....அங்கிள் ? ???  நீங்க எப்படி ? என் பேரு ? "

" நான் எல்லாத்தையும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன் "

அவரின் பதில் வசந்தர மீரா  கொஞ்சம் அதிர்ந்தாலும் அவளுக்கு மீண்டும் கண்ணீரே பெருகியது.

" உங்க யாருக்கும் எதுவும் தெரியாம, நல்ல பேரோடேயே இந்த வீட்டை விட்டு போய்டலாம்னு நெனச்சேன் ..அதுக்கும் எனக்கு கொடுத்து வைக்கல "

" உனக்கு இப்போ என்ன கேட்ட பேரு வந்திருச்சு மா? நீ ஏன் நம்ம வீட்டை விட்டு போகணும் ? காதல் பண்றது தப்புன்னா கிருஷ்ணா மேலயும் தானே தப்பு இருக்கு ? "

" அய்யயோ அப்படி சொல்லாதிங்க அங்கிள் ... என்னை சந்திச்சதை தவிர அவர் எந்த தப்பும் பண்ணல " என்றவள் மீண்டும் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்...

அவளை தேற்றும்  விதம் புரியாமல் தவித்தவர்,

" மீரா இப்படி நீ வெளிய நின்னு அழுறதை யாராச்சும் பார்த்தா தப்பா பேசுவாங்க மா ... வீட்டுக்குள்ள போலாம் " என்றார்.

அவர்  எதிர்ப்பார்த்தது போலவே அவரின் வார்த்தைகளை கேட்டு நிமிர்ந்தவள் அப்போதுதான் தான் நிற்கும் இடத்தை கவனித்தாள்.... அவள் கண்ணீர் துளிக்கு  இணையாக வானமும் அழுது கொண்டிருந்தது..

“ஐயோ அங்கிள் என்னால நீங்களும் மழையில நனைஞ்சிட்டிங்களே.... உள்ள வாங்க “  என்றபடி அவள் தங்கி இருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

மீரா அந்த வீட்டிற்கு வந்த பிறகு பெரும்பானமையான நேரங்களில் யாரும் அங்கே செல்வதில்லை... அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கிருஷ்ணன் அனைவரிடமும் சொல்லியதை சந்திரப்ரகாஷ் நினைவு கூர்ந்தார் .

( என்ன இந்த பையன் ... ? எல்லாரும் காதலிக்கிற பெண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து இருக்கணும்னு ஆசை படுவாங்க ... ஆனா இவன் இவளை ஏன் இப்படி தனிமையில வெச்சுருக்கான்) என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்.

கிருஷ்ணன் அப்படி சொன்னதற்கு இரண்டு  காரணங்கள் இருந்தன. முதல் காரணம் மீராவின் மனநிலை ...பொதுவாகவே மீரா தனிமை விரும்பி . அவளுக்கு ஒரு அழகிய குடும்பத்தை கொடுத்து அவளை மாற்ற வேண்டும் என்பது கிருஷ்ணனின் ஆசை . எனினும் அவன் அவளை அழைத்து வரும்போது இருந்த சூழ்நிலையே வேறு. விதி வலியது என்பது இதுதானோ ?

இரண்டாவது காரணம், அவன் மீராவிற்கு செய்து   தந்த சத்தியம். அவள் அனுமதி இன்றி அவள் வாழ்வில் நெருங்கி வந்தால் எந்நேரமும் அவனை பிரிந்து விடுவேன் என்று அவள் கேட்ட சத்தியம்... தன் பிரியமானவளை பிரிந்துவிடகூடாது என்று அவன் சத்தியம் செய்து தந்தான். நேற்று அவன் அதை மீறிய போதும்  அவள் அமைதியாக இருந்தாலே தவிர பிரியவில்லை ... அதை நினைத்து கிருஷ்ணன் மகிழ்ச்சி கொண்ட வேளையில்தான் இன்று மீராவின் வார்த்தைகள் அவனை கோபப்பட வைத்தது.

இது எதுவும் அறியாத சந்திரப்ரகாஷ் மீராவின் முகம் பார்க்க

அவளோ அவரெதிரில் இருந்த இருக்கையின் அருகில் கண்ணீருடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

" மீரா "

" சொல்லுங்க அங்கிள் "

" உட்காரும்மா "

" இல்ல பரவால"

" இது பாரும்மா ..கிருஷ்ணனின் சித்தப்பான்னு நெனச்சு நீ என்கிட்ட சிரமபட்டு பேசாம என்னை உன் அப்பாவா நெனச்சுக்கோ "

அவர் வார்த்தை கேட்டல் ஒரு கணம் அவர் முகத்தை பார்த்தவள் ஓடி வந்து அவர் அருகே அமர்ந்து அழுதாள்...

" அப்பா ......அப்பா ...... அவருக்குத்தான் என் மேல அக்கறையே  இல்லையே அங்கிள் ... அப்பா அம்மா ரெண்டு பேருமே என்னை இப்படி அனாதையா விட்டுடு போயிட்டாங்களே ..."

" தயவு செஞ்சு அனாதைன்னு சொல்லாதே மீரா ... நீ எங்களை எப்படி பார்க்குற தெரியல ! பட் நாங்க எல்லாரும் உங்க எங்க வீட்டு பொண்ணாதான் பார்க்குறோம் ..நீ எங்கு வந்து எத்தனை மாசம்  ஆச்சு ? இந்த நாட்களிலே எங்க வீட்டுக்கு எதனை பேரு வந்துருக்காங்க ? யாராச்சும் உன்னை வித்தியாசமா பார்த்திருப்பாங்க இல்லே கேள்வி கேட்ருப்பாங்களா ? "

இல்லை என  தலை அசைத்தாள் மீரா.

" ஏன்னா உன்னை எங்களோட தூரத்து உறவு தங்கச்சி பொண்ணு நு  சொல்லி வெச்சிருக்கோம்  ... அப்படி சொன்னதே உன் கிருஷ்ணாவின் அப்பா, எங்கண்ணன் சூர்யா பிரகாஷ் தான் ! " என்றவர் உன் கிருஷ்ணா என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து அவள் முகத்தை பார்த்தாள்.

ஒரு சோக புன்னகையை உதிர்த்தவள் வேறேதும் பேசவில்லை.

" மீரா, அதுமட்டும் இல்ல நீ சதாசிவம் சாரோட பொண்ணுனும் எனக்கு தெரியும் "

" அங்கிள் "

" ஒரு  வகையில் நாங்களும் உங்க கம்பெனில பார்ட்னேர்ஸ் ஆ இருந்தோம் மீரா .. அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு . அதுக்கப்பறம் உங்க அப்பா கூட கொஞ்சம் மனஸ்தாபம் . நாங்களும் ஊட்டில இருந்து சென்னைக்கு வந்துட்டோம். நீ இங்க வந்தபோதே உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டேன் மா... தப்ப நினைக்காதே ... உன்னை சந்தேகபட்டு விசாரிக்கலை. எதுக்குமே எதிர்த்து பேசாத கிருஷ்ணா,   ஒரு பொண்ணுக்காக நம்ம கிட்டே வாதாடினானெ நு ஒரு கியூரியொசிட்டி."

"............................................."

" இப்படி அமைதியாவே இருந்தா என்ன நடக்கும் மீரா? கொஞ்சம் மனசு விட்டு பேசு மா ."

அவரின் கேள்வியா அல்லது அப்போது அவள் இருந்த மனநிலையா? ஏதோ ஒன்று மீராவின் பிடிவாதத்தை அசைத்தது. முதல் முறை தன்னை பற்றி பகிர்ந்து கொள்வதை தடுக்காமல், தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

தே நேரம் ,

தனதறைக்கு வந்த கிருஷ்ணா, ஜன்னல் வழியே அவள் வீட்டை பார்த்தான். கிருஷ்ணா அவளிடம் பேசும்போதே சந்திரப்ரகாஷ் அங்கு வந்ததை அவனும் அறிவான் ( அட பாருங்கடா.... கில்லாடி கிருஷ்ணா நீங்க ! அவன்  தன் சித்தப்பாவின் குணம் நன்கு அறிந்தவன் அல்லவா ? தந்தையின் காதலையே சேர்த்து வைத்த சித்தப்பா நம்ம காதலுக்கும் உதவட்டுமே என்ற நல்லெண்ணம் தான் ..... ஹ்ம்ம் என்னா ஒரு வில்லத்தனம்)

" ஜானகி மேல உனக்கு என்னடி பொறாமை? காதல் இல்லன்னு சொல்லிட்டே ...தள்ளி நில்லுன்னு சொல்லிட்டே..வேற கல்யாணம் பண்ணிக்கோ நு கூட சொல்லிட்டே .. அப்பறம் நான் எந்த பொண்ணு கிட்டே பேசுனா உனகென்னடி நீலாம்பரி ? "  புன்னகையுடன் வாய் விட்டே கேட்டவன் தனிமையிலே சிரித்துகொண்டான். அவனின் நினைவுகளும் பின்னோக்கி செல்ல இப்போ பிளாஷ் பெக் டைம் ...வாங்க நாமளும் கதை கேட்போம் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.