(Reading time: 8 - 16 minutes)

07. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

பிரகாஷ் ஏக்கத்துடனும் கேள்வியுடனும் மது முகத்தையே பார்த்திருந்தான். மற்ற அனைவரும் மதுவையும் பிரக்ஷையும் மாறி மாறி  பார்த்து கொண்டு இருந்தனர்.

மூர்த்தி அமைதியாக, மது அருகில் சென்று அவள் தலையை தடவியவாறு

"உன் முடிவு தான் எனக்கு முக்கியம் டா, இவரு உன்கூட வேலை பார்தவருன்னு வேற சொல்றாரு, இவர பத்தி உனக்கும் தெரிஞ்சுருக்கும், அதுக்காக இப்போ சம்மதிக்கணும் நு அவசியம் இல்ல, யோசிச்சு சொல்லு"

என்று கூறி விட்டு மனைவியை பார்த்தார். லக்ஷ்மியும் அதுவே சரி என்பது போல் தலை அசைக்க, பிரகாஷிடம் திரும்பி

Nenjamellam kathal

"என் பொண்ணு கொஞ்சம் யோசிக்கட்டும் தம்பி, அவ முகத்த பார்த்தாலே தெரியுது ரொம்ப குழம்பி போயிருக்கான்னு"

மது அமைதியாக விழி தாழ்த்தி இருக்க, அவளை இயலாமையுடன் பார்த்து விட்டு முகம் வாட கூறினான்,

"ஓகே சார் அவங்க எப்போ சொல்றாங்களோ சொல்லட்டும் அது வரைக்கும் நான் கண்டிப்பா அவங்களுக்காக காத்திருப்பேன்"

"நல்லது தம்பி, அப்போ எல்லாரும் கிளம்பலாமா?" என்று அவர் எழ முயற்சிக்க,

"ஒரு நிமிஷம் அப்பா"

"உங்களுக்கு ஓகேன்ன நான் பிரகாஷ் கூட கொஞ்ச நேரம் தனியா பேசணும்" என்று எழுந்தாள் மது.

“இது என்னடா கேள்வி போய் பேசிட்டு வா" என்று லக்ஷ்மி கூற

பிரகாஷ் உற்சாகமாக "சரி மது" என்று எழுந்து அவளுடன் செல்ல எத்தனிக்க,

"அம்மு இப்போ என்ன அவசரம் மெதுவா பேசலாமே" என்றான் ரகு எரிச்சலையும் கோபத்தையும் உள்ளடக்கிய குரலில்.

"இல்ல இப்போவே பேசிடலாம்" என்று அவனை அழைத்து கொண்டு சென்றவள் 20 நிமிடங்கள் கழித்து வந்தாள். அவள் வந்து இவர்களுடன் அமர, அடுத்த 5 நிமிடத்தில் பிரகாஷும் வந்தான்.

மது எந்த வித சலனமும் இல்லாமல் வந்து அமர, பிரகாஷின் முகத்தில் யோசனை ரேகைகள் தென்பட்டன. அதை கண்ட ரகு மது ஏதோ நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறாள் என்று நிம்மதியுடன் நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

திவாக்கரோ, "என்ன ப்ரகாஷ், என்ன யோசிகுரிங்க? மது  என்ன சொன்ன?"

என்று வினவ,

"ஒன்னும் இல்ல அவங்க மனசுல இருக்கறத சொன்னங்க திவாக்கர்"

"சார் எனக்கு இன்னும் டைம் குடுங்க நான் யோசிக்கிறேன், மது கூட யோசிக்கணும் நு சொல்றாங்க, அவங்க யோசிச்சு இதுக்கு சம்மதம்னா அடுத்த முகுர்த்ததிலையே கல்யாணம் வெச்சுடலாம்"

"இப்போதைக்கு இந்த பேச்சை ஆற போடலாம் சார்" என்று விட்டு,

"அப்போ நான் கிளம்பறேன்" என்று கை கூப்பினான்.

"சரிப்பா ரெண்டு பெரும் யோசிங்க, நல்ல முடிவா சொன்ன எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான்" என்று விட்டு அவரும் எழுந்தார்,

" எல்லாரும் சேர்ந்தே போலாமே" என்று அவர் நடக்க, பின்னே லக்ஷ்மி கற்பகத்தை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியவாறு நடந்தார்.

ன்யா ப்ரிஷனை தூக்கி கொண்டு, அமைதியாக திவாக்கருடன் நடந்தாள்.

பிரகாஷும், மேகாவும் ஏதோ யோசனையில் செல்ல, பின்னே தனியே அமைதியாக வந்து கொண்டிருந்த மதுவின் வாடியிருந்த முகத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை.

அப்படி நினைத்து தான் பின்னோடு மெதுவாக நடந்தாள். அவள் ,அவளது கனவில் முகம் சுளித்தாலே ரகு கண்டு கொண்டு விடுவான். இங்கு இவ்வளவு பெரிய பிரளயமே நடந்துள்ளது, அவளை கண்டு கொள்ளது போய் விடுவானோ? போக தான் முடியுமோ?

"என்னடா அம்மு" என்று ஆவலுடன் நடந்தவாறு அவள் தலையை அவன் வருட ,

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் "ரகு"என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கண்ணீர் பெருக்கெடுக்கவில்லை தான், கதறி குமுறவில்லை தான்... ஆனால் அவளின்  "ரகு" என்ற ஒற்றை சொல் ஒலித்த தோனியிலே அவள் மன வேதனையின் ஆழம் வரை அறிந்தவன் போல துடித்து தவித்து போனான்.

இங்கே இப்போது எதையும் பேசுவது சரியாகாது என்று அவளை தோழோடு சாய்த்து கொண்டு வெளியே வந்தான்.

மூர்த்திக்கு போன் வரவே அதை எடுத்து பேசியபடி சென்றவர் எதிரில் வந்த மகேஷின் மீது மோதி தடுமாறி அவர் கையை பிடித்து நிற்க அதை எதிர் பாராத மகேஷும் தடுமாறி போனார்.

சட்டென்று மூர்த்தியை பின்னால் இருந்து தாங்கலாக சரண்ராஜ் பிடித்து நிறுத்த இருவரும் சுதாரித்தனர்.

"சாரி சார் நான் தான் போன் பேசிட்டே தெரியாம மோதிட்டேன்" , மூர்த்தி.
""பரவாயில்ல சார் வேணும்னேவா பண்ணுவாங்க, நானும் கொஞ்சம் பாத்து தான் வந்திருக்கணும்" மகேஷ்.

அப்போது சரண்ராஜ் மகேஷ் குடும்பத்தினரும் அங்கு வர, மது மூர்த்தி அருகில் வந்து என்ன நடந்தது என்று வினவ, மூர்த்தி நடந்ததை விளக்கினார்.

"நீங்க? நீ மூர்த்தி தான?" என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த முக பாவத்தில் சரண்ராஜ் கேட்க,

“ஆமாம் சார் நீங்க? ஹே சரண் எப்படிப்பா இருக்க?"

"நான் ரொம்ப நல்ல இருக்கேன்டா, உன்ன இங்க பார்ப்பேன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை"

"நானும் தான் எப்படியும் ஒரு 12 அல்லது 13 வருஷம் ஆச்சு தானே?"

"ஆமாம் ஆமாம், ம்ம்ம் உன்ன எல்லாம் மறுபடியும் பார்ப்பேனா நு நினைசுருகேன் நிறைய தடவை, இன்னைக்கு பார்த்துட்டேன்"

அதற்குள் சரண்ராஜ் அருகில் வந்து நின்ற ஸ்வேதா அவள் அப்பாவுடன் நின்று அவர்கள் பேசுவதை கேட்டவள் அப்போது தான் மது அங்கு நிற்பதை கவனித்தால்,

என்ன தான் ஆதியை பார்க்க கூடாது என்று மனதில் துயரமும் கோபமும் இருந்தாலும் அவன் எதிரில் நிற்கும் பொது பார்க்காமல் இருக்க முடியவில்லை மதுவால்.

 மெல்ல விழி நிமிர்த்த அவனை பார்க்க, அவனோ அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி நிச்சயம் வரைக்கும் வந்து அவ கையில மோதிரம் போட்டு அவளை ஊர் அறிய தனக்கு சொந்தமாக்கி கொண்டு, இன்னும் இவளிடம் என்ன வேண்டுமாம்? எதற்கு இந்த பார்வை?" என தனக்குள்ளே கோபமாக பேசியவள் சட்டென்று முகத்தை திருப்பி கொண்டாள்.

அப்போது தான் அவளும் ஸ்வேதாவை கவனித்தாள்.

அவளும் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்தவள் வேறு வழியில்லாமல் செயற்கை புன்னகையை வரவழைத்து கொண்டு பேசினாள்,

"ஹாய் ஸ்வேதா"

"ஹலோ மது பாருங்க மறுபடியும் நம்ம மீட் பண்றோம்"

"ம்ம்ம்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.