(Reading time: 10 - 19 minutes)

09. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

முழுதாக மூன்று மாத சம்பளம் வாங்கியாயிற்று. மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தான் நரேன். மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொள்ள என்று இருந்த ஒரே நட்பும் கண்களுக்கு எட்டாத தூரத்தில் மாயமாகி போனாளே.  கடந்த ஒருமாதமாக அவள் வீட்டிற்கு தொடர்புக்கொண்டால் வெவேறு குரலில் ஒரே விஷயம் தான். கவிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

சிறுவயதிலிருந்தே கவியின் சித்தியின் கொடுமைகளை அவன் பார்த்திருக்கிறான். வள்ளி கவிதாவை கவனித்து கொண்டதற்கு அவனை பொறுத்தவரை இரண்டு காரணம். ஒன்று அவர்கள் குடும்பம் வாழும் வீடு கவியின் பெயரில் இருந்தது மற்றொன்று மற்றவர் முன் வள்ளி தான் நல்லவள் என்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பது.

நரேனின் எண்ணமெல்லாம் கவிதா நண்பன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்துவிட்டாளே..!! எங்கே கஷ்டப்படுகிறாளோ... அவள் நெருப்பு தான் ஆனாலும் இறக்கம் மிகுந்தவள். திறமையானவள் தான் கூடவே நேர்மையானவளும். ஒழுக்கமானவள் ஆனாலும் குறும்பும் நிறைந்தவள் என்று அவளைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்.

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

மாதம் அரை லட்சம் சம்பளம். செலவழிக்க தோழி இல்லாமல் போனாலும் காதலி இருக்கிறாள் தான் அவனிற்கு, அவளும் கவிதாவை போலவே சுயகௌரவம் என்றெல்லாம் பேசுபவள். திருமணமும் கவி இல்லாமல் முயற்சி எடுக்க விருப்பம் இல்லை அவனிற்கு.

தேடலாம் என்றால் எங்கே போயிருப்பாள் என்றே அவனால் முடிவு செய்யமுடியவில்லை.அவள் கனவுகளுக்கு எல்லை இருந்ததில்லை. தனியாக நிறுவனம் நிறுவி நான்கு பேர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று சொல்பவள் எங்கே இருக்கிறாளோ?? தெரிந்தவர்கள் மூலம் எங்கேனும் வேலைக்கு போயிருந்தால் இந்நேரம் அவனிற்கு அவளை பற்றியான விவரம் தெரிந்திருக்கும்.

குழப்பங்களே நீடிக்க நரேன் " இவளுக்கு மட்டும் தேவதை கண்முன் தோன்றி வாயேன் நான் வழி காட்டுகிறேன் என்று ரயிலில் ஏற்றி அழைத்து சென்று யாருக்கும் கிடைக்காத அறிய வேலையை வாங்கிகொடுத்து விட்டதோ, தொடர்பில் இருக்க கூட முடியாத அளவில் பிசியாக இருக்கிறாள்" என்று நினைத்துக்கொண்டான்.

கிட்டதட்ட ஆயிர புகைப்படங்களை ரசித்து ரசித்து எடுத்து தேர்ந்தெடுத்து கொண்டிருந்தவள் கிடைத்த அனுபவங்களையும் அசைபோட்டாள். வளைந்து நெளிந்து போகும் சாலைகள், மலைப்பகுதி , மாசுப்படாத இயற்க்கை, அவளை போல் தேடல்களை தொடங்கியவர்கள், வெவ்வேறு பகுதியிலிருந்து  பைக் செலுத்திக்கொண்டு வந்து வீசும் காற்றில் கொஞ்சம் மாசு கலந்து விட்டு செல்பவர்கள், தொழில்நுட்பம் கெடுக்காத மனிதர்கள், அடிப்படை வசதி கூட இல்லாத வாழ்வியல், அதைப்பற்றி கவலை இல்லாத சமுதாயம் என்று வேற்று கிரகமாக தோன்றும் ஓர் இடம் அது. அங்கே அவள் வாழ்ந்த வாழ்கை அவளுள் பிறருக்கு கொடுக்க, பெற்றுக்கொள்ள நேர்மையான எதிர்பார்ப்பில்லாத அன்பு போதும் வாழ்க்கையை வளமாக வாழ,  மற்றெதெல்லாம் பெருவாழ்வு வாழ்வதற்கு மட்டும் தான் என்பதை உணர்த்திட்டது.

புகைப்படங்களை கண்காட்சியில் அரங்கேற்றி வெற்றி பெறுவது தான் அவள் அடுத்த இலக்கு. வெற்றியாயினும் தோல்வியாயினும் அவள் திறன் மேல் அவளிற்கு இருக்கும் நம்பிக்கை வளரும். "நல்லா இருக்கு" என்ற அந்த இரண்டு வார்த்தைகள் போதுமே இத்தனை நாட்களாக எடுத்த முயற்சிக்கு, பட்ட கஷ்டங்களுக்கு,  மனதில் வேர்விட்டுருந்த ஆசைக்கு, மொத்தமாக வடிந்து விட்ட ஆற்றல் பெருக்கெடுக்க. விருது, பரிசு எல்லாம் "உன் இரசனை அருமை" என்பதுப்போல தான். அது கிடைக்குமாயின் அவள் மட்டுமே பார்த்த அந்த இடங்களின் அழகை, உணர்வை, புரியாத ஒரு ஈர்ப்பை உலகமே பார்க்குமே, ரசிக்குமே. நிஷாவின் பயணம் சிங்கபூருக்கு தொடர்ந்தது. வெற்றியும் உத்வேகத்துடன் அவளுடன் தொடர்ந்தது.

விதாவின் திறமையான விலை மதிப்பீடு அனுமானமாக இலாபம் விகிதம் அதிகமாயிற்று. ஆகாஷ் மகிழ்ச்சியில் துள்ள அர்ஜுன் வாதாடினான் "இந்த முறையில் செய்வதால் வருங்காலத்தில் நமக்கு தான் நஷ்டம். குறைக்க சொல்லும் போது நாம் எதிலும் குறைக்க முடியாமல் போகும். கண்டிப்பாக லாபம் தேராது” என்றான்.

கவிதா "அர்ஜுன் சார் செலவு என்று இதர செலவுகளை தான் டீலர் குறைக்க சொல்லுவர் நான் அதை குறைத்து மற்றதில் மதீப்பீடு ஏற்றியுள்ளேன்." என்றாள். அர்ஜுனிர்க்கு அது புரியாமல் இல்லை. ஆனாலும் எதோ ஒரு ஆசை அவனை கவியின் எண்ணங்களை அறிய உந்த வாதாடினான் அவன்.

 ஆகாஷ் அவன் அண்ணனை சமாதனம் செய்து அவர்கள் புதிதாக வடித்துள்ள விலை பட்டியலை அமலுக்கு கொண்டு விடும் முயற்சியில் "அண்ணா, நீங்க தானே குறைக்க முடியாத விலைப்பட்டியல் வேண்டும் என்பதை சொன்னது. இது அப்படி தான் இருக்கிறது" என்றான்.

கவிதா "சார், இது  உங்க கம்பெனி ப்பராபிட் உயர்த்தும் என் மேல இருக்கும் கோபத்தை வெறுப்பை உங்க முன்னேற்றத்தில் காட்டாதீங்க" என்று சொல்லி முடித்து  அமைதியாக அகன்றாள்.

அர்ஜுன் "ஆகாஷ் நம்ப கம்பெனியில் விலை பட்டியல் பற்றிய மாற்றதை அறிவிக்க ரெடி பண்ணி அனுப்ப சொல்லு" எனவும் ஆகாஷ் உற்சாகம் ஆனான். அமைதியாக கதவருகே வெளியே செல்லும் அவள் காதுகளில் அது விழுந்தது. உற்சாகத்தை அவள் வெளியே காட்டி கொள்ளவில்லை.

அர்ஜுன் அவளை தொடர்ந்து சென்று வெளியே செல்லயிருந்தவளை நிறுத்தி பார்த்து " இது  நம்ப கம்பனி, இனி அப்படியும் சொல்லலாம் நீ " என்று சொல்லி அவள் கன்னத்தில் தட்டி விட்டு சென்றான்.

அதிர்ந்து போனாள் கவிதா. உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வு. அர்ஜுனின் செய்கையில் அவளுக்கு புரிந்தது தான் என்ன?? அவளா ஒருவன் அவளை நெருங்கும் வரை சும்மா இருந்தது. அவன் கண்ணில் ஏன் அந்த சிரிப்பு.

ஆகாஷ் தனியாக அவள் கண்ணில் படும் வரை தான் அவள் எண்ணங்கள் தடுமாறின.  அவனிடம் பேச வேண்டியது நிறைய இருக்க அர்ஜுனின் புது செய்கை மறந்தே போனது. புரியாத புதிர் புரியாமல் போகட்டும் கண்ணுக்கு தெரியும் சிக்கல் சரியாக அவனிட பேச சென்றாள்.

"ஆகாஷ் உங்க கிட்ட பேசணும்" அவள் அராம்பிக்க அவன் அலுவலகம் சார்ந்ததையே பேச கவிதா சலிப்பானாள்.  அர்ஜுன் குடும்பதிர்க்கே  உரிய குணம் போல தன் நிலையிலே மூழ்கி இருப்பது என்று எண்ணம் எழ கண்ணில் சிறு குறும்பும்  கொஞ்சம் கணிவும் சுமந்தப்படி அவளை கண்ணத்தில் தட்டியவன் மனதில் நின்றான். இதழில் தானாக புன்னகை அரும்பியது அவளிற்கு.

அர்ஜுன் கண்ணில் தீவிரமாக பேசும் அகாஷும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் கவிதாவும் பட இம்முறை ஏனோ வலித்தது. அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஆகாஷின் அறுவை தாங்காமல் கவிதா அவனிடம் விடைப்பெற்று நகர்ந்தாள். அவள் நகர்ந்ததும் ஆர்வமான ஆகாஷ் சற்று தொலைவில் தொலைபேசியை நோண்டிய படி நிற்கும் அர்ஜுனை பார்த்ததும் அவனிடம் பேச சென்றான். அண்ணன் மெச்சும் அளவிற்கு ஏதேனும் செய்தால் தான் அவன் திட்டத்தை அவன் செயல்ப்படுத்த முடியும். ஆனால் அகஷின் வார்த்தைகள் காதுகளில் நுழைந்தாலும் புத்தியில் எட்டவில்லை அர்ஜுனிர்க்கு. தனக்கு தானே பேசிக்கொண்டு மேஜையை ஒழுங்குப்படுத்தும் அவள், கண்களுக்கு புதிதாக தெரிந்தாள்.

ஆரஞ்சு நிறம் குர்தா, நீல நிறம் ஜீன்ஸ், ஒழுங்கு படுத்திய புருவம், சின்னதாக பெயருக்கு நெற்றி பொட்டு, அடிகடி கண்களுக்கு தொந்திரவு கொடுக்கும் முன் நெற்றி முடி, சங்கு போல் கழுத்து. தன்னையும் மீறி அவளை ரசித்துகொண்டிருந்தவன் அவன் புறம் அவள் திரும்புவதை ஊகித்து அவனும் வேலை பார்க்கிறேன் என்பதுப்போல் சால்ஜாப்பு செய்ய திரும்ப பதட்டத்தில்  மேஜை மேல் இருபதெல்லாம்  தட்டி விட அவ்விடத்தில் பெருத்த களேபரம் ஆனது.

அருகில் பேசிக்கொண்டிருந்த ஆகாஷ் தன அண்ணனிற்கு என்ன ஆனது என்பதுப்போல் பார்க்க விக்கித்து நின்றான் அர்ஜுன்.

ரவு காலை நடந்ததை யோசித்து கொண்டே சிரிப்புடனே உலவிக்கொண்டிருந்தவனிடம் ஸ்கைப்பில் வீடியோ கால் பேசிய படியே வேணியம்மா நெருங்கி  "பாரேன் உன் தம்பி தன் போக்கில் சிரித்தப்படி இருக்கான் " என்று கிண்டல் செய்தார்.

அர்ஜுன் "அக்கா எப்படி இருக்கீங்க" என்று தீவிரமாக கேட்க

பதிலுக்கு சௌமியும் கிண்டலை தொடங்கினாள். அர்ஜுனிர்க்கு ஒரு பக்கம் பிடித்திருந்தாலும் இன்னொரு பக்கம் எரிச்சல் மூண்டது.

சௌமியா கணேஷின் அலுவலகத்தில் இருந்து தான் பேசிக்கொண்டிருந்தாள். பார்க்க கணேஷிற்கு எரிச்சல் மூண்டாலும் இன்னொருப்பக்கம் அவள் கணவனின் உதவி புரிய வந்துள்ளதாக அவள் பாட்டியிடமும் தம்பிகளிடமும் சொல்லிக்கொண்டிருப்பதை கேட்க தானாக புன்னகை அரும்பியது அவன் இதழ்களில்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.