(Reading time: 21 - 41 minutes)

16. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

சில நாட்கள் கழிந்திருந்தன. கதிருக்கு குணமாகி விட்டிருந்தது. ஆனால் இன்னும் அவனை கல்லூரிக்கு வருவதற்கு சந்துருவும், அனுவும் சம்மதிக்கவில்லை. இன்னும் அவனை நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லியே தட்டிக் கழித்து அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக அவர்களிருவரும் சேர்ந்து சம்மதித்து அவனை அடுத்த நாள் முதல் காலேஜ் வருவதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சந்துரு நேரில் டார்ச்சர் செய்கிறான் என்றால் அனுவோ போனில் டார்ச்சர் செய்வாள். ரெஸ்ட் எடுத்துக்கோ, ரெஸ்ட் எடுத்துக்கோ என்ற பேச்சே நிறைய தடவை வர கதிருக்கு கொஞ்சம் கடுப்பாக தான் வந்தது. ஆனால் அவளின் அக்கறை உறைக்க அந்த கடுப்பும் காணாமல் போய் விடும். அதுவும் அனுவிடம் அவனால் கோபப்பட முடியுமா?

ninaithale Inikkum

ஆக்ஸிடென்ட் நடந்த அந்த நாள் நியாபகத்திற்கு வந்தது. அன்று அனுவைத் தவிர எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை. லீவ் முழுக்க அவனுக்கு அனுவின் நியாபகங்கள் தான். அதுவும் அவள் ப்ரொபோஸ் செய்ததை நினைத்தால் இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை. என்ன இருந்தாலும் தன்னால் அப்படி செய்திருக்க முடியாது என்று தோன்றியது.

அவள் ‘லீவ் முடிஞ்சி வரும் போது அத்தைக் கிட்ட நம்ம விசயத்துக்கு பெர்மிஷன் வாங்கிட்டு வரணும்’ என்று கூறவும், தான் ‘எந்த விசயத்திற்கு’ என்று மிடறு விழுங்கியதும் நினைவு வந்து சிரித்துக் கொண்டான்.

அவ்வளவு தூரம் தைரியமாக பேசியவள், எந்த விஷயம்’ என்றதுக்கு ‘அதான் நான் நீ நம்ம காதல், கல்யாணம்’ என்பதை மட்டும் தன் கண்களை பார்க்காமல் சொல்லியதும், நாணத்தால் சிவந்ததும், திரும்பி பார்க்காமல் ஓடியதும், இதையெல்லாம் நினைத்துப் பார்த்து சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தான்.

தன்னை மறந்து அமர்ந்திருந்தவனை அவன் மொபைல் கத்தி நினைவுக்கு வர வைத்தது.

இவ்வளவு நேரம் மனதில் நினைத்துக் கொண்டிருந்த அவன் தேவதை தான் அழைத்தாள். (தேவதை... கொஞ்சம் ஓவரா இருக்கோ, பிடிக்கலைன்னா குட்டிச் சாத்தான்னு வச்சிக்கோங்க)

போனை எடுத்து விட்டு எதுவும் கூறாமல் அமைதி காத்தான்.

“ஹலோ ஹலோ” என்று கத்திக் கொண்டிருந்தாள் அனு.

சத்தம் இல்லாது போகவும் “ஹெலோ கதிர் இருக்கியா” என்றாள்.

இதற்கும் பதிலில்லை.

“ஹலோ” என்று பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தாள்.

அவள் செய்கை அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான் கதிர்.

“ஏய் இப்ப பேசுவியா மாட்டியா டா”

“என்னது டா வா” என்றான் கதிர் சிறு அதிர்ச்சியுடன்.

“மாட்டினியா. இவ்வளவு நேரம் நான் கழுதையா கத்திக்கிட்டிருந்தேனே அப்ப பேசினியா, இப்ப அப்படி சொல்லவும் தானே பேசற”

“ஓ”

“என்ன ஓ”

“அதை விடு அனு. இன்னைக்கு உன் பேரை நீயே ஒத்துக்கிட்டியே” என்று சிரித்தான் கதிர்.

“என்ன” என்று யோசித்தவளுக்கு கழுதை என்று கூறியது நினைவு வந்து அவனை திட்டி தீர்த்தாள்.

“சரி போதும் போதும். சொல்லு. எதுக்கு கூப்பிட்ட”

“ஐயோ அனு. நீ இப்படி தப்பா ஒரு ஆளை சூஸ் பண்ணி வச்சிருக்கியே, உன்னை எல்லாம் என்ன பண்றது. உன் லைப் எப்படி போக போகுதுன்னே தெரியலையே” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தவளை ஹோல்ட் ஆன் போட்டு கதிர் நிறுத்தினான்.

“ஹேய் என்ன என்னென்னவோ சொல்ற. இப்ப அப்படி என்ன ஆச்சி”

“என்ன ஆச்சா. உனக்கு ஒரு பொறுப்பு இருக்கா. அவன் அவன் அவனோட ஆளுக்கு ஒரு நாளைக்கு எத்தனை டைம் கால் பண்றான்னு கேட்டுப் பாரு. சரி. நீ தான் பண்றது இல்ல. நானா பண்ணும் போதும், எதுக்கு பண்ணன்னு கேள்வி கேட்கற, நீயே சொல்லு, உன்னை எல்லாம் லவ் பண்ணிட்டு நான் என்ன பண்றது” என்றாள் மூச்சு விடாமல்.

“சரி சரி. கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு.”

“இதெல்லாம் நல்லா பேசு. செயல்ல ஒன்னும் இல்லையே தம்பி”

“என்னது தம்பியா” என்று இந்த முறை நிஜமாகவே அதிர்ந்து தான் விட்டான் கதிர்.

“அது சும்மா பேச்சு வாக்குல சொல்றது. நீ பீல் பண்ணாத. இந்த கவின் கிட்ட சொல்லி சொல்லி அப்படியே வரர்து. அதுக்கு எல்லாம் மீனிங் கிடையாது. சரியா” என்று அவளுக்கும் சேர்த்து சமாதானம் செய்து கொண்டாள்.

“சரி. பிரச்சனைக்கு வா. உனக்கு பொறுப்பு இருக்கா”

“நான் உனக்கு போன் பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்” என்று அவன் இழுக்கவும்,

“ம்ம்ம். போன் பண்ணலாம்ன்னு தான் இருந்த, அதுக்குள்ளே என்னையே நினைச்சிட்டு பதினைஞ்சி நிமிசத்துக்கு முன்னாடி சிரிச்சிட்டிருந்தே, ஐஞ்சி நிமிசத்துக்கு முன்னாடி அப்படியே உன்னோட ஸ்மைல் குறைஞ்சிட்டே வந்து நீ மெய்மறந்து போய் உட்கார்ந்திட்டிருந்த, சரியா அப்ப தான் என் கால் உன்னை எழுப்பிச்சி. சரியா” என்றாள்.

(நம்ம கதிரோ பச்சைப் புள்ளை அதுக்கென்ன தெரியும், அனு இந்த மாதிரி சீக்ரெட் ஏஜென்ட் வேலை எல்லாம் செய்வாள் என்று, எனவே அதிசயித்துப் போய் அமர்ந்திருந்தான்.)

“அனு எப்படி” என்று ஆச்சரியமாக கூறினான்.

(அட ட்யூப் லைட்டே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.) (நீ அனு அளவுக்கு வரணும்ன்னா ரொம்ப வளரனும் கதிரு. பட் பீல் பண்ணாத விடு, அனு வில் ட்ரைன் யூ)

“அதெல்லாம் அப்படி தான். உங்களுக்கு எல்லாம் சிக்ஸ் சென்ஸ் கொடுத்த ஆண்டவன், நான் பூர்வ ஜென்மத்துல ஏதோ புண்ணியத்தை அதிகமா பண்ணிட்டேன்றதுக்காக கணக்கிட முடியாத அளவுக்கு எனக்கு அறிவை கொடுத்துட்டான். சோ வாட் டு டூ. அதுவும் உன்னை பத்தி இன்பார்மேஷன் எல்லாம் என் மொபைல்க்கே வந்து கொட்டும்” என்று வாயை விட்டு விட,

கதிருக்கு முதலில் ஏதும் தோன்றவில்லை. தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

கதவு திறந்திருக்க, இவன் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் சந்துரு கையில் மொபைளுடன் தென்பட இவன் பார்த்த உடன் அவன் மறைந்து விட்டான்.

உடனே கதிர் “ஏய் அனு. உன்னோட கணக்குல இல்லாத சென்ஸ் பத்தி எனக்கு டீடைல்ஸ் தெரிஞ்சிடுச்சி. அது எப்படி உனக்கு மொபைல்க்கே வந்து என்ன பத்தின இன்பார்மேஷன் வந்து கொட்டுமா, அது எப்படி கொட்டுதுன்னு தெரிஞ்சிடுச்சி. அடிப் பாவி, வீட்டுலையே உளவாளியை வச்சிருக்கியே” என்றான்.

“ஹாஹஹஹா ட்யூப் லைட் எரிஞ்சிடுச்சே” என்றாள் அனு அடக்க இயலாத சிரிப்புடன்.

“உன்னை”

“ம்ம்ம். என்னை”

“ஒன்னும் பண்ண முடியாது.

“புரிஞ்சா சரி. அது சரி. ட்யூப் லைட் எப்படி இப்ப திடீர்ன்னு எரிஞ்சிது. நான் சுவிட்ச் போடும் போது கூட எரியலையே. எங்கேயோ இடிக்குதே. சொல்லு. எப்படி கண்டுப் பிடிச்ச”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.