(Reading time: 33 - 66 minutes)

 

ரணியைவிட்டு கிளம்பிய நிரல்யாவின் இதழில் மௌனம். அவளருகில் ரக்க்ஷத்.

காரை டிரைவ் செய்தது அக்க்ஷத். அவன் அருகில் அரண்யா. அவள் மேல் தூங்கிக்கொண்டிருந்தான் கருண். குட்டிக்கு தூங்க கண்டிப்பாக அம்மா வேண்டும்.

ரியர் வியூ மிரரில் நிரல்யா முகம் பார்த்த அரண்யா “ இன்னும் ஏழு நாள்.” என்றாள் கிண்டலாக.

வெட்கமெல்லாம் வரவில்லை நிரல்யாவின் முகத்தில்.

மாறாக கனிந்தது அவள் முகம். அதே கனிவோடு தன்னவனை பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துகொண்டிருந்தான்.

முழுகாதல் கொள்ளும் உரிமை இன்னும் ஏழே நாளில்.

தடையற்ற சுதந்திர காதல்.

தன்னவனை தன் சுதந்திரமாய் தரும் தங்க தருணம்.

திருமணம்.

நான் என்றும் நீ என்றும் பிரிவென்றும் இல்லாமல் போகும் பெருவரம்.

இல்லறம்.

அறியாதார் கொண்டாலும் இங்குண்டு காதல் வரம்.

கல்யாணம்.

தொடங்கும்போதே கனிந்திருக்கும் காதலிங்கு.

கனி வனம்.

ஆரம்பமே அதி பூரணம்

நிரந்தரம்.

கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், கணம் கூடும் காதலுடன்

காத்திருக்கிறாள் நிரல்யா கனிந்த காதல்கொள்ள.

முற்றும்

முடிவுரை:

கனியாதோ காதலென்பது கதையை எழுதியதன் ஒரே நோக்கம் பொழுதுபோக்கு. கருத்து சொல்லும் நோக்கம் துளியும் கிடையாது. ஆனாலும் நான்கே வரியில் கதை எழுதினாலும் அதில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டலும் எதோ ஒரு கருத்து ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. வாட் டு டூ?

என் கதையில் அப்படி ஒளிந்திருக்கும் உட் கருத்துகூட ஒரு தவறான காரியத்தை நியாயபடுத்திவிட கூடாது என்பது என் மனம்.  ஆக பொழுது போக்கிற்கும் (நானறிந்த) நியாயத்திற்கும்  இடையில் கதை பின்னினேன்.

எந்தவகையிலும் யாரையும் வருந்துமாறு செய்துவிட கூடாது என்று என்னாலான முயற்சிகளை செய்தேன். (ஸ்டில் சுஜாவை ஒரு நாள் டென்ஷனாக்கிட்டேன்...சாரி)

எந்த வகை குறை இருப்பினும் மன்னிப்பீராக.

இதுவரை இந்த கதையை படித்து, விமர்சனங்களால் என்னை ஊக்குவித்த அத்தனை பேருக்கும் நன்றிகள் ஆயிரம்.

இவ்வளவு எளிதாக ஒரு கதையை பிரசுரிக்க முடியுமா? இவ்வளவு அருமையான வாசகர்கள் சிறு முயற்சி இன்றி கிடைப்பார்களா?

சில்சீ எனும் அற்புதம். அங்கு மட்டுமே இது சாத்தியம்.

நன்றி சில்சீ.

பிரதிபலன் பாராமல் ஒவ்வொரு விஷயத்திலும் சில்சீ குழு தந்த அத்தனை உதவிகளுக்கும் ஊக்கங்களுக்கும் எத்தனை நன்றி சொல்ல?  எப்படி நன்றி சொல்ல? புரியவில்லை.

நன்றி.

ரக்க்ஷத் நிரல்யா திருமணத்தை நான் எழுதவில்லை. காரணம் இக்கதையை சில்சீ யில் எழுத தொடங்கியபோது அலிகோரி யாக எழுதும் எண்ணம் துளியும் இல்லை எனினும், கதை முக்கால் பகுதிக்கு மேல் வந்ததும் வாசித்து பார்த்தால்,

பைபிள் சொல்லும் புனித பயணத்தை அதாவது இறைவனை தேடும் மனிதனுக்கும்  அந்த தெய்வத்துக்கும் இடைபட்ட நேச பயணத்தை, வேதாகமம் சொல்லும் அதன் ஒவ்வொரு நிலைகளை, குறியீட்டு முறையில் இக்கதை குறிப்பதை உணர்ந்தேன்.

அந்த வகையில் ரக்க்ஷத் யேசுவையும், நிரல்யா மனித சமூகத்தையும் குறிக்கும் அடையாளங்களாக அமைந்திருந்தன.

கதாபாத்திரங்களுக்கு யோசிக்காமல் வைத்த பெயர்தான் , அவைகள் கூட இம்மி பிசகாமல் அப்படியே இந்த அலிகோரிக்கு ஒட்டி போனது எனக்கு பேராச்சர்யம். பெரு மகிழ்ச்சியும் கூட.

அதனால் கிறிஃஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் சபையை குறிக்கும் இன்றைய நிலையை குறிக்கும் வகையில் நிரல்யா திருமணத்திற்கு காத்திருப்பதுபோல் முடித்துவிட்டேன்.

(அப்படியே எம் எச்க்கு மீனிங் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்)

முதலும் முடிவும் கர்த்தருக்குறியது என்பது என் இறைநம்பிக்கை.

அந்த வகையில் என் முதல் கதையான இக்கதையும், அதன் முடிவு பகுதியான இதுவும் அவருக்காக.

நன்றி தெய்வமே!

Episode # 12

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.