(Reading time: 13 - 26 minutes)

02. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

திகாலை 3.50 பன்னாட்டு நிருவனத்தில் வேலை செய்வர்களின் பலர் இரவு தூக்கத்தை தொலைத்து மிகவும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுப்பட்டனர். இன்னும் சிலர் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு மணியை பார்த்த அமர்ந்து இருந்தனர். இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் பல மாடிகள் கொண்ட அந்த நிறுவனம் மிகவும் கம்பிர்மாக இருந்தது.

அலரம் சத்தம் கேட்டு கண் விழித்த சித்ரா சோம்பல் முறித்து அருகே இருந்த வினிதாவை தனியாக சிரிப்பதை பார்த்து

“ஏன்டி லூசு மாதிரி தனியா சிரிக்கிற” அவளின் குரல் இன்னுமும் தூக்க கலக்கத்தில் இருந்தது.

Nizhalaai unnai thodarum

“இல்ல எப்படி உன்னால மட்டும் சரியா 1 மணிக்கு தூங்கி 3.50 அலரம் வைச்சி எழுத்திரிக்க முடியுது…?”

“உனக்கு ஏன் பொறமையா இருக்கா…?”

“எனக்கு இல்லம்மா, ஆனா நீ தூங்கும் போது நம் டீம் லீடர் வந்தாரு….”

“என்ன…..” பதறியவளுக்கு கண்ணில் இருந்த கொஞ்ச தூக்கமும் கலைந்து போனது.

“கவலை படாதே.. நீ தூங்கும் அழகை பார்த்து அவர் சிரித்துக் கொண்டுடே போய்விட்டார்” என்றாள் சிரிப்புடன்…

“ஒன்னுமே சொல்லாமல் போய்விட்டாரா…..?” கேள்வியாய் கேட்க

“நீ எழுந்தவுடன் இந்த வாரத்தின் ப்ரொஜெச்ட் ரிபொர்ட்டை தர சொன்னார்.. எப்படியும் நீ சரியா 3.50க்கு தான் எழுந்திருப்பன்னு எனக்கு தெரியும் அதான் நானே செய்து முடிச்சிட்டேன்…”

“ஒ… நீ இன்னும் என்ன பண்ணற வா போகலாம்…”

“எங்க…?”

“வீட்டிற்க்கு தான் டி.. இரு நான் போய் முகம் கழுவிட்டு வரேன்”

“அடிப்பாவி ஒரு வார்த்தைக்கவது நன்றி சொன்னியா…?.” பொய் கோபத்துடன் கேட்டவளை பார்த்து….

“இன்று நான் உன் டிரஸ்சை அயன் செய்து கொடுத்தேன்… அதுக்கு நீ எனக்கு நன்றி சொன்னியா இல்ல… சோ இரண்டுக்கும் சரியாக போய்விட்டது மகளே… கூறி திரும்பி நடத்தவள் அங்கே அவர்களை தவிர அங்கே யாரும் இல்லாததை கண்டு…

“வினி மற்றவர்கள் எல்லாம் எங்கே..?”

“நாம் டீமில் உள்ளவர்கள் கிளம்பி விட்டார்கள்…. அனிதாவின் டீம் அடுத்த ப்ரொஜட் பற்றி குருப் டிஷ்கஷென்க்கு போய் இருக்கங்க”

“ஒ… சரி இப்பவது நான் போய் முகம் கழுவிட்டு வரேன்…”

முகம் கழுவி கையில் காப்பியுடன் வந்து சித்ரா, வினிதா இன்னமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இருப்பதை பார்த்து “இன்னும் என்னடி பண்ணறே”

“அம்மா தாயே என்னுடைய வேலையை செய்து முடித்து விட்டேன்… இப்போ உன் ரிப்போர்ட்டை தான் எடிட் செய்துக் கொண்டு இருக்கிறேன்… சித்ரா நான் பிரின் ஆட் எடுத்துடேன், நீ அதை எடுத்துட்டு போய் பரந்தாமன் சார் டேபிளில் வைத்து விட்டு வா… நான் போய் முகம் கழுவிட்டு வரேன்…”

ன்று அந்த தளத்தில் அவர்களை தவிர அங்கு வேறு யாரும் கிடையாது… வினிதா நடக்கும் போது டக் டக் டக் டக் யென அவளின் ஹீல்ஸ் சத்தம் அந்த இடம் முழுக்க ஏதிர் ஒலித்தது….!

வினிதா கழிவறைக்கு செல்லும் போது அங்கு அவளை தவிர யாரும் இல்லை… முகம் கழுவிக்கொண்டு இருக்கும் போது யாரோ அவளை கடந்து சென்று கழிப்பறையின் கதவை சாத்தி குழாய் தண்ணீரை திறந்து விடும் சத்தம் கேட்க….

நிமர்ந்து முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக சாத்தி இருந்த கதவை பார்த்தாள்… போதுவாக அவர்கள் வேலை செய்யும் இடத்தில் யாரையாவது பார்த்தால் ஹாய் சொல்லுவது வழக்கம்… அப்படி இருக்க ஏதும் சொல்லமால் தன்னை கடந்து சென்றது அது யாராக இருக்கும் என யோசித்தவள்… 

“உள்ளே யாரு” கேட்டவள் பதிலுக்காக அங்கேயே நிற்க்க

………………………..

“சித்ரா நீயா….?”

எந்த சத்தமும் வாரமல் போக, வினிதா மெல்ல நடந்து அந்த கதவின் முன் நின்று கதவை தட்டலாமா வேண்டாம என யோசிக்கையிலே அவளின் கை தானாக அந்த கதவின் மேல் வைக்க அது உடனே திறந்துக்கொண்டது.

உள்ளே யாரும் இல்லமால் அங்கு குழாயிலிருந்து தண்ணீர் சென்றதுக்கு எந்த அடையாளமும் இல்லமால் இருக்க…! ஒரு நிமிடம் அதை கண்டு திகைத்தவள் உடனே காற்றுக்கு கதவு சாத்தி இருக்கும் நினைத்து அங்கே இருந்து வெளியே சென்றாள்.

காற்றுக்கு கதவு சாத்தி இருக்கும் நினைத்தவள், குழாயிலிருந்து வெளியேரிய தண்ணீர் சத்தத்தை மறந்து போனாள்.

இருவரும் அவர்களின் சிஸ்டமை ஓப்ப் செய்து அழுவகத்தில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பினர்…

அதிகாலை நேர காற்று அவர்களை இதமாக தழுவி செல்ல இருவரும் அதை ரசித்து மெல்ல நடந்தனர். ஒரு பத்து நிமிடம் நடந்தால் அவர்கள் தங்கி இருக்கும் அப்பர்ட்மெண்ட் சென்று விடலாம்.

அதிகாலை 4.15 மணிக்கு அந்த சாலையில் அவர்களை தவிர யாரும் இல்லை… கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை இருட்டும் சாலை ஒரத்தில் இருக்கும் விளக்கு வெளிச்சம் மட்டுமே அவர்களின் துணையாக இருந்த போதும் இருவரும் பயமின்றி நடந்தனர்.

அந்நிருவனத்தில் வேலைக்கு சேர்ந்த நான்கு மாதமாக இரவு ஷிப்ட் வேலை முடிந்து பிறகு இருவருக்கும் இப்படி நடப்பது வழக்கம். எப்போதவது ஏதோ ஒரு வாகனம் இவர்களை கடந்து செல்லும். ஆனால் இன்று ஏனோ வினிதாவிற்க்கு அவர்களை தொடர்ந்து ஏதோ ஒன்று வருவது போல் இருந்தது. ஆகவே மெல்ல திரும்பி பார்க்கையில் அங்கே ஏதும் இல்லாமல் இருப்பதை பார்த்தவள் அருகே நடக்கும் சித்ராவின் கையை பற்றிக் கொண்டாள்.

சித்ரா இதை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவளுக்கு தான் தூக்கத்தில் நடப்பதால் வினிதா அவளின் கையை பற்றிக் கொண்டால் என நினைத்து அமைதியாக நடந்தாள்.

வெண்ணிலா அபர்ட்மெண்ட்ன்க்குள் நுழையும் முன் வினிதா மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கையில் அங்கே ஏதோ இருப்பதோ அவர்களை நிழல் போல் தொடர்ந்து வந்ததையோ ஏதும் அவள் கண்களுக்கு தெரியவில்லை…!

“என்னம்மா இன்றைக்கு லேட்டா வறிங்க” அக்கறையாக விசரித்தவரிடம்

“இன்றைக்கு கொஞ்சம் அதிக வேலை தாத்தா” என்றாள் வினிதா.

“இன்றைக்கும் உங்களுக்கு இரவு வேலையா தாத்தா…?” சித்ரா கேட்ட

“எனக்கு எப்போழுதும் இரவு வேலைதான் பாப்பா” என்றார் சுந்தரம் தாத்தா அவர்கள் இருக்கும் அபர்ட்மெண்ட்ன் செக்யூரிட்டி.

“ராண்ட்ஸ் இந்த பக்கமா தாத்தா”

“ஆமாம்மா… சரி ரொம்ப நேரம் ஆச்சி.. காவனமா போங்க”

“சரி தாத்தா” என இருவரும் கிளம்புகினர்.

“இன்னைக்கும் மாடிப்படியை ஏறனும்மா” பாவமாக சித்ரா கேட்ட

“ஆமாம் செல்லம்”

“வினி செல்லம் ப்ளீஸ் இன்னைக்கு லிப்டில் போகலாம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.