(Reading time: 14 - 28 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 17 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ணக்கம் ...எல்லாரும் தீபாவளியை கலகலன்னு கோலாகலமா கொண்டாடுனிங்களா? நானும் அப்படித்தானே ..கொஞ்சம் கைகலப்பு நிறைய கலகலப்புன்னு தீபாவளியை வரவேற்றாச்சு ... சரி நான் விஷயத்துக்கு வரேன்... நாம இன்னும் தீபாவளி மூட் ல இருப்பதினாலும், என்னுடைய நேர பற்றாக்குறையினாலும், என்னால் நீளமான எபிசொட் தர முடியவில்லை... அதனால் எந்த பிளாஷ் பேக்கும் தந்து பாதியில் ட்விஸ்ட் வெச்சு நிறுத்தவும் மனசு இல்ல ... ஆக இந்த எபிசொட் உம் celebration episode  தான் ... ( ஐயோ நான் ஏன் இப்போ ஜோடி நம்பர் 1 ஹோஸ்ட் மாதிரி பேசுறேன் ? எல்லாம் இந்த தீபாவளி படுத்துற பாடு .. ஹீ ஹீ .....)

சரி வாங்க கதைக்கு வருவோம் ...

காஷின் திருமணத்தில் இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்த நித்யாவிற்குள் ஆயிரல் உணர்வுகள் அலையாய் பெருக்கெடுத்தன.. ஒரு பக்கம் தன் தமயனின்  திருமணம்  அனைவரின் ஆசிர்வாதத்தோடு நடக்கவிருக்கும்  மகிழ்ச்சி .. ஒரு பக்கம் அவளின் கார்த்தியின் நினைவுகள் ... திருமணத்திற்காகவே பார்த்து பார்த்து அலங்கரிக்கபட்ட அந்த வீட்டில் அவளின் கார்த்தி காலடி எடுத்து வைக்கும்போது  அவளுக்குள் ஏதோ பரவசம் ......

VEVNP

அதுவரை சோகத்தில் உழன்றுகொண்டிருந்தவள் சட்டென புதிதாய் உயிர் பெற்றது போல உணர்ந்தாள்..... அவள் தாய் லக்ஷ்மியே " என்னடி இப்படி ஓடி ஆடி வேலை பார்க்குற ? என்று கேட்டப்போது " போம்மா இது நம்ம வீட்டின் முதல் கல்யாணம் " என்று உரக்க சொன்னவள் மனதிற்குள் " கடைசி கல்யாணமும் கூட " என்று மௌனமாய் கூறினாள்... ஆனால்  அந்த துயரம்  வந்த தடயமே இல்லாதது போல, கார்த்தி  அங்கு காலடி வைக்கவும், அவள் மேடையில் நின்று அந்த பாடலை பாடவும் சரியாக இருந்தது..... நம்ம கதையில் சூர்ய பிரகாஷ் சார் தொடங்கி மீரா வரை அனைவருமே பாடி நாம கேட்டிருக்கிறோம் என்பதால் " இது ஒன்னும் புதுசு இல்லையே ? " என்று நீங்க சொல்றது எனக்கு கேட்குது .... இருக்கு கண்ணா இருக்க ..நம்ம கார்த்தி- நித்தி பாடுவதற்கு பின்னால் பற்பல கதைகள் உண்டு .. சொல்லபோனால் காதலிக்கிறதுக்கு  முன்னாடியே ஊர் ஊராக  டூயட் பாடிய பெருமை அவர்களையே சேரும் ... புரியலையா ? கார்த்தியும் நித்தியும் ஒரே காலேஜ் .. கார்த்தி நித்தியின் சீனியர் ... சிறந்த பாடகனும்கூட ... அவர்கள் இருவருமே நண்பர்களை அறிமுகமானது அவங்க காலேஜ் மியுசிக் பேண்ட் மூலமாகத்தான் ...

அவனின் குரல் அவளுக்கும், அவளின் குரல் அவனுக்கும்  ஜீவநாடியை  போன்றது ! ஆம்...எத்தனையோ இரவுகள் அனைவர்க்கும் தெரியாமல் அவர்கள் பாடிய பாடல்களை தனது கைப்பேசியில் கேட்டிருக்கிறாள் நித்யா ... கார்த்தியின் கைபேசியில் ரிங் டோன் தொடங்கி அலாரம் வரை அனைத்துமே அவளின் குரல்தான் ... இப்படி ஒருவரை ஒருவர் நேரில் பிரிந்திருந்தாலும் மனதில் ஒன்றாகத்தான் வாழ்கின்றனர் ... சிரிக்க மறந்திருப்பவன் சிவா ..அவளை சிரிப்பையே எப்போதும் யாசகமாய் கேட்டவன் கார்த்தி .. நித்யாவை தவிர யாருக்குமே " கார்த்தி" என்று அழைக்கும் உரிமையை அவன் தந்ததில்லை ... !

அந்த வீட்டினுள்  நுழைந்தாய் அவனுக்குமே  அவளின் நினைவுகள் காற்றாய் தாக்க, சட்டென திரும்பியவன் மேடையை பாடுவதற்கு ஆயுத்தமான நித்யாவை பார்த்து கண் கலங்கினான் ... " நித்த்த்த்த்த்த்த்த்த்தி" என்று அவன் எப்போதும்போல அழைத்தது அவளை எட்டியதோ என்னவோ " கார்த்த்த்த்த்த்த்த்தி " என மனதிற்குள் அழைத்தவள் அவன் பக்கம் திரும்ப, அவனோ தூண் மறைவில் நின்றுகொண்டான் ...அண்மையில் நித்யா ரசித்து கேட்ட பாடலை உருகி பாடினாள்...

புத்தம் புது காலை பொன் நிற வேளை

என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்

சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ

இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ

மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்

குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை ...

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ

பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ

வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்

வளர்ந்தாடுது இசை பாடுது

வழிந்தோடுது சுவை கூடுது

புத்தம் புது காலை ...

அவள் பாட பாட அவன் உருகி போனான் .. அவள் " போய்விடு " என்று சொன்னதும் மறந்துவிட்டது ... " நீ அழைக்காமல் வரமாட்டேன் " என்று அவன் சொன்னதும் மறந்துவிட்டது .... காணும் காட்சி எங்கும் அவளே வியாபிக்க, அவளின் ஒவ்வொரு அசைவையும் மனதிற்குள் உள்வாங்கினான் ... " இளைச்சிருக்கா ! ", " உதடு சிரிக்கிது , கண்கள் சிரிக்கல", " அவ சந்தோஷமா இல்லை ", " ஏன் இப்படி இருக்கிறாள் ? ", " குரும்புத்தனத்தொடு இருந்தா உன் சோகம் வெளிய தெரியாதா ? நீ அவங்களை ஏமாத்தலாம் ... என்னை ? " இப்படி அவளை பார்த்து பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்டான் கார்த்தி (மனசுகுள்ளத்தான் )

இப்படியாய் இருவரிடையே  கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்க, அவள் முகுர்த்த  நேரத்தில் அட்சதையை தேடவும்  அவன் அவளருகில் நிற்கவும் சரியாய்  இருந்தது ....

" கார்த்தி?? " " எஸ் நித்தி " என்று கண் சிமிட்டியவன், உரிமையுடன் அவளின் வலது கரம் பற்றி அதில் அட்சதையை தந்தான் .. மேலும் சன்ன குரலில்

" இந்த மாப்பிளையை சைட் அடிச்சது போதும் ..முதலில் கல்யாண மாப்பிள்ளை பொண்ணை பாரு " என்றான் சிவகார்த்திகேயன் ..

அப்போதும் அவள் அசையாமலே இருக்க , " இது சரி வராது " என்றவன் அவளை வலது கரம் பற்றி தன் கைகளில்  இருந்த அட்சதையையும்serthu ஒன்றாய் மணமக்கள் மீது தூவினான் ... அவனின் நெருக்கமும் ஸ்பரிசமும்  அவளை விண்ணுலகிற்கு அழைத்து சென்றதோ என்னவோ ? திருமாங்கல்யம்  அணிவித்த ஆகாஷ் , சுப்ரியாவின் மென்மையான விரல்களை பற்றி, அகினியை வளம் வந்தது, மெட்டியை மாட்டியது, இருவரின் பெற்றோரிடமும் ஆசி பெற்றது  எதுவுமே அவளின் கவனத்தில் பதியவில்லை ... நடந்வை யாவும் மீரா- கிருஷ்ணா இருவரின் பார்வையிலிருந்தும்  தப்பவில்லை ....

" வர் யாரு கிருஷ் "

" அடியே மாமன் பக்கத்துல இருக்கும்போது, நீயேண்டி அவனை கேட்குற ? " என்று நேரம் காலமில்லாமல் அவளை பார்த்து கேட்டு வைக்க

" உங்களை கேட்டேன் பாருங்க ...." என்று அங்கிருந்து நடக்க எத்தனித்தாள் மீரா ....

" ஹே மீரூ... கோபப்படக்கூடாது இங்க வா " என்று அவளை இடையோடு அணைக்க, சந்துரு

" தம்பி பப்ளிக்  பப்ளிக் " என்று சிரித்தார் ...

" ஐயோ இல்ல சித்தப்பா மீரா என்னம்மோ மயக்கமா இருக்குனு  சொன்னா "

" ஐயோ நான் அப்படி சொல்லல மாமா "

" இல்ல நீ சொன்ன .... "

" நான் சொல்லல " என்று இருவரும் அடித்துக்கொள்ள, சந்துரு சிவகாமி பக்கம் சென்றார் ....

" ம்ம்ம்ம்கும்ம்ம்ம் என்ன இந்த பக்கம்? " என்று சிவகாமி கேட்க

" நான் எப்பவுமே உன் பக்கம்தானே " என்றார் சந்துரு காதலுடன்...

" போதும் போதும் இன்னும் கொஞ்ச நாளுல நம்ம பசங்களுக்கே கல்யாணம் ஆகப்போகுது "

" இருக்கட்டுமே சிவா ... அப்பாவும் நீதானே என் செல்லம் ? "

" ஐயோ போதுங்க ..துடிச்சுகொங்க வழியுது "

" ஹா ஹா உனக்கு ஞாபகம் இருக்க இதே அண்ணாவின் கல்யாணத்துல தானே உன்னை நான் பார்த்தேன் "

" ஒரு சின்ன திருத்தம் .. முதலில் நான்தான் பார்த்தேன்... நீங்க வேலை வேலைன்னு என்னை கண்டுக்கவே இல்ல .. நானும் வளையல் சத்தம் கொலுசு சத்தம்னு எவ்வளவு சிக்னல் கொடுத்தேன் ?  நல்லவேளை நீங்க  கால் தடுக்கி என்மேல விழ, உங்க பார்வையும் என் மேல விழுந்தது ...இல்லன்னா ? "

" இல்லன்னா நீ என் மேல விழுந்திருப்ப...!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.