(Reading time: 39 - 77 minutes)

04. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

ப்பாவின் அறிவிப்பை கேட்டதும்,நெஞ்சடைத்துக்கொண்டு வந்தது நிரல்யாவிற்கு. மூச்சுகாற்றில்லாத வெற்றிடத்தில் நிற்பது போல் ஒரு தவிப்பு. அதற்குள் கேமிராக்களின் ஒளி வெள்ளம்.

‘இது உன் உணர்ச்சியை காண்பிக்கும் நேரமில்லை நிரு.’ அதட்டியது மூளை. சற்று தள்ளியிருக்கும் கூட்டத்திற்கு கேட்க்காத வண்ணம் சிறு குரலில் பேசினார் அப்பா.

“நிரு, அப்பா உன்னை எதுக்காகவும் கட்டாயபடுத்தினது கிடையாது. என் கட்சி கொள்கையை நீ மீறினப்பவும், அரசியல் வாரிசா நீ வராமப்போனப்பவும் கூட உன் முடிவை நான் அப்படியே ஏத்துகிட்டேன். ஏன்னா என் தேவை உன் சந்தோஷம்தான். நீ அம்மா இல்லாம வளர்ந்தவ, கூட பிறந்தவங்களும் இல்லாம தனிமையிலேயே வளர்ந்துட்ட.... அப்பாவாலும் ரொம்ப உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல………” ஒரு குற்ற உணர்ச்சி இதை சொல்லும் பொழுது அவர் குரலில். கண்களை ஒரு வினாடிக்கும் மேலாக தாழ்த்திக் கொண்டார். அவர் மன்னிப்பு கேட்ப்பது போல் ஒரு உணர்வு மகளின் மனதில். ‘என் அப்பா தப்பே செய்ததில்லையே’ என கரைந்தது பெண் மனது.

Kaniyatho kathal enbathu

“இதே மாதிரி எனக்கப்புறமும் நீ தனியா நிக்கிறதை என்னால தாங்க முடியாது கண்ணம்மா..” அவர் குரல் தழுதழுத்தது. அவள் அம்மா இறந்தபோது கூட மற்றவர் முன் அழாத அப்பா. நெஞ்சை பிசைந்தது நிரல்யாவிற்கு.

“இதுதான் மாப்பிள்ளைனு நீ யாரை கைய காட்டியிருந்தாலும் நான் கல்யாணம் செய்து வச்சிருப்பேன்... ஆனால் நீ கல்யாணமே செய்துக்கபோறதா எனக்கு தெரியலை. அப்படி கடைசி வரை நீ தனியா இருப்பதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாதுடா.....” அவர் இதய துடிப்பு இவள் காதில் கேட்டது. அப்பா இவளிடம் யாசகம் கேட்ப்பது புரிந்தது உள் மனதிற்கு.  அரசாண்ட அரசன்.... இவளிடம்...... இவளின் சந்தோஷத்திற்காக மண்டியிடுவது என்றால்..

“அ..அப்பா..” அவளது அந்த சிறு குரல் ஒற்றை வார்த்தை அவள் உள்ள கதறலை பெற்றவருக்கு உணர்த்தியது போலும். மார்பில் சாய்த்தார் மகளை. உச்சந்தலையில் ஒரு மென் முத்தம். ‘தெய்வமே! இந்த அப்பா எனக்கு என்னாளும் இப்படியே வேணுமே’ மௌன ஜெபம் மகளின் மனதிற்குள்.

“ரக்க்ஷத் தங்கமான பையன். அவன் குடும்பம் சின்ன வயதில் நமக்கு பழக்கம். பின்னால கனடால செட்டிலாயிட்டாங்க. அருமையான குடும்பம். என் ராஜகுமாரியை மகாராணியா பார்த்துப்பாங்க... அப்பாவை விட உன்ன அன்பா....அதிகமா..... கவனிச்சுப்பாங்கடா..........”

அப்பாவின் பிடியை விட்டு விலகத்தோன்றியது நிரல்யாவிற்கு. ஆனால் அவர் பிடியை முறித்துகொண்டு விலக மனமில்லை.

“முக்கியமான விஷயம் கடவுள் நம்பிக்கை விஷயத்தில் கூட மாப்பிள்ளையின் மொத்த குடும்பமே உன்னை மாதிரிதான்மா. என் கட்சியிலிருந்தோ, என்னோட எந்த லாபத்துக்காகவோ இந்த கல்யாணத்தை நான் ஏற்பாடு செய்யலைனு நீ புரிஞ்சிப்பனு நினைக்கிறேன்.......மாப்பிள்ளைட்ட பேசி பாரு, உனக்கே அவரை பிடிக்கும். அவரை புரிஞ்சிக்க உனக்கு மூனு மாசம் டைம் இருக்குமா. மூனு மாசம் கழித்துதான் கல்யாணம். ஆனால் கண்டிப்பாக இந்த மேரஜ் நடக்கும்.” அன்பாய் உருகி பேசிய அப்பா கடைசி வரியை மட்டும் அழுத்தமாக சொல்லி முடித்தார். ஆனால் அதில் வெளிப்பட்டதும் அன்புதான்.

உயிர் பிரிவதுபோல் ஒரு பக்கம் தவித்தாலும், அப்பாவின் மேல் கோபப்படவும் நிரல்யாவால் முடியவில்லை. ‘அப்பாவிற்குள் இத்தனை அன்பா? இந்த இடத்தில் இவள் அழுது ஆர்பாட்டம் செய்தால், இந்த தேர்தல் சமயத்தில், பத்திரிக்கைகள் அதை கிழிக்கும் விதத்தில் அப்பாவின் அரசியல் வாழ்க்கை அஸ்த்தமித்துவிடும். அவளைவிட அது அப்பாவிற்கு நன்றாக தெரியும். இருந்தும் அவர் இந்த ஏற்பாடு செய்திருக்கிறார் என்றால் அப்பாவுக்கு அவர் அரசியல், பதவி எல்லாவற்றையும்விட இவள் தான் முக்கியமென்றுதானே அர்த்தம்.’

‘ஆனால் அதற்காகவெல்லாம் வந்தவனை கல்யாணம் செய்யமுடியுமா?’ அப்பா பிடியை தளர்த்த, விலகிக் கொண்டாள்.

மொத்த கோபமும் வந்திருந்த மாப்பிளைகாரன் மேல் திரும்பியது. ‘யாரவன்? இப்படி பொண்ணுக்கு விருப்பமான்னு கூட கேட்காமல், பெரிய இடம் அமைந்தால் போதும் என்று ஓடி வந்த பணப்பேய்?’

“நிரு இதுதான் ரக்க்ஷத்” அப்பா அறிமுகம் செய்தார்.

‘கேடுகெட்டவன்’ என முடிக்க முடியாதவாறு, ஆறடி உயரத்திற்கு மேல், அப்பழுக்கற்ற கண்களுடன், ஆரம்பகால அமீர்கானையும், இப்போதைய சூர்யாவையும் கலந்தது போன்ற ஒரு முகசாயலுடனும், தெற்கத்தி தமிழர்கள் ‘பையன் கலரா இருக்கான்’னு கமெண்ட் குடுக்க கூடிய ஒரு நிறத்துடனும் நின்றுகொண்டிருந்தவனிடம் நம்பிக்கை வருமாறு ஏதொ ஒன்றும் ஒளி வீசிக் கொண்டிருந்தது. உயரம், அதற்கேற்ற உடலமைப்பு, ஒத்து போகும் உடைத்தேர்வு, ஒழுங்கும் கிரமமுமான உடல் மொழி.... அவள் எதிலும் எதிர் பார்க்கும் பெர்ஃபெக்க்ஷன்.

‘சொன்னால் விலகிடுவான்’ மனம் குறித்துக் கொண்டது. அப்பா விழுந்ததில் ஆச்சர்யம் இல்லை. அறிவு அடைப்பிட்டு வைத்தது.

“மாப்பிள்ள என் பொண்ணு நிரு, உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்”

றிமுகமாக சொல்லிவிட்டு அப்பா நகர்ந்து செல்ல,

அடி குரலில் பொரிந்து தள்ளினாள் நிரல்யா “ எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்.........சம் கூட விருப்பம் கிடையாது, ஐ’ம் இன் லவ் வித் சம் ஒன். ஒரு பேஸிக் மேனர்ஸ் கூட கிடையாதா? பொண்ணுக்கு சம்மதமான்னு கூட கேட்க்காம இப்படித்தான் கிளம்பி வருவீங்களா..இ...”

பேசிக்கொண்டே போனவள் அவன் கவனம் அவள் பேச்சில் மட்டுமல்ல வேறு எங்கும் சிந்தாமல் சிதறாமல் அவள் அதரங்கள் மீது மட்டும் இருப்பதை உணர்ந்து திகைத்தாள்.வல கையால் மெல்ல தன் உதடுகளை தொட்டுப்பார்த்தாள்.

“ஹே ஹனி....., ஆரஞ்சு சுளை கலர்ல உன் லிப்ஃஸ் செம க்யூட்டா இருக்குடா, அதுவும் இப்படி வேகமா பேசுறப்ப சான்ஃஸே இல்லடாமா, நான் டோட்டல் சரண்டர்”

“ஹான்!!!!”

முகமெல்லாம் பரவியிருந்த குறும்போடும், கொள்ளை கொள்ளையான சந்தோஷத்தோடும் பேசிக்கொண்டு போனான் அவன்.

“கல்யாணத்துக்கு அப்புறம் நீ இப்படி பேசுறப்ப அந்த உதட்டுக்கு...”

அவன் சொல்லிக்கொண்டு போக, மிரண்டு போய் இவள் ஒரு எட்டு பின் வைத்தாள்.

“ஆலிவ் ஆயில் போடுவேன்னு சொல்ல வந்தேன்டா! நீ என்ன நினைச்சே?” அப்பாவியாய் கேட்டவன் கண்சிமிட்டி சிரித்தான்.

“நான் ரொம்ப நல்ல பையன் நிருகுட்டி, கல்யாணம் வரைக்கும் கற்பனையில் கூட விலகித்தான் இருப்பேன்.”

தன் மறுப்பை அவன் ஏற்று தானே விலகிடுவான் என அவளுக்கு தோன்றியிருந்த நம்பிக்கை நாசமாகிபோக, சூழ்நிலைக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு அறுபடுவது போல் ஒரு உணர்வு. வலி தங்காமல் மனம் மறைவிடம் தேடும் போது இப்படிதான் தோன்றும். மனதின் வலியை வாயில் வெளியிட முடியாத சூழலில் கண்ணில் அது கண்ணீராக கட்டியது.

“லயாமா...”

என உருக்கமாய் தொடங்கினவன்,

“என்ன கோப தாபம்னாலும் அப்புறமா காமிடா, ப்ளீஸ்.. என் தங்கை இங்க வர்றா, அவ முன்னால வேண்டாமே ப்ளீஃஸ், உன்ன அவளுக்கு என்னைக்குமே பிடிக்கனும்டா.........என்ன யாராவது குறை சொல்லிட்டாங்கன்னா அவங்கட்ட வாழ்க்கைக்கும் சேரமாட்டா இவ....” இவன் சொல்லிகொண்டிருக்கும் போதே

“டேய் அண்ணா, கரடி வந்துட்டேன்”

என்றபடி வந்த ஒரு பெண்

“இந்த சுட்டி உங்களுக்கு அழகா இருக்கும் அண்ணீ”

என்றபடி சற்று தள்ளியிருந்து இவர்களை கவனித்துக்கொண்டிருந்த விருந்தினர்களுக்கு இவள் முகத்தை மறைத்தபடி நிரல்யாவிற்கு நெற்றி சுட்டி வைக்க முயன்றாள்.

“எதுவானாலும் உங்க இஷ்ட்டமில்லாம நடக்காது நிரு. உங்களுக்கு முடிவெடுக்க எப்படியும் மூனு மாச நேரமிருக்குபா. இன்னைக்கும் மோதிரம் மாத்துர அளவுக்கு கூட எதுவும் நடக்காம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. ப்ளீஃஸ்....” மென் குரலில் இவளிடம் சொன்னவள் ஆறுதலாக அரவணைத்தபடி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.