(Reading time: 7 - 14 minutes)

21. என்னுயிரே உனக்காக - சகி

ஸ்ரேயாவை பெண் பார்க்க மணமகன் வீட்டார் வந்தாகிவிட்டது. மதுபாலாவும்,அவளுடைய தோழிகளும் அவளோடு இருந்தனர்.

"கொஞ்சம் எல்லாரும் வெளியே இருக்கிங்களா?"-மது.

"என்ன மது?உன் தோழிக்கிட்ட தனியா அப்படி என்ன பேச போற?"-என்றாள் அவள் தோழிகளில் ஒருத்தி.

Ennuyire unakkaga

"ப்ச்..போப்பா!"

"சரி...வாங்கடி!"-என்று அனைவரும் வெளியே சென்றனர்.

"ஸ்ரேயா!"

".............."

"ஸ்ரேயா.."-அதுவரையில் அடக்கி வைத்திருந்த கண்ணீரை தன் தோழியின் மீது சாய்ந்து அழுது தீர்த்தாள் ஸ்ரேயா.

"ஸ்ரேயா..."

"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை மது.என் மனசுல ரகுவை தவிர யாருக்கும் இடமில்லை."

"ஸ்ரேயா...ரகு இப்போ உயிரோட இல்லை.அவரை நினைச்சிட்டு நீ உன் வாழ்க்கையை அழிச்சிக்கிறது நியாயமில்லை."

"என்னை ரகுவிற்கு கொடுத்த அதே உரிமையை வேற ஒருத்தனுக்கு கொடுக்க சொல்றீயா?"

"................."

"இந்த உலகத்துல என்னை மாதிரி பாவப்பட்ட பிறவி இருக்கவே முடியாது..."

"ஸ்ரேயா..."-அவள் அழுகை இன்னும் பலமானது.சிறிது நேரம் கழித்து அவள் அறை கதவு தட்டப்பட்டது.ஸ்ரேயா கண்களை துடைத்துக் கொண்டாள்.

"உள்ளே வாங்க!"-மது.ஆதித்யா கதவை திறந்துக் கொண்டு உள்ளே பிரவேசித்தான்.

"ன்னங்க...?என்ன விஷயம்?"

"ஒண்ணுமில்லை... ஸ்ரேயாக்கிட்ட கொஞ்சம் பேசணும்னு வந்தேன்."-மது எழுந்து வெளியே செல்ல ஆயத்தமானாள்.

"இல்லை அம்மூ...உன்கிட்ட மறைக்கிற அளவிற்கு எந்த விஷயமும் இல்லை."

"ஸ்ரேயா?"

".............."

"என்னை மன்னிச்சிடும்மா!நான்...எவ்வளவோ முயற்சி பண்ணேன்.ஆனா..."

"பரவாயில்லை சரண்.என் விதி அவ்வளவு தான்.கடைசி வரைக்கும் நான் பொம்மையாக தான் வாழணும் போல!"

".............."

"எனக்கு நீங்க இரண்டு பேரும் ஒரு உதவி பண்ணுறீங்களா?"

"சொல்லும்மா..."

"என்...என் ராகுலை பத்திரமா பார்த்துக்கோங்க!"

"ஸ்ரேயா."-மது,அவளை அணைத்து கொண்டாள். தன்னிச்சையாக அவள் கண்ணில் கண்ணீர்த்துளி.

அக்காட்சி ஆதித்யாவையும் கலங்க வைத்துவிட்டது.

"எனக்காக இதை செய்வீங்களா?"

"நி...நிச்சயமா!ராகுல்...இனி,எங்க மகன்."

"தேங்க்ஸ் மது!"

"ஸ்ரேயா...ரெடியாயிட்டியா?"-என்றப்படி வந்தார் அவள் அம்மா.

"மது...ஸ்ரேயாவை கூட்டிட்டு வாம்மா!"

"சரிங்க ஆன்ட்டி!"

"ஸ்ரேயா!"-மதுவின் அழைப்பிற்கு மௌனமாய் நின்றாள் ஸ்ரேயா.

"ஸ்ரேயா!ப்ளீஸ்..."-அவள்,மௌனமாய் தலையசைத்தாள்.

து ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.அவள்,மனம் முழுதிலும் அவளிடம் இல்லை.பல்வேறு குழப்பங்கள்,வலிகள் மட்டுமே அதில் இருந்தன.ஏதாவது,அற்புதம் நடந்து அனைத்தும் நின்றுவிடாதா?என்று தோன்றியது அவளுக்கு.ஒரு பொம்மையாக வந்து நின்றாள் ஸ்ரேயா.

"பெரியவங்கக்கிட்ட ஆசீர்வாதம்       வாங்கிக்கோம்மா!"-ரகுவின் தந்தையின் ஆணைக்கிணங்கி அவர்கள் பாதம் பணிந்தாள்.

"பெண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்குங்க!"-பதில் அளித்தார் பையனின் தாயார்.

"சந்தோஷம்...தம்பி!ஸ்ரேயாக்கிட்ட எதாவது பேசணுமாப்பா?"-அவன்,ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

"போய் பேசிட்டு வாப்பா!மது...அவங்களை கூட்டிட்டு போம்மா!"-நடப்பவை அனைத்தும் சூன்யமாய் தெரிந்தது மதுவிற்கு.இவள்,வாழ்வில் ஏதேனும் வெளிச்சம் வராதா?என்று அவளும் ஏங்கினாள். ஸ்ரேயாவின் அறைக்கு அவர்களை அழைத்து சென்றாள்.

"நீங்க போய் பேசிட்டு வாங்க!"-என்று அவள் வெளியே நின்றாள்.

ள்ளே....

"ஸ்ரேயா?"

"............"-அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

"உங்க பேர் ஸ்ரேயா தானே?"-அவள்,ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

"என் பேர் கவுதம்.நான் இப்படி சொல்றேன்னு கஷ்டப்படாதீங்க.அதாவது..."-அவன்,எதற்கு இழுக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

"நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்.இதோ பாருங்க...எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை."-திடீரென்று அவன் கூறிய இந்த வார்த்தை அவளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

ஆனந்தம் அளித்தது.

"ஆமாம்...நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன். அதை வீட்டில   சொல்றதுக்குள்ள என்னென்னமோ ஆயிடுச்சி!ப்ளீஸ்...தயவுசெய்து இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு நான் சொல்லும் போது,நீங்க அதை ஏத்துக்கணும்.அதுக்கு தான் இப்போ உங்களை கூப்பிட்டு பேசுனேன்.ப்ளீஸ் ஸ்ரேயா..."-சட்டென்று வந்த அந்த திருப்புமுனை  அவள் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்தது.

"செய்வீங்களா?"-அவள்,சரி என தலையசைத்தாள்.

"தேங்க்ஸ்..."-அவர்கள் இருவரும் வெளியே வந்தனர்.முன்பிருந்ததை விட ஸ்ரேயாவின் முகத்தில் இருந்த பிரகாசத்தை கவனித்தாள் மது.கவுதம் முன்னே சென்றான்.

"என்னடா?பேசிட்டியா?"

"பேசிட்டேன்மா!என்னை மன்னிச்சிடுங்க...எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை."-ஸ்ரேயாவை தவிர அனைவருக்கும் அதிர்ச்சி.

"கவுதம்...?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.