(Reading time: 26 - 51 minutes)

காதல் நதியில் – 05 - மீரா ராம்

வான தேவதை தனது கருநிற புடவையிலிருந்து நீலநிற புடவைக்கு மாறினாள், தனது காதலனாகிய ஆதவனின் வருகையை எதிர்பார்த்து…

அவன் வந்ததும் அவளின் முகத்தில் தான் என்னே சிவப்பு உண்டாகிறது!!!!... நாணத்தில் அவள் முகம் மலர்ந்து விகசிக்கிறது… அவன் அவளின் வெட்கத்தை ரசித்து, ரசித்து தன் வரவினால் அதை உள்வாங்கி அழகாக உதிக்கின்றான் வானில்… இல்லை.. இல்லை… அவளின் மனதில்…

அற்புதமான இந்த காட்சியைப் பார்த்து பார்த்து ரசிக்கின்றான் ஆதர்ஷ் ஒவ்வொரு காலையும்… எத்தனை முறைப் பார்த்த போதிலும் அவனுக்கு இது திகட்டுவது இல்லை… மேலும் மேலும் இந்த காட்சிக்காகவே தவம் கிடக்கின்றான் அனுதினமும்…

kathal nathiyil

“ஆரம்பிச்சிட்டியாடா நீ?...”

“எதைடா சொல்லுற முகிலா?...”

“வேற எதடா ஹரீஷ் சொல்லப் போறேன்… எல்லாம் இவன் காலங்காத்தால செய்யுற அக்கப்போரை தான்…”

“அது இன்றைக்கு நேற்றா அண்ணா நடக்குது… எப்பவும் உள்ளது தானே… விடுங்க…. ஆதி அண்ணா அப்படித்தான்…” என்று அவ்னீஷ் கூறினான்…

“அதை தான்டா ஈஷ் நானும் சொல்லுறேன்… தினமும் இதைப் பார்த்து அப்படி என்ன தான் கிடைத்தது இவனுக்கு… கூட கொஞ்ச நேரம் தூங்காம வந்து இதை ரசிச்சிக்கிட்டு நம்ம தூக்கத்தையும் கெடுக்குறான்…”

“உன்னை வந்து நான் பார்க்க சொன்னேனா?...”

“இல்லைதான் ஆதி…”

“பின்னே என்ன?... உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு… நான் அதை கெடுக்கவில்லையே…”

“உனது தூக்கத்தை கெடுத்துகொள்கிறாயே…”

“ஹாஹாஹா…”

“எதுக்குடா இப்போ நீ சிரிக்கிற?...” என்று சற்று கோவமாக கேட்டான் முகிலன்…

“இதைப் பார்க்க தான் நான் ஒவ்வொரு நாளும் கண் விழிக்கின்றேன்…”

“ஆமாடா… இரவு அந்த சிலையைப் பார்த்தால் தான் உறக்கம் வரும், அதிகாலையில் இதை காட்சியைப் பார்க்க தான் எழுகிறாய்… டேய்… டேய்… ஏண்டா?... ஆதி… இப்படி செய்யுற?...”

“நீயும் இதை பலமுறை சொல்லிக்காட்டிவிட்டாய்….”

“ஹ்ம்ம்… அப்ப கூட நீ பதில் சொல்லமாட்டிக்கிறியே…”

“சில விஷயங்கள் சொன்னாலும் புரியாதுடா… விடு…”

“இதை தானே கிளிப்பிள்ளைக்கு சொல்லுகிற மாதிரி எனக்கு நீ சொல்லிட்டிருக்கிற?...”

“தெரிந்தால் சரி…” என்று அழகாக சிரித்தான் ஆதர்ஷ்…

“அண்ணா நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க…”

“உண்மை தான் ஈஷ்… நீ சொல்லுறது… ஆதி உன் அழகுக்கு அழகு சேர்க்கிறது இந்த சிரிப்பு…” என்று ஹரீஷ் கூறினான்…

“சும்மாவே நம்ம மச்சான் அழகன்… இதுல இவ்வளவு திறமையா சின்ன வயதிலேயே தொழிலில் கொடி கட்டி பறக்குறான்… அக்மார்க் நல்லவன், ஒரு கெட்டப் பழக்கம் கூட இல்லை… எதையுமே இவன் ஹேண்டில் பண்ணுற விதமே தனி அழகு தான்… உதவி செய்தா கூட மற்றவர்களுக்கு தெரியாம செய்யுறான்… மொத்ததில் ஆதி பேரழகன் டா… இந்த ஆணழகனைப் பார்த்து நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு பொண்ணு குடுக்க க்யூவில் நிக்கிறாங்க… ஹ்ம்ம் ஹூம்… இவன் அசைய மாட்டிக்கிறானே…” என்று ஆதங்கத்துடன் பேசினான் முகிலன்…

“டேய் முகிலா… எப்போ டா அரசியலில் குதிச்ச?...”

“நான் எங்கடா குதிச்சேன்… அறிவுகெட்டவனே…”

“இல்லை… இவ்வளவு பொய் வாய் கூசாம சொன்னியே… அதான் கேட்டேன்…”

“அடிங்க… நில்லுடா… உன்னை…” என்று முகிலன் ஆதியை துரத்த, அவ்னீஷும் ஹரீஷும் மாறி மாறி பார்த்து புன்னகைத்து கொண்டனர்…

“ரொம்ப நன்றி ஹரீஷ் அண்ணா…”

“எதற்கு ஈஷ்?...”

“அன்று செய்த உதவிக்கு…”

“நான் தான் நன்றி சொல்லணும்…”

“இப்படியே மாற்றி மாற்றி நன்றி சொல்லிட்டே இருக்கவேண்டியது தான் நாம… ஹாஹாஹா…”

“ஹ்ம்ம்… ஆமா….”

“சரி அண்ணா… அவங்க நல்லா இருக்காங்களா?... உங்களுக்கு அவங்களைப் பற்றி ஏதேனும் தெரியுமா?... என்னால் தான் பேச முடியாமல் போய்விட்டது…”

“ஹ்ம்ம்.. எதுவும் தெரியலை ஈஷ்…”

“ஹ்ம்ம்… நான் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்பினேன்…”

“ஹ்ம்ம்… நம்பிக்கை என்றும் பொய்க்காது… இன்று தெரியாவிட்டாலும் நாளை தெரியாமலா போய்விடும்?...”

“உண்மை தான் அண்ணா… உங்களை மறுபடியும் பார்ப்பேனென்று நான் நம்பினேன்… அதுபோலவே பார்த்தும் விட்டேன்… அதுவும் என் அண்ணனின் நண்பனாக… ஆனால் அவர்களைப் பற்றி தான் எதுவும் தெரியாமல் போய்விட்டது… ஹ்ம்ம்… இட்ஸ்… ஓகே… ஒரு நாள் கண்டிப்பாக தெரிந்து கொள்வேன்….”

“ஹ்ம்ம்… குட்… ஈஷ்….”

“அம்மா… அம்மா…. இவனைப் பிடிங்கம்மா…”

“ஏண்டா… முகிலா வீட்டிற்குள் ஓடாதே என்று சொன்னால் உனக்கு காதில் விழாதா.. டேய்… ஆதி,,, இதற்கெல்லாம் நீ தானே காரணம்…” என்று சுந்தரம் கூறிக் கொண்டே அங்கே வந்தார்…

“எப்போ பாரு, என் பசங்களை குறை சொல்வதே உங்களுக்கு வேலையாப் போச்சு…” என்று அலுத்துக்கொண்டார் கோதை…

“ஆமாமா.. எனக்கு வேலையே இல்லைதான்…”

“அதை தானே நானும் இப்போ சொன்னேன்…”

“ஏழு கழுதை வயசாகுது… இன்னும் ஓடி பிடிச்சு வீட்டிற்குள் விளையாடுறாணுங்க… அதை நான் தட்டி கேட்டா, நீ என்னை வேலை இல்லாதவன்னு சொல்லுற?... ஹ்ம்ம்..”

“உங்களைப் பற்றி எனக்கு தெரியாதா?... உங்க பிரச்சனை இப்போ அவங்க ஓடி பிடிச்சு விளையாடுறதுதானா?... சொல்லுங்க… பார்ப்போம்…”

“என்னைப் பற்றி உன்னை விட யாருக்கு கோதை அதிகமா தெரியும்…” என்று அதிகாலையில் பார்ப்பதற்கே மங்களகரமாய் இருந்த கோதை நாச்சியாரின் அழகில் அந்த வயதிலும் சொக்கி தான் போனார் சுந்தர்ம்… கோதை அவரை முறைத்துப்பார்க்க, அவரோ தன் பணியை செவ்வனே திரும்ப செய்தார்… “பசங்க வீட்டில் இருக்காங்க..போதும் போதும் பார்வை…” என்று மெல்லிய குரலில் கூறினார் கோதை…

“எனக்கு தெரியுமே…”

“அதான… உங்களுக்குத் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்…”

“ஹாஹாஹா… நீ ரொம்ப அழகுடி… எப்படி அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்க.. இப்பவும்…”

“போதும்னு சொன்னேன்… நிறுத்துங்க… இப்போ நானும் உங்களுக்கு பர்மிஷன் தரனும்… ஓடி பிடிச்சு விளையாட… அதுக்கு தானே… இவ்வளவு புகழ்ச்சி எனக்கு…” ஹ்ம்ம்.கும்… என்று சலித்துக்கொண்டார் கோதை…

“நீ தான் வரமாட்டேங்குற… நானும் கூப்பிட்டு தான் பார்க்குறேன்… எங்கே… ஹ்ம்ம்..”

“டேய்… ஆதர்ஷ், முகிலா, இங்கே வாங்கடா… உங்க அப்பாவையும் ஆட்டத்தில் சேர்த்துக்கோங்கடா… அவர் இங்க வந்து அழுது வைக்கிறார்… வந்து கூட்டிட்டு போங்கடா..” “இதோ வந்துவிட்டோம் என்று இருவரின் குரலும் ஒருங்கே ஒலிக்க, சுந்தரம் மனைவியை செல்லமாக முறைத்தபடி இல்லை ரசித்தபடி நின்றிருந்தார்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.