(Reading time: 41 - 81 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 23 - புவனேஸ்வரி கலைச்செல்வி

நித்யாவை பார்த்த சந்தோஷத்தில் அந்த சிறுவனை கவனிக்காத மீரா கிருஷ்ணனிடம் திரும்பி

" கண்ணா ஒரு விஷயம் தெரியுமா ? நான் இப்போதான் இவளை நெனச்சுகிட்டே இருந்தேன் .. கார்த்திக் அண்ணா வந்ததும் மகாராணி என்னை மறந்துட்டாளேன்னு" என்றாள்... அவள் உத்தட்டை சுழித்து சோகமாய் சொன்ன பாவனையில் சொக்கித்தான் போனான் கிருஷ்ணன் ..

" அநியாயத்துக்கு அழகா இருந்து தொலைக்கிற டீ நீ .. இங்க இருந்த ரொம்ப  ஆபத்து வா கீழ போகலாம்" என்றவனிடம்

VEVNP

" வெவ்வெவ்வெவ்வெவ்வெவ்வெவெவ்வெ" என்று உதட்டை சுழித்து காட்டிவிட்டு ஓடினாள் மீரா ... அதற்குள்,

" ஏ புள்ள வள்ளி "

"அட இந்த மனுஷனுக்கு மூச்சுக்கு முன்னூறு  தடவை என் பேரை சொல்லலேன்னா தூக்கமே வராதே " என்று சலித்து கொண்டு தாத்தாவின் முன்வந்து நின்றார் பாட்டி ...

" அடடே .. உங்களோடு ஒரே தொல்லையா போச்சே ? எதுக்கு என் பெயரை ஏலம் விடுறிங்க ? " என்றார்...

" ஆமாடி.. உன் பெயரை  ஏலம் போடுறதுதான் என் வேலை பாரு .. ஏதோ கார் வந்து நிக்குது பாரு " என்றார் வேலு தாத்தா .. அதற்குள் அங்கு வந்தனர் கிருஷ்ணனும் மீராவும் ..

" அவங்க என் சிநேகிதன் குடும்பம் தாத்தா...ஊட்டியில இருந்து வராங்க  " என்றான் கிருஷ்ணன் ..

" அடடே .. என்னங்க நீங்க இப்படியே  உட்கார்ந்து இருக்கீங்க ? புள்ளைங்க எவ்ளோ தொலைவில இருந்து வருதுங்க ... வாங்க " என்று கணவரை துரிதப்படுத்திக் கொண்டே வாசலுக்கு விரைந்தார் பாட்டி .. அவர் குரல் எழுப்பியதில்  மற்றவர்களும் வாசல் வந்தனர்...

" அடடே வா நித்யா, கார்த்தி, லக்ஸ்மி அம்மா , ஆகாஷ், சுப்ரியா.. எப்படி இருக்கீங்க ? எப்போ வந்திங்க ? " என்று ஆளுக்கொரு கேள்வியை  கேட்டு கொண்டு இருந்தனர் .. மீராவின் கண்கள் முதலில் பார்த்தது வருணைத்தான்...

" வருண் " என்றவன் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள்.....

" மீரா அக்கா .. எப்படி இருக்கீங்க? "

" நான் நல்ல இருக்கேன் டா.... நீ எப்படி இருக்க ? அப்பா அம்மா நல்ல இருக்காங்களா ? உன் அண்ணா எப்படி இருக்கான் ? " இருவரும் ஆனந்தமாய்  பேசிக்கொள்ள  அனைவருமே அந்த சிறுவன் யாரென்று கேள்வியை பார்த்தனர் ... அவர்களுக்கும் சேர்த்து இப்போ அந்த பையன் யாருன்னு நான் உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு .. எஸ் ... என்னை தடுக்காதிங்க .. அப்படியே எல்லாரும் மேல பாருங்க... ஒரு குட்டி பிளாஷ் பேக் ..

நம்ம கிருஷ்ணா முதன்முதலில் மீராவை ஒரு பூக்கடையில் பார்த்தது ஞாபகம் இருக்கா ? " அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் " நு நம்ம கிருஷ்ணா மைன்ட் வாய்ஸ் பாட்டு பாடும்போது பளார்னு ஒரு சத்தத்தில் நம்ம  ஹீரோ தரையிறங்கி வந்தாரு .. அங்கு காளி உருவில் நின்றிருந்தாள் மீரா .. அந்த பூக்கடையில் வேலை செய்யும் சிறுவனின் அண்ணன்தான் மீராவிடம் அறை வாங்கியவன் ...

அவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள் நம்ம ஜான்சி ராணி ... சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட கிருஷ்ணன், அந்த சிறுவனிடம் நடந்ததை பற்றி கேட்டான்.. அந்த ஏழை சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள டி தோட்டத்தில் வேலை செய்வதாகவும் அவன் பகுதி நேரமாய் அந்த பூக்கடையில் வேலை செய்வதாகவும் அவனின் படிப்பிற்கு மீரா உதவுவதாக சொன்ன வருண்தான் இவன் ... ( ஹப்பாடா இரத்தின சுருக்கமாய்  சொல்லி முடிச்சிட்டேன் .... அய்யே இவ்வளவு தானா? என்று நீங்க கேட்குறது புரியுது .. பின்ன, நான் எப்போ ட்விஸ்ட் வெச்சாலும் நீங்க எல்லாரும் கண்டுபுடிச்சிடுறிங்க..எனக்கு போர் அடிக்குமே .. அதுனாலத்தான் .. ஹா ஹா ... சரி வாங்க பின்னாடி இன்னொரு கார் வருது பார்ப்போம்)

" ஹே சஞ்சய் " என்று கிருஷ்ணனும், " வாங்க புவனா " என்று மீராவும் ஒரே நேரம் அந்த காரில் இருந்து இறங்கி வந்தவர்களை வரவேற்றனர்..

" ஹே மச்சான் கங்க்ராட்ஸ் டா " என்று கிருஷ்ணனை அணைத்துக்  கொண்டான் சஞ்சய் ..

புவனாவும் " வாழ்த்துக்கள் மீரா " என்றாள்...

" தேங்க்ஸ் புவனா .. நீங்க வருவிங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல "

" நீங்க அவ்ளோ அன்பா கூப்பிட்டும்  வரமுடியாதுன்னு சொல்ல மனசு வரல .. அதான் .. பட் ஐ எம் சாரி .. கல்யாணம் முடிஞ்ச உடனேயே நான் கிளம்பிடுவேன் .. பிருந்தாவனத்துல  எல்லாரும் என்னை தேடுவாங்க ... "

 " இதுக்கு ஏன் மன்னிப்பு எல்லாம் " என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அபிராமி அங்கு வந்தார் .. மீரா ஏற்கனவே புவனாவை பற்றி சொல்லி  இருந்தாள்.  கிருஷ்ணனும் அவனது திட்டத்தை அபிராமியிடம் முன்பொரு நாள் சொல்லி  இருந்ததால் அவருக்கு புவனாவை நன்கு தெரியும் ..

" அடடே ...வாம்மா .. நல்லா இருக்கியா ? " என்றார் .. அபிராமி- சூர்யா இருவரிடம் புன்னகைத்த புவனா அவரின் காலில் விழுந்து ஆசி பெற போக  அதே நேரம் சூர்யாவின் பாதம்  தொட்டு வணங்கினான் சஞ்சய் .. ஒரே நேரத்தில் இருவரும் " அடடே நல்ல இருங்கப்பா " என்றனர் ... சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கிருஷ்ணனுக்கு தன் நண்பனின் செயல் புதிதாக இருந்தது .. " ஓஹோ கதை இப்படி போகுதா?? மவனே நீ மாட்டுன இருடா உனக்கு இருக்கு " என்று மனதிற்குள் சொல்லி கொண்டான் கிருஷ்ணன் .. அதன் பின் அவர்கள் அனைவரையும் கிருஷ்ணன்  தாத்தா- பாட்டிக்கு  அறிமுகப்படுத்தினான் ..

வருண் தாத்தா- பாட்டியிடம்  நன்றாக ஓட்டிகொண்டான் .. சுபத்ராவும்  அர்ஜுனனும் நித்யா- கார்த்தி இருவரையும் வாரிக் கொண்டு இருந்தனர். அதே நேரம் மீராவும் புவனாவுடன் பேசிக்கொண்டு மற்ற நால்வரிடமும் புவனாவை அறிமுகப்படுத்தினார் .. கிண்டலும் கேலியுமாய் போய்க் கொண்டிருந்த அவர்களின் பேச்சு பிருந்தாவனம் பக்கம் தாவி பிறகு கார்த்தி நித்தியின் இசை குழு பற்றியும் தொடர்ந்தது .. அவர்களின் இசை குழுவில் பிருந்தாவனத்தின் குழந்தைகளையும் சேர்த்து கொண்டால் என்ன ? என்று இருவருக்குமே தோன்றியது .. பிறகு அதை புவனாவிடமும் பேசி சென்னை சென்றதும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவெடுப்பதாய் திட்டமிட்டனர் .. சஞ்சய், சந்துரு மற்றும் சூர்யாவிடம் பேசிக்கொண்டு  இருந்தாலும் அவனின் பார்வை புவனாவை தொடர்வதை கிருஷ்ணன் கண்டு கொண்டான் ..

" ம்ம்ம்ம்கும்ம்ம் " என்று தொண்டையை செருமிக்கொண்டு தனது நண்பனது அருகில் வந்தான் கிருஷ்ணன் ..

" என்ன மச்சான் தொண்டையில கிச்சு கிச்சா ? " - சஞ்சய் ..

" இல்ல மச்சான் மனசுக்குள்ள கரப்பான்பூச்சி " என்றான் கிருஷ்ணன் கிண்டலாய்..

" ஓஹோ சரி டா "

" டேய் பேச்சை மாத்தாதே .. உன் பார்வையே சரி இல்லையே .. எதுக்கு நீ  அங்கேயே பார்த்துகிட்டு இருக்க ? "

" டேய் நான் இவ்வளவு நேரம் அப்பா கிட்ட பேசிகிட்டு இருந்தேன் டா "

" அங்க வைலட் கலர் ஷர்ட் போட்டு இருக்கறது யாரு தெரியுமா ? "

" மொததானெ நீ சொன்ன டா "

" ம்ம்ம் அவன் நித்யாவுடையா ஆளு .. எவ்வளோ தைரியம் இருந்தா அவன் பக்கத்துல இருக்கும்போதே நீ நித்யாவை சைட் அடிப்ப ? " என்று வேண்டுமென்றே நண்பனை சீண்டினான் .. அவன் போட்டுவாங்க முனைவதை அறியாத சஞ்சையோ பதறி

" டேய் மச்சான் .. நான் புவனாவை பார்த்துகிட்டு இருந்தேண்டா.. நித்யாவை இல்ல " என்று உளறி கொட்டினான் ..

" அப்படி போடு அருவாளைன்னனாம்"

" ..."

" என்னடா ? "

" இல்லடா இப்போ நீ யாருகிட்ட அருவாளை போடா சொன்ன ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.