(Reading time: 11 - 21 minutes)

03. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

முதா மதிய உணவை முடித்த பின்னர் பிள்ளைகளை உறங்க வைத்து அவளும் உறங்க முயறச்சிக்க, அவளின் மனமோ வினிதா வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி சுற்றி வந்தது. அவை விடை கிடைக்காத கேள்விகள் என தெரிந்தும் அவளால் அதை யோசிக்கமால் இருக்க முடியவில்லை...

தூங்க முடியாமல் எழுந்து அமர்ந்தவளின் கண்கள் அருகே மேஜை மேல் இருந்த ஆல்பத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.

பல பக்கங்களை புரட்டிய பின்னர் அவளின் கண்கள் அந்த ஒரு புகைப்படத்தையின் மேல் நிலைத்து இருந்தது. அந்த படத்தை மெல்ல வருடியவள் அவளையும் அறியாமல் “நீ எங்க இருக்க? அந்த வீட்டில் என்னமோ நடக்குது, ஆனா யாருக்கும் எதும் புரியலே... உனக்கு பதில் தெரியுமா?” மெல்லிய குரலில் பேசிக் கொன்டிருந்தாள்...

Nizhalaai unnai thodarum

அமுதா அந்த புகைப்படத்தை பார்த்து பேசிம் போது அவளின் பின்புறம் ஒரு உருவம் தோன்றியதையோ, அது அவளையே ஊற்று பார்தத்தையோ அவள் உணரவில்லை.

அமுதாவின் எண்ணம் முழுக்க பக்கத்து வீட்டை சுற்றி இருக்க, அவள் அமுதனின் வரவையும் அவனின் அதிர்ந்த முகத்தையும் கவனிக்கவில்லை.

டிவியில் படத்தை பார்த்தலும் வினிதாவின் சிந்தனை வேறு இடத்தில் இருந்தது. அந்த படத்தை பற்றி சித்ராவும் அனிதாவும் விவாதிப்பது கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் பதியவில்லை.

வினிதாவின் மனதில் விடை கிடைக்காத பல கேள்விகள் இருந்தது. இதை பற்றி யாரிடம் பேசுவது என தெரியாமல் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆவி பேய் இருப்பது உண்மையா? என்ற கேள்விக்கு அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.

இதை பற்றி வினிதாவின் வீட்டில் பேசினால் யாரும் அவளை நம்ப போவதும் இல்லை, காரணம் வினிதாவின் அம்மாவிற்க்கு இதில் நம்பிக்கை இல்லாதால் இதை பற்றி அவரிடம் பேசினால் இது எல்லாம் கட்டு கதை அதனால் நம்பாதே என சொல்லி விடுவார்!

வினிதா இதையே யோசித்துக் கொண்டு இருக்க, அவளின் காதுக்கு மீக அருகே மெல்லிய சிரிப்பொழியின் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அவளின் செய்கையை உணர்த சித்ரா வினிதாவை பார்க்க, அவளோ திரு திருவேன விழித்துப் படி இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வினி என்ன? ஏன் இப்படி திரு திருன்னு முழிக்கிற?”

“ஹான்… என்…. என்ன”

“உனக்கு என்ன ஆச்சி, ஏன் திரு திருன்னு முழிக்கிற?”

“ஒன்…. ஒன்னும் இல்ல…. ஏதோ யோசனையில் இருந்தேன். வேற ஒன்னும் இல்ல” தடுமாற்றமாக பதில் சொன்னவள் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அமைதியாக வினிதாவின் முகத்தை உற்று நோக்கி “ஒன்னும் இல்லனா ஏன் உன் முகம் இப்படி வியர்த்து இருக்கு” சொல்லியவள் மீண்டும் டிவியில் ஆழ்ந்தாள்.

சித்ராவுக்கு தெரியும் என்ன கேட்டலும் வினிதாவிடம் இருந்து வேற எந்த பதிலை கிடைக்காது என்பது. வினிதா படம் பார்க்க அமர்ந்ததில் இருந்து அவளின் கவனம் அங்கு இல்லை என்பதை உணர்ந்த அவள் அவப்போது அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ரா டிவியை பார்க்க திரும்பியயிடன் சில நிமிடங்கள் கழித்து வினிதா கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே சித்ராவும் அனிதாவும் சற்று தூரத்தில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவள் அருகே வர வாய்ப்பு இல்லை. அப்படி இருக்க சற்று முன் அவளின் காதின் அருகே சிரித்தது யார்?

ஒரு வேளை இது பிரம்மையோ...... இல்லை இல்லை ண்டிப்பாக இல்லை... அந்த சிரிப்பு சத்தம் நிஜம். ஆனால் ஆனால் அவள் அருகே யாரும் கிடையாதே!!!

வினிதாவின் கண்கள் அந்த வீட்டையே சுற்றி வந்தது. இந்த வீட்டிற்க்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. மற்ற வீடுகளை போல் இல்லாமல் இந்த வீடு மட்டும் ஏனோ இருள் அடைந்து கிடைப்பதும், சூரியன் ஒளி வீட்டினுள் வருவது கிடையாது. பகல் நேரத்தில் கூட லைட் போட வேண்டும், அப்பொழுது தான் அவர்களின் வீட்டில் வெளிச்சம் இருக்கும்.

முதல் முதலில் அந்த வீட்டிற்க்கு வந்த போது வினிதாவிற்க்கு ஏதோ குகைக்குள் நுளைந்தது போல் இருந்தது. அங்கு குடி வந்த ஒரு மாததிற்க்கு பகலிலும் இரவிலும் அவள் உறங்க முடியாமல் கஷ்டப்பட்டாள். நடுராத்திரியில் எல்லோரும் உறங்கிய பின்னர் அவளின் அறைக்கு வெளியே குருக்கும் நெருக்குமாக யாரோ நடந்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சத்ததினால் பல இரவுகள் அவள் சித்ராவின் அறையில் தான் உறங்குவாள். இதை பற்றி எதையும் அவள் யாரிடமும் சொன்னது கிடையாது.

ஏனோ அவளுக்கு அந்த வீட்டில் இவர்கள் மூவரை தவிர வேறு யாரோ ஒருவர் இருப்பது போல் தோன்றும். அது யார்? என்ற கேள்விக்கு தான் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.

எதையோ யோசித்துக் கொண்டு இருந்தவள் தன்னை ஒரு கரம் உளுக்குவதை உணர்த்து பார்க்கையில், அவளின் எதிரே நின்ற சித்ரா அவளை பார்த்துக் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“உன் போன் இரண்டு தடவை ரிங் பண்ணி நின்று விட்டது. நீ என்னமோ கனவின் மிதக்கிறாய்….” என்றாள் கோபமாக.

என் போன் ரிங் செய்தால் இவ எதுக்கு கோப படுகிறாள் என்ற யோசனையுடன் அதை எடுத்து பார்க்கையில் அதின் ருபன் அழைத்திருப்பது தெரிந்தது.

போனை கையில் எடுத்தவள் அமைதியாக அவளின் அறைக்கு செல்லுவதை பார்த்த சித்ரா “இவளுக்கு என்னமோ ஆச்சி” சொல்லியவள் அவளின் அறைக்கு சென்று விட்டாள்.

வினிதா அவளின் அறை வசலில் நின்று எதிர் அறையை பார்த்தாள். நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் முன்று அறையை மட்டுமே உபயோக படுத்தப்படுகிறது.

அவளின் எதிர் அறை மட்டுமே எப்பொழுதும் பூட்டி இருக்கும். மேலும் அந்த அறை கதவிற்க்கு சாவி கிடையாது. ஒரு சில சமயம் அந்த கதவை திறந்து சாத்தும் சத்தம் மட்டும் கேட்கும்.

ஒரு நாள் அவள் துணிகளை காய வைத்து வீட்டினுள் நுழையும் போது யாரோ மிகவும் வேகமாக அந்த அறையுனுள் சென்று கதவை சாத்தினர்.

அன்று அவளை தவிர வீட்டினுள் யாரும் கிடையாது. அப்படி இருக்க அந்த அரைக்கு சென்றது யாராக இருக்கும்?. மேலும் அந்த அறை கதவு எப்படி திறக்கப்பட்டது? யோசித்தவள் அந்த அறை வாசல் நின்று கதவை தட்டி பார்த்தாள் உள்ளேயிருந்து எந்த சத்தமும் கேட்டவில்லை. பல முறை அழைத்து பார்த்தும் பயன் எதும் இல்லதனால் அதை விட்டு அவளின் வேலையை பார்க்க சென்றாள். ஆனால் தினமும் அந்த அறையை பார்க்க மட்டும் மறக்கவில்லை.

வினிதாவின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அவளின் கைதொலைபேசி மீண்டும் அலறியது.

ருபன் மொட்டை மாடியில் நடந்த படி தன் கைதொலைபெசியை பார்த்துக் கொண்டிருந்தான், காலையில்யிருந்து அவன் அழைப்புகளை வினிதா எடுக்கவில்லை. அவளுக்கு எதும் பிரச்சனையா என யோசித்தாவன் அதை கைவிட்டு மகேனுக்கு அழைக்க நினைத்தான்.

ருபனின் விட்டு வாசலில் மகேன் அவனது பைக்கை நிருத்தி, வீட்டினுல் செல்லாமல், அந்த இடத்தையை சுற்றிப் பார்த்தான். புறநாகர் பகுதியில் அமைந்தது இருக்கும் வீடும் பக்கத்தில் இருக்கும் சிறிய மண்டமும், சற்று தூரத்தில் இருக்கும் காடும் ருபனின் அப்பாவிற்க்கு ஆவிகளை விரட்ட வசதியாக இருந்தது.

இதை மாடியில் இருந்த்து கவனித்துக் கொண்டிருந்த ருபன் இவன் எதுக்கு இந்த இடத்தை புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறான் என நினைத்து அமைதியாக அவனை பார்த்து நின்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.