(Reading time: 38 - 75 minutes)

12. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

ரண்டு நாட்களுக்கு முன்பு....

அடித்து போட்டது போல் தூங்குவது என்பார்களே அது போல, ஆனால் நிஜமாகவே ரகு அடித்து போட்டதலோ அல்லது மன உலைச்சலினாலொ அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் மது. மேகா அவள் அருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தாள்.

ரகு அவளை அடிக்கும் போது தான் அவள் உள்ளே நுழைந்தாள், ஸ்தம்பித்து நின்றவள் சுதாரிக்கும் போது ரகு மதுவை கட்டி கொண்டு ஆறுதல் கூற அவர்களே பார்த்து கொள்ளட்டும் பிறகு கேட்கலாமென யோசனையுடன் சென்று விட்டாள்.

Nenjamellam kathal

சற்று நேரத்தில் கீழே வந்தவன் எந்த உணர்வும் காட்டாமல் காரை எடுக்காமல் தான் பைக்கை எடுத்துக் கொண்டு பறக்க, அடி வயிற்றில் பயம் உண்டான போதும் அவன் நிதானம் தவற மாட்டான் என்ற நம்பிக்கையில் மதுவின் அறைக்கு வந்தாள்.

மெல்ல மதுவிடம் அசைவு தெரிய, எழுந்து சென்று சூடான பாலுடன் வந்தாள்.அவள் எழுந்து முகம் கழுவி வந்தவுடன் பாலை கொடுத்து விட்டு, அமைதியாக அவள் முகம் பார்த்து அமர்ந்தாள்.

பாலை குடித்து விட்டு நிமிர்ந்தவள், மேகாவின் பார்வை தான் கன்னத்தில் பதிந்திருப்பதை பார்த்து அவசரமாக திசை திருப்ப எண்ணி,

"ஐயோ மணி 9 ஆகுது டி ஷோ க்கு டைம் ஆச்சு, இன்னும் இங்க என்ன பண்ற, வா கிளம்பலாம், உனக்கு 9 மணிக்கு தான ஷோ, என்ன எழுப்பறதுக்கு என்னடி" என்று படபடத்தவாறு தன் உடையை சரி செய்து கூந்தலை பின்னளிட்டாள்.

அவளை கூர்ந்து கவனித்த மேகா,

"இன்னைக்கு உனக்கு மட்டும் தான் ஷோ அதும் 10 மணிக்கு தான், என் பார்மலிடிஸ் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு, சோ அர்ஜுன் சார் நாளைக்கு தான் ஸ்டார்ட் பண்ண சொன்னாரு, அதும் இப்போ ஷோ பண்ணிட்டு இருக்க விஷ்ணு கூட ஜாயின் பண்ணிக்க சொன்னாரு, அண்ட் இந்த விஷயத்த நேத்து தான் உன்கிட்ட நான் சொன்னேன்!!!"

என்று சந்தேக பார்வையுடன் ஆராயவும்,

மனதிற்குள் தன்னையே திட்டி கொண்டு, கிளம்பினாள்.

அதற்கு மேல் மிகவும் எதையும் துருவ முன்வரவில்லை. வால் மறைக்கும் விஷயத்தை கேட்டாலும் பயனில்லை என தெரிந்த படியால் ரகுவிற்காக காத்திருந்தாள்.

புது அலுவலகத்தை அடைந்து, அனைவரிடமும் தன்னை மீண்டும் ஒரு முறை அறிமுக படுத்தி கொண்டு, அவர்களுடைய வாழ்த்துக்களுடன் தயாரானாள். ஆனால் மனம் தான் தயாராக இல்லை.

மணி பத்தை நெருங்க, மேகாவிடம் சொல்லி விட்டு ரெக்கார்டிங் ரூமிற்குள் செல்லும் போது, ரகு வந்தான். மிகவும் களைத்து போயிருந்தான் என தெரிந்தது.

கலைந்த கேசமும் அழுத முகமுமாக வந்து நின்றவனை பார்த்தல் இன்னும் மனம் கனத்து போனது. அருகில் வந்தவன் ஒரு பெரிய 'டெய்ரி மில்க் சில்க்' சாக்லேட்டை கொடுத்து "ஆல் தி பெஸ்ட் அம்மு" என்று புன்னகைத்தான்.

சிறு வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஒரு பழக்கம் அது. என்றும் புதியதாய் தெரிந்தது இல்லை.ஆனால் இன்று?!

மெல்லிய குரலில் தேங்க்ஸ் டா என கூறி விட்டு சட்டென சென்று விட்டாள்.

சிறிது நேரம் நின்றவன், மேகாவை அழைத்துக் கொண்டு வீடு சென்றான்.

"ஹாய் கோவை அண்ட் சென்னை பீபில், இவ்வளவு நாள் என்னோட இனிமையான குரலை.. இல்லையா சரி டென்சன் ஆகாதிங்க என்னோடு குரல கேட்டு சகிச்சுட்டு இடைல ஒரு வாரம் நான் காணாம போன உடனே அப்பாடா ன்னு பேரு மூச்சு விட்ட கோவை வாசிகளுக்கும், இவ்வளவு நாள் இந்த நேரத்துல நல்ல தான டா ப்ரோக்ராம் போயிட்டு இருந்தது, இப்போ இடைல இவ யாரு புதுசான்னு யோசிச்சுகிட்டே கேட்டுகிட்டு  இருக்கிற சென்னை வாசிகளுக்கம் என்னோட இரவு வணக்கம், நமஸ்தே, நமஸ்கார் அண்ட் குட் இவனிங்.....

என்னடா ராத்திரி நேரத்துல குட் இவனிங் சொல்றான்னு யோசிக்கறது புரியுது ஆனா குட் நைட் சொல்ல முடியாதே அதான்"

என்று துள்ளலாக ஆரம்பித்து

"நான் தாங்க உங்க மதுமிதா வந்திருக்கேன் உங்க மனசுல இருக்க கவலை டென்சன் களைப்பு இத எல்லாம் விரட்டி அடிச்சு மயில் இறகால் உங்க மந்தை வருடர மாதிரி இருக்க காதல் பாடல்கள், கதைகள், கவிதைகளோட வந்திருக்கேன்... இன்னைக்கு பாடல்கள் அண்ட் கதைகள் பகரத்துக்கு முன்னாடி ஒரு சின்ன கவிதையோட இந்த நிகழ்ச்சிய ஸ்டார்ட் பண்றேன் அதை தொடர்ந்து   அருமையான புத்தம் புது காதல் பாடல்கள் காத்துகிட்டு இருக்கு" என்று மெல்லிய பட்டு போன்ற குரலில் முடித்தாள்.

கேட்டு கொண்டிருந்த அனைவரும் சொக்கி தான் போயினர் எனலாம். ரகுவும் மேகாவும் அவனுடைய காரில் சென்றவாறு கேட்க, ஆதி பால்கனியில் இருந்த ஊஞ்சலில் படுத்து கொண்டு தான் ஹெட்போனில் அந்த குரலை கேட்டு மனதில் பதிய வைத்து கொண்டிருந்தான். மனம் முழுக்க ஏக்கமும் வலியுமாக.

ஸ்வேதா புரியாத உணர்வுடன், அதை தன் அறையில் தரையில் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தாள். வருண்  தன்னவளை எண்ணியபடி வேதனையில் கேட்டு கொண்டிருந்தான்.

பிரகாஷ் மனம் முழுக்க காதலும் சோகமுமாக அன்று நடந்த நிகழ்சிகளை அசை போட்ட படி தன் மனைவியாக வர போகிறவளின் பட்டு போன்று தொட்டு சென்ற குரலை கேட்டு கொண்டிருந்தான்.

கதையும் கவிதைகளும் பாட்டுமாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் மது பேச ஆரம்பித்தாள்.

"என்ன டியர்ஸ் இவ்வளவு நேரம் நம்ம நேயர்கள் அனுப்புன கதை கவிதைன்னு எல்லாமே உங்க கிட்ட சொல்லியாச்சு.. ஒரு சிலர் அவங்க உண்மையான காதல் கதையே அனுப்பியிருந்திங்க.. சில காதல் கதைகள் அழகா கல்யாணத்தில்  முடிஞ்சாலும் கணவன் மனைவிங்கற அழகான பந்தத்தில் தொடர்ந்துட்டு இருக்கு அவங்க எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

ஆனா சில காதல் கல்யணம் வரை போறது இல்ல, ஏன் சில காதல் சொல்லாமலே சாகடிக்க படுகிறது, சிலர் காதல் தான் செயய்றோமான்னே தெரியாம ஏதோ ஒரு மாய வலைல விழுந்து சிதைஞ்சு போயிடறாங்க, சிலர் காதல் ன்னு பேர் செஞ்சுகிட்டு வேற ஒருத்தர் கூட சந்தோசமா கல்யணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை நடத்துறாங்க...

ஒவ்வொருத்தர் மனசுலயும் காதலுக்கான தனி இலக்கணம் பொருள் எல்லாம் வெச்சுட்டு அது படி காதல் பண்றாங்க... ஆனா காதல்ன்ன என்னங்க...

என்ன பொறுத்தவரைக்கும் காதல்ன்னா அடக்க முடியாத அடங்க கூடியதா இல்லாத அழகான அன்பு... விசித்திரமான அவஸ்தை.. தாய் பால் விட தூய்மையானதுன்னு சும்மா வார்த்தைல சொல்லிட முடியாதுங்க.. அணு அணுவா ரசிச்சு அனுபவிச்சு வாழ்ந்து பாக்கணும்..

காதல் எப்போதுமே எங்கேயுமே எல்லார் கிட்டயுமே ஒன்னு தான்.. அதற்கு நிறம் மதம் மட்டுமில்லை நல்லவர் கேட்டவர் அது இதுன்னு எதுவுமே தடை இல்லை...

மனசு முழுக்க தன இணைய நினைச்சு உருகி உருகி காதலிச்சா தான் காதலா?  சத்தியமா இல்லைன்னு தாங்க சொல்வேன்...

ஆனா உங்க துணையை ஆத்மார்தமாவோ இல்ல ஆத்திரமாவோ எப்படி நேசிச்சாலும்  கடைசில அந்த நேசத்த அளவு கடந்த பாசத்த நினைச்சு நினைச்சு உருகி தான் போவிங்க..

ஆனா இந்த காதல் எல்லாம் ஏன் கல்யாணத்தில் முடியறது இல்லை.... தயக்கம்,பயம், பொறமை,தான் தாங்கற அகங்காரம்,ஈகோ இப்படி நிறைய இருக்குங்க...

இப்போ எல்லாம் காதல்க்கு எதிரின்னு புதுசா யாரும் வர வேண்டாம்... காதலர்களே பெரிய எதிரிய கூடவே வெச்சிருக்காங்க அதாங்க ஈகோ அண்ட் புரிதல், நம்பிக்கை ... அந்த ஒன்னு மட்டும் இல்லாம புரிதல் சரியா இருந்து நம்பிக்கை ஒன்னு வந்துட்ட எந்த காதலும் எந்த நிலையிலும் கண்டிப்பா சகாதுங்க..."

இதை சொல்லும் பொது அவள் குரல் கொஞ்சம் தழுதழுத்தது.....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.