(Reading time: 51 - 101 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 15 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ம்மா எனக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வெச்சியா ? ரகு கொஞ்சம் இந்த பேக் பூட்டுறதுக்கு ஹெல்ப் பண்ணு, அப்பா நேத்து எக்ஸ்ட்ரா ஒரு சார்ஜர் கேட்டேனே ...கிருஷ்ணா அண்ணா எங்க ? " இப்படி ஆயிரம் கேள்விகளை கேட்டுகொண்டே வீட்டை ரெண்டாக்கி கொண்டிருந்தாள் சுபத்ரா ..

" ஷாபா ...சின்னம்மா இவ பண்ணுற அலப்பறைக்கு நம்ம வீட்டையே ஒரு சூட்கேஸ் ல போட்டு தரனும் போல " என்று ரகுராம் சொல்ல

" அதை ஏன்டா சூட்கேஸ் ல போடுற ? ராமயனத்துல ஹனுமார் சஞ்சீவி மலையை தூக்கிட்டு வந்த மாதிரி நீயும் நம்ம வீட்டை தூக்கிகிட்டு பறந்து வா ... எப்படியும் உனக்கு வானரம் கேட் அப் ரொம்ப  பொருத்தமா இருக்கும் ... " என்று வாரினாள் சுபத்ரா ....

" அய்யே போடி  ...நான் ஒன்னும் உன்னை மாதிரி வானரம் இல்லை .. நான் ராமனாக்கும் .." என்றபடி கெத்தாய் சொன்னான் ரகுராம்...

VEVNP

" நீ ராமனா ? அப்போ உன் ஜானகி யாரு ? " என்ற சுபா வேண்டுமென்றே ' ஜானகி' என்ற பெயரை அழுத்தமாய் சொல்லி அனைவரின் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பினாள்....

வெட்கம்.... பெண்களுக்கே உரிய ஆபரணமா என்ன ? ஆணுக்கும்  வெட்கப்படும் தருணம் உண்டா ? ஏன் இல்லை ?

அவள் " ஜானகி " என்றதும் ஜானகியின் அழகிய வதனம் மின்னலாய் மனதில் தோன்ற, லேசாய் முகம் சிவந்தான் ரகுராம்.

" ராட்சசி... என்னை இப்படி பாடா படுத்துறாளே .. என்னைகுதாண்டி என் காதலை நீ ஏத்துக்க போற ? " என்ற மனதிற்குள் நினைத்தவன், ஏதோ பதில் சொல்வதற்குள் அழகாய் சிணுங்கியது சுபத்ராவின் செல்போன்...

" காதல் கணவா உன்னை கை விட மாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே "

செல்போனில் அர்ஜுனனின் பெயர் மிளிர,

" ஒரு காலத்துல காதலே வேணாம்னு சொன்ன பெண், இப்போ காதல் கணவா நு டூயட் பாடுறா..! இதை கேட்க இங்க யாருமே இல்லையா ? " என்று அவளை மாட்டிவிட,

"  ஐயோ என் ஹெட்போன் மறந்துட்டேனே " என்று தனதறைக்கு ஓடினாள் சுபத்ரா ...( கிரேட் எஸ்கேப் சுபா ) அவளின் பொய் சாக்கை உணர்ந்த ரகுராம் சிரித்துக்கொண்டே

" சுபத்ரா எப்பவும் குழந்தைதான் சின்னம்மா" என்று ரசித்து சொன்னான்.. அதுவரை பார்வையாளராக இருந்த  அபிராமியும் சிவகாமியும்  ரகுராமை பார்த்து புன்னகைத்தனர்...

" நீ மட்டும் பெரிய மனுஷனா ரகு ? "

" பின்ன இல்லையா சின்னம்மா ?  அம்மா நீங்க சொல்லுங்க மா ....? " என்று தன் தாய் அபிராமியை பார்க்க,

" திருட்டுத்தனமா  காதல் பண்ணுற உன் அண்ணன், காதலியை பி. ஏ வா வெச்சுருக்குற நீ , அர்ஜுன் போன் பண்ணதுமே ரூமிற்கு ஓடின சுபா, உங்க மூணு பேரையும் பார்த்தா சத்தியமா குழந்தைங்க மாதிரி இல்லடா " என்று நமட்டு சிரிப்புடன் பதிலளித்தார் அபிராமி .... அவர் சொன்னதை கேட்டு ஆச்சர்யபடாமல் சிவகாமியும் சிரிக்க,

" சின்னம்மா உங்களுக்கு .......... எல்லாம் தெரியுமா ? " என்று அதிர்ச்சியுடன் வினவினான் ரகுராம்.

" எல்லாம் தெரியுமான்னா ? எது டா ? கிருஷ்ணா - மீரா, ரகு- ஜானகி, அர்ஜுன்-சுபா நு நம்ம வீட்டுல இருக்குற லவ் பேர்ட்ஸ் கதையா ரகு ? " என்று சிரித்தபடி அவன் தோளில் கைபோட்டு கேட்டார் சூர்யப்ரகாஷ்.... என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ரகு விழிக்க ,

" எங்களுக்கு எல்லாம் தெரியும் தம்பி ... " என்றார் சந்திரப்ரகாஷ் ...

" நாங்க உங்களை பெத்தவங்க மகனே... தாய் அறியாத சூழ் இல்லைன்னு சொல்வாங்க ... உங்க பார்வையை வெச்சே, உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கண்டுபிடிக்கிற எங்களுக்கு இந்த காதல் எம்மாத்திரம் .. சுபா டூர் முடிஞ்சு வரட்டும், சீக்கிரம் நல்ல விஷயம் பேசலாம் " என்று சிரித்து பதில் அளித்தார் சிவகாமி ...

" நன்றி தாய்குலமே, தந்தை குலமே " என்று குறும்புடன் அவன் கையெடுத்து கும்பிட, மற்ற நால்வரும் மனதார சிரித்தனர் .

சுபத்ராவின் அறையில்

" ஹலோ அர்ஜுன் "

" ஹே இளவரசி, பிரயாணத்திற்கு தயாரா ?"

" ஹ்ம்ம் தயார்தான் பட் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் பா... இன்னைக்குன்னு பார்த்து வீட்டுல எல்லாரும் இருக்காங்க ... ரகு என்னை டிராப் பண்ணா தான்  உங்களை பார்க்க முடியும் ... அப்பா, பெரியப்பா வந்தா நான் எப்படி உங்களை பார்ப்பேன் ? "

" ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...  ஆமா  கேட்க மறந்துட்டேன் ..நீ சாப்பிட்டியா இல்லையா ? "

" அட போங்க பா .... நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன் .. நீங்க என்னடான்னா சாப்பிட்டேனான்னு கேட்குறிங்க ? இப்போ இதான் ரொம்ப முக்கியமா ?  " என்று ஆயாசமாய் கேட்டவள் லேசாய் இருமினாள்...

" ஹே சுபி என்னாச்சுடா ? என்ன இப்படி இருமுற? "

" ஒண்ணுமில்ல அர்ஜுன் லேசா இருமல் "

"லேசாவா ? விளையாடுறியா டீ ? எத்தனை நாளா இப்படி பல்லு விழுந்த கிழவி மாதிரி இருமுற நீ ? "

" 3"

" வாட் ?? பட் நான் பேசும்போது நாள்ளதானே பேசிகிட்டு இருந்த நீ ? "

" அது வந்து அர்ஜுன் ...  நீங்க 3 நாளா ரொம்ப வேலையா இருந்திங்களா,.....

"..."

" சோ இதெல்லாம்  தெரிஞ்சு பீல் பண்ண வைக்க வேணாம்னு பேசும்போது"

"....."

" இருமாமல் கண்ட்ரோல் பண்ணிகிட்டேன் "

" ........... "

" அர்ஜுன் "

"..."

" பேசுங்க அர்ஜுன்"

"  கோவமா ? "

"......."

" என்ன இது அர்ஜுன் சின்ன குழந்தை மாதிரி "

"....."

" அர்ஜுன் ப்ளீஸ் பேசுங்க "

"...."

" அர்ஜுன் !!!! " அவளுக்கு பதில் சொல்வதற்கு அவன் அங்கு இல்லை ... லைன் துண்டிக்கபட்டுவிட்டது....மீண்டும் அவனுக்கு முயற்ச்சித்து தோற்றுப்போனாள் சுபத்ரா....

" அப்படி என்ன கோவம் என் மேல ... இப்போ என்ன பெருசா நடந்துருசுன்னு " என்று கோபத்தில் படபடத்தாள் சுபத்ரா ... ஏனோ அவனின் மௌனமும் கோபமும் அவளை வாட்டியது ... நொடிபொழுதென்றாலும்  அவனின் கோபத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை ... .. , " ப்ளீஸ் அர்ஜுன் ...ஐ எம் சாரி பேசுங்க " என்று கெஞ்சுதலில் முடித்தாள் தன் மனபோராட்டத்தை....

எவ்வளவு நேரம் அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருந்தாளோ!  தனதறையிலேயே அழுதுகொண்டிருந்தவளை கலைத்தது ரகுராமின் குரல்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.