(Reading time: 51 - 102 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 21 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ஹாய் நண்பர்களே .. ! நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி கடந்த வார எபிசொட்  என்னால் நீளமா கொடுக்க முடியவில்லை .. அதை சரி கட்டும் படியாய், இந்த எபிசொட் இருக்கும்னு நம்புறேன் .. கொஞ்சம் பாட்டு ஜாஸ்தியா இருக்குற மாதிரி இருந்துச்சுனா நீங்களே கொஞ்சம் ஸ்கிப் பண்ணிகொங்க .. இப்போ உங்க கடிகாரத்தை எடுத்து ரிவர்ஸ் சுத்துங்க ...ஏன்னா நாம இப்போ ஜானகி ஆபீஸ் போற சீன்  கு பின்னோக்கி போக போறோமே !

திரவன் தன்னொளியால் அனைவரின் இமைகளையும் தட்டி எழுப்பி கொண்டிருந்தான்.. அவனின் சுறுசுறுப்பை பல இதயங்கள்  பாராட்டாமல் , எதிர்மாறாக திட்டிக்கொண்டே எழ, ஜானகி மட்டும் ஒரு புன்னகையோடு கதிரவனை வரவேற்றாள்... மெல்ல சோம்பல் முறித்தவளின் கைகளில் தட்டுபட்டது ரகுராம் வாங்கி தந்த அந்த புடவை தான் .. ஆம்...

புடவை .. அது எவ்வளவு பெரிய விஷயம்னு பொண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.. முதல் முதலில் கட்டிய புடவை, சொந்தமாய் தேர்ந்தெடுத்த புடவை, அப்பா வாங்கி தந்தது, தமையன் வாங்கி தந்தது, முகுர்த்த பட்டு, நிச்சய பட்டு, கணவன் வாங்கி தந்த புடவை, காதலனின் முதல் பரிசு , ஆசையாய் ரசித்து விட்டு விலையை பார்த்ததும் வேண்டாமென முடிவெடுத்தது  இப்படி ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் ஒரு குட்டி வரலாறை உருவாக்கி விடுகிறது ..

அப்படியாய்  ஜானகி வாழ்வில் ஒரு இனிய வரலாற்றை தொடக்கி வைத்தது அந்த புடவை .. ரகுராமே, தனது நேரத்தை ஒதுக்கி அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய புடவை .. கருநீல நிறத்தை வெள்ளை முத்தக்களை தாங்கி அழகாய் வசீகரித்தது அந்த புடவை .. அவனின் ரசனையை அவளால் மெச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை ..

VEVNP

பட்டுக் கருநீலப்-புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில்-தெரியும்

நக்ஷத் திரங்க ளடி!

அந்த பாரதியின் வரிகளை ரகுராமே அவளுக்காக பாடியதை போல தோன்றியது அவளுக்கு... ஆசையாய் ' வலிக்குமோ ? '  என்பது போல மிக மிருதுவாய் தொட்டு பார்த்து ரசித்தாள் அந்த புடவையை .. அதே நேரம் அவளின் செல்போன் சிணுங்கியது

" ஹெலோ ராம் "

கோலக் குயி லோசை-உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன். "

" நீங்க காதல் கொண்ட கதைதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே  பாஸ் .. என்ன காலையிலே போன்" என்றவளின் குரலில் குறும்பிற்கு பதிலாக காதலே இருந்தது ..

" இன்னும் ரெடி ஆகலையா சகி ?"

" ஹெலோ ராம் .. மணி என்ன தெரியுமா ? நீங்கதான் சீக்கிரம் எழுதுட்டிங்கன்னா ? நானும் அப்படி இருக்கனுமா ? எனக்கு ரொம்ப தூக்கமா வருது .. நான் நாளைக்கு ஆபீஸ் வரேன் "

" என்னடி??? " என்று கேட்டவனின் குரலில் தொனித்த பதட்டத்தை உணர்ந்தவள் வாய்விட்டு சிரித்தாள்....

" ஹா ஹா சும்மா சொன்னேன் பா... இப்போதான் எழுதேன் ..பட் அரை மணி நேரத்துக்குள் ரெடி ஆகிடுவேன் ... "

" ஓகே சகி .. ஜடை பின்னி மல்லிகை பூ வெச்சுக்கோ இன்னைக்கு "

" ஹே என்ன ? ஒரே சஸ்பென்சா இருக்கே ? புடவை, பின்னல், மல்லிகை பூ ? யாருக்கும் தெரியாமல் அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணம் பண்ணிக்க போறோமா ராம் ?" என்று குறும்பாய் வினவினாள் ஜானகி ..

" ஓ எஸ்..! வாய் நாட் மை ஜான் ??? ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் அப்படியே உன்னை இங்க கடத்திட்டு வந்திடுவேன் .. அதுக்கு  பிறகு ' எல்லாமே ' முறைப்படி நடந்தாகணும் " என்று இருபோருளில் பேசி அவளை முகம் சிவக்க வைத்தான் , அவளின் நாயகன் ..

" போதுமே இடத்தை கொடுத்த மடத்தை பிடிக்கிறதெல்லாம் ? ஆளை விடுங்க சாமி .. நான் குளிக்கணும் .. ஆமா ராம் மல்லிகை பூ வீட்டுல இருக்கா  தெரிலையே ??? "

" அதெல்லாம் பானு அத்தை கிட்ட கொடுத்துட்டேன் .."

" ஐயோ போச்சு போச்சு..மல்லிகை பூ வேணும்னா என்னால் கேளேன் ஜானு ...ஏன் ரகுவை கேட்குரன்னு அத்தை கலாய்க்க போறாங்க .. அநியாயம் ராம் நீங்க .. "

" ஹா ஹா ஹா..."

" சிரிக்காதிங்க .. அச்சோ ..கீழே போனாலே அத்தை என்ன சொல்வாங்கன்னு பயம்மா இருக்கு .. உங்களை நான் வந்து கவனிச்சுக்குறேன் ..பை .. " என்றபடி போனை வைத்தாள் ஜானகி ..

வள் போனை வைத்தபிறகும் சிரித்து கொண்டிருந்தான் ரகுராம் ..

" என்ன ரகு .. என்ன சொல்றா என் மருமக ? "

" ஹா ஹா .. நான் அநியாயம் பண்றேனாம் பா "

" சரியாதான் சொல்லிருக்கா "

" சித்தப்பா நீங்களுமா ? ...சரி போகலாமா ? "

" சரி பா .. நானும் கெளம்புறேன் " என்று அங்கு வந்து நின்றாள் சுபத்ரா .. சந்தன நிற சுடிதாரில், அடர்ந்த கூந்தலை பாதியாய் பின்னலிட்டு, அழகாய் பளிச்சென நின்றிருந்தாள் சுபத்ரா ..

" சுபா .. அப்போ நீ ஆபீஸ் வர்றியா ?  " என்று ஆயாசமாய் கேட்டான் ரகுராம் ..

" அப்போ இல்ல ரகு .. இனி எப்பவுமே வருவா " என்றபடி உள்ளே நுழைந்தான் அர்ஜுனன் .. உள்ளே நுழைந்தவன் சுபத்ரா பக்கம் திரும்பவே இல்லை .. அவளும் வளையல் குலுங்க ஓசை எழுப்பியும், கால் கொலுசு ஓசை கேட்பதற்காக வேகமாய் நடந்தும், தொண்டையை செருமியும் ஏதாவது சமிக்ஞை செய்தும், அர்ஜுனன் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை ..

" ஹே மச்சான் .. என்ன காலையிலேயே இங்க ? "

" ம்ம்ம் சுபியை ஆபீஸ் ல விடுறதுக்குத்தான் .. "

" மாப்பிளை சார் உங்க ஆளை நாங்க பத்திரமா கூட்டிட்டு போவோம் .. நீங்க கவலை பட வேண்டாம் " என்றான் ரகுராம்..

" அது எனக்கும் தெரியும் மை டியர் மக்கு மச்சான் .. பட் என் ஆபீஸ் கு என் இளவரசியை நான்தானே கூட்டிட்டு போகணும் ?? " என்றான் அர்ஜுனன்.

" என் .. என்னது உன் ஆபீசா ? "

" அட ஆமா ரகு ..நீ என்ன நினைச்ச ? " என்று தெரியாததை  போல கேட்டார் சூர்ய பிரகாஷ்..

" அப்பா உங்களுக்கு எல்லாம் தெரியுமா ? "

" தெரியுமாவா ? உனக்கு முன்னாடியே சுபா எங்க கிட்ட பேசி அனுமதி வாங்கிட்டா ரகு " என்றார் சந்திர பிரகாஷ்..

" ரைட்டு .. எல்லாரும் ஒன்னு கூடி  பிளான் போட்டுட்டு தான் என்னை இந்த ஓட்டு ஓட்டுனிங்களா ? "

அதற்குள் அங்கு வந்த அபிராமி, " அடடே வாங்க மாப்பிளை .. டேய் ரகு எருமை .. மாப்பிள்ளை வந்துருகாருன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன ?  " என்று வழக்கம் போல ஆரம்பித்தார் ..

" அம்மா , இதெல்லாம் அநியாயம் .. உங்க செல்ல பொண்ணு அங்க கால் மேல கால் போட்டுகிட்டு உட்கார்ந்து இருக்கா .. அவளை கேட்காமல் என்னை கேட்குறிங்களா ? "

" அதானே அக்கா... மாப்பிள்ளை வந்திருக்காரு ... அவரை பார்க்காமல் இவ என்ன பண்ணுறா ? " என்றபடி ரகுவுக்காக பேச வந்தார் சிவகாமி ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.