(Reading time: 36 - 71 minutes)

காதல் நதியில் – 10 - மீரா ராம்

நேரம் உச்சி வேளையை நெருங்கியது… நந்துவிற்கும் சித்துவிற்கும் சாப்பிட டிபன் வாங்கி கொடுத்துவிட்டு வாசலையேப் பார்த்திருந்தாள் அவள்…. காதலனுக்காக காத்திருக்கும்போது ஏனோ நேரம் போவது தெரியவில்லை அவளின் மனதிற்கு… இன்னும் அவள் பச்சைத்தண்ணீர் கூட அருந்தவில்லை என்பதும் அவளுக்கு நினைவில்லை… அவளது மனம், நினைவு இரண்டிலும் அவளின் ஆதர்ஷ் ராமே நிறைந்திருந்தான் முழுவதுமாய்…

நாழிகைகள் செல்ல செல்ல அவளது தைரியம் குறைந்தது… ஆதி ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது அவளுள்… விட்டால் வெளியே உடனே வந்துவிடுவேன் என அவளை பயமுறுத்திக்கொண்டிருந்தது கண்ணீர்… அவனைத் தேடி தேடி அலைந்த அவள் விழிகளுக்கு எந்த வழியும் பிறக்கவில்லை…. மாறாக அவன் வராததில் வலியை மட்டும் தந்தன அவைகள்… மனம் அவளுக்குள் இருந்து பாடியது சத்தம் தராமல்….

என் கண்ணனே உன்னைத் தேடி அலைகிறதே என் விழிகள், உனக்கு அது புரியவில்லையா?.. என்னிடம் வந்துவிடு என் மன்னவனே… குயிலாக நான் இன்று கண்ணீர் கொண்டு பாடுகின்றேனே உனக்கு அது கேட்கவில்லையா?... என்னிடம் வந்துவிடு என் இனியவனே…. வாழ்வென்று ஒன்று எனக்கு உண்டு என்றால் அது உன்னோடு மட்டுமே என ஒரு வேட்கை, வேகம் எழுகிறது என் மாயவனே... கண்களின் நீர் ஓயாது வழிந்து, என் கன்னங்களும் கண்ணீர் அருவியில் நனைந்து காயாமல் உள்ளதே என் காதலனே….

kathal nathiyil

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா..

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா….”

உன்னைத் தேடி தேடி நான் உருக்குலைந்தாலும், அதில் கரைந்து நான் காணாமல் போய்விடினும், ஏன் இந்த காதல் எனக்கு?... என்ற எண்ணம் தடை விதித்திட முடியுமா என்னவனே, உன் மீதான என் அன்புக்கு?... நான் துடித்து பாடும் பாடல் கேட்ட பின்பும் ஏன் என் முன் வராது பிடிவாதம் கொள்கிறாய் கண்ணா?... நான் என்னதான் சொல்வது என் ராமனே?... ஏன் எதற்காக இன்று உன்னை நான் காணமுடியாத சோதனை எனக்கு?... ஏன் வராது மௌனமாய் இருந்து கொல்கிறாய் காதலா, என்னால் இந்த வேதனையை தாங்க முடியவில்லையே ஏன் என்னுயிரே?...

கருவறையில் இருக்கும் ஸ்ரீராமனிடம் சென்று, உன்னைத்தேடி நான் இன்று வந்தேனே... நீயாவது எனக்கு பதில் சொல், என்னவர் ஏன் என்னைத் தேடி இன்று வரவில்லை?... அவரைக் காணாத என் விழிகளுக்கு பார்வை இல்லாது இருளில் மூழ்கி சோகத்தின் இமயத்திற்கு செல்ல நேர்ந்தது ஏன்?... எனக்கு உண்மையான பதில் சொல் ஸ்ரீராமா?...

ஏனிந்த காதல் என்ற எண்ணம் தடை போடுமா?

என் பாடல் கேட்ட பின்பும் இன்னும் பிடிவாதமா?

என்ன தான் சொல்வது?

இன்று வந்த சோதனை?

மௌனமே கொள்வதால்

தாங்கவில்லை வேதனை

உன்னைத் தேடி வந்தேன்

உண்மை சொல்ல வேண்டும்

இந்த சோகம் கொள்ள என்ன காரணம்???...”

அதற்கு மேலும் பூட்டி வைத்த கண்ணீர் அருவியை அடக்க முடியவில்லை அவளால்…. மடையைத் திறந்த வெள்ளம் போல அது பெருகியது… பல நிமிடங்கள் கதறி அழுதவள், கண்களைத் துடைத்துக்கொண்டு “என்னவருக்கு எந்த தீங்கும் நேர்ந்திருக்கக்கூடாது… நிழல் போல் அவருடன் என்றும் இரு… எப்பவும்…” என்று வேண்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள் சித்து நந்துவுடன்…

வாசலிலேயே அவளுக்காகக் காத்திருந்தான் தினேஷ் கோபமாக…. அவனின் கோபத்தைக் கண்டவள், “சாரிண்ணா, என் ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க, அதான் லேட் ஆயிடுச்சு… இனி இப்படி நடக்காது…” என்றாள் அழுது கொண்டே…

அவன் பதில் பேசாது அமைதியாய் இருக்கவே,

“ஏங்க விடுங்க… சின்னப்பொண்ணு…. பாவம்….” என்றவள் அவனின் முறைப்பில் அடங்கினாள்…

“அப்பா… சாகரி ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வந்திருந்தாங்கப்பா, நாங்க பேசிட்டிருந்தோம், அதான் நேரம் போனதே தெரியலைப்பா, சாகரி பாவம்… ப்ளீஸ்ப்பா… அவ அழறாப்பா… அவ மேல கோபப்படாதீங்க…” என்று நந்துவும் சித்துவும் மாறி மாறி தினேஷின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச…

“இனி நேரம் ஆகுற மாதிரி இருந்தா ஒரு போன் பண்ணி சொல்ல சொல்லு கொஞ்சம்… அப்பதான் வீட்டில் இருக்கிற நமக்கும் நிம்மதியா இருக்கும்…. அப்பா நம்மை நம்பி தான் இவங்க இரண்டு பேரையும் விட்டுட்டு போயிருக்காங்க… அந்த நம்பிக்கையை இவங்க காப்பாற்றினால் போதும்…” என்று காவ்யாவிடம் பேசுவது போல் சாகரியைப் பார்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டான் தினேஷ்….

அழுந்த மூடிய இதழ்களுடன் நின்றிருந்தாள் சாகரி… அவளை சமாதனப்படுத்த காவ்யா முனைந்த நேரம்,

“எப்படி அண்ணி சமாளிக்கிறீங்க இவரை?... ஷ்… அப்பா… என்ன கோபம் வருது இவருக்கு?... பாவம் தான் அண்ணி நீங்க….” என்று பொய்யாக வருத்தம் காட்டினாள் சாகரி…

“அடிப்பாவி… அவர் இருந்தப்ப, வாயைத் திறக்காதவ இப்ப இப்படி பேசுற?...”

“பின்னே, உங்களை மாதிரி ஏதாவது பேசி முறைப்பை வாங்கிக்க நான் என்ன லூசா?... ஹாஹாஹா….”

“அடியே…. நீ எல்லாம் நல்லா வருவடி….”

“தேங்க்ஸ் அண்ணி…. இப்படி அழுது பேசாம இருந்து சீன் போடலைன்னா, உங்க புருஷன் என்னை இன்னும் திட்டி ஒரு வழி பண்ணியிருப்பார்… ஷ்…….. அப்பா…… சும்மா ஒரு நடிப்பை போட்டு சமாளிச்சிட்டேன்… ஹ்ம்ம்… ரொம்ப டயர்டா இருக்கு… ஒரு ஜூஸ் கொடுங்க அண்ணி…” என்றாள் மிக இலகுவாக….

“ஆமாம்மா… எங்களுக்கும் கொண்டுவா… நாங்களும் அப்பாகிட்ட கெஞ்சல் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து களைப்பாயிட்டோம்… இல்ல நந்து?...” என்றவன் தமக்கையைப் பார்த்து கேட்க, அவள் ஆமாம் என்றாள்…

பின் மூவரும் சிரித்துக்கொண்டே சாகரி இருந்த பிளாட்டிற்குள் வந்தனர்…. காவ்யா தான் ஆச்சரியத்துடன் நின்றாள் அவர்கள் பேசியதைக் கேட்டு…

“சரியான வாலுங்கதான் மூணும்…” என்று சிரித்துவிட்டு ஜூஸ் கலந்து கொடுக்க போய் விட்டாள் காவ்யா…

“ஹாய்…. மயில்…. என்ன பண்ணுற?...”

“ஹே….. வாலுங்களா... உங்களைக் காணோம்ன்னு அப்பா ரொம்ப கோபமா இருந்தாங்க…. நீங்க எப்போ எப்படி வந்தீங்க?.. ஆமா… சாகரி எங்கே?....”

“அடடா… மயில்… என்ன நீ இப்படி கேள்வியை அடுக்கிட்டேப் போற?... ஒவ்வொன்னா கேளு… அப்பதான் எங்களால பதில் சொல்ல முடியும்…” என்றான் சித்து…

“ஆமா மயில்… இவ்வளவு நேரம் அப்பாகிட்ட பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் கொடுத்து களைச்சுப் போயிட்டோம்… போ… போய் அம்மாகிட்ட ஜூஸ் வாங்கிட்டு வா…” என்றாள் நந்து…

“நேரம் தான் எல்லாம்…. ஆமா… சாகரி எங்கே?...” என்று கேட்டாள் மயில்…

“அவ ரூமுக்குப் போனா….” என்றனர் இருவரும்…

“சரி… அப்பா என்ன சொன்னார்?... அத சொல்லுங்க முதலில்…?...”

“அதை நான் சொல்லுறேன்….” என்றபடி உள்ளே வந்த காவ்யா, குட்டீஸ்களுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துவிட்டு மயிலுக்கும் கொடுத்து, அங்கே நடந்தவற்றைக் கூறினாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.