(Reading time: 9 - 18 minutes)

13. என்னுயிரே உனக்காக - சகி

ரவின் இனிய கீதம் வெண்ணிலவின் ரேகையோடு வீசும் தென்றலின் ராகம்....ஆஹா...அருமை....இன்னொரு வள்ளுவரோ!கம்பரோ!வான்மீகியோ!வியாசரோ! வேண்டும் அதை காவியமாக்க....!!!!

"கீதா!!!"-கணவனது குரலைக் கேட்டவள் திரும்பினாள்.

"என்னங்க?"

"என்ன நிலாவையே பார்த்துட்டு இருக்க??"

Ennuyire unakkaga

"சும்மா தான்."

"இல்லை.....நீ என்னமோ யோசிச்சுட்டு இருக்க.சொல்லு!"

"ஒண்ணுமில்லங்க....உங்களுக்கு தான் தெரியுமே...சின்ன வயசில இருந்தே எல்லாம் கிடைச்சும் பாசம்,அன்பு எதுவுமே இல்லாம வளர்ந்தவ நான்.எங்கே,என் வாழ்க்கை முழுசும் அப்படியே போயிடுமோன்னு பயந்தேன்.ஆனா,இப்போ...!"

-அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் அவளை தடுத்தது.ரகு அவளை,மெதுவாக,ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

"ஏ...செல்லம்...என்னடா நீ?"

"............."

"இங்கேப் பாரு...!அழக்கூடாது...நான் இருக்கேன்டா உனக்காக!"

"................"

"சிரிக்க மாட்டீங்களோ?"

"..............."

"உன் ச்சீப் ஆர்டர் சிரி..."-என்றான் விளையாட்டுத் தனமான அதிகாரத்தோடு.அது அவள் இதழ்களில் இருந்து புன்னகையை வரவழைத்தது.

"ம்...இப்போ தான் அழகா இருக்க!"

"ம்...அப்போ இதுக்கு முன்னாடி?"

"அப்போ கூட தான்!"

"ம்...."

"நிஜமாடி..நீ சிரிக்கும் போது,அழுகும் போது,கோபப்படும் போது,வெட்கப்படும் போது,பேசும் போது எப்பவுமே ரொம்ப அழகா இருக்கடி!"-பின்,சுவற்றில் மெதுவாக சாய்ந்து,நெஞ்சின் மீது இரு கைகளையும் வைத்து,

"கொல்றீயேடி!"

"ம்....போதும்.ரொம்ப பொய் சொல்ல வேண்டாம்!"

"நான்  பொய் சொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியாது?"

"தெரியும்...ஆனா!"-ரகு,அவள் அருகில் இன்னும் நெருங்கினான்.

"ஐ லவ் யூ செல்லம்!"-கீதா,அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

"மறுபடியும் அழ ஆரம்பிக்காத....!"

"ம்..."

"ஏ....அம்மா என்கிட்ட ஒண்ணு கேட்டாங்க!"

"என்ன?"

"அம்மாவையும்,அப்பாவையும் எப்போ தாத்தா,பாட்டி ஆக்கப் போறன்னு கேட்டாங்க!"-கீதா வெட்கத்தில் தலை குனிந்தாள்.

"இது தான்டி...யாருமே அசைக்க முடியாத என்னை சாய்த்தது."

"போங்க!"-கீதா லேசாக ரகுவை தள்ளினாள்.

"என்ன சீக்கிரமே அவங்க ஆசையை நிறைவேற்றிடலாமா?"

"போங்க...!"-அவனிடமிருந்து விலகியவளை,உறுதியான அவன் கரம் பிடித்து இழுத்தது.

"என்னங்க...!"-ரகு,அவள் இதழ்களில் தன் சுட்டு விரலை வைத்தான்.

"இனி பேசுறதுக்கு இங்கே ஒண்ணுமில்லை."-தன் கணவனின் நெடிந்துயர்ந்த அன்பினில்,அவனுள் உணர்வாக,உயிராக,கனவாகக,நினைவாக,ஆத்மாவாக,காதலாக கலந்தாள் கீதா.

விதி ஆடும் விளையாட்டில் இருந்து யார் தான் மீள முடியும்??நாட்கள் சிறிது நகர்ந்தன.

"இல்லை சார்...அவ்வளவு நாள் முடியாது."-தன் செல்பேசியில்,யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான் ரகு.

"சரி...வரேன் சார்!"-இணைப்பை துண்டித்தான்.

"என்னடா என்னாச்சு?"-பாலசௌந்தரி.

"ஒண்ணுமில்லைம்மா! வேலை விஷயம் ஸ்ரீநகருக்கு உடனே கிளம்பணும்!"

"எப்போ வருவ?"

"11 மாசம் டிரய்னிங்மா!"

"அடேய்!என்னடா அவ்வளவு நாளா?நீ சி.பி.ஐ.யா?ஆர்மி ஆபிஸரா?"

"போயிட்டு வந்துடுறேன்மா!"

"அப்போ கீதாவை இங்கேயே விட்டுட்டுப் போ!"

"இல்லைம்மா..."

"ஸ்ரீநகருக்கு வந்து அவ எண்ண பண்ணப் போறா?"

"கீதாவை டெல்லியில தான் விட்டுட்டு போகணும்."

"ஏன்?"

"அங்கே நிறைய ஃபைல் இருக்கு.ஆதிக்கு தேவைப்படும்.அவன் தான் அங்கே இருக்கானே !அவன் பார்த்துப்பான்!"

"என்னமோ போ!1 வாரமாவது இங்கே தங்குங்க!"

"சரிம்மா!"-அவன்,அப்போதே கிளம்பி இருந்தால்,எந்த பிரசன்னையும் வராது போயிருக்கும்.1 வாரம் தான் மருமகள் தங்களோடு இருப்பாள்,என்று...ரகுவின் தாயும்,தந்தையும் கீதாவை அழைத்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு சென்றிருந்தனர்.அன்றிரவு....

வானை பிய்த்துக் கொண்டு மழை கொட்டி தீர்த்தது.ரகு,ஏதோ சிந்தனையில் நன்றாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.பாவம்!அவனுக்கு என்ன நிகழ்ந்தோ???

தன் அறை கதவை திறந்து மெத்தையில் விழுந்தான்.

"கீதா!"

"..............."

"கீதா!"

".............."-அவனுக்கு அவர்கள் கோவிலுக்கு சென்றிருந்தது தெரியாது போலும்!

"கீதா!"-கதவு,திறக்கப்பட்டது,வந்தது கீதா அல்ல!ஸ்ரேயா!!!!!!

அவன் இருந்த நிலையை கண்டு அவளுக்கு ஏதோ விளங்கியது.

நன்றாக குடித்திருந்தவன்,அவள் முகத்தை பார்க்கவில்லை.

ஸ்ரேயா ஏதோ கூற வாயெடுக்கும் முன்,

"ஏ...செல்லம்...நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்.நீ  வேணும்னா கொஞ்ச நாள் இருந்துட்டு வா!!"-என்றான் கண்களை மூடியவாறு!!!!

"............."

"என்னடி எதுவும் பேச மாட்ற??"-ஸ்ரேயா அதற்கு மேல் அங்கு நிற்பது சரி வராது,என்று வெளியே செல்ல திரும்பிய போது,அவனுடைய கரம் அதற்கு அணையாய் நின்றது.

"விடுங்க!!"-அவள் பேசும் தோரணையும் அவன் காதுகளுக்கு தன் மனைவியின் குரல் போலவே ஒலித்தது.

"கோபமோ?"-ஸ்ரேயா பதில் கூறிவதற்கு முன்பு,அவனது உறுதியான அணைப்பினுள் அவள் தள்ளப்பட்டாள்.காலம் முடிந்தது.அனைத்தும் கை மீறியது.எல்லாம் முடிந்துவிட்டது!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.