(Reading time: 33 - 66 minutes)

காதல் நதியில் – 04 - மீரா ராம்

ன்னம்மா…” என்றாள் ரிகா…

“ஒன்னுமில்லைமா… கொஞ்ச நேரம் இருங்க இரண்டுபேரும்…”

ஷன்வியை ரிகா பார்க்க, அவளும் சரியென்று தலை அசைக்க, ரிகாவும் “சரிம்மா…” என்றாள்…

kathal nathiyil

“பூஜையறை வரைக்கும் போகனும்… வருகிறாயா ரிகா, விளக்கை குளிர வைக்கணும்… என்னாலும் தனியே செல்ல முடியவில்லை… கொஞ்சம் துணையாக வருகிறாயாமா?... எனக்கும் உதவியாக இருக்கும்…” என்று கேட்பவரிடம், மறுக்க தோன்றாது, ஷன்வியைப் பார்த்தாள்…

“நீ சென்று வா… ரிகா… நான் இங்கே வெயிட் பண்றேன்…” என்றாள் ஷன்வி…

“அனு… நீ ஷன்விக்கு வீட்டை சுற்றி காட்டும்மா… நாங்களும் சீக்கிரம் வந்திடுவோம்… அதுவரை அவளுக்கும் பொழுது போகும்… பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து தோட்டத்திற்கு செல்லலாம்…”

“சரிம்மா…”

“பாட்டி, நானும் உங்ககூட வரேன்… சாமி கும்பிட்டுட்டு நானும் மிஸ்-கு வீட்டை சுற்றி காட்டுறேன்…”

“சரி அபி… வா போகலாம்…” என்றவாறு அபி மற்றும் ரிகாவுடன் நடந்தார் கோதை…

“அனு… என்னோட டேப்லட் எங்கம்மா இருக்கு… அதை கொஞ்சம் எடுத்து தாம்மா…” என்றவர், ஷ்யாமிடம் திரும்பி, “மாப்பிள்ளை, நாளைக்கு போர்ட் மீட்டிங் யாரோட… எல்லாம் தயார் செய்துட்டீங்களா?... என்றார் சுந்தரம்…

“ஆமா… மாமா…. கொஞ்சம் சந்தேகங்கள் இருக்கு... அதை நானே உங்களிடம் கேட்க நினைத்தேன்… நல்ல வேளை நீங்களே நியாபகம் செய்தீங்க… அனு… நம்ம ரூமில் டேபிள் மேலே க்ரீன் கலர் ஃபைல் இருக்கும்… அதை கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்… நான் மாமா கூட அவர் ரூமிற்கு போறேன்…”

“சரிப்பா… சரிங்க… நீங்க போங்க… நான் எடுத்துட்டு வரேன்…”

அவர்கள் இருவரும் செல்வதை பார்த்து தயங்கி நின்ற அனுவிடம், “நீங்க போங்க அனு, நான் இங்கேயே இருக்கேன்…” என்றாள் ஷன்வி…

“இல்லை ஷன்வி… உன்னை இங்கே தனியே… எப்படி… நீயும் என்னுடன் வருகிறாயா?... அவர்கள் கேட்டதை எடுத்து கொடுத்துவிட்டு உனக்கு நான் சுற்றிக் காட்டுகிறேன்…”

“வேண்டாம் அனு… நீங்க போயிட்டு வாங்க…”

“அக்கா, நீ போய் எடுத்துகொடு, நான் ஷன்விக்கு துணையா வீட்டை சுற்றிக் காட்டுறேன்…”

“தேங்க்ஸ்டா ஈஷ்… உங்கிட்ட சொன்னா செய்வியோ மாட்டியோன்னு நினைச்சேன்… அதான் உன்னிடம் எதும் கேட்கலை… நீயே புரிஞ்சுக்கிட்ட… ரொ,ம்..ப நன்றிடா ஈஷ்….”

“ஷன்வி இவன் உங்கூட வருவான்… நான் சீக்கிரம் வந்துடுவேன்… சரியா?...” என்றவள் அவள் வேண்டாம் என்று சொல்வதை கேட்க அங்கு இல்லை… சிட்டாய் பறந்து விட்டாள்…

ப்பிக்கிறதுல எவ்வளவு ஆர்வம்?...”

“……..”

“அப்பா என்ன ஒரு அழுத்தம்?...”

“………”

“சரியான பயந்தாங்கொள்ளி….”

“ஹலோ…. என்ன மிஸ்டர்?...”

“என்ன மிஸ்?...”

“யாருக்கு பயமாம்?...”

“அது அவங்களுக்கே தெரியுமே…”

“நினைப்புதான்…”

“ஆமா… நினைப்புதான்…” என்று இருபொருள் பட அவன் பேச அவள் தவித்தாள்…

இத்தனை நேரம் போட்டுக்கொண்ட திரை மெல்ல விலகுவதுபோல் உணர்ந்தாள்… ஹ்ம்ம்… ஹும்… இது சரிவராது… முதலில் இவனை விட்டு விலகணும்….

“திட்டமெல்லாம் பலமாதான் இருக்கு….”

“என்ன!!!!!!....”

“திட்டமெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னேன்….”

“என்ன எ…ன்….ன….. திட்……ட…..ம்?...”

அதுவரை கோபம் கொண்டிருந்தவன், அவளின் அந்த திணறிய பேச்சில் தன்னை மறந்தான்….

(“இதுதான்டி நீ… உனக்கு போலியா நடிக்க எல்லாம் தெரியாதுடி…. அதைவிட உன்னால் என்னை விட்டு விலகியிருக்கவும் முடியாது… அது உனக்கு ஏன் புரியலை லூசு… உன்னைப் பார்த்ததும் நான் காதல் கொண்டேன்… அதுபோலவே நீயும்… பிறகு ஏனடி என்னை விட்டு பிரிய பார்க்கிறாய்… உனக்கு நான் இன்றே புரிய வைப்பேன்… என் மீதான காதல் அதை உனக்கு உணர்த்தும் நிச்சயமாய்… எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி தனியாய் பார்த்து பேசிக்கொள்ள… இதை நழுவவிட நான் முட்டாளில்லை ஷன்வி… இதுநாள் வரை உன்னை நான் எட்டியிருந்து பார்த்து காதலித்தது போதும்… இன்று உன்னருகில் இருந்துகொண்டு உன்னை காதலிக்கிறேன்… நீயும் என்னால் ஈர்க்கப்படுவதை அறிந்தபின்பும் மௌனமாக ஏன் இருக்கணும்?... என்னால் முடியாதும்மா ஷன்வி…”)

வந்த புன்னகையை மறைத்துகொண்டு, “திட்டம் போட்டவர்களையே கேளுங்க…” என்றான்…

வார்த்தைகள் வராது மௌனித்தாள்… அவனிடம் தான் பேசி ஜெயிக்கமுடியாது என்று தோன்றிவிட… அமைதியானாள்…

“போகலாமா சுற்றிப்பார்க்க…” என்று அவன் கேட்டதற்கு, “ஹ்ம்ம்…” என்றாள்…

ரிகா… அந்த பூவை எடும்மா….” என்று கோதை கை காட்டிய திசையில் பார்த்தவள், பூவை எடுத்து வந்து கொடுத்தாள்…

பல வண்ண நிறங்களில் பூஜையறை முழுவதும் கடவுள் ரம்யமாய் சிரித்துக்கொண்டிருந்தார் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடி ஃப்ரேமினுள்…

வில்லேந்திய ஸ்ரீராமரின் சிலை மட்டும் பெரியதாய் நடுவில் வீற்றியிருந்தது மிக தத்ரூபமாய் சீதா பிராட்டியுடன்….

ரிகாவின் கண்கள் ஏனோ அந்த சிலையின் மேல் மையம் கொண்டது… அதில் ஜனகன் மகளின் வேல் விழிகள் தசரதமைந்தனின் மீது நிலைகுத்தி நிற்க, அளவில்லா காதலுடன் கௌசல்யை மகன் பூமாதேவியின் புதல்வியை எல்லையில்லா வாத்சல்யத்துடனும் பிரியத்துடனும் அவள் தொடுத்த காதல் கணையை எதிர்கொண்டு பதிலுக்கு பூமாலையை விழிகளாலே சூடினார்… வெளியிலிருந்து பார்ப்பவருக்கு அது வெரும் கடவுளின் உருவ சிலை… ஆனால், அதனுள் ஒளிந்திருக்கும் காதலும், விழியின் அலைப்புறுதலும், மனமுவந்த மகிழ்ச்சியும், மாசற்ற அவர்களின் முகமும்… சீதையின் வெட்கமும், செல்ல சிணுங்கல்களும், ராமரின் அரவணைக்கும் இதமான பார்வை பரிமாற்றமும், பெருமிதமும், நேசமும் பார்ப்பவரின் கண்களுக்கு தெரிந்ததில்லை ஏனோ இன்றுவரை… தெளிவாய் உணர்ந்தாள் ரிகா அதனை முழுவதுமாய்… அவள் தொலைந்து போனவளாய் நின்றிருந்தாள் வலது கண்ணின் ஒரத்தில் துளிர்த்த சிறு துளி நீரோடு… உலகை மறந்து விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்தவளை அபியின் குரல் இடைமறித்தது…

“இது மாமா வாங்கிகொண்டு வந்தது… அழகா இருக்குல்ல மிஸ்?...”

“ரொ……ம்….ப…. அ…ழ…கு…. அ…பி…. பார்த்துட்டே இருக்கணும்போல இருக்கு…” என்று தான் உணர்ந்த காட்சியை கோதையிடம் கூறினாள்…

அவருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி அவளின் பதில் கேட்டு… “ஆமாம்மா ரிகா… அபியின் மாமாவும் இப்படிதான் எப்பவும் பார்த்துட்டே இருப்பான்… அவன் இங்கே இருக்கும்போது தினமும் வந்து இந்த ராம்-சீதா ஜோடியை தரிசிக்காமல் வெளியே எங்கேயும் போகமாட்டான்… இரவு தூங்குவதற்கு முன் கட்டாயம் இங்கே வந்து பார்க்காவிட்டால் அவனுக்கு தூக்கம் சிறிதும் வராது…”

“இதை பார்க்காவிட்டால் நிச்சயம் தூக்கம் வராதுதான் அம்மா…”

“உனக்கும் அப்படிதான் தோன்றுகிறதா ரிகா?...”

“ஆமாம்மா…”

“சரிதான், அபிக்குதான் நீ தலை ஆட்டுவேன்னு பார்த்தால் அவளுக்கு பிடித்தவர்களுக்கும் தலை ஆட்டுவ போலயே!!!!....” என்று மகிழ்ச்சி பொங்க சிரித்தார் கோதை…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.