(Reading time: 20 - 39 minutes)

02. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

டுத்த நாள் காலை!

குருவும் பிரகாஷும் வெளி கார்டனில் அமர்ந்து நேற்றைய பெண் பார்த்த நிகழ்வை பற்றி பேசி கொண்டு இருந்தனர்….

" பிரகாஷ்  அந்த  பையன்  வேணாம்னு  சொன்னாத  அவரு(உறவினர்) கால்  பண்ணி  சொன்னாரு……. காசு  பணம்  ஒரு  ப்ரொப்லெம்னு அந்த பையன்  வேணாம்னு  சொன்னது  கொஞ்சம்  கஸ்டமா  இருக்கு….. ரெண்டு குடும்பமும் சப்போர்ட் பண்றோம் கொஞ்ச நாளைக்குனு சொன்னோம். அந்த பையன் என்ன நெனச்சானோ..... ஸ்ரீ நீனைச்சா கஷ்டமா இருக்கு.... அவ எந்தரிச்சு வந்ததும் பேசி பாரு என்ன சொல்றானு பாக்கலாம்”

Poo magalin thedal

" நான் பேசுறேன் …..என்ன மாமா, நீங்களே இப்படி உடஞ்சி  போய் பேசினா…..ஸ்ரீக்கு எப்படி  ஆறுதல் சொல்றது……. அவ சின்ன பொண்ணு மாமா……. ஜஸ்ட் 21 யியர்ஸ் ஏஜ் ஆகுது.…..இப்போ கல்யாணம் பண்ணனும் அவசரம் இல்லை மாமா……பேசாம நாம அவள படிக்க இல்ல வேலைக்கு அனுப்புவோம்". குரு இடை மறித்தார்

" இல்லை பிரகாஷ். அவ இந்த வீட்டில செல்லமா வளர்ந்த  பொண்ணு….. வெளில போய் எதுக்கு கஷ்டப்படனும்…. இந்த சம்பந்தம் போன என்ன…. இன்னொரு நல்ல இடம் கண்டிப்பா அமையும்…. அவ மனச கொஞ்சம் தேத்துங்க. தனியா விடாதிங்க ஒடஞ்சு போய்டுவா இன்னும்"

" நாங்க பாத்துகிறோம் மாமா….. அவ மனசுல என்ன இருக்குனு கேக்குறேன்..... அவளுக்கு பிடிச்சா அஜய் வீட்ல மறுபடியும் போய் பேசலாம்.....அவளுக்கு கொஞ்சம் மாறுதல் வேணும் மாமா....மாறுதலுக்கு எல்லாரும் கொடைக்கானல் போலாமா? அவளும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பா"

" சரி பிரகாஷ் போகலாம்".குரு எழுந்து கொண்டார்.

" நான் வீட்டுக்கு கிளம்புறேன். அக்கா கிட்ட சொல்லிட்டு போறேன்".

லக்ஷ்மியிடம் வந்த குரு" அக்கா அவ வந்தா எதுவும் கேட்க வேணாம்... பாத்துக்கலாம்".. மகளை கஷ்டபடுத்த விரும்பாத தந்தை உள்ளம்..

 " குரு, என்னப்பா இப்படி சொல்லற.... அவளை யாரும் இந்த வீட்ல எதுவும் கேட்க மாட்டாங்க.. நீ கவலை படாத..."

" சரி அக்கா நான் கிளம்புறேன்.... ஆபீஸ் போய்ட்டு மதியம் வரேன்"

     ( பிரகாஷ் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டு விட்டு பிளான் செய்து கொடைக்கானல் ட்ரிப் போவது என்று முடிவு செய்தார்கள்.)

குரு ஆபீஸ் கிளம்பி செல்வதற்கு முன்னால் ஸ்ரீ எழுந்து வந்தாள்.....

அவளிடம் பிரகாஷ் பேசி கொடைக்கானல் போக சம்மதம் வாங்கினான்..( என்ன பேசுனாங்க.... ஸ்ரீ பாவம் வருத்த பட்டு என்ன சொன்னாலோ.... பாக்கலாம்.... )

( வெயிட் வெயிட்.. அடுத்த சீன் கொடைக்கானல்... எஸ் நீங்க  எதிர் பார்க்கும் ஹீரோ இன்ட்ரோ தான்... )

சென்னை புறநகர் பகுதயில் தான்  நம்ம ஹீரோ வீடு.. மிக பெரிய அழகிய வீட்டினுள் BMW வழுக்கி கொண்டு நுழைந்தது.. அதில் இருந்து அஸ்வின் இறங்கி வீட்டின் பெரிய வாயில் படிகளை நெருங்கினான்.

அஸ்வின் பல தொழிகள் செய்பவன்.. மருந்து... விவசாயம்... எக்ஸ்போர்ட்... இம்போர்ட்.... ஆட்டோமொபைல்... என பல தொழில்கள் செய்கிறான்... ராஜ்குமார் ஆரம்பித்து வைத்த தொழில்களை திறம் பட நடத்தி வருகிறான்... இப்பொழுது கூட வேலை நிமித்தமாக வெளிநாடு பயணம் முடித்து திரும்பி இருக்கிறான்.

 சித்தி கல்பனா வெளியே வந்து அஸ்வினை பார்த்து புன்னகை செய்து கொண்டே

" வாப்பா அஸ்வின் கண்ணு.. ஹொவ் ஆர் யு ?? ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி இருக்க "

" நான் நல்ல இருக்கேன்  சித்தி.. மீரா எங்க காணோம்?? எப்படி இருக்கா அவ ??"

" மீரா கொஞ்சம் இப்போ ஒகே அஸ்வின்"…. மீரா, கல்பனா-கணேசன் தம்பதியரின் ஒரே மகள்.

இவர்கள் பேசி கொண்டு இருப்பதை கேட்டு அஸ்வின் தாயார் காஞ்சனா ஆரத்தி தட்டுடன் வந்து திருஷ்டி சுற்றினாள்...

" என்ன அஸ்வின் எப்படி இருக்க? ஒழுங்கா சாப்டுறது இல்ல போல.. இளச்சு போய் இருக்க.. "

" ஐ ஆம் பைன் மாம்... நீங்க நாளுக்கு நாள் செம அழகாகிட்டு போறீங்க" கண்ணடித்தான்..

" போதும் விளையாட்டு.. வா டா வீட்டுக்குள்ள...".. ஹி ஹி என சிரித்து கொண்டே வீட்டினுள் சென்றனர். 

வீடு மிக பிரிம்பாண்டமாக இருந்தது.. மிக பெரிய ஹால், கீழே நான்கு படுக்கை அறைகள் மேலே மூன்று படுக்கை அறைகள். வீட்டை சுற்றி மிக பெரிய தோட்டம் இருந்தது. நீச்சல் குளம் ஒன்று தோட்ட நடுவில் இருந்தது. அங்கும் இங்கும் வாத்துகள் ஓடி கொண்டு இருந்தன. மொத்தத்தில் அது ஒரு அரண்மனை என்று கூட சொலல்லாம்.

மாடியில் இருந்து இறங்கி வந்த ராஜ்குமார் (அஸ்வின் தந்தை)  

" வா அஸ்வின்.. ஹொவ் ஆர் யு? ஹொவ் வாஸ் தி ஜெர்னி? காட் தி ரிப்போர்ட் அபௌட் ப்ரோஜெக்ட்ஸ்.. யு டிட் அ எக்ஸ்செல்லேன்ட் ஜாப் அஸ்வின்"

"  ஐ ஆம் பைன் டாடி.. ஜெர்னி வாஸ் குட்.. thankyou டாடி.."

" ஹ்ம்ம் சரி அஸ்வின் நல்ல ரெஸ்ட் எடு.. அப்புறம் கம்பனிக்கு வா"

அஸ்வின் அவர்களின் தொழிற்சாலை வேலை நிமித்தமாக துபாய் சென்று அன்று தான் திரும்பி வந்திருந்தான். அதருக்கு தான் இந்த பேச்சு எல்லாம்.

" சித்தி எங்க என்னோட செல்ல தங்கச்சி மீரா ??"

" ரூம்ல இருக்கா அஸ்வின்" என்று சொல்லி கண் கலங்கினர்..

" அழாதிங்க சித்தி.. சீக்கிரம் மாறிடுவா.. நா போய் அவள பாத்திட்டு வரேன்"

மீரா அந்த வீட்டின் செல்ல பெண்( அட நாம ஸ்ரீ மாதரி தான் அந்த பொண்ணும்). பட்டப்படிப்பு முடித்து விட்டு அந்த ஊரின் மிக பெரிய செல்வந்தரின் மகன் ரகுவிற்கு மணம் செய்து வைத்தனர். ரகு ஒரு மருத்துவன்.கல்யாணம் அன்று எமெர்ஜென்சி என்று மருத்துவமனை போன் வர கிளம்பி விட்டான் மீராவிடம் விடை பெற்று. திரும்பி வரும் பொழுது ஆம்புலன்சில் உயிர் இல்லாமல் கொண்டு வந்து கிடத்தி விட்டு போனார்கள். ரகு சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டான். மீராவை அன்றே அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.இன்றோடு 7 மாதம் ஆகி விட்டது. அஸ்வின் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் தேற்றி இன்று கொஞ்சமாது தேறி வந்து இருக்கிறாள்.

அஸ்வின் ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.. மீரா மெலிந்து தெரிந்தாள்.. அழகான பூ இன்று சோர்ந்து போய் தெரிந்தது… சேலை உடுத்தி இருந்தாள். அருகே சென்ற அஸ்வின் மீராவை பாசமுடன் அணைத்து தலை கோதிவிட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.