(Reading time: 55 - 110 minutes)

காதல் நதியில் – 09 - மீரா ராம்

விடியல் அனைவருக்கும் புதிதானது… அன்றைய நாள் சிறப்பாய் அமைய வேண்டுமென வேண்டாதவர்களே இல்லை எனலாம் இவ்வுலகில்… அது போலவே தான் இந்த விடியலை எதிர்நோக்கி காத்திருந்தன கோடி நெஞ்சங்கள்…

எப்போதடா விடியும் என்றிருந்தவன், கதிரவனின் ஒளி அறையினுள் பட்டதுமே அவனுக்குள் உற்சாகம் குமிழியிட்டது… இன்று அவளை பார்த்திட வேண்டும் என அவன் மனம் அவனிடம் கெஞ்சியது… அவனும் அதனை சமாதானப்படுத்திக்கொண்டே தனது உடற்பயிற்சியையும் குளியலையும் முடித்தான்… பின், என்ன நினைத்தானோ, அவள் தலையிலிருந்து விழுந்த மல்லிகையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த சிறு பெட்டியை அவனது அலமாரியிருந்து எடுத்தான்…. ஒரு நெடிய பெருமூச்சோடு அதனை மீண்டும் தனது பேண்ட்-பாக்கெட்டினுள் வைத்து சிரித்துக்கொண்டான்… பின், அறையிலிருந்து வெளிவந்தவனை முகிலன் வழிமறித்தான்…

“டேய்… மச்சான்… மணி என்னன்னு தெரியுமா?...”

kathal nathiyil

“என்னடா… அதுக்கென்ன இப்போ?...”

“அடேய்… ஆதி… அதுக்கென்னவா?...”

“ஆமா…”

“அது சரி… ஏண்டா நீ சொல்லமாட்ட… மணி இப்போ 6.30 தான் டா ஆகுது…”

“என்னது?!!!!!!!!!”

“டேய்…. என்னடா ஷாக்?...”

“இல்ல… இல்ல… ஒன்னுமில்லை…”

“இல்லையே நீ சரியில்லையே….”

“அப்படிலாம் ஒன்னுமில்லைடா லூசு…”

“யாரு நானா?... எனக்கு தேவை தான் இது…”

“ஹ்ம்ம்… அப்படி ஒத்துக்கிட்டு வழியை விடு….”

“ஓ… சரி… இவ்வளவு சீக்கிரம் கிளம்பியிருக்கியே எங்கடா?...”

“கடவுளே…” என்றவன் தலையில் கை வைத்துக்கொண்டான்…

“என்னடா… மச்சான்…. காலையிலேயே தலை வலியா?...”

“பின்னே…. உங்கிட்ட பேசினா வேற என்ன வரும்?...”

“சரி டா… கோபப்படாம பொறுமையா சொல்லு… எங்க கிளம்பிட்ட?..”

“டேய்…”

“என்னடா ஆதி…”

“உன்னை…” என்றவன், கைக்கு எட்டும் படி எதும் கிடைக்குமா என்று தேடினான்…

“என்ன மச்சான் தேடுற?...”

“எதுக்கு உனக்கு அது?...”

“இல்ல மச்சான்…. நீ பாவம் தனியா தேடுறியே… அதான்… என்னன்னு சொன்னா நானும் உனக்கு உதவி செய்வேன்ல…”

“ஓ… அப்படியா?...”

“அப்படியே தான்…”

“சரி டா… எதாவது கொஞ்சம் கனமான இருந்தா நல்லாயிருக்கும்…”

“கனமாவா?...”

“ஆமாம்…”

“சரி… இரு எடுத்துட்டு வரேன்…” என்று சமையலறைக்குள் சென்றவன், ஆதி கேட்டபடி கனமான ஒன்றை எடுத்து வந்தான்…

“இந்தா மச்சான்…”

“என்னடா இது?...”

“பார்த்தா தெரியலை?...”

“தெரியுது நல்லாவே..”

“நீ கேட்ட மாதிரி கொஞ்சம் கனமா அதே சமயம் பெருசாவும் இருக்கும்… வச்சிக்கோ… என்ஜாய்…”

“எது இத வச்சுகிட்டா?...”

“ஆமாடா… சூப்பர் ஆயுதம் தெரியுமா இது?... நம்ம அம்மா, நாம எதும் சேட்டை பண்ணினா இத வச்சு அடிக்க சொல்லியிருக்காங்க… நம்ம பர்வதம் பாட்டிகிட்ட…”

“டேய்… உன்னைன்னு மட்டும் சொல்லு… என்னையும் சேர்க்காத உள்ள…”

“சரி விடு மச்சான்.. நீ வேற நான் வேறயா?...”

“இந்த கொடுமை வேறயாடா…”

“ஹ்ம்ம்.. அதெல்லாம் விடு மச்சான்… நான் நம்ம பாட்டிக்கு தெரியாம சுட்டுட்டு வந்துட்டேன் இத… நீ கேட்டியே கனமா வேணும்னு… அதான்…”

“ஓ… அவ்வளவு நல்லவனாடா நீ?...”

“சீ… போடா… அத என் வாயால நானே எப்படி சொல்லுறதாம்?...” என்றவன் லேசாக வெட்கப்படவும் ஆதிக்கு பொறுமை சுத்தமாய் பறந்து போனது…

“டேய்… என்ன கொடுமை வேணாலும் நீ செய்… ஆனா தயவு செஞ்சு வெட்கம் மட்டும் படாத… அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்…”

“ஏண்டா இப்படி காலங்கார்த்தால உறுமுற?...”

“பின்னே… நீ செய்யுறது உனக்கே நியாயமா படுதாடா வானரமே…”

“அடப்பாவி நண்பா… உனக்காக கஷ்டப்பட்டு பர்வதம் பாட்டிகிட்ட இருந்து இந்த உலக்கையை நான் சுட்டுட்டு வந்து உனக்கு குடுத்தா, நீ என்ன இப்படி சொல்லுற…ஹ்ம்ம்…”

“உன்னை இதுக்குமேல பேசவிட்டேன்னு வையேன்… பார்க்குறவங்க என்ன திட்டுவாங்க… அதனால…” என்றபடி முகிலனை மேலும் கீழும் பார்த்தான் ஆதி…

அவன் பார்வையில் சற்று பின்னடைந்தவன், “எ…ன்…ன…. எ…ன்…ன…. செய்ய போற?...”

“ஆ… அது… உலக்கை இருக்குல்ல உலக்கை… அதுக்கு கொஞ்சம் போரடிக்குதாம்… அதான் உன்னை அடிச்சி அடிச்சி விளையாட கூப்பிடுது முகிலா…”

“எ…ன்…ன… து!!!!...”

“அதான் சொன்னேன்ல டா…”

“டேய்… ஆதி… வேண்டாம்… பேச்சு.. பேச்சா தான் இருக்கணும்… இந்த கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன்… நீயும் வரக்கூடாது….” என்றவன், கால்கள் தானாக ஆதியிடமிருந்து விலக எத்தனிக்க…

“நண்பனிடம் என்னடா கோடு ரோடுன்னு எல்லையிருக்கு?...”

“டேய்… பாவி… ஆதி… ஏண்டா… ஏன்?… எங்கடா போறன்னு கேட்டது ஒரு குத்தமுன்னு இப்படி உலக்கையோட பக்கத்துல வருகிற?... இது உனக்கே அடுக்குமாடா?...” என்றவன் வடிவேலு சார் பாணியில் முகம் வைக்க…

ஆதிக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்தது… இருந்தும் அடக்கிக்கொண்டு, “இன்னைக்கு கேட்ட மாதிரி இனி என்னைக்கும் கேட்க கூடாதுல்ல… அதான்…” என்று உலக்கையை பார்த்துவிட்டு “இனி என்னைக்கும் கேட்ப எங்க போறன்னு?...” என்றபடி அவனை அடிக்க கை ஓங்க…

“கேட்கமாட்டேன்… கேட்கமாட்டேன்… கேட்கமாட்டேன்…” என்றபடி அவன் பயந்து போய் சொல்லிக்கொண்டே பின் நகர, அந்த நேரம் பர்வதம் பாட்டி அங்கே வர, “அய்யய்யோ பாட்டி” என்று ஆதி சொல்ல, “ஹாஹாஹா… நீ மாட்டின டா ராசா” என்று குதூகலித்தான் முகிலன்… “டேய்… எருமை… இந்த நிலையிலேயும் உனக்கு சிரிப்பு வருதா?... எதுக்குடா சிரிக்குற?...”

“பின்னே பாட்டி ஃபேவரிட் ஆயுதம் உங்கிட்டல்ல இருக்கு… அப்போ பாட்டி அர்ச்சனை யாருக்குன்னு நினைச்சேன்… சிரிச்சேன்… ஹாஹாஹா… அய்யோ…” என்றபடி அவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, ஆதி அவனை நாலு அடி போட்டு, உலக்கையை அவன் கையில் திணித்துவிட்டு ஓடியே விட்டான் வெளியே….

பாட்டி வந்து பார்க்கும்போது, உலக்கையுடன் முகில் நிற்க, பாட்டி கையில் ஒரு கொப்புடன் அவனை முறைக்க, அவன் திகிலுடன் உலக்கையை நழுவவிட்டு, ஓடினான் ஓட்டம்… பர்வதம் அவனை துரத்திக்கொண்டே பின்னோடு ஓட, ஆதி அவற்றை பார்த்து ரெடி ஸ்டார்ட், மியூசிக் என்றபடி துள்ளல் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தான் உற்சாகமாய்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.