(Reading time: 12 - 23 minutes)

06. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

ரு கரம் அவளை பற்றியிருக்க, அவள் விழிகளுடன் கலந்த தன் பார்வையை திருப்ப மூளை அலாரம் அடித்த போதும், மறு கரமும் அவளை ஸ்பரிசிக்க தன்னாலே எழுவதை ஆதியால் தடுக்க முடியவில்லை.

அவன் கண்கள் என்ன சொன்னது? அப்படி என்ன ஒரு ஆழமான பார்வை? காதலாலா? பிரிவினாலா ? பழைய ஞாபகங்களலா?  இல்லை இன்னும் தன் மீது இருக்கும் கோபத்தில் சிவந்ததினாலா? ஏதோ ஒன்றால் அவன் கண்களில் மெல்லிய நீர் திரையிட உலகமே மறந்து அவன் மார்பில் தஞ்சம் அடைய எத்தனித்தாள்.

அனிச்சை செயலாய் அவன் கரங்கள் அவளை வளைத்து நெஞ்சோடு அணைக்க ஆயத்தமான நேரம், அவன் செல்போன் சிணுங்கியது.

Nenjamellam kathal

(எவண்டா அவன் இந்த நேரத்துல ச்ச இப்பயாவுது அவங்கள ஒன்னு சேர்க்கலாம்னு நினைச்சேன் விட மாட்டீங்களே?)

திடுக்கிட்டு சுதாரித்தவன், மிக அருகில் அவளை கண்டு ஒரு கணம் தடுமாறி, பின் அவளை வேகமாக தள்ளி விட்டு தன் கைகளை வெடுகென்று எடுத்துக் கொண்டான்.

இரண்டடி பின்னே சென்று சமாளித்து நின்றவள், ஏன் என்று காரணம் புரியாமல் அவனை பாக்க, அவனோ எரிமலையென நின்றான்.

அவளை ஏளனமாக பார்த்தவன்,போனை எடுத்தான்,

"சொல்லுங்க மாமா, என்ன கன்றாவி நடக்குது இங்க?"

"......"

"வாட்? ஆர் யூ சீரியஸ்?"

"....."

"எனக்கு என்கேஜ்மன்ட்டா? அதுவும் இப்படி ஒருத்தி கூடவா?" என்று அவளை அவன் பார்த்த பார்வையில் சுக்கு நூறாக உடைந்து போயிருந்தாள் மது.

"......."

"என்ன மாமா சொல்றிங்க தெளிவா தான் சொல்லி தொலையுங்க?"

"......."

"ஒ அப்படியா? ஆனா இங்க?"

"....."

"அதை சொல்ல தான் கூப்டிங்களா?"

"......."

"ரூம் நம்பர் மாறிடுச்சா? ஓகே ஓகே இன்னும் 5 மினிட்ஸ் ல பார்ட்டி ஹால் வந்துடறேன்.. சரி"

அங்கு என்ன நடக்கிறது, இருந்து இருந்து இன்று ஏன் இவன் வர வேண்டும், அதும் காதல் பார்வை பார்த்து அவ்வளவு அருகில்... அவன் தவிப்பு கண்களில் தெளிவாய் தெரிந்ததே அதன் பின்???? இப்போது ஏன் மறுபடியும் கோவம், இந்த ஆக்ரோஷம்...

ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு... அவனையே பார்த்து கொண்டு நின்றாள்.

போனை வைத்து அவளிடம் திரும்பியவன்,

"ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? இன்னும் எத்தன நாள் தான்டி இப்படியே இருப்பிங்க? எத்தன பசங்க வாழ்க்கைய அழிப்பிங்க? திருந்தி தொலைங்கடி ச்சை" என்று அவளை வார்த்தைகளால் கடித்து குதறி விட்டு சென்று விட்டான்.

எதுவுமே புரியாமல் இருந்தவள் கடைசியில் அவன் திட்டி விட்டு சென்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அருகில் இருந்த சோபாவில் துவண்டு போய் அமர்ந்தாள்.

நடந்து முடிந்தவை பற்றி இனி நினைக்கவே கூடாது என்று எடுத்த முடிவு எப்போதோ காற்றில் சென்று விட, கண்ணீர் திரையிட்ட கண்கள் சிவந்து, ஓவென்று அழ வேண்டும் போல் தோன்றியது.

( நோ நோ மது செல்லம், நீங்க அழுதீங்கன்னா, நம்ம கவிக்குயில் மது என்ன கொன்னுடுவாங்க, சோ அழகூடாது)

திடீரென்று ஏதோ தோன்ற அப்போது தான் கவனமாக நடந்தவற்றை அசை போட்டாள்.

 முதலில் அவளை கண்டதும் அவனுக்கு மேலோங்கிய அன்பு தன்னை வாரி அணைக்க துடித்த அவன் கைகள், சீரற்ற அவன் மூச்சு, என்ன தான் அவளை திட்டினாலும் மறைத்து வைத்தாலும்  தாளம் பூ போல மறையாமல் அவன் நேசத்தை பறை சாற்றிய அவன் கண்கள்.

அவன் உதடுகள் தான்டி வார்த்தை அம்புகள் வந்த போதும், கண்கள் மட்டும் ஏதோ சொல்லாமல் சொன்னது. ஏளன பார்வைக்கு பின் ஏதோ ஒரு ஏக்கம். இவை அனைத்துக்கும் மேல் கடைசியில் அவன் அவளை திரும்பி பார்த்த பார்வை. அதுவும் கலங்கிய கண்களுடன்!!! நிச்சயம் அது கோபத்தினால் அல்ல....

சட்டென்று ஆனந்தம் போனாக கலங்கி இருந்து கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து.. ஆம் ஆனந்த கண்ணீர் தான் இவ்வளவு நாள் புலப்படாத ஒன்றை கண்டு கொண்டாளே. ஆகா ஆதித்யன் இன்னும் அவளை விரும்புகிறான்!!! அவளுடைய ஆதித்யன்.

அந்த நிமிடத்தை மனதினுள் அப்படியே பூட்டி வைத்து கொண்டாள். தன் செல்போனை எடுத்து பேஸ்புக்கில் அவசரமாக அவனுக்கு ஒரு கவிதை டைப் செய்து அனுப்பினாள். 

ஒரு நிமிடம் தான்....

கலந்து விட்டது என்னவோ ஒரே நிமிடம் தான்...

உன் விழிகளும்  என் விழிகளும்...

ஆனால் கலந்திருந்த வேளையில்

கசிந்து உருகிய காதலை கண்டு கொண்டதாலோ என்னவோ

நீ நெருப்பென வீசிய வார்த்தைகள்

இதயத்தை சுட்டெரிக்காமல்

தொட்டு விட்டு சென்றது என் செவிகளை மட்டும்!!!!

அனுப்பியவுடன் தான் நிம்மதியாய் இருந்தது. அவனும் புரிந்து கொள்ளட்டும். அடுத்து அவன் கோபத்திற்கான காரணம் தெரிய வேண்டும். விரைவில் அதை கண்டு பிடிக்க வேண்டுமென எண்ணி கொண்டாள்.

அப்போது ரகுவிடம் இருந்து மெச்செஜ் வர என்ன என்று பார்த்தால்

"மேல்தளத்தில் உள்ள பார்ட்டி ஹாலுக்கு வா அம்மு"

என்றிருந்தது.

இதுவும் அவள் பிறந்த நாளிற்காக அவன் செய்த ஏற்பாடுகளில் ஒன்று தான் என்று தோன்ற ஒரு புன்னகையுடன் சென்றாள்.

ங்கு சென்று அந்த ஹாலின் கதவை திறந்து சென்றவளுக்கு ஒண்ணுமே புரியவில்லை அங்கே இருந்த யாரையுமே அவளுக்கு தெரியவில்லை. யாரோ ஒருவர் மைக்கில் பேச பின் அனைவரும் கை தட்ட பிங்க் நிற ரோஜா இதழ்கள் மழை போல மேலிருந்து விழ, அப்போது தான் கவனித்தால் அந்த ஹால் முழுவதும் பிங்க் நிறத்தால் அலங்கரிக்க பட்டு அவளை ஈர்த்தது.

எல்லோரும் கோரசாக கத்த அவர்கள் பார்த்த இடத்தை திரும்பி பார்த்தவள், உறைந்து போனாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.