(Reading time: 29 - 57 minutes)

 

ஹ்ம்ம் அப்போ நீங்க தான் அபி ஸ்கூல் ஓனர்…”

“ஹ்ம்ம் ஓனர் நான் இல்ல, அப்பா தான் நடத்திட்டிருந்தாங்க… இப்போ நான் பார்த்துக்கறேன்… அவ்வளவுதான்…”

“ஓ… இப்போ தான் எனக்கு புரியுது…”

“என்ன புரியுது?...” புருவத்தை மேலே உயர்த்தியபடி கேட்டாள்…

“ம்ம்.. அனு அக்காவிற்கு நீங்க எப்படி நெருக்கம் ஆனீங்கனு தான்…”

“ஏன் அதுல என்ன?...”

“இல்லை… ஒன்றுமில்லை…”

“சொல்லுங்க…”

“என்ன சொல்லணும்?...”

“ஹலோ… அனு விஷயமா ஏதோ சொன்னீங்களே… சொல்லுங்க.. விளையாடமல்…”

(கேட்குறா பாரு கேள்வி… ஒடி பிடிச்சு விளையாட எனக்கும் ஆசை தான்.. ஹ்ம்ம் எங்கே… என்று மனதினுள் நினைத்தவன்)

“ஹ்ம்ம் நான் இப்போ விளையாடுறதா இல்லை…”

“என்னது?!...”

“இல்லைங்க… நைட் டைம்.. அதும் இந்த பார்ட்டியில் என்னங்க விளையாட முடியும்?... அதான் சொன்னேன்…”

(சரியான கேடி தான்… எப்படி பேச்சை மாத்துறான் பாரு… ஒடி பிடிச்சு விளையாடலாம் வான்னு கையைப் பிடிச்சு இழுத்தாலும் இழுத்துடுவான் போல… எதுக்கும் இவனிடம் ஒரு அடி தள்ளியே வரலாம்… என்று மனதினுள் அவனை திட்டியவள்…)

“சரி இப்போ சொல்லுங்க.. அனு என்னோட ஃப்ரெண்டா இருக்க கூடாதா?...”

“இருக்கலாமே…”

“தென் ஏன் நீங்க வேற மாதிரி சொன்னீங்க?...”

“அதுவா… அக்காக்கு சிம்பிளா இருக்கவே ரொம்ப பிடிக்கும்… அலட்டிக்கொள்கிறவர்களிடம் ரொம்ப நட்பா இருக்க மாட்டாங்க.. ஸ்கூல் அப்பாவோடது… நான் ஜஸ்ட் பார்த்துக்கறேன்னு சொன்னீங்க இல்லையா… அந்த பெருந்தன்மை, ஹ்ம்ம் சிம்ப்ளிசிட்டி தான் அக்காக்கு பிடிச்சிருக்கும் ரொம்ப…”

“அப்படி எல்லாம் இல்லைங்க… நான் இப்படிதான் எப்பவும் இருப்பேன்…”

“ஹ்ம்ம் தெரியும்…”

“எப்படி?... அனு சொன்னாங்களா?...”

“ஹ்ம்ம் உண்மை சொல்லவா?...”

“ஹ்ம்ம்.. சொல்லுங்க…”

“ஸ்கூலில் பார்த்திருக்கிறேன் உங்களை… அபியை விட வரும்போது…”

“ஓ…” (இவன் வந்தானா?... நான் பார்க்கலையே…)

அவள் நினைத்ததை அறிந்தார்போல், “வெளியவே நின்னுட்டு எப்பவும் போயிடுவேன்… ஒரு நாள் அபி லன்ச் பாஃக்ஸ் விட்டுட்டுப் போயிட்டா… அதை கொடுக்க வந்தேன்… அப்போ…………………………………” என்று இடைவெளி விட்டு நிறுத்தியவன்… அவளின் முகத்தை ஆராய்ந்தான்…

“என்ன நிறுத்திட்டீங்க… அப்போ?...”

“ஹ்ம்ம் அப்போ தான் உங்களைப் பார்த்தேன்… உங்க அறைக்கு போயிட்டிருந்தீங்க…” என்று சொன்னதும்… அவன் எதையோ மறைக்கின்றான் என்ற அவளின் சந்தேகம் ஊர்ஜிதமானது…

“அதை அவனும் அறியாமல் இல்லை… அவனுக்கு தெரியாதா என்ன அன்று நடந்தது?... அதை இப்பொழுதே சொல்லிவிடலாம்… ஆனால்… அவள் மனம் தெரிந்தபின் சொல்லலாம் என்று தள்ளிப்போட்டான்… அவன் அவளைப் பார்த்த வினாடியில் அவளிடம் காதலில் வீழ்ந்ததை போல் அவளும் அவனிடத்தில் காதலில் விழ வேண்டுமென விரும்பினான்… அதுவும் சரிதானே… பொருளாதார உயரத்தைப் பார்த்தோ, சமூக அந்தஸ்தைப் பார்த்தோ வருவது காதலே அல்லவே… பார்த்தவுடன் காதல் வருவது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நிகழக்கூடியதே…”

பி ரிகாவை அவளின் வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்… அதை வீடு என்று சொல்வதை காட்டிலும் அரண்மனை என்று சொல்லலாம்… அவ்வளவு அழகாக பெரியதாக அற்புதமாக காட்சியளித்தது இந்திர லோகத்தில் உள்ளதுபோல்…

ரிகாவின் மனதிற்குள் அவளுக்கே உண்டான பயம் எழுந்தது… மெல்ல அபியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்… அதை அபி உணர்ந்தாலோ இல்லையோ… அவளைப் பார்த்து மெலிதாய் சிரித்தாள் அபி…

“மிஸ் என் ரூம்க்கு போகலாம் வாங்க…”

“வேண்டாம் மா… அம்மா வந்தபின் போகலாம்… சரியா?...”

“இல்ல மிஸ்… நீங்க வாங்க… அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க… நான் உங்ககிட்ட ஒரு டிராயிங் காட்டணும்… நீங்க சொன்னதுபோலவே நான் கலர் கலர் ஃப்ளவர்ஸ் வரைஞ்சு வச்சிருக்கேன் மிஸ் வாங்க…”

“அபி நீ நல்ல பொண்ணு தான… மிஸ் சொன்னா கேட்பதான?... அம்மா வரட்டும் டா…”

“அம்மா எங்க இருப்பாங்கன்னு தெரியலையே… சரி இருங்க… நான் அம்மாவ கூட்டிட்டு வரேன்…”

“இல்லம்மா நீ இங்கயே இரு… அம்மா வரும்போது வரட்டும்…”

“மிஸ் நான் போயிட்டு உடனே வந்துடுவேன்… வெயிட் பண்ணுங்க மிஸ்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது…

“அபி குட்டி யார்கிட்ட பேசிட்டிருக்க?...” என்று கேட்டபடி அனுவின் தாயும் தந்தையும் வந்தனர்…

“தழைய தழைய புடவை கட்டி, தலையில் மல்லிகைப்பூச்சரம் வைத்து, வைரத்தில் நகைகள் அணிந்து, முகத்தில் சாந்தம் நிரம்ப, மங்களகரமாக இருந்தார் கோதை நாச்சியார்… அவரின் அருமை கணவர் அவருக்கேற்ற ஜோடிதான்… கண்களில் கனிவும், தோற்றத்தில் கண்டிப்பும் ஒருங்கே கொண்டவராய் இருந்தார் சுந்தரம்… பார்ப்பதற்கு சிவனும் பார்வதியும் போலவே இருந்தனர் அவ்விருவரும்… ரிகாவிற்கும் அப்படியே தான் தோன்றியது…”

“பாட்டி தாத்தா நான் சொல்லியிருக்கேன்ல, ரிகா மிஸ்… இவங்க தான்.. எனக்கு டிராயிங், பாட்டு, டான்ஸ், எல்லாம் சொல்லித்தந்தது ரிகா மிஸ் தான்..”

“வணக்கம்ங்க…” என்று அவர்கள் இருவரையும் பார்த்து சொன்னாள்… அவர்களுக்கு அந்த பணிவு பிடித்தது…

மனைவியின் தோளில் கைவைத்தபடி அவர்களை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டார்…

“வணக்கம் மா… நீ தான் அந்த பெண்ணா?.. உன்னைப் பற்றி தான் சொல்லிட்டே இருப்பா… இது எங்க ரிகா மிஸ் சொல்லி கொடுத்தாங்க… இது எங்க ரிகா மிஸ் செஞ்சு கொடுத்தாங்கன்னு… அவளுக்கு யாரையும் சீக்கிரம் பிடிக்காது… உன்னை எப்படி பிடித்ததென்றே தெரியலை…” என்று அழகாக சிரித்தார் அந்த பெண்மணி…

அந்த சிரிப்பை ரசித்தவராய், கோதையிடம் “வந்த பெண்ணை நிற்க வைத்து பேசுறியே, உட்கார வைத்து பேசு…” என்று கண்டித்தார்…

அவருக்கும் தன் தவறு புரிய, “வா மா.. இங்கே வந்து உட்கார்…” என்று அவளிடம் கூரியபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்…

“பாட்டி, தாத்தா… நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்… நீங்க மிஸ்கிட்ட பேசுங்க…” என்று அபி ஓடி விட்டாள்…

“ஹேய்… மெதுவாக போ… விழுந்துடாத… அப்பறம் எங்களால திட்டு வாங்க முடியாது…” என்று சொன்னார் கோதை நாச்சியார்…

“ரிகா உன் ஃப்ரெண்ட் எங்க மா?...”

அப்பொழுது தான் ஷன்வியை தேடியவள், “தெரியலைமா அனுகிட்ட பேசிட்டிருப்பான்னு நினைக்கிறேன்…”

“ஹ்ம்ம்.. சரிமா… நீயும் உன் ஃப்ரெண்டும் சேர்ந்து தான் அந்த ஸ்கூல் நடத்துறீங்கனு அனு சொன்னாள்…”

“இல்லமா… என் ஃப்ரெண்ட் ஷன்வி தான் அத நடத்துறா… நான் அவளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கிறேன்மா… அவ்வளவுதான்…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.