(Reading time: 16 - 31 minutes)

08. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

ரணியே சற்று ஆறுதலடைந்து தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் வரையுமே அமைதி காத்தான் அகன்.

அவள் இணைப்பை துண்டித்ததும் நிரல்யா முதலில் கேட்டதே அதற்கான காரணத்தை தான். அன்பு இருப்பவன், அழுது கொண்டிருப்பவளிடம், அதுவும் அவன் நிமித்தம் அழுது கொண்டிருப்பவளிடம் ஒரு வார்த்தை கூடவா பேசாமலிருப்பான்?

“கொஞ்சம் முன்னால தான் எட்மாண்டன்ல போய் ஆருட்ட பேச போறதா சொன்னீங்க?.....”

Kaniyatho kathal enbathu

மௌனம் கண நேரம்.

குரலை சரி செய்து கொண்டு பேச தொடங்கினான். கர கரத்திருந்தது அது.

“இவ்வளவு தவிச்சுகிட்டிருக்கவட்ட……, அவ நம்புற அளவுக்கு ஆதாரம் இல்லாம நான் என்ன பேசி, அவளுக்கு என்ன ப்ரயோஜனம்?.....

இப்படி அழுதுகிட்டு இருக்கிறவட்ட என்ன நடந்ததுன்னு ஃபோன்ல எப்படி கேட்க?..... அவள நல்லா பார்த்துகோங்க.... எப்படியாவது இன்னும் ஃப்யூ டேஃஸ்ல....,

அதுக்குள்ள இதுக்கு காரணமான நாய பிடிச்சு.....”

கடைசி வரியில் அவன் குரல் மாறிய விதத்தில் நிரல்யாவிற்குள் நடுதண்டில் சிலிர்த்தது.

“துவி அந்த கழுதைய கண்டுபிடிச்சு....அவ மூலமா அந்த ஓநாய பிடிக்கிறேன்...அப்புறம் இருக்குது..”

அவன் குரல் மாறும் விதம் மனதிற்குள் பிசைந்தது. ஏன்?

“அந்த துவிட்ட ஆருவ மாட்டிவிட்டது நீங்கதான் மிஸ்டர் ஜெஷுரன்.”

 அவனது அந்த காரியம் சுத்தமாக நியாய படுத்த முடியாததாகபட்டது நிரல்யாவிற்கு.

அவன் அதற்கு விளக்கம் சொல்ல தொடங்கினான்.

நாங்க மூனுபேர் நிரல்யா மேம். மூத்தவன் நான். எனக்கு ட்வின் சிஸ்டர்ஸ்.....துதித்யா, துவித்யா.

ஒரு வருஷம் தான் எனக்கு சின்னவங்கனாலும் அவங்க ட்வின்ஸ்ங்கிறதால அவங்களுக்குள்ளதான் ரொம்பவும் ஒட்டுதல். என்ட்ட அண்ணா அண்ணான்னு லூட்டி அடிச்சாலும் அவங்களுக்குள்ள உள்ள அன்யோன்யம் என் கூட கிடையாது.

என்னோட பதினேழு வயசில.....அப்ப துவிக்கு 16 வயசு....ஒரு டெரரிஃஸ்ட் அட்டாக்கில் என் பேரண்ட்ஸ்,...... துதி குட்டி..... எல்லோரும் துவி கண் முன்னாலயே........

நொடி பொழுது மௌனமொழி.

ஒரு பெரிய ஹோட்டலில் நடந்த பெரிய பார்டி அது......ஆரா பேரண்ட்ஸ், அரண்யா சிஸ்டர் பேரண்ட்ஸ் எல்லோரும் இறந்தது அதுல தான்.

கொஞ்ச பேர் உள்ளவந்து.......எதிர்பாராத ஷூட் அவுட் …….. துவிக்கும் முகத்தில் ஒரு புல்லட் ஷாட். அவ பிழச்சதே பெரிசுதான்..... பிளாஸ்டி சர்ஜரி...அது இதுன்னு அவ இப்பவும் அழகுதான்.

ஒரு கணம் மௌனம்.

ஆனால் அந்த கோரத்தை பார்த்தது,..... என் பேரண்ட்ஃஸை இழந்தது....எதையும் துவியால தாங்க முடியல. அதோட தான் அசிங்கமாயிட்டதா ஒரு தாழ்வு மனப்பான்மை வேற.....

எனக்கே பதினேழு வயசுதான்...

இந்த இழப்புக்கு பிறகு அக்க்ஷத் சார் அவங்க பிஸினஃஸ் பொறுப்புக்கு வந்தாங்க. குடும்பத்த சமாளிச்சு ஆராவ எப்படியோ அழகா வளர்த்துட்டாங்க. ஆனா எனக்கு துவிய எப்படி கவனிக்கனும்னு கூட தெரிஞ்சிருக்கலை. அவளுக்கு ஹாஸ்டல் லைஃப்.

இந்த இழப்பு, சோகம், தனிமை, தாழ்வு மனப்பான்மைனு....டிரக்ஃஸ் பழகியிருக்கா.....

விஷயம் தெரிஞ்சதும் பதறிட்டேன். குடும்பம் கௌரவம்னு ஒரு பக்கம் பயம், இருந்தாலும் இதை இப்படியே எப்படி விட, துணிஞ்சு அக்க்ஷத் சார்ட்ட சொல்லி உதவி கேட்டேன்.

ஆரா பேரண்ட்ஃஸுக்கும் என் பேரண்ட்ஃஸுக்கும் நல்ல அண்டர்ஸ்டான்டிங் இருந்தது. எனக்கும் அவ பிரதர்ஸை தெரியும். ஆனா ஆராவை எனக்கோ துவிய அவங்களுக்கோ பழக்கம் கிடையாது. இதுக்கு அப்புறம்தான் அவ குடும்பம் எனக்கு ரொம்ப நெருக்கமானது.

அக்க்ஷத் சாரும், அரண்யா சிஃஸ்டரும்தான் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க!

துவிய ரிஹப் சென்டர் மூலமா சரி செய்து பழைய துவியா மாத்தினோம்.

திரும்பவும் நான் பிஸினஸ் அவ படிப்புன்னு சில வருஷம் பிரச்சனையில்லாம போச்சுது.....கிட்டதட்ட 5வருஷம்......எங்க பிஸினஸில் கூட இன்டிரெஃஸ்ட் காமிச்சா துவி...அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சோம்..

அப்பதான் நாங்க ஆராவ மீட் பண்ணோம். ஐ ஃபெல் ஃபார் ஹெர்.

துவிக்கும் அவளுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். துதி குட்டிக்கு அப்புறம் துவி இப்படி பழகினது ஆராட்ட தான். பழையபடி என் குடும்பம் எனக்கு ஆரா மூலமா கிடைக்க போறதாதான் நான் நினைச்சேன்.....”

கண நேர இடைவெளி.

“துவி விஷயம் அவங்க வீட்டில் மத்த மூனு பேருக்கும் தெரியும்....ஆராட்ட அவங்களே சொல்லலை.....திருந்திட்ட ஒருத்தங்களோட பழைய குப்பைய கிளறி......இந்த நட்ப கெடுக்க வேண்டாம்னு.....ஆனா அவ ஆராவ....இப்படி.....

மௌனமாய் கழிந்தது சில நொடிகள்.

“அப்படி ஆரா கூட சுத்திட்டு இருந்தவ, திடீர்னு அவ கிளம்பிபோனதும் டிரக்ஸ் ஆரம்பிச்சா....தினமும் புது புது தடியங்களை வேற கூட்டு சேர்த்துகிட்டு........என்ன செய்தா டிரக்ஃஸ் கிடைக்கும்னு எனக்கு தெரியும்னு ஒரு விகாரமான விளக்கம் வேற....

என் பேரண்ட்ஃஸ் இறந்த டைம விட இந்த நேரத்தில தான் நான் அதிகமா கஷ்ட்டபட்டேன்.....

இப்பவும் எனக்கு உதவிக்கு வந்தது அக்க்ஷத் சாரும், அரண்யா சிஸ்டரும் தான். என்னென்னவோ சொல்லி அவள இங்க வர சம்மதிக்க வச்சாங்க....ஆமி அம்மா கூட வந்து தங்க ஒத்துகிட்டா துவி.....அம்மா எனக்கு அப்பதான் அறிமுகம்.

அப்புறம் துவி இங்கதான் இருந்தா....அப்பப்ப வந்து பார்ப்பேன்.... என் மேல கடும் கோபம்.....முதல்ல எதுக்குன்னு தெரியலை....ரூமை பூட்டிட்டு உள்ளயே இருந்துப்பா....அம்மாதான் மத்த நேரம் நல்லாத்தான் இருக்கான்னு ஆறுதல் சொல்லி அனுப்புவாங்க...

புதுசா வம்புக்கு போகாம இருக்காளேன்ங்கிறதே நிம்மதியா இருந்துச்சுது...

மெதுவாத்தான் புரிஞ்சுது....என் இஷ்டபடி இல்லனா ப்ராபர்டிய பிரிச்சு வாங்கிறது ரொம்ப கஷ்ட்டம்னு நினச்சிருக்கான்னு...

 ப்ராபர்ட்டிய பிரிச்சு தா, இல்லன்னா தன்னபத்தி மோசமா கேள்வி படவேண்டி இருக்கும்னு.....புரியுது தானே... மிரட்ட ஆரம்பிச்சா....எவ்ளவோ சொல்லி பார்த்தேன்..... கேட்கலை... பிரிச்சு குடுத்துட்டேன். கம்பனிய காப்பாத்திகிட்டு மிச்ச அத்தன ப்ராபர்டியய்யும் அவ பேருக்கு மாத்திட்டேன்....

என் பேரண்ட்ஃஸ் கூட நாங்க குடும்பமா இருந்த வீடு வரைக்கும் எல்லாத்தையும் வேக வேகமா வித்துட்டு, எங்க போனான்னு தெரியாது போய்ட்டா....

அதுவும் உலகத்திலேயே அவளுக்கு பெரிய எதிரி நான் தானாம். இவ சொத்தை பிடுங்கனும்ங்கறதுக்காகவே சதி பண்ணி அவளை அனாதை ஆசிரமத்தில் அடச்சிட்டேனாம்...அதற்காக கண்டிப்பா பழி வாங்குவேன்னு ஒரு லெட்டர் வேற எனக்கு...

இருந்தாலும் மனசு கேட்கலை....தேடி பார்த்தேன்...அப்புறம் ஆமி அம்மாதான் அவளா உணர்ந்து வரட்டும்னு ஆறுதல் சொன்னாங்க.....ஆனால் இப்படினு கற்பனை கூட பண்ணலை.

ஆராம மேல எனக்கு போன வருஷத்திலிருந்தே இஷ்டம் தான். ஆனால் பெண் கேட்கும் சூழ்நிலை இல்ல...

இப்பவும் ரக்க்ஷத்ட்ட ரொம்ப தயங்கிதான் கேட்டேன்.... இப்படி பட்ட வீட்டுக்கு பொண்ணு தருவாங்களோன்னு.... அவனுக்கு விருப்பம் இருக்குதுன்னு உறுதியா தெரிஞ்ச பின்ன தான் நிம்மதி.....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.