(Reading time: 28 - 55 minutes)

காதல் நதியில் – 16 - மீரா ராம்

மும்பையிலிருந்து புறப்படுவதற்கு முன் தினம் சாகரியும் ஆதர்ஷும் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவர்களை முந்திசென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் அடிபட்டவரை மருத்துவனை சென்று அனுமதித்து விட்டு வந்தனர் இருவரும்... எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சற்றே பயந்து விட்டாள் சாகரி... அவளை அவன் சமாதானம் செய்து கொண்டிருக்கையிலே மருத்துவர் வந்து இப்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள், வீட்டிற்கு தகவல் கொடுத்திருக்கிறோம்.. வந்து கொண்டிருக்கிறார்கள்... உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது... நீங்கள் செய்த உதவிக்கு நன்றி... என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..... 

அதன் பின் அனைவரும் கிளம்பி சென்னை வர, நாட்களும் வேகமாக நகர்ந்தது... அந்த சம்பவத்தையும் மறந்தே போயினர்...

மஞ்சத்தில் நிறைந்து நின்ற தன் மன்னவனிடம் மானசீகமாக உரையாடிக்கொண்டிருந்தவள் எப்போது உறக்கம் கொண்டாள் என்று அவளுக்கே தெரியாது... திடீரென்று கேட்ட சத்தத்தில் விழித்தவள், பக்கத்தில் மயூரி இல்லாதது கண்டு, மெல்ல விளக்கை எரியவிட்டு மயில் என அழைத்துக்கொண்டே ஹாலுக்கு வர, அங்கே தெரிந்த கரும் இருளில் கலக்கம் கொண்டவள் கைகள் தானாக விளக்கை நோக்கி உயர, அவள் கண்களை யாரோ அழுந்த மூடி துணியால் கட்டி அவள் வாயை பொத்தி சிறிது தூரம் அழைத்துச் செல்வதை உணர்ந்தாள்...

kathal nathiyil

திடீரென்று தன் அருகில் ஆள் அரவம் இல்லாது போக, வேகமாக தன் கண்கட்டை அவிழ்த்து எறிந்த போது அறையில் வெளிச்சம் படர்ந்தது... கூடவே வெடிக்கும் சத்தமும்... என்ன வெடித்தது என்று அவள் மேலே பார்த்த போது பல வண்ண நிற தாள் மழை அவள் மேலே பொழிந்தது... என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன்னர் அவளின் முன் தினேஷ், காவ்யா, சித்து, நந்து மற்றும் மயூரி தோன்றி, மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே... என்று வாழ்த்து தெரிவித்தனர்...

ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றவளை இழுத்து பிடித்து வந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட வைத்தனர் அனைவரும்.... மயில் அவளுக்கு இரண்டு பெண்கள் அருகருகே அமர்ந்து ஊஞ்சல் ஆடுவது போல் உள்ள செராமிக் பொம்மையையும், காவ்யா அவளுக்கு ஒரு வெள்ளி குங்குமச்சிமிழும், தினேஷ் அவளுக்கு ஒரு சுடிதாரும், நந்து சித்து அவளுக்கு அழகான இரண்டு குட்டி டெடி பியரையும், ஒரு பெண் நடனம் ஆடுவது போல் உள்ள மழலையர் ஓவியமும் வரைந்து கொடுத்திருந்தனர்... கைநிறைய பரிசுப் பொருட்கள் நிறைந்திருந்த வேளையிலும் மனம் மட்டும் அவளது ராமனை தேடியது, அவனைப் பார்க்க துடித்தது, அவனின் வார்த்தை கேட்க வேண்டுமென்று அவள் ஏங்கிய வேளையில் அவளது கைப்பேசி சிணுங்க... தினேஷ் அனைவரிடமும் சரி வாங்க தூங்கலாம்... சாகரி நீயும் போமா தூங்கு என்று அனுப்பி வைத்தான்...

புது எண்ணில் யார் அழைப்பது அதுவும் இந்த நேரத்தில் என்று தயங்கியவள், பின் அழைப்பை ஏற்ற உடனேயே,

“என்னைக் கொள்ளை கொண்டவளே

பூவுக்கும் உன் மென்மை இல்லாது போனதில் விந்தையில்லையடி...

தூரிகைக்கும் உன் முகம் பரிட்சியமானதில் பேரானந்தமடி....

என் இதய சிம்மாசனத்தில் ஆட்சி புரியும் உன்னிடம்

ஒன்று சொல்ல விழைகிறேனடி பெண்ணே...

நீ என்னுள் வந்த விதம் நான் அறியேன்...

நீ என்னவளான நாளும் நான் அறியேன்...

ஆனால் எனது இந்த ஊண் உயிருக்கு உரியவள் நீ என்பது மட்டும் அறிவேன்...

என்னுள் நிறைந்து தளும்பிக்கொண்டிருக்கும் உன்னை

என்றும் நிறைவாய் பார்த்துக்கொள்வேனடி கண்மணி...

உன் கைத்தலம் பற்றி என் நெஞ்சோடு உன் விரல்கள்

சேர்த்தணைத்துக்கொள்ள விழைகிறேனடி கண்ணம்மா...

என்று வரும் அந்த நாள் என நான் காத்திருக்கையில்

வந்து சேர்ந்தது இந்த இனிய நாளும்...

ஆம்...  இம்மண்ணில் என் சீதை எனைச்சேர ஜனனமெடுத்த நாள்...

என்னவளாக என் சகலமுமாக மாறிய

என் சகிக்கு

இந்த அடியேனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உள்ளம் சிலிர்த்து தான் போனது அவளுக்கு தன்னவனின் வாழ்த்தைக் கேட்டு... அவனிடம் பேசிவிட மாட்டோமா என்று ஏங்கிய அவள் மனது இப்போது அவனின் அதீத காதலில் நிலை தடுமாறி வீழ்ந்தது அவனின் இதய காலடியில் மெதுவாக...

அவன் குரல் கேட்க ஆரம்பித்த தருணத்திலிருந்து அவளுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர கிடைத்தது... அவள் கைபேசி சிணுங்கிய போது மணி சரியாக 12 ஆக சில நொடிகளே இருந்தது... எனில், அனைவரும் முன்னரே அவளது பிறந்தநாளைக்கொண்டாடியது ஏன் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது... அதற்கான விடை அவளுக்கு இப்போது கிடைத்துவிட்டது...

ஆம்... அவள் மனதின் நாயகன், உள்ளங்கவர்ந்த கள்வன் பேசுவதிற்காக தான் அத்தனையும்...

தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களை எண்ணி அவள் இதயம் பெரும் உவகை கொண்டது.... அதிலும் தினேஷ் போன்ற புரிந்து கொள்ளும் அண்ணன் தனக்கு கிடைத்தது நிச்சயம் கடவுளின் செயல் தான் என்றெண்ணிக்கொண்டாள்…

தன்னவனுக்கு நன்றி சொல்ல கூட வார்த்தைகள் வெளிவராது திணறினாள் அவள்... அவளிடமிருந்து எந்த சத்தமும் வராது போகவே அவனுக்குள்ளும் சொல்லமுடியாத அளவு தவிப்பு உருவானது... காதலாகி அது கசிந்துருகி அவளது பெயரை உச்சரிக்க எத்தனித்தது அவன் உதடுகள்... கோடி ஆசைகள், இதயத்தில் கூக்குரலிட, அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட துடித்தன அவளது பெயர் தாங்கி நின்ற அவனது அதரங்கள்...

சீதை என்ற இரு எழுத்துக்கள் சொல்ல அவன் திணற தான் வேண்டியிருந்தது...

நீ இப்போது என்னை அவளிடத்தில் தெரிவிக்க போகிறாயா இல்லையா என்ற மிரட்டலுக்கு தான் பணிந்தவன் அல்ல என்பது போல், அழுந்த மூடிக்கொண்டது தன் இதழ்களை உதடுகள்... உனைப் பிரித்து என்னை எப்படி வெளி கொண்டுவருவதென்பது எனக்கு தெரியும் என்று வார்த்தை முறுக்கிக்கொள்ள, உன்னால் முடிந்தால் என்னை பிரி பார்ப்போம் என்ற எகத்தாளத்தோடு உதடு அசையாமல் இருந்தவாறு வார்த்தைகளும் உதடுகளும் செல்ல சண்டை தனக்குள் போட்டுக்கொண்டிருந்தது...  அதற்கு மேல் மனதிற்கு பொறுமையில்லாமல், உள்ளிருந்து காதலை வெளிதள்ள, பாடலாய் அது வெளிவந்தது....

உன் பேர் சொல்ல ஆசை தான்

உள்ளம் உருக ஆசை தான்

உயிரில் கரைய ஆசை தான்….

ஆசை தான்… உன் மேல் ஆசை தான்…”

ஆசைதான் உன்மேல் என்று சொல்லிவிட்டவன் அவளின் பதிலுக்காக காத்திருந்தான்… அவளும் அவனையேப் பின்பற்றினாள்…

உன் பேர் சொல்ல ஆசை தான்

உள்ளம் உருக ஆசை தான்

உயிரில் கரைய ஆசை தான்….

ஆசை தான்… உன் மேல் ஆசை தான்…”

அவளின் வரிகளை கேட்டதும் அவனுக்குள் இனம் பிரித்து கூற முடியாத உற்சாகம் பீறிட்டது... அவள் பேசிவிட்டாள்... இத்தனை மணி நேரம் அவன் காத்திருந்து அவளிடம் இந்த அர்த்த ராத்திரியில் பேசியதற்கு பலன் கிட்டிவிட்ட சந்தோஷத்தில், மேலும் அவளிடம் தன்னை இழந்து வாய் மொழியாய் வார்த்தைகளை பாடலாய் கோர்த்தான்...

“உன் தோள் சேர ஆசை தான்…

உன்னில் வாழ ஆசை தான்

உனக்குள் உதய ஆசை தான்

உலகம் மறக்க ஆசை தான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் மாற ஆசை தான்…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.