(Reading time: 36 - 72 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 06 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ப்............... பா " என்று உற்சாகமாய் வந்து மனோவின் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள் தேன்நிலா.... அவள் குரல் கேட்டு சமையல்  அறையிலிருந்து வெளிவந்த பாக்கியம், அவள் முதுகிலேயே இரண்டடி வைத்தார் ..

" ஹே ... முதலில் போயி குளிச்சிட்டு வாடி .. பேருதான் டாக்டர் .. கொஞ்சமாச்சும் சுத்த பத்தம் இருக்கா ? வந்த உடனேயே  அப்பாகிட்ட ஒட்டிகிட்டு "

" அப்பா எனக்கொரு டவுட்டு ..சுத்தம் நா ஓகே ...அதென்னப்பா  பத்தம் ? கூல் டவுன் பாக்கியம் ... நீங்க இதுக்கு முன்னாடி என்னை இதைவிட வேகமா அடிச்சும் கூட நான் என் செல்ல அப்பாவை கொஞ்சாமல் இருந்திருக்கேனா ? அப்படி இருக்கும்போது, இன்னைக்கு மட்டும் திருந்திடுவேனா ? பொறாமையா இருந்தா சொல்லுங்க உங்களையும் கொஞ்சுறேன் " என்றவள் அவரை பதில் பேச விடாமல் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்...

Ithanai naalai engirunthai

" அடங்கவே மாட்டியா டி நீ ? " என்று கேட்டபடி கன்னத்தை துடைத்துக் கொண்டார் பாக்கியம் ..

" அதெல்லாம் சான்ஸ் இல்ல .. வேணும்னா நீயும் ஒன்னு கொடு "

" ம்ம்ம் ...அதுக்கு வேற ஆளை பாருடி .. உன்னை கட்டிகிறதுக்குனு ஒரு அப்பாவி வருவான் .. அவனை கேளு " என்றுவிட்டு அங்கிருந்து சென்றார் ..

சுவிட்ச் போட்டா எப்படி லைட் உடனே பிரகாசமா எரியுமோ அதே போல, பாக்கியம் அப்படி சொன்னதும் நிலாவின்  அகக்கண்ணில் வந்து நின்றான்  மதியழகன் ..

" மவனே உன்னை எப்படி இம்சை பண்ண போறேன் பாரு " என்று சூளுரைத்து கொண்டவளுக்கு தெரியாது அவள் ஏற்கனவே அவனை இம்சித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்று .

" நிலா... போயி ப்ரெஷ் ஆகிட்டு வா டா .. உன்கிட்ட நான் பேசணும் .. "

" என்ன விஷயம் பா ? ஏதோ பார்ட்டிக்கு போகணும் ..வந்ததும் தூங்கிடுன்னு சொன்னிங்களே ? "

" எஸ் பேபி .. அஞ்சு நிமிஷம் பேசிட்டு அப்பறம் தூங்கிடு சரியா ? "

" 300 செகண்ட்ஸ் ... ரொம்ப கஷ்டம்பா ... பட் உங்களுக்காக பொறுத்து போறேன் "  என்றவள் போற போக்கில் வீட்டின் கால்லிங் பெல்லை அடித்து சமையல் அறையில் இருந்து ஓடி வந்த பாக்யத்திடம் பலிப்பு காட்டிவிட்டு ஓடினாள்... மனோவோ அதை ரசித்து சிரித்துக்  கொண்டிருந்தார் ..

" ஹ்ம்ம்ம்ம்ம் இப்போ சொல்லுங்கப்பா என்ன விஷயம்?? "

" எல்லாம் இந்த நந்து பத்திதான்  நிலாம்மா "

" மறுபடியும் என்னவாம் அவனுக்கு " என்று கேட்டபடியே அருகில் இருந்த குட்டி தலையணையைத் தந்தையின் மடியில் வைத்து தலை சாய்த்து படுத்துக்  கொண்டாள்.... அதே நேரம் அங்கு வந்து நின்றார் பாக்கியம் .

" இன்னும் நல்லா செல்லம் கொடுங்க நீங்க .. பால் புட்டி உள்ளத்தான் இருக்கு .. பாப்பாவுக்கு  பால் கொண்டு வந்து தரவா ? " என்றார்...

" சூப்பர் மா... அப்படியே அதுல கொஞ்சம் கல்கண்டு மிக்ஸ் பண்ணி தந்திங்கன்னா, என் ஜென்ம பலனை அடைஞ்ச நிம்மதியில் குறட்டை விட்டு தூங்கிக்குவேன் "

" அடி கழுதை .. உன் தூக்கம் தாண்டி எல்லாருக்கும் பிரச்சனை .. பாவம் அந்த நந்து பையன் .. என்கிட்ட எவ்ளோ கெஞ்சினான் தெரியுமா ? "

" அம்மா , அழகான பொண்ணுக்கு  அம்மாவா இருந்தா நாலு பசங்க வந்து கெஞ்சுவாங்க கொஞ்சுவாங்க, சோசியல் சர்விஸ் கூட இலவசமா செய்வாங்க ... என்ஜாய் கரோ "

சோபாவில் வந்து பொத்தென அமர்ந்து கணவனை பார்த்தார் பாக்கியம் ..

" உங்க பொண்ணுக்கிட்ட நான் பேச முடியாது .. நீங்களே பேசுங்க " என்றுவிட்டு டிவி யை ஆன் செய்தார் ..

" இப்போ அந்த நந்துவுக்கு என்னத்தான் வேணுமாம் அப்பா ? "

(வைட் வைட் யாரந்த நந்து ?? நம்ம மதி சாருக்கு போட்டியா ?? ஹா ஹா நோ நோ நோ ... நம்ம நந்து என்கிற நந்தகுமார், தேன்நிலாவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் 8 வயது சிறுவன் ... அவனின் போதாத காலமோ என்னவோ இரண்டு நாட்களுக்கு முன் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கிரிகெட் விளையாடுகிறேன் பேர்வழி என்று அவளின் அறை ஜன்னலை உடைத்துவிட்டான் .. அவன் ஜன்னல் உடைத்ததற்கு கூட கோபமாகாத நம்ம நிலா, இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் கனவு கண்டுகொண்டிருக்கும்போது எழுப்பிவிட்டானே, என்ற கோபத்தில் அவனை திட்டிவிட்டாள்.... அப்போதும் கோபம் தனியாதவளாய் அவனுக்கு பிடித்த  அவனது சைக்கிளை தனது வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டாள்... பின்குறிப்பு , அந்த சைக்கிள் எங்க இருக்குன்னு நம்ம மனோ- பாக்கியம் இருவருக்கும் கூட தெரியாது ..அந்த சைக்கிளை தந்துவிடும்படி கெஞ்சிய நந்துவின் கோரிக்கையைத்தான் தனது தந்தையின் மடியில் படுத்தபடி பரிசீலனை செய்துக் கொண்டிருந்தாள் நமது வளர்ந்த (????) குழந்தை ... ஹாஹா ..மதி சார், தூக்கத்தை கலைச்சா என்ன நடக்கும்னு தெரிஞ்சு வெச்சிகோங்க ... நாளைக்கு இதெலாம் நான் சொல்லாம விட்டுட்டேனேன்னு  வரலாறு என்னை குற்றம் சொல்ல கூடாதுல ! )

" அப்பா அவன் சரியான  பேக்குப்பா.... எப்படியும் நம்ம வீட்டுல வந்துதான் தேடுவான்னு சொல்லிட்டு, நான் எப்பவோ சுவர் எகிறி குதிச்சு அவன் வீட்டு தோட்டத்திலேயே சைக்கிளை வெச்சிட்டேன் " என்று சிரித்தாள்....

" என்னது சுவர் ஏறி குதிச்சியா ? உன்னை ......... " என்று பாக்கியம் நிலாவை அடிக்க வர, அவரிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு

" அப்பா இவினிங் என்னை எழுப்பி விடுங்க " என்று சொல்லி தனதறைக்குள் சென்று  கட்டிலில் விழுந்தாள் தேன்நிலா.... எண்ணங்கள் மட்டும் தன் தாய் சற்று முன் துரத்திக் கொண்டே ஓடும்போது சொன்னதுதான் ஞாபகம் வந்தது ..

" வர வர  ரொம்ப வம்பு பண்ணுற நிலா நீ .... எவன் உன்னை கட்டிகிட்டு மாரடிக்க போறானோ தெரில ... சின்ன பிள்ளைகூட வம்புக்கு நிக்குற .. அதுவும் சரிக்கு சமமா .. இப்படித்தான் யாரு என்ன பண்ணாலும் திருப்பி  வம்பு பண்ணுவியா ? என்னடீ பழக்கம் இது ? "

நிலாவின் எண்ணங்கள்  மீண்டும் மதியழகனை சுற்றி வந்தது.... நிலவின் நிழலாம் நிழல் ... "ம்ம்ம்கும்ம்ம் " என்று உதட்டை சுழித்தவள் தன் ஹேண்ட்பேக்கில் கைவிட்டு துலாவி அந்த கடிதத்தை மீண்டும் எடுத்தாள்... " எவ்வளோ குட்டி ஆ எழுதிருக்கான் ..

" நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் இவ்வளவு அழகான கையெழுத்து வாராது பா ... பிறக்கும்போதே டாக்டர் மாதிரி எழுத பிறந்தவள் இந்த நிலா .." என்று தனக்குள்ளேயே பெருமை பேசிக்கொண்டாள்..." கையெழுத்து அழகாய் இருந்தால், தலையெழுத்து நல்ல இருக்குமாமே.. அப்பறம் ஏன் சிங்கத்தின் வாயில் தலையை விடுறான் ?? பொறுமையா பேசி வார்ன் பண்ணிடலாமா ?  " என்று அவள் யோசிக்கும்போதே உள்மனம் அவளிடம் பேசியது .. " நிலா பொறு பொறு .... அவன் இன்னைக்கு நடந்துகிட்டது மொத்தமா மறந்துட்டியா ?? அந்த முத்தம்... அது அவன் தானே ?? " ....

" இல்லை இல்லை " என்று சத்தமாய் சொன்னாள் நிலா...அவள் மனமோ " இல்லையா ? அப்போ அந்த மூச்சு காற்று, உன் கன்னம்  உரசிய மெல்லிய மீசையும் எந்த பிள்ளையுடையது நிலா ?? "

பதில் சொல்ல முடியவில்லை அவளால் ... தன் அனுமதி இல்லமால் சூடேறி சிவக்கும் கன்னங்களை அடக்கும் வழி தெரியாமல் தவித்தாள் அவள் .. " என்ன தைரியம் .. ராஸ்கல் ! " என்று அவள் முணுமுணுத்ததின் அர்த்தம் கோபமா ? நாணமா ? அது அவளுக்கே தெரியாத ரசியம்தான் .. நினைவுகளில் கனவு கண்டுக்கொண்டிருந்தவளை கனவுலகத்திற்கு கவர்ந்து சென்றாள் நித்ராதேவி ...

தே நேரம்,

" அம்மு " என்றபடி தனது பாட்டி அமிர்தவர்ஷினியைப் பின்னாலிருந்து அணைத்து முத்தமிட்டான் மதியழகன் .. ( மிஸ்டர் மதி , நீங்க பாட்டிக்கே  எல்லாத்தையும் வாரித் தந்துட்டா எனக்கென்ன தருவிங்க ? அப்படின்னு நிலா கேட்குறாங்க .. மறக்காமல் பதில் சொல்லிடுங்க ..ஹா ஹா )

" ... "

" என்ன அம்மு சைலண்டா இருக்க ? " என்று கேட்டவன் அவரை தன் புறம் திருப்ப சட்டென கண்களைத் துடைத்துக்  கொண்டார் அம்மு பாட்டி .. குறும்புத்தனம் மொத்தமும் அவரின் கண்ணீரில் வடிந்து விட,

" தாத்தா ஞாபகம் வந்துருச்சா பாட்டி ? " என்றான் மதி கவலை தோய்ந்த குரலில் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.