(Reading time: 4 - 8 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 01 - ஜெய்

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை இருட்கனம் போயின யாவும்

எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு – இங்கு

உன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்

விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே

வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே

Gowri kalyana vaibogame

கூ கூ  என்ற குயிலின் பூபாளம், இதமாக உடல் வருடும் தென்றல், கிணிங் கிணிங் என்ற பேப்பர் பையனின் சைக்கிள் மணிச்சத்தம், மற்றும் பால்காரர்களின் “அம்மா பால்”,  சிறு குழந்தைகளின் சிணுங்கல் ஒலி, இப்போ எழுந்துக்க போறியா உதை வேணுமா அம்மாக்களின் கத்தல் ஆகியவற்றுடன் தக தகவென ஜொலித்துக்கொண்டு மிக அழகாக விடிந்தது ஞாயிறு.  சென்னை குரோம்பேட்டையில்  உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், இரண்டாவது தளத்திலுள்ள வீட்டிற்கு உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,Ok,  Let’s start music.

கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே

ஜானகி  காலை நேர பரபரப்பில் சமையலறையில் எம் எஸ்ஸின் சுப்ரபாதத்துடன் நடனம் ஆடிகொண்டிருந்தாள்.  “அம்மா அம்மா, என்னோட கஞ்சி ரெடியா?” என்றபடி வந்தான் அவளின் மைந்தன் ஹரி.  கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் நான்காம் வருட மாணவன்.

“வாடா கண்ணா, உன்னோட யோகா எல்லாம் முடிஞ்சுதா, கஞ்சி எடுத்துக்கோ, அப்பா எங்க, வாக்கிங் போன ஆளை இன்னும் காணவே இல்லை”  என்றபடி அடுப்பில் ஒரு கண்ணும் தன் மகனிடம் ஒரு கண்ணுமாக இருந்தாள்.

“ஜானும்மா நானும் வந்தாச்சு, செகண்ட் டோஸ் காபி கொஞ்சம் குடேன்”, என்றபடி அன்றைய செய்தி தாளுடன் வந்தார் ஜானுவின் ராமன்.  ராமநாதன் சார்.

ஹரி நக்கலாக சிரிக்க. “போடா”, என்று சிரித்துக்கொண்டே கணவனுக்கு கொடுக்க காபியுடன் சென்றார் ஜானகி. இதில் என்ன சிரிப்பு என்று யோசிக்கிறீர்களா, ராமநாதன் சார் எதை வேண்டும் என்றாலும் தியாகம் செய்வார், ஆனால் காலை நேர வாக்கிங் அண்ட் செகண்ட் டோஸ் காபி இது ரெண்டையும் எதற்காகவும், யாருக்காகவும் தியாகம் செய்யமாட்டார்.  இது தெரிந்தே நம் ஜானகி அவர் வரும் நேரத்தில் சரியாக காபியுடன் வெயிட் செய்வார்.  அம்மாவின் timing sense-யை நினைத்தே இந்த நக்கல் சிரிப்பு.

ரி, இன்னிக்கு சண்டேதானே  ஏதானும் வேலை வச்சுருக்கியா, இல்லை ப்ரீயா”

“இல்லைப்பா ஒண்ணும் வேலை இல்லை, கிளாஸ் டெஸ்ட்க்கு கொஞ்சம் பிரிபர் பண்ணனும், அவ்வளவுதான்.  ஏம்ப்பா ஏதானும் உங்களுக்கு செய்யணுமா”

 “இல்லடா உங்க எல்லாரோடவும் முக்கியமா ஒரு விஷயத்தை பத்தி பேசணும்.  அம்மாவும் வேலை முடிக்கட்டும், சாப்பிட்டு உக்கார்ந்து பேச ஆரம்பிக்கலாம்”

“சரிப்பா நானும் அதுக்குள்ள நாளைக்கு டெஸ்ட்க்கு படிச்சுடறேன்” (நம்ம ஹரி ரொம்ப படிப்ஸ், 24 மணி நேரத்துல 23 மணிநேரம் படிக்கணும் அப்படின்னு கண்டிஷன் போட்டாகூட கரெக்டா செய்வான்.ஹி ஹி நாங்கல்லாம் 23 மணிநேரம் தூக்கம் அண்ட் ஒரு மணிநேரம் சாப்பாடுக்குன்னு  ஒதுக்கறவங்க )

“ஏன்னா எதைப் பத்தி இப்போ அத்தனை முக்கியமா பேசணும், யாராவது ரொம்ப தெரிஞ்சவாளுக்கு விசேஷம் ஏதானும் வரதா, அதுக்குக்கூட ஹரி எதுக்கு.  எனக்கு மண்டை வெடிச்சுடும், ஒரு க்ளுவானும் கொடுங்கோளேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தார் ஜானு.

“வேலை எல்லாம் முடிச்சுட்டு வாம்மா, பேசலாம், எனக்கும் ரெண்டு மூணு போன் கால்ஸ் பண்ணனும், முடிச்சுட்டு வரேன்” என்றபடி நழுவினார் ராமன்.

“ஹரி என்னவா இருக்கும்ன்னு நினைக்கிறே , எங்க இருபத்தைந்து வருஷ கல்யாண வாழ்க்கையில உங்க அப்பா இத்தனை சீரியஸா பேசிப் பார்த்ததே இல்லை”

“தெரியலையேம்மா இன்னும் ஒரு நாலு மணி நேரம்தானே வெயிட் பண்ணு, நான் போய் படிக்கிறேன்”

“ம்ம் என் கஷ்டம் எனக்கு.  என்ன பேச போறாரோ.”

“கௌரி என்ன பன்றாளோ  தெரியலை.  அவள்ட்ட பேசணும் முதல்ல”

“யாரு உன் பொண்ணுதானே, இங்க இருந்தே அவ என்ன பண்றான்னு சொல்லட்டா”

ஸ்திரேலியா - ஓவல் கிரிக்கெட் கிரௌண்ட்  - அடிலைட்

இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் இடையே பெண்கள் வேர்ல்ட் கப் கிரிக்கெட் இறுதிப் போட்டி.  கடைசி ஓவர். 

“கௌரி லாஸ்ட் ஓவர் . 4 ரன்தான் எடுக்கணும், ரொம்ப ஈஸி, ஸ்லோவா விளையாடினா போதும், அவசரப்படாம ஆடு, நீதான் அந்த எலிசெபெத்தோட பர்ஸ்ட் பால் ஆடணும், டென்ஷன் ஆகாதே”

“ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன், நீயும் ரிலாக்ஸ்டா இரு வன்ஷி, நாலு ரன்தானே ஈஸியா எடுக்கலாம்”

(மக்களே பின் வரும் கமெண்ட்ரியை நம்ம கூத்தபிறான் சார் வாய்ஸ்ல படிக்காம ஷாஸ்த்ரி, டோனி கிரேயக், ஹர்ஷா போக்ளே வாய்ஸ்ல படிக்கவும், ஆஸ்திரேலியால நடக்கறதால)

“எல்லாருக்கும் வணக்கம், லாஸ்ட் ஓவர் மக்கள் எல்லோரும் டென்ஷன்ல சீட் முனைல உட்கார்ந்து இருக்காங்க, எலிசபெத் முதல் பால் போட வருகிறார். சற்றே அளவு குறைவாக வீசப்பட்ட பந்து, கௌரி அதை தடுத்து ஆடுகிறார்.  நோ ரன்.  அடுத்த பந்து பவுன்சர்.  நேராக விக்கெட் கீப்பெரிடம் சென்று விட்டது.  இங்கிலாந்து கேப்டன் முகத்தில் சற்று மலர்ச்சி.  வன்ஷி கெளரியிடம் வந்து பேசிவிட்டு செல்கிறார்.  மூன்றாவது பந்து.  வைடு மிட்-ஒப்பில் தடுத்து ஆடுகிறார் கௌரி.  ஒரு ரன்.  நான்காவது பந்து இப்பொழுது வன்ஷி அதை மிட்-ஓனில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.  2 பால் 2 ரன்கள் தேவை, கௌரி என்ன செய்யப் போகிறார்”

தொடரும்

Episode # 02

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.