(Reading time: 37 - 74 minutes)

20. காதல் பயணம்... - Preethi

ரபோற பாடலோட நான் எஸ்கேப் ஆகுறேன் அடுத்து உங்களுக்காக நிறைய புது புது சுவாரசியமான வரலாற்று கதைகளோட “நம்ம ஊரு கதை” பகுதியை தொகுக்க வருண் காத்திட்டு இருக்காரு... சோ பாபாய் பிரிண்ட்ஸ்.... மீண்டும் நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்...” என்று தொகுத்து முடித்து அழகான பாடல் போட்ட அடுத்த வினாடியே பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் அனு.

“நான் நீ நாம் வாழவே உறவே...

நீ நான் நாம் தோன்றினோம் உயிரே..

தாப பூவும் நான் தானே..

பூவின் தாகம் நீ தானே...” என்று பின்னணியில் ஓடியது அவள் தேர்ந்தெடுத்து பாடல்...

“ஹே அனு ஏன் இப்படி ஓடுற, அப்படி யாரை பார்க்க போற, உன் பாய் ப்ரிண்டா???” என்று கிண்டல் செய்த வருணின் தலையில் பக்கத்தில் இருந்த புத்தகத்தை வைத்து அடித்துவிட்டு “ரொம்ப அழகான பையனை பார்க்க போறேன்....” என்று கூறியவளை மீண்டும் சீண்டினான் அவன்.

Kaathal payanam

“அப்போ என்னை மாதிரி ஒரு அழகன்னு சொல்லு” என்று மீண்டும் வாய்விட்டான்.

“சாரி எனக்கு இவ்வளவு பெரிய பொய் சொல்லி பழக்கம் இல்லை” என்று அவனை மீண்டும் காலைவாரியவாறு கிளம்பிவிட்டாள்.

கிண்டல் செய்த வருணுக்கும் தெரியும் அவள் யாரை காண இப்படி ஓடுகிறாள் என்று...

“ஹலோ அம்மா... கிளம்பிட்டேன்...”

“....”

“இல்லைம்மா இன்னைக்கும் ஈவேனிங் தான் வருவேன்...”

“....”

“ஏன் உங்களுக்கு எப்பவும் நான் அவனை பார்க்க போறேன்னு தெரியாதா? புதுசா கேட்குறிங்க?”

“....”

“சரீம்மா சீக்கரம் வரேன்” என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்

“ரோ ரோ ரோஓ டேய் தூங்கேண்டா.... என் செல்லம்ல...” என்று அழும் தன் செல்ல மகனை கொஞ்சி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அஹல். அந்த பிஞ்சு பாலகனும் பேச்சை கேட்டப்பாடில்லை காலை முழுவதும் தூங்கியதால் நன்றாக விழித்திருந்தான்.

“அது எப்படி தூங்குவான்??? ஏன் செல்லத்துக்குதான் அவனோட அத்தை வர டைம் தெரியுமே... என் பட்டுகுட்டிக்கு” என்று கொஞ்சியவாறு அவனை கைகளில் அள்ளிக்கொள்ள, அந்த குழந்தையும் என்னவோ புரிந்தார் போல, அவளை நோக்கி சிரித்தது. தொடர்ந்து அனு அவனோடு பேச, அதற்கு அவனும் சிரித்தும் ராகம் போட்டும் பதில் கூறிக்கொண்டிருந்தது.

“என் தங்கக்குட்டி வயிறு நிறைஞ்சிதா? நிறைய சாப்பிட்டாங்களா?” என்று கேட்கவும்...

அதுவும் பெரிதாக கைகால்களை உதைத்து பதில் தந்தது அதன் மொழியில்... இருவரின் கொஞ்சல்களை கொஞ்சமும் பொறாமை இன்றி ரசித்து பார்த்தாள் அஹல்யா. என் குழந்தையிடம் வளர்ந்த குழந்தை பேசிக்கொண்டிருக்கிறது என்றே தோன்றியது அவளுக்கு... மனம் அவள் சிரித்து விளையாடுவதை பார்த்து திருப்தி அடைந்தது.

“சாப்பிட்டியா அனு?”

“ஆச்சு அண்ணி... அங்க கன்டீன்லேயே சாப்பிட்டுட்டேன்...” அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த அஹலை நோக்கி, “நீங்க தூங்குங்க அண்ணி, என் செல்லம் தூங்கினதும் நான் பக்கத்தில படுக்க வைக்குறேன்...” என்று கூறி குழந்தையோடு விளையாடினாள்.

பிஞ்சு கைகளை பிடித்து ஆட்டும் போதும், கன்னத்தில் ஒற்றி எடுக்கும் போதும், அந்த பால்வாடை நீங்கா பிஞ்சை நுகரும் போதும் எதிலோ துளைந்து போவது போல் உணர்வாள் அனு. ஆனால் மீண்டும் மீண்டும் துளைந்துபோக தூண்டவும் செய்யும்... இப்படி அண்ணன் குழந்தை பிறந்ததில் இருந்து வேலை முடிந்து நேரே அஹல்யாவின் வீட்டிற்கு வருவதையே வழக்கமாக வைத்திருந்தாள். ஒரு நாள் பார்க்காவிட்டாலும் எதையோ துளைத்த உணர்வு தோன்றிவிட, எப்பொழுதும் அவனை வந்து பார்த்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்லுவாள்.

முதலில் அஸ்வத் நினைவு வருமே என்று தயங்கியபோதும், அந்த பிஞ்சின் செய்கைக்கு அடிமையாகி போக தனது மனதை இதில் ஆற்றிக்கொண்டாள்.

அஸ்வத்தும் அப்படி ஒன்றும் எப்போதும் வருவதில்லை. அவன் வரும் சில விடுமுறை நாட்களில் மட்டும் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவாள். நாட்கள் மாதங்கள் உருண்டோட 3 மாதம் கடந்திருந்தது. அர்ஜுன் சென்னையில் அஹல் எப்போது வருவாள் என்று ஏங்கி கிடந்த நாட்கள் ஓயும் நேரமும் வந்துவிட்டது. ஒருவழியாக நல்ல நாள் பார்த்து அஸ்வத் வந்திருந்த ஒரு விடுமுறை நாளிலேயே அவளையும் சேர்த்து அனுப்பிவைத்தனர் அஹல்யாவின் பெற்றோர்.

அனுவிற்கு தான் பெரும் துயரமாக இருந்தது, எப்போதும் அவனோடு நேரத்தை கடத்தியே பழகியவளுக்கு இனி எப்படி அவன் இல்லாமல் இருக்க போகிறோம் என்று ஏக்கமாக இருந்தது. முதலில் கூட சரி வேலையில் மூழ்கினால் தெரியாது நேரத்தை கடத்திவிடலாம் என்று தான் நினைத்தால் ஆனால் அதுதான் நடக்கவில்லை.

வேலை முடிந்து முன்பெல்லாம் அஹல்யா வீட்டிற்கு செல்வது போல் இப்போது போனில் மணிகணக்கில் பேச துவங்கினாள்.

“ஹலோ அண்ணி...”

“ஹே என்ன இந்த நேரத்தில பண்ணிருக்க?”

“ஒன்னும் இல்லை அண்ணி குட்டிய பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு அதான் அவன் குரலை கேட்கலாம்னு போன் பண்ணேன்.”

“அதுக்குன்னு என்னம்மா இது… இவ்வளவு நேரம் தூங்காமலா இருப்ப? சாயங்காலம் தானே பேசின? ஒழுங்காப் போய் தூங்கு நாளைக்கு பேசலாம்” என்று அன்பாக கண்டிக்க அவளால் எதுவும் கூற முடியாமல் உறங்க சென்றுவிட்டாள்.

நாட்கள் நகர நகர என்ன செய்வதென்றே புரியாமல் பொறுமையை இழந்தாள். “என்ன அம்மா பண்றிங்க? நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்ட மகளை ஹேமா வித்தியாசமாக பார்த்தார்.

“என்னடி வெளிய எதுவும் மழை பெய்யுதா? கூப்பிடாமலே வேலை செய்ய வந்திருக்க?”

“என்ன செய்யுறது எல்லாம் என் நேரம்?? பயங்கரமா போர் அடிக்குதுமா...” என்று ராகமாக இழுத்தாள் அனு.

“அது சரி உனக்கு போர் அடித்தாள் போய் ஏதாவது படி இல்லை டிவி பாரு என் சமையலை ஏன் கொல்லுற?” என்று கிண்டலாக பேசினார்.

“ம்க்கும் ரொம்ப தான்... இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினாள் நான் குண்டாகிடுவேன் அம்மா...”

“யாரு நீயா??? அதுசரி...” என்று கூறிவிட்டு அவர் மீண்டும் சமைக்க துவங்க “அம்மா.... அம்மா.... போர் அடிகுதும்மா...” என்று அவள் நச்சரித்தாள், “ஏன்டி இப்படி தொல்லை பண்ணுற? வேணும்னா உருப்படியா ஏதாவது கோர்ஸ் பண்ணுப்போ” என்று அவளை இடத்தை காலி பண்ணக் கூறினார்.

அவர் கூறியதும் அதுவும் ஒரு எண்ணமாக மனதில் ஒட்டிக்கொள்ள நிஜமாகவே எதில் மேற்படிப்பு பண்ணலாம் என்று யோசிகலானாள்... சிறிது நேரம் போனவளுக்கு எப்போதுமே நிறுவனத்தில் இருக்கும் HR பதிவியின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். எல்லா பொறுப்புகளையும் சரியாக சமாளிக்கும் விதம் அவளை அந்த தகுதிக்கு தன்னை உயர்த்திக்கொள்ள ஆசை தூண்டியது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யோசிக்க முடியாதே எனவே இதை பொறுமையாக யோசிப்போம், அப்படியே அது தொடர்பாக படிக்க வேண்டும் என்றாலும் இன்னும் 5 மாதங்கள் இருந்தது கல்லூரிக்கு சேர, எனவே யோசிக்கலானாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.