(Reading time: 5 - 10 minutes)

01. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

ணி ஏழு ஆகி விட்டதை அந்த ரூமில் உள்ள சுவர் கடிகாரத்தின் சேவல் எழு முறை கூவி நிறுத்தியது. கட்டிலில் புரண்டு புறண்டு படுத்திருந்தவாமினி அதைக் கேட்டு துள்ளிக் குத்தித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். நெட்டி முறித்தவாறே குளியலறைக்கு சென்று காலைக் கடனைமுடித்து குளித்து உடைமாற்றி விட்டு வந்து அவளது உயித்தோழியான ஆரபியை எழுப்பினாள்.

"ஆரபி......  ஆரபி...... எந்திரு ஹாட்டலுக்கு போகனுமில்ல!" என்றாள் அன்பாக அவள் அருகில் அமர்ந்து தலை முடியை வருடியவாறே.

"இப்ப தானே ஏழு மணி ஹாட்டலுக்கு போக டைம் இருக்கில கொஞ்சம் படுத்திருக்கிறனே அம்மா ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

Nee enakaga piranthaval"நான் மினி உன்னோட பிரண்டு உன்னோட அம்மா ஊரில இருகிறாங்க அப்புறம் இன்னிக்கு உன்னோட ஹாட்டலில ஸ்டாப் மீற்றிங் இருக்கு என்று சொல்லிட்டு இப்பிடி தூங்கினாள் எப்பிடி ?" என்றால் அன்பாக கடிந்தபடி.

"ஓ! சாரி மினி நான் பழைய நினைப்பில அம்மா என்று நினைத்திட்டேன்."

"அதுக்கு எதுக்கு நீ எனக்கு சாரி சொல்லணும் போ போய் குளிச்சிட்டு வா நான் டிபன் ரெடி பண்ணுறன்." என்றால் அந்த அன்பான தோழி.

இவள் மட்டும் அன்று நான் தவித்துக் கொண்டிருக்கையில் எனக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கி கொடுத்து தன்னோடவே வைத்துக் கொள்ளவில்லை என்றால் தன்னோட கதி என்ன ஆகி இருக்குமோ என்று நினைத்தபடியே குளியலறைக்குள் நுழைந்தாள்.

கோபத்தில உன்னோட அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்னும் எத்தனை காலம் தான் நீ அவங்களுக்கும் உனக்கும் இடையில் ஒரு முட் திரையை விரிப்பாய் ஆரா.?" என்றாள் வாமினி மனதுக்குள்

குளித்து முடித்து  கருநீல வண்ண காட்டன்  புடவை அணிந்து ஈரத்லையை தளரப் பின்னியபடி முகத்தல் சற்றும் ஒப்பனை இல்லாது இயற்கை ஆழகில் மிழிர்ந்த தன் தோழியை வாஞ்சையுடன் பார்த்து புன்னகைத்தாள். வாமினி 

“இந்தா காப்பி, ம்..... உன்னோட பாக்கில டிபன் வைச்சிருக்கன் மறக்காமல் சாப்பிட்டிடு என்ன?” என்றால் ஒரு தாயின் பரிவுடன்.

"என் அம்மா செய்ய வேண்டியது என்னோட தோழி நீ செய்கிறாய். ஹிம் அவங்களும் என் மேல அன்பாத்தான் இருந்தாங்க எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.. அந்த ஐந்து நாள் சுற்றுலாப் பயணம் என் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. என் அம்மா என்னிடம் இருந்து பிரிந்து விட்டார்கள். நீ என்னோட ஆரு நீ எனக்காகவே பிறந்தவள் ஆரு என்று இனிக்க இனிக்க காதல் வசனம். க்ரிஷ்!!! அவரும் என்னை சந்தேகப் பட்டு அப்பிடி ஒரு பார்வை பார்த்தார். மினி!அப்பவே நான் உடைஞ்சு போனேன்டி.."

"இப்பிடி என் மேல பாசத்தை கொட்டின எல்லாரும் என்னை பரிதவிக்க வச்சிட்டு அவங்க நிம்மதியா இருக்காங்க நான் தான் இப்பிடி புலம்பி புலம்பி கண்ணீர் வடிக்கிறேன்..” என்று கண்ணில் வழிந்த கண்ணீரோடு தனது உயிர்த்தோழியை அனைத்துக் கொண்டாள்.

“உஷ்...... அழாதடி  போதும் இன்னும் எத்தனை வருடம் தான் பழசையே நினைத்து அழுதிட்டிருப்பாய். ம்... பேசாமல் இன்னிக்கு நீயும் என்கூட கிளம்பி ஊருக்கு வந்திடுறியா  ஆரா? உன்னைப் பார்த்தால் உங்கம்மா எவ்வளவு சந்தோசப் படுவாங்க! ஐந்து வருடம் ஆகுது அவங்களும் நீயும் பார்த்துப் பேசி,  போனில கூட நீ அவங்க கூட பேசிக் கிட்டது கிடையாது. நான் சொல்றத கேளு ஆரா. பாவம்டி அவங்க எவளவு வேதனை படுறாங்க தெரியுமா?

“இல்லடி ஏன் நான் வேதனை படல அவங்க என் மேல கொட்டின அமில வார்த்தையை கேட்டு நான் இப்ப வரைக்கும் வேதனைப் பட்டு அணு அணுவாக துடிக்கல? வேணாம் எப்ப அவங்க தான் பெத்த பொண்ணையே நம்பாமல் அப்பிடி ஒரு வார்த்தை கேட்டாங்களோ இனிமேல் சாகிற வரை அவங்களோட நான் கதைக்கவும் மாட்டேன் அவங்களைப் போய் பார்க்கவும் மாட்டன்.” என்று கூறிவிட்டு வாமினியின் பதிலை எதிர் பார்க்காது தனது கைப் பையுடன் அங்கிருந்து கிழப்பி விட்டாள். அவளது ஆபிசை நோக்கி.(வாங்க ஆரபி அவங்க ஆபிசுக்கு போக முதல் கொஞ்சம் அவங்கள பத்தியும் அவங்க அன்புத் தோழி வாமிநியைப் பத்தியும் பாத்திடலாம்.)

வாமினியும் ஆராவும் ஒன்னா தான் வவுனியாவிலுள்ள மிக பிரசித்தி வாய்ந்த சைவப் மகளீர் கல்லலூரியில் தமது ஆரம்ப கல்வி முதல் உயர்(A/L) வரை பயின்றனர் அதன் பின்பும் இருவரும் ஒன்றாகவே தமது கல்லூரிப் படிப்பை தொடர்ந்தனர்.

வாமினி தனது ஆசைப் படி கொழும்பில் உள்ள பள்ளி ஒன்றில் கணக்கியல் ஆசிரியையாகவும் ஆரபி  எ.ம்.கே ஹாட்டலில் அதன் நிர்வாகியின் பர்சனல் செக்கரற்ரியாகவும் வேலை பார்க்கிறாள்.

குட் மானிங் சீலா........”

வரவேற்ப்பு பகுதியில் உள்ள ஷீலா கணனியில் இடுந்த கண்களை உயர்த்திப் பார்த்து மலர்ந்த முகத்துடன் ஆரபிக்கு காலை வணக்கம் தெரிவித்து விட்டு

உன்னை மனேஜர் சாம்பசிவம் சார்  ஆரபி இன்னும் வரலையா? ஆரபி இன்னும் வரலயா? என்று கேட்டிட்டே இருந்தார்.அவருக்கு பதில் சொல்லியே நான் கலைச்சிட்டன், ஆமா நீ இன்னிக்கு மீற்றிங்க்கு எல்லா அரேன்ஜ்மேன்சும் செய்திட்டியா?"

"ஆங்...... அத நான் நேத்தே எல்லாம் முடிச்சிட்டன். சாருக்கு தெரியாதில்ல.  நான் அவர போய் பாக்கிறன்." என்று சொல்லி விட்டு புன்னகை ஒன்றை சிந்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ கம் இன்" 

"வாம்மா, வா!!!" என்றார் சோர்ந்த குரலில் 

"என்னாச்சு சார் ஏதாவது பிரச்சினையா ஒரு மாதிரி இருக்கீங்க?"

"ஆமாம்மா நம்ம சிவசங்கர் ஐய்யாவால இனிமேல் ஆபீசுக்கு வர முடியாதாம். அவருக்கு இப்ப கொஞ்சம் முடியலாம் அதனால டாக்டர் அவர கொஞ்ச நாளைக்கு புல் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்களாம் அதனால சின்னவரு தான் இனி இந்த ஆபீஸ் பொறுப்பை எத்துக்கப் போறார். அவருக்கு நம்ம ஸ்டாப் போடா எல்லா விபரரும் இந்த ஹோட்டலோட வரவு செலவு பற்றின விபரங்களையும் ஒரு பைல்இல போட்டு கொடுக்க சொல்லி இருக்கார் நம்ம பெரியையா. அதெல்லாம் உனக்கு தானேம்மா தெளிவா தெரியும் அது தான் உன்னை தேடிட்டு இருந்தேன். நல்ல வேலை அவர் வர முதல் நீ வந்திட்டாய். அந்த தகவல்களை எல்லாம் எடுத்திட்டு வாரியாம்மா?"

"சரி சார் "என்று சொல்லி விட்டு அவாரையை விட்டு வெளியேறி தனது தனியறைக்குள் புகுந்தாள் ஆரபி." 

நேரம் கடந்தது அனைத்து மேல் மட்ட ஊழியர்களும் மீற்றிங் அறைக்குள் நுழைந்தனர். முக்கியனான பி.எ.வான ஆரபியை தவிர. 

(சாம்ப சிவம் சார் நீங்க பண்ணின காரியத்தால பாவம் நம்ம ஆரா உங்க சின்ன முதலாளிகிட்ட அவரோட ஆபீசின் முதல் நாளிலேயே திட்டு வாங்க போறாங்க. பாவம் அவ நீங்க தான் சார் காரணம்)

Episode # 02

தொடரும்!

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.