(Reading time: 6 - 11 minutes)

01. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

…….. அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அமுதாவிற்கு முதலில் அது என்னவென்று எதும் புரியவில்லை.. கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் உள்ள கடிகாரத்தை பார்க்கையில் அது நல்லிரவு மணி 2.30 என காட்டியது.

கடந்த இரண்டு நாட்களாக அவளுக்கு இதே நேரத்தில் இந்த சத்தம் கேட்கிறது ஆனால் எங்கே இருந்து வரும் சத்தமென்று தெரியவில்லை, ஏனோ அவளுக்கு அதை மிக அருகில் கேட்டததை போல் ஒர் பிரம்மை.

பயத்துடனே அவளின் அருகே திரும்பி பார்க்கையில் அவளது கணவன் அமுதன் நல்ல உறக்கத்தில் இருப்பதை அவனது சீரான மூச்சி காற்றில் தெரிந்தது. நெஞ்சம் பட படக்க மெல்ல எழுந்து அவளது அறையை பார்க்கையில் அவளது கண்களுக்கு இருட்டை தவிற வேற எதுவும் தெரியவில்லை.

Nizhalaai unnai thodarum

கணவனின் உறக்கம் கெடாத வண்ணம் ஒசையில்லாமல் மெதுவாக நடந்து  ஜன்னலுக்கு அருகே சென்று ஜன்னல் கதவுகளை திறந்து பார்த்தாள். அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் எல்லாம் வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் அடைத்து இருக்க, கோரிடோர் விளக்கை தவிற வேற எந்த வெளிச்சமும் இல்லை.

திடிர்யென ஏதோ ஒன்று “போத்” தென்று கீழே விழும் சத்தம் கேட்டது. அமுதா மீண்டும் ஓரு முறை வெளியே எட்டி பார்க்கையில், அவள் கண்களுக்கு ஏதும் தென்படவில்லை.

அந்த நேரத்தில் “கூக்குக் கூக்கு” யென ஹோல்லில் இருந்த கடிகாரம் ராகம் பாடி அதன் வேலையை சரியாக செய்ய, சற்று முன் கேட்ட அலறல் சத்ததினால் பயந்து இருந்தாள் இச்சத்தத்தை கேட்டவுடன் அவளையும் அறியாமல் “அம்மா………” என்று கத்தியேவிட்டாள்.

த்தம் கேட்டு கண்விழித்த அமுதன் முதலில் அவனது பக்கத்தில் திரும்பி பார்க்க அங்கே அமுதா இல்லாமல் இருப்பதை கண்டு திகைத்தவன் உடனே எழுந்து அறையின் விளக்கை தட்டினான். அறைக்குள் வெளிச்சம் வந்த உடன் கண்களை சுழற்றி பார்க்கையில், ஜன்னலுக்கு அருகே இருந்த அமுதா கண்களையும் இரு கைகளால் காதை இருக்க முடியிருந்த மனைவியை பார்த்தவன் உடனே அவள் அருகினில் சென்று

“அம்மு இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணற...?” கேட்டுக்கொண்டே அவளின் தோளை தொட்ட போது அவள் பயத்தில் கத்திக்கொண்டு இரண்டு அடி பின்னே சென்று சுவற்றை முட்டிக்கொண்டு நின்றவளின் தோளை பற்றி..

“அமுதா இங்கே பாரு நான் தான்” என சொல்லிய பிறகே கண்ணை திறந்து பார்த்தாள். அமுதனை அவளின் அருகே பார்த்தவள் உடனே அவனின் தோளின் சாய்ந்து கொண்டு “அங்…..” கையை காட்டி பேச முயன்று, பாயத்தில் நா வரண்டு பேச முடியாமல் தடுமறியவளை மென்மையாக அணைத்துக்கொண்டான்...

அப்பொழுது தான் அவன் அமுதாவின் முகத்தை நன்றாக பார்க்கையில், பயத்தினால் அவளின் முகம் இருண்டு வியர்த்து இருந்தது.

“அம்மு ஒன்னும் இல்லம்மா” என சொல்லி அவளை அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்து “முதலில் இந்த தண்ணியை குடி” என அவளிடம் நீட்ட நடுங்கும் விரல்களால் அந்த கிளாஸ்சை வாங்கியவள் கட கடவென தண்ணிரை குடித்து முடித்தாள்.

அமுதன் மீண்டும் அவளை தோளில் சாய்த்துக்கொண்ட போது அவளின் நெஞ்சம் பட பட விடாமல் அடித்துக்கொன்டிருக்க அதற்க்கு ஏற்றால் போல் அவளின் உடலும் நடுங்கிக்கொண்டு இருந்தது.

அவனது அருகே இருந்த டாவலால் அவளின் முகத்தை துடைத்து விட்டு, அவளின் நடுக்கும் குறையும் வரைக்கும் அமைதியாகவே இருந்தான். 

சிறிது நேரத்தில் அவளின் நடுக்கும் குறைந்த பின்னர் “இப்போ சொல்லு” என அமுதாவின் முகத்தை பார்க்க…

“அங்க யா…. யாரோ கத்… கத்தனங்க…..!” என சொல்லும் போதே அவளின் குரல் நடுங்க, பயத்தினால் உடல் சிலுத்தது.

“அம்மு ரிலாக்ஸ்டா… இந்த நேரத்தில் எல்லாரும் துங்குவங்க, நீ கனவு எதாவது கண்டு இருப்ப… வேற ஒன்றும் இல்லடா….” அவளின் பயத்தை போக்க நினைத்து அவன் அவ்வாறு கூறினான்.

அவனின் கூற்றுக்கு மருப்பாக இடது வலமாக தலையை அசைத்தவள்,

“இல்லங்க கொஞ்ச நாட்களவே எனக்கு அந்த சத்தம் கேட்குது. அது எங்கே இருந்து வருதுன்னு எனக்கு தெரியல…. ஆனா அந்த குரலில் ஏதோ சொல்ல முடியாத வலி, பயம், கோவம், ஏதோ ஏதோ என்னன்னு எனக்கு சரியா சொல்ல தெரியலே…” சொல்லி முடித்த பின் அமுதனின் முகத்தை பார்க்கையில் அவள் சொல்லுவதை ஏதும் நம்பவில்லை என தெரிந்தது.

“ம்ம்ம் அம்மு நீ வீட்டில் தனியா இருப்பதினால் உனக்கு இப்படி தோனுதுன்னு நினைக்கிறேன்...”

“நீங்க எப்பவும் இப்படிதான் நான் சொல்லறதை நம்புவது இல்ல…. ஆறு மாதத்திற்கு முன் இப்படி தான் பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டது அப்பவும் நீங்க இப்படித்தான் சொன்னிங்க, இப்போ மீண்டும் அதே சத்தம்…” அவன் நம்பவில்லையே என்ற ஆற்றாமையுடன் சொல்லிக்கொண்டு இருந்தவளின் பேச்சு கோரிடோரில் கேட்ட காலடி ஒசையும் சிலரின் பேச்சி சத்தினால் நின்றது….

ன்ன சத்தம் என இருவரும் ஜன்னலின் வழி எட்டி பார்க்கையில் அங்கே காவல் துரையினரும் அந்த அபர்ட்மெண்ட்னின் செக்யூரிட்டியும் அங்கே இருந்தனர்..

“இந்த அபர்ட்மெண்ட்லே இந்த ஒரு வீடு மட்டும் தான் சார் காலியாக இருக்கு…”

“வேற எந்த வீடு இல்லையா…?”

“இல்ல சார்… இந்த ஒரு வீடு மட்டும் ஆறு மாதமா காலியாக இருக்கு. மற்ற எல்லா வீட்டிலும் ஆள் இருக்கங்க….”

“சரி. இந்த கதவை திறங்க… வீட்டின் உள்ளே போய் பார்க்கனும்…”

று மாதமாக திறக்கமால் இருந்த அந்த கதவு, ஒரு வித ஒசையுடன் கதவை திறக்க, அந்த சத்ததை கேட்கையில் அமுதாவிற்க்கு மனதில் பயம் தோன்ற அமுதனின் கையை இருக்கப் பற்றிக்கொண்டாள்.

பயத்தினால் அவளின் கைகள் சில்லிட்டு போயிருப்பதை உணர்ந்தவன்..

“அம்மு அது கதவு திறக்கும் சத்தம்டா வேற ஒன்றும் இல்லடா…” சொல்லிக் கொண்டுயிருக்கையில் அந்த அமைதியான் இரவு நேரத்தில் காதை கிழிக்கும் வண்ணம் கேட்ட சைரன் சத்ததினால் நின்றது...

இன்னைக்கு என்ன தான் நடக்குது என அமுதா யோசிக்கையிலே, அமுதன் அவளை கட்டிலின் அமர வைத்து, திரும்பி நடக்க அவனின் கையை பற்றி

“என்னை தனியா விட்டுட்டு நீங்க மட்டும் எங்கே போறீங்க….?”

“பால்கனிக்கு தான்டா… அங்கே போய் பார்த்த தான் என்ன சத்தம்ன்னு தெரியும் அம்மு…”

“நானும் உங்க கூட வரேன், நான் தனியா இங்க இருக்கல எனக்கு பயமா இருக்கு...” அவளின் குரலிலே அவள் இன்னும் பயத்தில் இருப்பதை காட்டியது.

அவர்கள் அங்கே செல்லும் போது பல வீட்டு பால்கனியில் விளக்கு ஏறிந்து கொண்டிருக்க, எல்லோரும் கீழே எட்டி பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

சரி என்ன நடக்கிறது என இருவரும் கீழே எட்டி பார்க்கையில் அங்கே ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வண்டி இருப்பது தெரிந்தது… விளக்குகளின் வெளிச்சத்தில் அங்கே விழுந்து கிடந்த இருந்த ஒர் உருவத்தை கண்டு இருவரும் அதிர்ந்து நின்றனர்…!

இதற்க்கு முன் கேட்ட சத்ததினால் பயந்து இருந்தவளுக்கு அந்த உருவத்தை பார்த்தவுடன் தலை சுற்ற கணவனின் கையை இருக்கப்பற்றி அவளின் தோளில் சாய்ந்த படி நின்றுக் கொண்டிருந்தாள்.. உள் உணர்வு ஏதோ ஒன்றை உணர்த்த ஒரு வித பாயத்துடன் இருந்தவளின் கண்கள் அவளையும் அறியாமல் பக்கத்து வீட்டு பால்கனிக்கு சென்றது…!

மற்ற வீட்டு விளக்கு வெளிச்சத்தில் கூட அந்த பால்கனி மிகவும் இருட்டாக இருந்தது. அமுதா அதை பார்த்துக் கொண்டிருக்கையில் திடிர் என்று அந்த சுவற்றில் தோன்றிய இரு கண்களில் இரத்த தெரிக்க அடர் சிகப்பில் இருப்பதை அந்த இருளிளும் அவள் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது…! அந்த கண்களை பார்த்த அதிர்ச்சியில் அவளாள் கத்த கூட முடியாமல் பயத்தில் மயங்கி சரிந்தாள்….!

தொடரும்

Go to episode # 02

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.