(Reading time: 18 - 35 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 20 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ஹா ஹா ஹா " ஜானகியின் மிரட்டலை கேட்டு பெரிதாய் சிரித்தான் அர்ஜுனன்..

" கலக்குற ஜானு .. கூட ரகு இருந்தா மேடம் இப்படிலாம் பேசுவியா ? ஏற்கனவே உன் ஆளு ஜங்கு ஜங்குன்னு ஆடுவான் உன் விஷயத்துல .. இதுல காதல்னு சொல்லி நீ அவன் காலில் சலங்கையை கட்டி  விட்டுட்டியா ?  இனி என்னென்ன பண்ண போறானோ ? " என்று போலியாய் பயந்தான் ..

" மச்சான் ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்காத.. அர்ஜுன் பயப்படுறான்னு சொன்ன சின்ன புள்ள கூட கேகே பிகே நு சிரிக்கும் "

VEVNP

" இப்படி உசுபேத்தி உசுபேத்தி நம்மளை ஹீரோவாக பார்க்குறதே இந்த பயபுள்ளைங்களுக்கு வேலையா போச்சு .. சரி சரி விஷயத்துக்கு வரேன் .... ரகு ..."

" சொல்லு அர்ஜுன் "

" என் கண்ணையே நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன் "

" ஐயோ மாமா "

" ச்ச எவ்வளோ அழகா பீலிங் டைலாக் பேச வந்தா இப்படி சடன் ப்ரேக் போடுறியே ஜானு ..சொல்லு என்ன ? "

" ஐயோ மக்கு ரெண்டு லவர்ஸ் ஐ சேர்த்து வெச்சிட்டா போதுமா, அவங்களுக்கு கொஞ்சம்  மனசு விட்டு பேச ப்ரைவசி தர மாட்டிங்களா ? "

" அடிப்பாவி.. பழைய ஜானகி வந்துட்டா போல.... ரைட்டு ...இனி நான் பேசிகிட்டே போனா ஹீரோ அர்ஜுனனை நீ காமிடியன் ஆக்கிடுவ .. மச்சான் சிவா ?? "

" சொல்லு நண்பா "

" நம்ம நாடகம் நல்லபடியா முடிஞ்சதும் எப்படி கலட்டி விட்டுடுசுங்க பார்த்தியா ? வா வா நாம இடத்தை காலி பண்ணிடலாம் " என்றான் அர்ஜுனன் .. அர்ஜுனனிடம் பேசி விட்டு, ரகு-ஜானு இருவருக்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சிவகார்த்திகேயன் ..

" ஹ்ம்ம் நித்தி .. யாராரோ காதலை சேர்த்து வெச்ச எனக்கு நம்ம காதலை சரி பண்ண முடியலையேடா .. உனக்கே தெரியாமல் அங்கிள் கிட்ட பெண் கேட்கலாம்னு வர நெனச்சப்போதான் அவர் தவறிட்டார்னு ஆகாஷ் சொன்னான்.. இப்போ நான் உன் முன்னாடி வந்து நின்னா, உன் அப்பாவே இல்லையே இனி அவர் பேச்சுக்கு ஏன் மதிப்பு தரணும்னு சொல்ற மாதிரி ஆகிடும் டா .. இதுக்கு ஒரே வழி நீயே என்னை கூப்பிடனும்.. ப்ளீஸ் டீ " என்று அவன் மனதிற்குள் மன்றாடும் நேரம்தான் ஆகாஷ் அவனை அழைத்தான் .. நித்யாவின் நிலையை சொன்னவன், தனக்கு திருமணம் ஆக  போவதையும் சொன்னான் ..

" கார்த்தி முன்னாடி அவ உன்னை எவ்ளோ மிஸ் பண்ணாளோ அதைவிட ஜாஸ்தியா இப்போ உன்னை மிஸ் பண்ணுறா .. காரணம் நானும் சுப்ரியாவும் தான் .. நித்யாவுக்கு எங்க மேல பொறாமை இல்ல .. ஆனா நமக்கு இப்படி இனி ஒரு வாழ்க்கை இல்லையேன்னு ஒரு ஏக்கம் இருக்கு .. அதன் நானே  கவனிச்சேன் .. முன்பை விட இப்போதான் நீ அவ பக்கத்துல இருக்கனும்டா .. ஒரு அண்ணாவாக மட்டும் இல்ல அவளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தான் சொல்லுறேன் .. அவ வார்த்தையால்  வான்னு சொன்னாதான் வருவியா ? மனதளவில் உன்னையே நினைச்சுகிட்டு இருக்குறவளுக்கு நீ என்ன பதில் சொல்ல போற டா? " ஆகாஷின் கேள்விக்கு அவன் வருகையின் மூலம் பதில் தந்தான் நித்யாவின் கார்த்தி ..

 தே நேரம் ஆபீசில்,அதுவரை சலுகையாய் ரகுராமின் மார்பில் சாய்ந்து நின்ற ஜானகி தன்னிலை உணர்ந்து முகம் சிவந்து விலகி நின்றாள்...

ரகுராமோ அவளெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, கன்னத்தில்  கை வைத்து கொண்டு அவள் முகத்தை மிக பொ..று..மை ..யாய் ........... ஆராய்ந்தான் ... அவன் பார்வை தன்னை உரசி போவதை உணர்ந்தவள் லட்ஜையுற்றாள்.... அடிக்கடி நிமிர்ந்து அவன் பார்வையை எதிர்கொள்வதும் அதன் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிவதுமாய் இருந்தவளை பார்த்து மௌனமாய் புன்னகைத்து கொண்டான் ரகுராம் ..

காலையில் அவள் உயிர்பித்த யு டியுப் பாடல்கள் இன்னும் ஒலித்து கொண்டுதான் இருந்தன ... அதுவும் அந்த நொடிக்கு மிக பொருத்தமாய் அமைத்தது அந்த பாடல் ..

 அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஏற்கனவே அவளிடம் காதல் சொல்லி இருந்தாலும் அந்த அழகான மோன நிலையில் தனது காதலை மௌனமாய் சொல்ல வழி தேடி அவள் விழிகில் கலந்து தொலைந்து போனான் ரகுராம் .. அவளின் பார்வை பேசிய பாஷை என்னவோ சட்டேனா எழுந்தவன் இரு கரம் நீட்டி  வா என கண்ஜாடையில்  அழைக்க, ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் ஜானகி .. அவளின் தாயின் கருவறையிலும்   தந்தையின் மடியிலும்  ஸ்ரீராமின் மார்பிலும் அன்பு பாராட்டியவள், அவர்களின் அத்தனை பேரின் மொத்த அன்பையும் அவனின் இறுகிய அணைப்பில் உணர்ந்தாள்...

அது இறுகிய அணைப்புதான்... ஆனால் அதில் காமம் இல்லை, ஆசையும் இல்லை .. இனி உன்னை பிரிவதில்லை என்ற உரிமையும் உறவும் மட்டுமே அங்கு இருந்தது .. ஒரு தாயின் கருவறைக்கும் சிசுவிற்கும் இருந்த உறவு எதுவோ ? அதுதான் அவனின் அணைப்புக்கும் அவளுக்கு இருந்த உறவாகும் ...

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கைச்சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

எத்தனை காயங்களை அவனுக்கு தந்தாள்? எத்தனை முறை அவனை உயிருடன் கொன்றாள் ? இவளின் காதலின் வரத்திற்காக அவன் மேற்கொண்ட தவமும்தான் எத்தனை கொடுமையானது ? எத்தனை முறை முட்காளால்  காயபடுத்தபட்டவன் ரோஜாவைபோல சிரித்திருந்தான் ? முதல் நாள் தொடங்கி இந்நாள் வரை அவனுக்காக அவன் கடந்து வந்த பாதையை எண்ணியவளின் மனம் விம்மியது ..

அவளின் கண்ணீர் சுரபிகளும் அதையே பிரதிபலிக்க, முதல் முறை தன் இதழ் ஒற்றுதளால் அவளின் கண்ணீரை நிறுத்தினான் ரகுராம் .. அவனின் மூச்சு காற்றில் கிறங்கியவளின் கண்ணீர் மாயமானது ..

'மானசீகமாய் ஸ்ரீராமிடம் பேசினாள்..."நான் உணர்ந்துட்டேன் ராம் ... ரகுவின் காதலை உணர்ந்துட்டேன் .. அதில் உங்கள் காதலின் பிரதிபலிப்பு என்பதையும் உணர்ந்துட்டேன் .. இது கடவுளின் செயல் இல்ல ராம்.. உங்க செயல் தான் .. எங்க இருவருக்குமே கடவுள் ஸ்தானத்தில் இருந்து இணைச்சது நீங்கதான் ராம் .. ரகுவின் காதலும் தோற்கவில்லை ராம் .. நான் ரகுவை அவருக்காகவே ஏத்துகிட்டேன் ராம் "

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே

….

கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே

இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே

….

ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே

சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

அவள் " ராம் " என்றதும் அவனின் இறுகிய அணைப்பு தளர்ந்ததாய் உணர்ந்தாள் ஜானகி .. மெல்ல நிமிர்ந்தவள் பதட்டமாய் அவனை பார்க்க, அவள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீரும் காதலும் அவள் மனதை பறை சாற்ற

" நீ என்னை ராம் நு கூப்பிடு டா ... எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு ..அதை சொல்லத்தான் கொஞ்சம் விலகினேன் " என்று சிரித்தவன் அவள் நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டு மீண்டும் தன்னோடு இறுக்கி  கொண்டான் .." ஒரே ஒரு நொடி என்றாலும் கூட  அவனின் அணைப்பு  தளர்ந்ததும் நான் ஏன்  பதறிவிட்டேன் ? ரகுராம் மீது எப்போது இவ்வளவு ஆழமான காதல் கொண்டேன் ? இனி ஒரு பிரிவு எனக்கு வேண்டாம் ராம் ..இனி கனவிலும் உங்களை பிரிஞ்சு இருக்க மாட்டேன் " என்று சொல்லி கொண்டவள் அவன் அணைப்பில் நிம்மதியாய் கண் மூடினாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.