(Reading time: 9 - 18 minutes)

08. ஷைரந்தரி - சகி

ண்களில் கவலைகள் ?சூழ வயல்வெளியில் நடந்துக் கொண்டிருந்தான் சிவா.

"என்ன நடக்கிறது அம்மூவை சுற்றி?இத்தனை வருடங்களாய் அவள் பிரதிபலிக்காதவை இப்போது எப்படி????அன்று நடந்தவை அவளுக்கு ஞாபகம் இல்லாமல் செல்ல காரணம் என்ன???"-தன் தங்கையைப் பற்றி பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான் சிவா.அவன் மனதில்,ஏதோ குழப்பம் தென்பட்டது. எங்கோ தவறு நடப்பது அவனுக்கு விளங்கிற்று. அவன்,பாதை  தன்னிச்சையாக எங்கோ பயணித்தது.அவன்,கால்கள் எங்கோ சென்று கொண்டிருந்தன.அப்படி, எவ்வளவு நேரம் நடந்திருப்பானோ!!!

"சின்னய்யா!"-என்ற குரலில் இவ்வுலகம் வந்தான்.

shairanthari

"ஆ...என்ன?"

"இங்கே என்னய்யா பண்றீங்க??"-அப்போது தான் அவன் கவனித்தான், அவன் பாஞ்சாலபுரத்தின் மையப்பகுதிக்கு வந்துவிட்டிருந்தான் என்று!!!!

"அது...ஊரை சுற்றிப் பார்க்கலாம்னு..."-அவன்,முழுதாக முடிக்கவும் இல்லை.அதற்குள்,

"வேண்டாம்யா...இந்த பக்கம் வராதீங்க..."

"ஏன்??"

"இங்கே...அது...!வேண்டாம்யா!நீங்க போங்க."

"என்ன?நடந்தது?"

"அது...மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை..."

"என்ன?"

"நீங்க போங்கய்யா!!!!"-அவர்,அவனை விரட்டுவதிலே குறியாக இருந்தார்.

"சரி...."-சிவா,இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான்.அவன் மனம்,அவனை செல்ல விடாமல் தடுத்தது.அவன் வந்த பாதையை தொடர வேண்டும் என்று தோன்றியது.யாரும் அறியாத வண்ணம் பயணத்தை தொடர்ந்தான். அவன்,சென்ற இடங்கள் காடு போல தென்பட்டன. அவற்றை கடந்து சென்றான்.சிறிது,தூரம் சென்றப்பின்,மணல் தரை தென்பட்டது.நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் தென்பட்டது. சிவாவின் கண்களில் அதிசயம் மின்னியது.

பாழடைந்து போன நிலையில் இருந்தது.அதன் அருகே சென்றான்.கதவு தாழிட்ட நிலையில் இருந்தது.முடிந்த வரையில் அதை  திறக்க பார்த்தான். முடியவில்லை.பலமுறை தள்ளினான் முடியவில்லை. பின்,இனி முடியாது என்று திரும்பிய நிலையில்,

அக்கதவு தானாய் திறந்தது.அப்படியே, ஸ்தம்பித்து சிறிது நேரம் நின்றவன்.பின்,அதன் உள்ளே சென்றான்.

கோவில் மூடி சில காலங்களாக தான் இருக்கும்.ஆனால்,அங்கிருந்த சிலைகளும்,சிற்பங்களும் பழைமை வாய்ந்தவையாக இருந்தன.

அப்படியே ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.கோவிலின் நடு பகுதியில் மாபெரும் வேள்வி செய்ததன் அடையாளமாக வேள்விக்கு தேவையான அனைத்தும் இருந்தன.அதைபார்த்துக் கொண்டே உள்ளே சென்றான். அங்கே இருந்த சந்நதி ஒன்றின் கதவை திறந்தான் சிவா. அது.....மகா சக்தியான ராஜ காளி அம்மனின் சன்னதி. அகிலத்தையே காக்கும் அவள் அதுவரையில் யாரும் பார்த்திராத வகையில் அடைந்திருந்தாள். அக்காட்சியை கண்டவனின் கண்கள் விரிந்தன.அதைக் கண்ட மாத்திரத்தில் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின.சிவா,அச்சிலையின் அருகே சென்றான்.தூசும், மாசுமாய்  இருந்தாள் சக்தி தேவி.அவன்,அவள் மீதிருந்த அழுக்குகளை துடைக்க தட்டி போது,அவன் கண்ணில் பட்டது,அவளைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறு.இது என்ன என்பது போல பார்த்து அதை எடுக்க முனைந்தவன்.பின், அமைதியாக விட்டுவிட்டான்.அந்நேரம் பார்த்து அவனது கைப்பேசி அலறியது.அதில் கலைந்தவன் எடுத்து பேசினான்.

"ஹலோ!"

"அண்ணா!அர்ஜீன் பேசுறேன்."

"என்னடா??"

"எங்கேடா போன?"

"ஏன்?"

"ஷைரு ரொம்ப நேரமா உன்னை தேடிட்டு இருக்கா!"

"இதோ உடனே வரேன்."-அங்கிருந்து கிளம்பினான் சிவா.அவன் அச்சன்னதியை விட்டு வெளியே வரும் போது அவன் கால் இடறியது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு திரும்பினான்.அவன், கண்களில் ராஜகாளியின் சிலை அழுத்தமாக பதிந்தது.ஏதோ சிந்தனைகளை மனதில் சுமந்துக் கொண்டு வீடு திரும்பினான்.

வீட்டில்......

"டேய்....எங்கேடா போன?ஷைரு உன்னை தேடிட்டு இருக்கா பாரு!"

"இதோ போய் பார்க்கிறேன் அத்தை."

ஷைரந்தரி பின்பக்கம் தோட்டத்தில்     அமர்ந்திருந்தாள்.

"அம்மூ..."

"............"

"அம்மூ!"

".........."

"குட்டிம்மா?"

"ஒண்ணும் வேணாம் போ!"

"ஏன்டா?என்னாச்சு?"

"எங்கேடா போன?"

"அது...சும்மா...அப்படியே...ஊர் சுத்திட்டு வரலாம்னு!"

"இன்னிக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா?"

"இன்னிக்கு புதன்கிழமை..."

"கொன்னுடுவேன்... இன்னிக்கு உன் பிறந்தநாள்!"-அப்போது தான், அங்கிருந்தவர் நாள்காட்டியை பார்த்தனர்.

"நானும் காலையில இருந்து உன்னை தேடிட்டு இருக்கேன்.உன் போன்னுக்கு ட்ரை பண்ணா,நாட் ரீச்சபிள்னு வருது!"

"அதுக்கு தான் கோவிச்சிக்கிட்டியா?நான் கூட பயந்துட்டேன்."

"போடா!பிசாசு!நீயெல்லாம் திருந்தவே மாட்ட,உனக்கு எல்லாம் எதுக்குடா பிறந்தநாள் வருது???"-சிவா,அவள் வாயை பொத்தினான்.

"செல்லம்...இதுக்கு மேல திட்டாதே!"

"போ!"-என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் ஷைரந்தரி.

"அம்மூ?"

"........."

"குட்டிம்மா?"

"............."

"செல்லம்..."-அவள்,ஒரு டைரி மில்க் சில்க் சாக்லெட்டை நீட்டினாள்.

"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!"-அதை கையில் வாங்கி கொண்டவன்,

"நல்லதொரு ஆரம்பம் ஸ்வீட்டுடனா?"-ஷைரந்தரி அவன் கையை நீட்ட சொல்லி அவன் கையில் ஒரு காப்பினை அணிவித்தாள்.

அதில்,அம்மூ சிவா என்று செதுக்கப்பட்டு இருந்தது.

"எதுக்குடா இதெல்லாம்?"

"இது உன் கூட இருக்கிற வரைக்கும்,நானும் உன் கூட தான் இருப்பேன்!"-சிவா,அதற்கு ஒரு சிரிப்பை பரிசளித்தான்.

"அடப்பாவி அண்ணா!எங்களை எல்லாம் ஞாபகமே இல்லையா உனக்கு?உன் பிறந்தநாள்னு ஏன்டா சொல்லலை?"

"எனக்கே  ஞாபகம் இல்லைடா!அம்மூ சொல்லி தான் ஞாபகம் வருது!"

"உன்னை....திருத்தவே முடியாது!"

"நீ தான் திருத்த முயற்சி பண்ணு!"

"ஸாரி ப்ரோ...முடியாத விஷயத்துல நான் இறங்க மாட்டேன்."

"பிழைக்க தெரிந்த பிள்ளை!"-திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாய்,

"பாட்டி!"என்றான்.

"என்னப்பா?"

"நம்ம வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தர் வருவாரே!ம்...அன்னிக்கு கூட கோவில்ல பூஜை பண்ணாரே!"

"நீலக்கண்டச்சாரியார்!"

"ஆங் ..அவரை பார்க்கணும்.அவர்,அட்ரஸ் தாங்களேன்!"-அங்கிருந்தவர் அனைவரின் புருவமும் ஒரு நொடி மேலே ஏறியது.

"எதுக்கு சிவா?"

"சும்மா தான் பாட்டி?"

"தரேன்பா!இந்த ஊர்ல பெரிய மண்டபம் ஒண்ணு இருக்குல!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.