(Reading time: 39 - 78 minutes)

 

" ச்சோ ரிலாக்ஸ் செல்லம் ...கார்த்திக் என்னோட  ஒற்றன் "

" ஒற்றனா? "

" ஆமா... நீ நிம்மதியா படிக்கிறியா? கிளாஸ் ல ஏதும் பிரச்சனையா ? என்பதுல ஆரம்பிச்சு எந்த பையன் என் செல்லத்தை சைட் அடிக்கிறான் என்பது வரை எல்லாத்தையும் எனக்கு சொல்றதுக்குதான் நான்  கார்த்திக்கை ஒற்றனை நியமிச்சேன் "

அவன் சொன்ன பதிலை அசந்துதான் போனாள் சுபத்ரா. அவளுக்கு காதலன் படத்துல வருகின்ற என்னவளே அடி  என்னவளே சாங் ல வர்ற ஒரு லைன் தான் ஞாபகம் வந்திச்சு .

வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி

அனுப்பிவைப்பேன்

இந்த லைன் சுபிக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் அவளின் அபார கற்பனைதான் . அதென்ன கற்பனை தெரியுமா ?

 அதெப்படி வருடும் காற்றை வடிகட்ட முடியும் ? காற்று எட்டுத்திக்கும் பரவி இருக்குது. உருவமில்லாதது. அதை எப்படி ஒரு காதலன் வடிகட்ட முடியும் ? அது ஒரு உவமைன்னு எடுத்துகிட்டலும் எந்த காதலன் காதலியை கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்துப்பான் ?

இந்த அக்கேள்வி அடிக்கடி சுபத்ராவிற்கு தோணும். அந்த கேள்விகளுக்கெல்லாம் ஆறடி விடையாய் கண் முன்னே நின்றான் அர்ஜுனன்.

" ஹே சுபி என்னாச்சு  ? "

" ம்ம்ம்ம் ஒண்ணுமில்ல அர்ஜுன் . ஆமா உங்க ஒற்றனுக்கு உங்களுக்கு இங்க என்ன வேலை ? "

" அட மக்கு இளவரசி அன்னைக்கு நீதானே தனுஷின் வேலை இல்லபட்டதாரி ரிலீஸ் ஆச்சு ஆனா இன்னும் பார்க்கலன்னு பீல் பண்ண . ? உன் கிளாஸ் லாஸ் அவர் ப்ரீன்னு  கார்த்திக் என்கிட்ட சொன்னான் . நாந்தான் தேட்டர் போகுற ஐடியா கொடுத்து , கார்த்திக் அதை கீதா கிட்ட சொல்லி , கீதாவும் உன்னை அழைச்சிட்டு வந்தாங்க "

அவர்கள் மூவரையும் பார்த்தவள் , தன்னை சுற்றி எவ்வளவு உறுதியான அன்பு சிறையை அர்ஜுனன் கட்டி இருக்கிறான் என்று சிலிர்த்து கொண்டாள் சுபத்ரா. அதன் விளைவாக அவள் கண் கலங்க,

" ஓகே ஓகே எல்லாரும் படத்தை கண்டினியு பண்ணுவோம். சுவாதி , நிவிதா வேற உள்ள இருக்காங்க " என்றபடி அனைவரையும் அழைத்து சென்றான் அர்ஜுனன் . ( யாவன் எல்லாரையும் தெரிஞ்சு வெச்சுருக்குறான் என ஆச்சர்யபட்டவள் படத்தை பார்த்ததை விட அர்ஜுனன்னை பார்த்ததுதான் அதிகம் )

டம்  முடிந்ததும் சுபத்ராவை வீட்டில் விடுவதற்காக காரருகில் சென்ற அர்ஜுனனின் செல்போன் சிணுங்கியது .

" என் மனதை கொள்ளை அடித்தவளே

என் வயதை கண்டுபிடித்தவளே

அழகிய முகம் எனக்கென தினம்

அவசரம் என விழிகளில் விழும் "

இந்த பாடல் வரிகள்  உனக்குத்தான் என்று பார்வையால் உணர்த்தியவன் கால் எடுக்க,

" அர்ஜுன்? "

" எஸ் கிருஷ்ணா ? "

( ஐயோ அண்ணாவா? என திரு திருவென விழித்தாள் சுபா )

" அர்ஜுன் சுபாவை காலேஜ் ல பிக் அப் பண்ணிட்டு காபி டே வாயேன் "

" எனிதிங் சீரியஸ் ? "

" சீரியஸ் இல்ல பட் இம்பொர்டண்ட் "

" ஓகே டா... வி வில் பி தேர் "

" என்னாச்சு அர்ஜுன் ?"

" உன்னை காலேஜ் ல பிக் அப் பண்ணிட்டு காபி டே வரணுமாம்  என் மச்சானின் உத்தரவு "

" ஐயோ தேட்டர் விஷயம் தெரிஞ்சிருக்குமா ? "

" ஆம் ஆமா தெரிஞ்சிருக்கும் ..அதான் உன்னை காலேஜ் ல பிக் அப் பண்ண சொன்னாரா ? "

" ச்ச்ச்ச ஆமாலே ? "

" ஆமாதான் வண்டியில  ஏறு"

டுத்து ,

" டேய் ராம் "

" சொல்லுங்கண்ணா ? "

" எங்க இருக்கே ? "

" அர்ஜுன் வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன் "

" என்ன விஷயம் டா ? "

" இல்லன்னா ஜானகி கிட்ட வேலை விஷயமா பேச வெளிய கூட்டிடு வந்தேன் ...அதான் டிராப் பண்ணலாம் நு "

" இல்ல வேணாம் ரெண்டு பேரும் காபி டே வாங்க ! "

" என்ன விஷயம்னா.... "

" வாடா சொல்றேன் "

அர்ஜுன் சுபியுடன் , ரகு ஜானகியுடன் நம்ம கிருஷ்ணா அவருடை பார்ட்னர் இன் க்ரைமுடன் காபி டே கு போனாங்க ...சோ அடுத்த லொகேஷன்? காபி டே தான் .

னைவரையும் அழைத்த கிருஷ்ணா முதல் ஆளாய் அங்கு காத்திருந்தான்.

" அண்ணா "

" வா ரகு .... வாம்மா ஜானு ...எப்படி இருக்கே ? "

" நல்ல இருக்கேன் சார் "

" இவ ....." என்று அவன் முடிப்பதற்குள்ளேயே

" ஹே நித்யா "  என்றபடி அவளை ஓடி வந்து கட்டிகொண்டாள் சுபத்ரா .

" பரவாலேயே இவ்ளோ நாள் பார்கலேன்னா கூட என்னை ஞாபக வெச்சுருக்கியே " என்ற நித்யா , நம்ம ஊட்டி ஆகாஷின் தங்கை , இப்போ நம்ம கிருஷ்ணாவின் பார்ட்னர் இன் கிரைம்.

" ஹாய் அர்ஜுன் " என்று அர்ஜுனனை தழுவி கொண்டான் கிருஷ்ணன்.

" ஹாய் டா ,...." என்றவன்

" ஹேய் ஜானகி நீ இங்க என்ன பண்ணுறே? " எனவும்

அவள் பதில் சொல்வதற்குள் " நான் தான் அழைச்சிட்டு வந்தேன் அர்ஜுன் " என்றான் ரகுராம். இதை கேட்ட அர்ஜுன் கொஞ்சாமாவது ஷாக் ஆகணுமா?  இல்லையா?  ஆனா ஆகலையே ? ஏன்னா? ( அதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் )

ஒரு வழியாக அனைவரும் அமர்ந்து அறிமுகப்படலத்தை தொடங்கி சுபமாய் முடித்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.