(Reading time: 12 - 23 minutes)

காதல் நதியில் – 02 - மீரா ராம்

றடிக்கும் சற்றேக் குறைவான உயரத்தில் தன்னை யார் பார்த்தாலும் திரும்ப பார்க்கத்தூண்டும் தோற்றத்தில் ஒருவன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்…

வந்தவன் “எக்ஸ்க்யூஸ்மீ நான் இங்கே உட்காரலாமா?“ என்று கேட்க,,,

ஷன்வி அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு, “ஏன் சார், இத்தனை இடம் இருக்கே, உங்களுக்கு ஏன் இந்த இடத்துல உட்கார தோணுச்சு?”….

kathal nathiyil

பதில் சொல்லாமல் சிரித்தவன், அவளை ஊடுருவிப் பார்த்தான்… அவன் பார்வையில் சிறிது தடுமாறியவள், அவளின் பின்னேயும், பக்கத்திலும் திரும்பி திரும்பிப் பார்த்தாள்…

“யார தேடுறீங்க?...”

“இல்ல, இப்போ நீங்க சிரிச்சீங்களே அதான் யார் காமெடி பண்ணியிருப்பான்னு பார்க்கறேன்…” என்றதும் அவன் வாய் விட்டே சிரித்தான்…

அது அவனுக்கு இன்னும் அழகு சேர்த்தது… வரிசையில் அமைந்த பற்களின் இடையே தெரிந்த ஒரு தெற்றுப்பல் அவனின் முகத்திற்கு மேலும் களை கூட்டியது…

அதனை ரசித்தவள், வெளிக்காட்டாமல், “ஹலோ போதும்… பயமா இருக்கு, இப்படி சிரிக்காதீங்க… பாவம் பக்கத்தில் குழந்தைங்களும் இருக்கறாங்க” என்று சொல்ல…

அவன் அவசரமாய் “யாரை சொல்லுறீங்க…?” என்று புருவம் உயர்த்த…

அபியைக் கைகாட்டி அவள் சொல்ல, அப்பொழுது தான் அவளுக்கு உறைத்தது… தனது அருகே இரண்டு பேர் இருந்தும் இவன் அவர்களை கவனிக்காது தன்னிடமே பேசுகிறான்… அதுவும் அபி இருப்பதை காட்டி அவள் உணர்த்தியப் பின்னரும் அவன் அவர்களின் பக்கம் பார்வை செலுத்தாது, மௌனமாய் அவளையேப் பார்த்தபடி இருந்தான்…

அவளுக்கு அவனின் செய்கை உள்ளூர இதம் தந்தாலும் வெளியே சுள்ளென்று பேசினாள்…

“உங்களுக்கு கண் தெரியாதா...?”

அவளின் இந்த கேள்வியை எதிர்பார்த்தவன் போல், கூறினான்… “ஏன் தெரியாது, நல்லாவே தெரியுமே… “

“எனக்கொன்றும் அப்படி தெரியலை…”

“அதெப்படி அப்படி சொல்றீங்க…”

“வேற எப்படி சார் சொல்வாங்க?...”

“எப்படினாலும் சொல்லலாமே…”

“எப்படினாலும் என்றால்…

“எப்படியென்றாலும் அதை நீங்க தானே சொல்லணும்..” என்று அவன் மர்மமாக புன்னகைக்க…

“நான் என்ன சார் சொல்லணும்…?”

“என்ன சொல்லணும்னு என்கிட்ட கேட்டா ???.. உங்க மனசுல என்ன இருக்குனு எனக்கெப்படி தெரியும் ?...”

“ஹலோ சார்… என்ன கொழுப்பா ?...”

“என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கு?...”

“அவனை ஏற இறங்க பார்த்தவள், கணக்கச்சிதமாக இருந்த அவனின் கட்டுமஸ்தான தோற்றத்தில்… அவளுக்கு இல்லையென்றே தோன்றியது… ஆனால் அதை வாய்விட்டு சொல்லிவிட்டால் வேறு வினையே வேண்டாம் என்று தோன்றிவிட, பேச்சை திசை திருப்பினாள்…”

“நான் என்ன கேட்டேன்??? நீங்க என்ன சொல்லறீங்க சார்???...”

“என்ன கேட்டீங்க மேடம்???...”

“போச்சுடா… மறுபடியும் முதலிலிருந்தா???...” தலையில் கைவைத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…

“என்னாச்சு?... தலை வலிக்கிறதா?...” என்று பாவமாக கேட்டான்…

(“உன்னால் தான்டா இதெல்லாம்… நீ உன் வேலையைப் பார்த்துப் போயிருந்தால் எனக்கேன் இந்த நிலைமை… சே….” என நொந்துகொண்டவள்,,,)

“ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாது இப்படியே கேள்வியை சுத்தி விட்டுட்டே இருந்தால் தலை வலி வராமல் வேற என்ன சார் வரும்???” என்று எகத்தாளமாய் கேட்டு வைக்க…

“ஓ.. சரி சரி… இப்போ சரியா பதில் சொல்வேன்.. கேளுங்க…”

“திரும்பவுமா?” என்று அவனை முறைத்தவள்… “உங்களுக்குக் கண் தெரியுமா தெரியாதா என்று கேட்டேன்…”

(“அதான் அழகான ரோஜாவாக கண்ணைப்பறிக்கும் வண்ணம் என் எதிரிலே இருந்து சரமாரியா கேள்வி கேட்டு வைக்கிறியே… உன்னை தெரியாமல் இருக்குமா???.. என்று நினைத்தபடி”…)

“ஏன் தெரியாம?... என் எதிரில் ஒரு பெண் நீங்க இருக்கறீங்க.. அதுவும் வைலட் கலர் சுடியில் தேவதை மாதிரி தெரியுறீங்களே…. இப்பொழுதாவது நம்பறீங்களா எனக்கு கண் நல்லா தெரியும்னு?... ஹும்…” என்று புருவம் உயர்த்தி லேசாக புன்னகைக்க…

அவனைத் திட்டவேண்டுமென்று வாயெடுத்தவள், அவனின் அந்த சிரிப்பில் தொலைந்துபோனாள்…

(“எவனோ ஒருவன் எதிரில் அமர்ந்துகொண்டு வம்பிழுத்தால், நீயும் இப்படி காணாதததைக் கண்டது போல் ஏன் பார்த்துவைக்கிறாய்… அறிவே இல்லையா ஷன்வி உனக்கு… இவன் என்ன ஆணழகனா?... இல்லை மன்மதனா?... என்று தனக்குள் கேட்டுக்கொண்டவள்… நிச்சயமாய் என்ற பதிலும் சேர்ந்து வரவே தன்னையே நொந்து கொண்டாள்…”)

“என்னாச்சு…” என்றவன் அவளின் முன் சொடக்குப்போட, அதிர்ந்து நிமிர்ந்தவள்… தன்னை சமாளித்துக்கொண்டு…

“உங்களுக்குக் கண் தெரியலனு நான் நிச்சயமாய் சொல்ல முடியும்…” என்று சவால் விட…

அவன் எப்படி என்றான்…

“இதோ இப்படித்தான்…” என்றவள் பார்வையைத் திருப்பி தனக்கு பின்னே இருந்த ரிகா-அபியை சுட்டிக்காட்டினாள்…

“அவர்கள் இருவரும் கதையில் மூழ்கி விட்டதை ரிகாவின் நிலையைப் பார்த்தே அறிந்துகொண்டாள்… அபி தன் சிறு கையை ஆட்டி ஆட்டி அவளுக்கு கதை சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ரிகா மெய் மறந்து போய் இமைக்காமல் குட்டிப்பெண்ணையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்…”

“இப்போ தெரியுதா நான் சொன்னது சரிதான் என்று?...”

“ஓ… சாரி.. நான் அவங்க இருந்ததை கவனிக்கவே இல்லை… நீங்க இந்த குட்டி ப்ரின்செஸ்ஸ தான் சொன்னீங்களா குழந்தைன்னு… நான் வேற ஏதோ நினைச்சுட்டேன்...” என்றபடி சிரிக்க…

“என்ன நினைச்சீங்க…?” .. என்று பட்டென்று கேட்டுவிட்டாள் அவள்..

கேட்டவள் தன் மடத்தனத்தை எண்ணி தலையில் குட்டிக்கொண்டாள்…

அதைக் கண்டவன் இதழ்களில் சிறுபுன்னகை மலர்ந்தது…

“வேண்டாம் விடுங்க… சொன்னால் கோபப்படுவீங்க…”

“அதெல்லாம் படமாட்டேன்… சும்மா சொல்லுங்க…” என்று அவள் எடுத்துக்கொடுக்க….

“நிஜமா இதுக்கு காரணம் நான் கிடையாது... நீங்க தான் சொல்ல சொல்லுறீங்க… அப்புறம் என்னை திட்டக்கூடாது சரியா?...” என்ற ஒரு கேள்வியுடன் நிறுத்தி அவளைப் பார்த்தான்…

“ஹ்ம்ம்.. சரி… “ என்று அவள் தலை அசைக்க…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.