(Reading time: 8 - 15 minutes)

03. ஷைரந்தரி - சகி

பாஞ்சாலபுரம்....

"என்ன இன்னும் எதுவும் தயாராகவில்லையா?என் பேத்தி வரப்போறா!டேய்! மாணிக்கம் சீக்கிரம் வேலையை பாருடா!"-என்றார் ஷைரந்தரியின் தாத்தா விஷ்ணுவர்தன்.

"இதோ முடியப் போகுதுய்யா சின்னம்மா வராங்க சாதாரணமா விட்டுவிடுவோமா?"

"சீக்கிரம் ஆகட்டும்."-பாஞ்சாலபுரமே திருவிழா கோலம் பூண்டது.(முக்கியமான ஒருத்தரை காணோமே)ஆ...நாம் தேடியவர் சிக்கிக் கொண்டார்.டி.வி.ரிமோட்டின் மீது தனது மொத்த கோபத்தையும் செலுத்திக் கொண்டிருந்தான் யுதீஷ்ட்ரன்.

shairanthari

"ஏன்டா!!!என்னடா டி.வி.பார்த்துட்டு இருக்க?"-மஹாலட்சுமி.

"வேற என்ன பண்ண சொல்ற?"

"இன்னிக்கு ஷைரந்தரி வராடா!ஊரே அதைக் கொண்டாடுது.நீ டி.வி.பார்த்துட்டு இருக்க?"

"எனக்கு உங்க ஷைரந்தரியைவிட,டி.வி.முக்கியம்."

"யுதீஷ்..."

"ம்மா...எப்ப பார்த்தாலும் ஷைரந்தரி,ஷைரந்தரின்னே சொல்ற?உங்க ஷைரந்தரிக்கு நீங்களே கோயில் கட்டி,கும்பாபிஷேகம் நடத்துங்க,என்னை ஆளை விடுங்க!"

"டேய்!அவ முன்னாடி இப்படிலாம் பேசாத...தாயில்லா பொண்ணு கஷ்டப்படுவா!"

"ஆமா...பொறக்கும் போதே என் அத்தையை கொன்னுட்டு தானே பிறந்தா!"

"யுதீஷ்...நிறுத்துடா!இப்படி பேச எப்படி மனசு வருது உனக்கு?"

"சரிம்மா!!!உன் ஷைரந்தரியை நான் எதுவும் சொல்லலை.எனக்கு மகாராணி வருவாங்கன்னு வாசலையே வேடிக்கைப் பார்க்கணும்னு தலையெழுத்து இல்லை.நான் கிளம்புறேன்!"

"எங்கே?"

"வெளியே..."-தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சில்லென்ற வரவேற்பு மடல்.....

மெல்லிய இடி முழக்கத்தோடு....

யார் வருகிறார்கள்??

"சிவா!"

"என்ன அம்மூ?"

"இங்கே மழையே வராதுன்னு சொன்ன?இப்போ வரா மாதிரி இருக்கு?"

"எப்பவாவது மழை வரும்.அதுவும் கொஞ்ச நிமிஷம் தான்.நீ காரை விட்டு இறங்காதே!"

"கிராமம் வரண்டு போயிருக்கு?"

"தாத்தாக்கிட்ட தான் அம்மூ கேட்கணும்!அவர்கிட்ட கேளு சொல்வார்!"

"ம்..."-நமது இளவரசி வருகிறாள் அல்லவா?இடி முழக்கம் சற்று அதிகமாகவே கேட்டது.

"சிவா..."

"ம்..."

"கொஞ்ச நேரம் மழையில நனைச்சிட்டு வரட்டா?"

"உன் பேச்சுக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன்.ஆனா,ஜீரம் வந்தா ஊசி போட்டுக்கணும் சரியா?"

"ம்...சரி!"

"அப்படியென்றால் இளவரசியின் சித்தம்!"-ஷைரந்தரி தனது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு,தனது கால்களில் ஒன்றை காரின் வெளியே எடுத்து வைத்தாள்...இடி முழக்கம் பலமாயிற்று!

"என்னங்க என்னாச்சுங்க?இப்படி இடி இடிக்குது???"-தன் கணவனிடத்தில் வினவினார் மஹாலட்சுமி.

"ஷைரந்தரி ஊருக்குள்ள வந்துட்டாம்மா!"-அடுத்த நொடி யாரும் எதிர்ப்பார்த்திராத அளவிற்கு மழை கொட்ட ஆரம்பித்தது.பாஞ்சாலபுரம் அவ்வளவு மழையை அது வரையில் கண்டதில்லை.

"அப்பாக்கிட்ட சொல்லு இந்த பாஞ்சாலபுரத்தோட இளவரசி வந்துட்டான்னு...."

"சரிங்க..."-மகிழ்ச்சியில் திளைத்திருந்த போதும் சம்பந்தம் இல்லாத பயம் விஜயராகவனின் கண்களில் தெரிந்தது.

யில் தோகையை விரித்து ஆடுவதை பார்த்துள்ளீர்களா?பார்த்ததில்லையா?பாஞ்சாலபுரத்தில் ஆடுகிறது அழகிய பெண் மயில்.

"குட்டிம்மா!அவ்வளவு தான் நேரமாயிடுச்சி...வீட்டில காத்திட்டு இருப்பாங்க...போகலாம் வா!"-காரிலிருந்தப்படி கூவினான் சிவா.

"சிவா...ஒரு பத்து நிமிஷம்."

"கேட்க மாட்டேன்.நீ வரலைன்னா,டாக்டரை போன் பண்ணி இப்போவே வர சொல்வேன்."

"நீ செய்தாலும் செய்வ,வரேன்!"-அவள்,திரும்பி தன்னோடு குதூகலித்த சிறு குழந்தைகளுக்கும்,மழைக்கும் 'பாய்' என்று கூறிவிட்டு வந்தாள்.

"இந்த மழை இப்போ தான் வரணுமா?எவ்வளவு டிகிரி ஏற போகுதோ?"

"சிவா....எனக்கு ஒண்ணும் ஆகாது.காரை எடுக்கிறீயா?"

"எதாவது ஆகட்டும் 10 இன்ஜெக்ஷன் போட சொல்றேன்."-என்று புலம்பியபடி காரை எடுத்தான் சிவா.

தோ மிகுந்த நாட்கள் கழித்து பாஞ்சாலபுரத்திற்கு அவர்கள் வந்தாகிவிட்டது.

அவர்களின் கார் வந்து நின்ற வீடானது,கோட்டையை போலவே பிரகாசித்தது.

"மஹா...அவங்க வந்துட்டாங்க பாரு!"

"இதோ வந்துட்டேன் அத்தை."-கையில் ஆரத்தி தட்டுடன் வந்து நின்றவர் ஷைரந்தரியை கண்டவுடன்,பிரமித்து நின்றுவிட்டார்.

அவள் கண்களில் ஏதோ பிரகாசம்,இதழ்களில் நிரந்தரமாய் குடிக் கொண்ட குருநகை.அகங்காரமில்லாத,ஆணவமில்லாத அழகிய திமிர் அந்த முகத்தில்.சிற்பி கூட இவ்வளவு நேர்த்தியாய் சிலை வடிக்க மாட்டான்.

"அத்தை..."-பிரமித்து நின்றவரை ஷைரந்தரியின் குரல் நிலைக்கு கொண்டு வந்தது.

"என்னம்மா?"

"என்ன அத்தை,அப்படி பார்க்கிறீங்க?நான் உங்க ஷைரந்தரி தான்!"-இளம் சிரிப்போடு கூறியவளை,அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது போல தோன்றியது அனைவருக்கும்.

"அப்படியே! அண்ணி மாதிரியே இருக்க! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு!"

"அப்படியா?உங்க காதை காட்டுங்களேன்."-அவர் நீட்டினார்.

"அம்மா,என்னைவிட கொஞ்சம் வெயிட் அதிகமாம்.நான் அப்படி இல்லையே!"

"வாயாடி...இன்னும் உன் வால்தனம் அடங்கலை."-என்று அவளுக்கு ஆரத்தி எடுத்தார்.

"உள்ளே போங்க..."-அனைவரும் உள்ளே சென்றனர்.ஷைரந்தரியின் பாதம் பட்டதும் அங்கே ஒருவர்க்கு உடல் சிலிர்த்தது.அது இறுதியில் உங்களுக்கே தெரிய வரலாம்."ஷைரந்தரி எப்படிம்மா இருக்க?"-அன்போடு விசாரித்தார் அவள் பாட்டி சிவகாமி.

"சூப்பரா இருக்கேன் பாட்டி!எங்களுக்கெல்லாம் வயசு ஏறிட்டு போகுது,உனக்கு மட்டும் குறைஞ்சிட்டே வருது!என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு!"

"போம்மா!"

"ஐயோ...வெட்கத்தைப் பாரு!!!தாத்தா பார்த்தா ஃபிலாட் தான்!"

"சும்மா இரு அம்மூ!!!மாணிக்கம் பசங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வா!"

"சரிங்கம்மா!"

"மாணிக்கம் அண்ணா!எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல்லா!"

"அசத்திடுறேன்மா!"-அப்போது,

"தங்கச்சி..."-என்று கத்தியப்படியே வந்தான் அர்ஜீன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.