(Reading time: 30 - 60 minutes)

10. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

நிரல்யாவை கிளம்ப சொல்லிய ஜெஷுரனோ அவன் வந்த நிமிஷத்திலிருந்து வெறிக்க வெறிக்க அவனையும் நிரல்யாவையும் மாற்றி மாற்றி பார்த்திருந்த துவியிடம் சென்று நின்றான்.

“நிரல்யாவை வீட்டில விட்டுட்டு திரும்பவும் இங்க வருவேன். அதுக்குள்ள நீ எங்கயாவது ஓடி போய்ட்டனா உன்ன விட சுயநலவாதி யாரும் கிடையாது....உன்னை நியாயபடுத்த நீ ஆயிரம் காரணம் வச்சுருக்கலாம்...எனக்கு விஷயம் தெரியாட்டா நான் நல்லா இருப்பேன்னு நீ நினச்சிருந்தா...உன்னைவிட முட்டாள் உலகத்தில யாரும் கிடையாது.....உன் கஷ்டத்தில் உதவியா இருந்திருந்தா கூட எனக்கு ஏதோ நிம்மதி கிடைச்சிருக்கும்....உனக்கு என்னாச்சோன்னு தவிக்கவிட்டபாரு......அவன் கண்களில் சிவப்பை மீறி பள பளத்தது கண்ணீர்.

“போ!! உன்ன மன்னிச்சுட்டேன்....

kaniyatho kathal enbathu

ஆனா ஆபத்து, சொந்த அண்ணனைவிட ஜேசன் பாதுகாப்பார்னு நீ இங்க வந்துருந்துட்டு....அதுக்கப்புறமும் அவர்ட்டயே நடிச்சேன்னா......நீ நிஜமாவே லூசா இருந்தன்னா நான் சந்தோஷப்படுவேன். அதுவும் அவர் மனசுல இவ்வளவு .......” வெறுப்பின் உச்சத்தில் வந்து விழுந்தன வார்த்தைகள்.

ஜேசன் அகனின் கரம் பற்றினான். “என் விஷயம்....சொன்னதில்ல...இப்பதான்....ப்ளீஸ்..”

துவியை திட்டுவது அவளது அண்ணணாகவே இருந்த போதும் ஜேசன் தவிப்பது அகனுக்கு புரிந்தது.... காதல்??? அகனுக்கும் அது புரியும். அவனது ஆரா மனகண்ணில் வந்தாள். அவளுக்கு இந்த துவி என்ன செய்துவிட்டாள்!!!

அவ்வளவுதான். கை முஷ்டிகளை இருக்கி மூடியவன் கொதித்தான். “ஜீசஸ்காக மட்டும்தான் உன்னை கொல்லாம போறேன்.....இல்லனா உன்ன ரெண்டா இங்கயே கிழிச்சு போட்டுடுவேன்......”

எரிமலை எழுந்து மனிதனானால் அது அகனைப் போன்றுதானிருக்கும்.

“வாங்க நிரல்யா...”என்ற அவனது வாக்கியம் முடியும் முன் துவி வேகமாக வந்து முகம் குப்புற விழுந்து நிரல்யாவின் கால்களை இறுக பற்றினாள்.

“எங்கயும் போகாத!!...ரக்க்ஷத் அண்ணாட்ட சொல்லு....அருண்...ஸ்...டெவில்..”

பதறிய நிரல்யா பார்க்கும்பொழுது விழுந்த வேகத்தில் மயங்கி இருந்தாள் துவி. முன்தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

ஓடி வந்த ஜேசன் உதவி செய்தான். “ நீங்க கிளம்புங்க நிரல்யா...டைம் ஆகுது....நீங்க அவங்களை டிராப் பண்ணிட்டு வாங்க ஜெஷு”

ஒரு கணம் மயங்கியிருந்த தங்கையை நின்று பார்த்த அகன், ஜேசனிடம் திரும்பி “பார்த்துகோங்க...” என்றுவிட்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான்.

பார்க்கிங் வந்ததும் இவள் கார் அருகில் வந்து நின்றான் அகன். “நீங்க வந்த கார்லயே கிளம்புங்க, நான் என் கார்ல ஃபாலோ பண்றேன்.... போய் ஜேசன்ட்ட கேளுங்கன்னுதானே சொன்னேன்...இப்படி செக்யூரிடி யாரும் இல்லாம தனியா இத்தனை மணிக்கு வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல...இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க....சற்று உரிமையும் அதட்டலுமாக சொன்னவன் ஒரு கண அமைதிக்கு பின்

“அடிச்சவளும் அடி வாங்கினவளும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.....கேர்புல்லா இருங்க நிரல்யா.... ப்ளீஸ்..” என்றான். இது அப்பட்டமான கெஞ்சல்.

“என்ட்ட நீங்க பேசினதுமே துவி விஷயத்தில ஆமி அம்மாவும் ஜேசனும் எதையோ மறைக்கிறாங்கன்னு தோணிச்சு, அவங்க நோக்கம் நல்லதாதான் இருக்கும் ஆனாலும் நேரடியா கேட்டா பதில் வராதுன்னுதான், ரகசியமா கண்காணிக்கலாம்னு இங்க வந்தேன்...

ஆனால் நீங்களும் இப்படி வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை...

இருட்டியதும் வந்துட்டேன்....ஜேசன் ரூம்.... கொஞ்சம் நெருடிச்சு....வெளியே இருந்து பார்த்துட்டு இருந்தேன்...அவர் கிளம்பி போகவும் உள்ளபோய் பார்க்கலாம்னு இருந்தேன்....அவர் போகவும் நீங்க வந்தீங்க....

ஆனாலும் ரொம்பவும் தைரியம் உங்களுக்கு..... ஒருவேளை வெளியே செக்யூரிட்டி யாரையும் நிப்பாட்டி வச்சுருக்கீங்களா?.......”

“சே!...அப்படில்லாம் என்னை தனியா விட்டுருவாங்களா?...”

“அப்படின்னா உடனே கிளம்புங்க....” பேச்சை இடை மறித்தவன் அவசர படுத்தினான். “நாளைக்கு பேசிக்கலாம்...”

காரில் இவள் முன் செல்ல தானொரு காரில் அவளை குறுகிய இடைவெளியில் பின்தொடர்ந்தான்.

காட்டு பாதை. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

‘இப்படி தனியாக வந்தது ரக்க்ஷத்திற்கு தெரியும்போது என்ன சொல்லுவான்? ஜெஷுரனை நம்பி இப்படி தனியாக...? என்ன செய்து கொண்டிருக்கிறேன்...?’

இவள் வீட்டுக்கு அருகில் வரும்போது பின்னிரவாகி இருந்தது.

அதுவரை இவள் காரை பின் தொடர்ந்தவன் இப்பொழுது அவள் காரை முந்திசென்று ஓரமாக வாகனத்தை நிறுத்தினான்.

மொபைலில் அழைத்தான். இவளும் காரை நிறுத்தி இணைப்பை ஏற்றாள்.

“இப்ப உள்ள எப்படி போக போறீங்க?”

“செக்யூரிட்டி இல்லாம வெளிய வரத்தான் பெர்மிஷன் கிடைக்காது....., மறைஞ்சு ஒளிஞ்சு வந்தேன்...இப்ப உள்ள வரக்கூடாதுன்னு யாரும் என்னை சொல்ல மாட்டேங்களே....பார்த்ததும் கதவை திறந்து விட்டுருவாங்க...”

நோ..நோ.., நீங்க உங்க காரிலேயே இருங்க இறங்காதீங்க நீங்க...” என்றபடி அவன் காரிலிருந்து இறங்கி இவள் கார் கதவருகில் வந்து கதவை திறக்க சைகை செய்தான். பயம் மற்றும் மறுக்க மறுக்கும் நட்புமாக தயங்கி கதவை திறந்தாள் நிரல்யா.

அடுத்த இருக்கையில் அவன் அமர...பதற்றம்.

“சாரி!... இதை குடுக்கத்தான் வந்தேன்...” அவன் நீட்டிய கையில் எதுவும் இல்லை.

“இதை போட்டுகோங்க! இதை போட்டா இருட்டுல யாரும் ஈசியா கண்டு பிடிக்க முடியாது.”

மிகவும் கூர்ந்து பார்த்தால் கூட அவன் கையில் எதுவும் தெரியவில்லை. புரியாமல் அவனை பார்த்தாள். அவன் கை எதையோ காற்றில் குடைய நிறம் பெற்றது அது. பார்க்க ஏறத்தாழ அண்டர் வாட்டர் டைவிங் சூட் போல் இருந்தது.

“ஆக்டோன்னு சொல்லுவோம் இதை... சில ப்ரீட் அக்டோபஸ் தோல் முழுசும் த்ரீ கலர் பிக்மென்ட்ஸ் பாக்கட்ஸ் இருக்கும்....அந்த ஆக்டோபஃஸ் ஆபத்தை உணர்ந்து நகர தொடங்கியதும் அந்த ஆக்டோபஸை சுத்தி இருக்கும் நிறத்திற்கு இந்த பிக்மென்ட் பாக்கட்ஸிலிருந்து கலர்ஸ் மிக்ஸாகி ஆக்டோபஸின் உடல் நிறத்தை சுற்றுபுற நிறத்துக்கு மாத்திகிட்டே இருக்கும்...அந்த டெக்னாலஜி பேஸில் செய்த சூட் இது.

இத போட்டுகிட்டு நீங்க மூவானீங்கன்னா, மனித கண்களோட வேகத்தவிட வேகமா கலர்ஸை சுற்றி இருக்கும் சூழலுக்கு அப்படியே மாத்திடும். அதனால யாராலும் இத ஈஃஸியா ஐடன்டி செய்ய முடியாது.

கேமிராவில கவனமா இருங்க.....

எந்த பக்கதிலிருந்தும் அனிமல்ஸ்..., ஹுயூமென்...யார்  வந்தாலும் எவ்வளவு தூரத்தில இருக்காங்க...., அவங்கட்ட வெப்பன் இருக்குதா...என்ன ஸ்பீடில் அப்ரோச் செய்ராங்க..., நீங்க அவங்க விஸிபிள் ரேஞ்சில் இருக்கீங்களா..., நீங்க எந்த பக்கம் மூவானா ஸேப்ன்னு சொல்லிகிட்டே இருக்கும்...அந்த ஸவுண்ட் மத்தவங்களுக்கு கேட்காது...இதை இப்படி இழுத்தீங்கன்னா ஃபங்க்ஷனாக ஆரம்பிக்கும்...இப்படி செய்தா ஸ்டாப் ஆகிடும்....”

டெமோ காண்பித்தவனை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் நிரல்யா.

“உங்க கார் இங்கயே இருக்கட்டும்...நீங்க உடனே கிளம்புங்க...வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க...உங்க ரூமிற்குள் போற வரைக்கும் இங்கதான் இருப்பேன்....எதுனாலும் கூப்பிடுங்க...ப்ளீஸ்......, இத போட்ட பிறகே கார்ல இருந்து இறங்குங்க...அப்புறமா பேசுவோம்....இந்த சூட்ட நாளைக்கு வங்கிக்றேன்....சீக்ரசி மெயின்டன் பண்ணுங்க....பத்திரமா போங்க....” சொல்லிகொண்டே இறங்கி அவன் காருக்கு சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.