(Reading time: 5 - 10 minutes)

02. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

நேரம் சரியாக ஒன்பதென கட்டியது கடிகார முள். எ.எம்.கெ ஹோட்டலின் கான்பிரன்ஸ் ரூமில் அனைவரும் தமது புதிய முதலாளிக்காக காத்திருந்தனர்.  ஆரபியும் மனேஜர் கொடுத்த வேலையை செவ்வனே முடித்து விட்டு மீற்றிங் நடக்க இருக்கும் அறையை நோக்கி நடக்கலானாள். அப்போது  அவளது அறையில் இருந்த தொலைபேசி அலறத் தொடங்கியது. ஆபீஸ் பாயை அழைத்து தன்னிடம் இருந்த கோப்புகளை மனேஜரிடம் கொடுக்கும் படி பணித்து விட்டு தொலைபேசியை எடுத்தாள்.

தனது ஊழியர்களை வெகு நேரம் காக்க வைக்காது. கான்பிரன்ஸ் ரூமுக்குள் நுழைந்தான். அவர்களின் புது எம்.டி. அவன் ஆண்மைக்கே எடுத்துக் காட்டான கம்பீரத்தோடும் ஆரடிக்கு சற்றும்  குறையாத உயரத்தோடும், சிரிப்பதற்கு காசு கொடுக்க வேண்டுமோ என்று  எண்ணும்  அளவிற்கு இறுக்கமான முகம், ஆனால் சிரித்தால் அவனது முத்துப் பற்களோடு போட்டி போட்டுக் கொண்டு அவனது கண்களும் சிரிக்கும். அட என்னால முடியலங்க நம்ம சின்னவரு பாக்க மகாபாரத அர்ஜூனன் போல செம ஹான்சம். சரி வாங்க நாம கதைக்குள்ள போவோம்.

அனைவருக்கும் பொதுவானதொரு வணக்கத்தை கூறி விட்டு கம்பீரமாக நடந்து தனது இருக்கையில் சென்றமர்ந்தான் அவர்களின் புது எம்.டி. பரஸ்பர அறிமுகப் படலத்தின்  பின்னர் மீற்றிங் ஆரம்பமானது.

Nee enakaga piranthaval

மீற்றிங் தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் திடீரென ஆரபி ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“சாரி சார் அது கஸ்டமர் யாரோ...... என்றவள் அப்போது தான் ப்ரொஜெக்ட்டர்  வெளிச்சத்தில் அங்கே அமர்ந்திருந்த புது எம்.டியை தெளிவாகப் பார்த்தாள். அவளது குரல் பாதியிலேயே தடை பட்டது. அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.

இனி வாழ நாளில் அவனை ஒரு தடவை தன்னும் பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கி தவித்த அவளது வெட்கம் கெட்ட மனதை இத்தனை நாள் கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து வைத்திருந்தவளால் அவனை பார்த்த நொடியில் அது முடியாது போனது அந்த தறி கெட்ட மனது அவனது காலடியில் தஞ்சம் கொண்டது. அவள் நா அவளையும் மீறி உச்சரித்தது அவனது பெயரை “க்ரிஸ்” அனால் அது அவளுக்கே கேட்டிருக்க வில்லை.

கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருந்தவன் அவளது குரல் கேட்டு ஒரு நிமிடம் தன்னிலை மறந்ததென்னமோ உண்மை. ஆனால் உடனே நடப்பிற்கு மீண்டான். அவளை ஓரிரு நிமிடங்கள் மௌனமாக பார்த்திருந்தவன் உடலும் குரலும் விறைப்புற்றது. அவனது கண்களில் அக்கினி குழம்பு பிரவேகித்தன.

“யார் நீ? இங்கு மீற்றிங் நடந்து கொண்டிருப்பது தெரியாதா? சாம்பா சார் என்னதிது கண்டவங்களை எல்லாம் உள்ள வர விட்டுக் கொண்டு.” என்று கர்ஜித்தான். முராரி கிருஷ்ணன்.

அவனின் கோபம் அவளை வதைத்து. “நான் உனக்கு யாரோ ஒருத்தி ஆகிப் போனேனா க்ரிஸ்”.என்று தவித்தது ஊமை மனது.

அவளது விழிகள் அவன் கண்களை விட்டு அகலவில்லை. அவன் கண்களில்  தெறித்த கோபத்தில் பதைப்புற்றாள் ஆரபி. தன் கண்களில் . திரண்ட கண்ணீரை வெளியே வரவிடாது போராடிக் கொண்டிருந்தாள் அவள்.

“சார் இவ ஆரபி உங்க அப்பாவோட பி.ஏ அது மட்டும் இல்ல எக்கௌன்ட் செக்ஸனையும் சில நேரம் இவ தான் பாத்துப்பா!! இனி மேல் இவ உங்க பி.எ.

ஆரபிம்மா இங்க வாம்மா இவர் தான் நம்ப புது எம்.டி முராரி  கிருஷ்ணன். சார் புதுசில்லையா அது தான் உன்னை தெரியல.”

“யாருக்கு தெரியாது இவளைப் பத்தி!!!! எனக்கா? நல்லாவே தெரியும். என்ன விட உங்க யாருக்கும் இவளப் பத்தி தெரியாது!!”என்று குரூரமாக எடுத்து கூறியது அவன் உள் மனது.

அவனை அமைதிப் படுத்த நினைத்தார் பெரியவர். அவர் அறிந்த முராரி கிருஷ்ணன் யார் மனதையும் புண் படுத்துபவன் இல்லை, யார் மீதும் இப்படி காரணம் இன்றி  எரிந்து விழுபவனும் இல்லை. அனால் முன் பின் தெரியாத இந்த அப்பாவிப் பெண்ணிடம் ஏன் இப்படி கோவப் படுகிறான் என்று அவருக்குமே தெரிய வில்லை. 

“இவங்க என் அப்பாவோட பி.ஏ என்றால் இவங்க தானே இங்க முன்னாடி வந்திருக்கணும்.” என்றான் அதே ஆவேசத்தோடு.

“இல்ல சார் நான் தான் சில பைல்களை கலக்ற் பண்ணி தர சொல்லி இருந்தன். அது தான் “ என்றவரின் கூற்றை கேட்டு அவளது கைகளை  ஆராயத் தொடங்கினான். அவனின் நோக்கத்தை  புரிந்து   கொண்ட சாம்பா சேர் மீண்டும் அவன் தனது வார்த்தைகளால் அவளை கீறிக் கிளிக்கும் முன்  அவளுக்கு உதவிகரம் நீட்டினார்.

“அது வந்து சார் பைல்களை மீற்றிங் தொடங்க முதலே குடுத்து அனுப்பிச்சிட்டா ரேஸ்ரோடன்ட்டில ஏதோ பிரச்சனை என்று கால் பண்ணியிருந்தாங்க அங்க என்னன்னு பாக்க போறன் நீங்க மீட்டிங்கை அட்டன் பண்ணுங்க சார் என்று எனக்கு தகவல் கொடுத்திட்டு தான் போயிடுந்தா நீங்க இப்பிடி கோவப் படுவீங்க என்று தெரிந்திருந்தால் நான் இதப் பத்தி முன்னமே உங்க கிட இன்பாம் பண்ணி இடுப்பன் ஐ அம் சாரி சார் இதில அவ தப்பு ஏதும் இல்லை என்றார் மெய்யான வருத்தத்தில்.

அப்போது தான் காரணமே இல்லாமல் அவள் மேல் முன்பே தனக்கிருந்த கோபத்தில் இப்பிடி கத்துகிறோம் என்று. அவனுக்கு புரிந்தது.அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து “ம்.... மீற்றிங்கை கண்டினியூ பண்ணலாம் என்று உத்தரவிட்டான்.”

அவள் கலங்கிய விழிகளுடன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் அவனின் பார்வை அவ்வப் போது அவள் மேல பாய்ந்து மீண்டது. அவள் தாழ்த்தியிருந்த விழிகளை நிமிர்த்தவே இல்லை. அவன் மனம் உழைக்கலம் ஆகியது.

“என்ன திமிர்டி உனக்கு? நிமிர்ந்து பார்த்தால் தான் என்ன எல்லாம் நடிப்பு இருடி இரு உன்னால இத்தன நாள் நான் பட்ட வேதனைக்கெல்லாம் இனிமேல் நீ அனுபவிப்படி! உன்னால இந்த நாட்டை விட்டு போனேன் ஆனால் விதி அப்பாவுக்காக மீண்டும் இங்க திரும்பி வரும் படி ஆயிற்று ஆனால் உன்னை இங்கை நான் சற்றும் எதிர் பாக்கலடி இனி நீ என்கிட்ட படப் போற பாட்டில உன் கண்ணில ரத்த கண்ணீர் வழியும்” என்று சூழுரைத்தான் யாரும் அறியா வண்ணம்  அவன் மனதுள்.

(மிஸ்டர் முராரி நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு விதிய சாடிட்டிருக்கீங்க இது விதி செய்த சதி இல்ல! உங்க அப்பா செய்த சதி! சார் உசாரா இருந்துக்கோங்க அவர் ஏதோ ஒரு ஐடியாவில தான் உங்கள இங்க வர வளைச்சிருக்காரு புத்திசாலித்தநாமா நடந்துக்கோங்க அவளவு தான்)

தொடரும்!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.