(Reading time: 27 - 54 minutes)

24. காதல் பயணம்... - Preethi

6 மாத இடைவெளி சொல்லும் பொழுது மிக பெரியதாக தெரிந்தது , ஆனால் இதோ நாட்கள் உருண்டோடி இன்னும் 1 அரை மாதமே இருந்தது திருமணத்திற்கு. இந்த இடைவெளியில், அனு அவளது mba படிப்பை முடித்துவிட்டு, அஸ்வத்தோடு சேர்ந்து அவனது நிறுவனத்திற்கு உதவி செய்தாள். தேஜுவோ அவள் விருப்பட்ட படிப்பை முடித்துவிட்டு, அதை செயல்படுத்தும் முறையாக திருப்பூரிலேயே ஒரு மருத்துவமனை நிறுவி இருந்தாள். ரவி தன் மகளுக்காக பெரிய மருத்துவமனையே கட்டிதந்தார். (அனு அஸ்வத் நிறுவனத்துக்கு போனது, தேஜு மருத்துவமனை திறந்தது எல்லாத்தையும் ஒன்னுஒன்னா பார்க்கலாம் வாங்க)

அனுவிற்கு அடிபட்டு 2 மாதம் கடந்திருக்க, அஸ்வத் எப்போதும் போல் அவளை காண வந்திருந்தான். அவனது வண்டி சத்தம் கேட்டே மூவரின் மனதில் மணி அடித்தது. எப்போதும் அஸ்வத் வரும் நேரம் தான், அவன் மாலை நேரத்தில் ஒருமுறை அவளை சந்தித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பழக்கத்தில் வந்தான். வண்டியின் சத்தம் கேட்டு அவன் வருவதை உணர்ந்தது அவள் மட்டும் அல்ல, ஹேமாவும் வெங்கட்டும் தான்... இருவரும் அந்த சத்தத்தில் நாசுக்காக அவ்விடத்தைவிட்டு நகர்ந்துகொள்ள, ஓரக்கண்ணால் இதை பார்த்தபோதும் வெளியே ஒன்றுமே தெரியாதவள் போல் அமைதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள் அனு. தானாகவே இதழ் ஓரத்தில் ஒரு முறுவல் வந்து சென்றது.

உள்ளே நுழைந்தவன் கண்கள் அறையை ஆராய அவன் இதழிலும் ஒரு முறுவல் வந்தது. பேசாமல் வந்து அமர்ந்தவன் “அத்தையும் மாமாவும் ரொம்ப நல்லவங்க போ...” என்று கிண்டல் செய்ய, புரிந்தும் புரியாதவள் போல... “ஏன் எனக்கு புரியலையே???” என்று வினவினாள்.

Kaathal payanam

“ஆமா ஆமா நீ புரிஞ்சாலும் புரியாத மாதிரியே தானே நடிப்ப” என்று லேசாக முனகிக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான். அவள் எதுவுமே சொல்லாமல் லேசான முறுவலோடு தொலைக்காட்சி பார்ப்பது போல் நடித்தாள். அவளை கண்டவனின் மனம் இலவச இணைப்பாக ஒரு எண்ணத்தை தந்தது. இதுவே என்னோட பழைய அனுவாக இருந்தாள் நான் சொன்னதுக்கு என்னை சிரமப்பட்டு முறைத்து, என்னை செல்லமாக அடித்து, சண்டை போட்டிருப்பாள் அதை பார்த்து நானும் ஆசையாய் ரசிச்சிருப்பேன் என்று மனதில் நினைத்தையே அவளிடம் கூறினான்.

“நீ மாறிட்ட அனு...” அவன் கூறியதற்கு புரியாமல் அவள் விழிக்க, “இப்போவும் என்னை பார்க்கும் போதுலாம் வெட்கப்படுற சிரிக்குற பேசுற ஆனால் என்னோட பழைய அனு வேற மாதிரி இருப்பாள்” என்று அவன் சொல்லி முடிக்கும் பொழுது அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அனு உணரத்தான் செய்தாள் ஆனால் விளக்கத்தான் வார்த்தை இல்லை. தனக்கே அதிசயமாக தான் இருந்தது அமைதியாய் மாறிப்போனது. அவள் ஏதோ சொல்ல வாய்திறக்க வெங்கட்டும் அவரை தொடர்ந்து ஹேமாவும் கையில் கோப்பையுடன் வந்தனர். ஒருமுறை அனுவை  பார்வைகளால் தழுவிக்கொண்டு பெரியவர்களோடு பேச துவங்கினான் அஸ்வத்.

யல்பான வேலை பற்றிய விசாரிப்பெல்லாம் முடிந்துவிட, ஹேமா துவங்கினார். “அடிபட்டாலும் பட்டுது அதை காரணமாக சொல்லியே மேடம் இடத்தை விட்டு நகருறது இல்லை. அப்பறம் வந்து போர் அடிக்குதுன்னு சொன்னா என்ன செய்யுறது. பாவம் இனிமேல் உன் பாடுதான் பெரும்பாடாய் இருக்க போகுதுப்பா” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

“அதெல்லாம் மாப்பிள்ளை சமாளிச்சிடுவார் நான் உன்னை சமாளிக்களை அந்த மாதிரிதான்???” என்று கிண்டல் அடித்து நேரத்தை கடத்திக்கொண்டிருந்தனர்.   

“அதான் எப்பவும் போல் ரேடியோ ஸ்டேஷன் போறாளே அத்தை..”

“இல்லை அங்க போயிட்டு வந்த அப்பறம் ரொம்ப நேரம் வெட்டியா இருக்குற மாதிரி இருக்கு.. mba கோர்ஸ் கூட முடிஞ்சிடுச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்று பதில் தந்தாள் அனு... சிறிது நேரம் மௌனமாய் யோசித்தவன்.

“நீங்க தப்பா நினைக்கலைனா அனு நம்ம கம்பனிக்கு வந்து போகட்டுமே... பின்னாடி எப்படியும் தெரிஞ்சிக்க தானே வேணும், இப்போவே நம்ம நிறுவனத்தை பத்தி தெரிஞ்சிக்கட்டும். அவளோட ஷோ முடிச்சிட்டு மதியம் போல வரட்டும் மாலைல நானே திரும்பி வந்துவிட்டுட்டு போறேன்” என்று பெரியவர்களிடம் கேட்டான் எப்படியும் அனு இதை மறுப்பாள் என்று தெரிந்ததால்.   

அவன் பேசுவதை கேட்டவர்களுக்கு சிறிது ஆச்சர்யம்தான், “இல்லைப்பா அது சரி வாராது கல்யாணத்துக்கு முன்னாடியே இடம் அதிகம் எடுத்திக்குற மாதிரி இருக்கும்” என்று பட்டும் படாமல் உரைத்தார் வெங்கட். அதை கேட்டவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கொஞ்சமேனும் ஒத்துக்கொண்டால் அல்லவே மனதை மாற்ற முடியும் இப்போது என்ன செய்வது என்று அவனுக்கே புரியவில்லை. அவன் ஏமாற்றத்தோடு முகம் சுருக்குவதை உணர்ந்த அனுவுக்குமே கஷ்டமாக தான் இருந்தது அவளுக்கும் இதில் விருப்பம் இல்லை தான் ஆனால் அவன் முகம் வாடுவது அவளுக்கு எங்கோ வலித்தது. இருவரும் என்ன சொல்லிகொள்வது என்று புரியாததால் அஸ்வத் பொதுவான பேச்சோடு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

படுக்கும் முன்பு வெங்கட்டின் தொலைபேசி சிணுங்கியது.

“சொல்லுங்க சம்பந்தி என்ன இந்த நேரத்திலே?”

“அச்சச்சோ படுக்க போயாச்சா? சாரிங்க... இல்லை நாளைல இருந்து அனுவை அஸ்வத் கூட கம்பனிக்கு அனுப்பலாமே” என்று நேரடியாக கேட்டுவிட்டார்.

அதை கேட்ட வெங்கட்டுக்கு தான் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அஸ்வத்தின் பெற்றோரை நினைத்து தானே வேண்டாம் என்று கூறியது இப்போது அவர்களே ஒத்துக்கொண்டதும் வேண்டாம் என்று எப்படி சொல்வது. சரி என ஒத்துக்கொண்டு அவனோடு தினமும் நிறுவனம் சென்று வர ஒத்துக்கொண்டனர் பெற்றோர்.

தே நேரம் அஸ்வதிடம் இருந்து அனுவுக்கு அழைப்பு வந்தது... “ஹாய் அனுக்குட்டி...” செல்லமாக அழைத்த அஸ்வத்திற்கு பதிலாய் ஒரு புன்முறுவலை மட்டும் தந்து “சொல்லு அஸ்வத்” என்றாள். அவனுக்கு வெறுப்பாக இருந்தது ஏன்தான் இவள் இப்படி பண்ணுறாளோ என்று நொந்துக்கொண்டு இப்போது இருக்கும் மனநிலையை கெடுக்கவிரும்பாமல் பேச துவங்கினான்.

“என்ன இந்த நேரத்தில கால் பண்ணிருக்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்டவளிடம்... “ஏன் இதுக்கு முன்னாடி நீ இந்த நேரத்தில என்கிட்ட பேசினதே இல்லையா?!” என்றான் கொஞ்சம் கடுப்பாக.

பேசிருக்கிறாள் காதலை உணர்ந்து தோழி எனும் போர்வைக்குள் இருந்த பொழுது பலமணிநேரம் பேசி இருக்கிறாள். மௌனமாய் மனதுக்குள்ளேயே ஒத்துக்கொண்டவளை மேலும் வினவாமல் பேச்சை துவங்கினான்.

“நாளைல இருந்து நீ நம்ம நிறுவனத்துக்கு வர போகிற...”

“அதுதான் அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாரே...”

“இப்போ சரின்னு சொல்லிட்டாரே...”

“எப்படி????”

“அதெல்லாம் உனக்கெதுக்கு? நாளைக்கு காலைல நீ ஷோ முடிச்சதும் உன்னை வந்து கூட்டிட்டு போறேன். நானே திரும்பி வந்து விடுறேன்” என்று கூறினான்.

“இல்லை நானே வந்திடுறேன்...”

“எதுக்கு இருக்க இன்னொரு காலையும் உடைசிக்கவா?”

...

“நானே வந்துக்கூட்டிட்டு போறேன் அவ்வளவு தான்” என்று பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட்டான். மீண்டும் கோவப்பட்டு அவளுடன் பேசாமல் இருக்க அவனால் முடியாது எனவே எப்படி அவள் பேசினாலும் அதுக்கும் பதில் தந்துவிட்டு வைத்தான் அழைப்பை. அனுவுக்கோ குழப்பம் தான் மிச்சம் அவன் பழையபடி மாறிவிட்டான் தான் ஆனாலும் இந்த 2 வருடங்களாக நடந்தவையை அவளால் மறக்கவும் முடியவில்லை. இவற்றை நினைத்து நினைத்தே அடாவடித்தனம் எல்லாம் குறைந்துபோனது அவளிடம்.

நிறுவனத்திற்கு சென்றபின் இருவருக்குள் பேசிக்கொள்ள நேரம் கிடைக்காமல் இல்லை, ஆனால் அதைவிட அனு தொழில் ரீதியாக கத்துக்கொண்டது தான் அதிகம், அஸ்வத் ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லித்தந்தான். எத்தனை ஆர்டர் வருகின்றது, எப்படி அனுப்ப படுகிறது, தரம், வேலை செய்வோர்கள், ஏன் சில பொருட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது, எப்படி சரி பண்ணுவது என்று பல... இதில் அவர்கள் திருமணம், அதன் கனவு என்று பேசிக்கொண்ட நேரங்கள் மிக மிக குறைவே. அவள் இருக்கும் நேரத்தில் கூடவே இருக்கும்படி பார்த்துகொள்பவன் மதியம் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடுவான். முதல் சில நாட்கள் எதர்ச்சியாக நடக்கிறது என்று நினைத்தவள் அதன் பின் தான் உணர்ந்தாள் தினமுமே அப்படிதான் என்று. வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும் சொல்லிவிட்டு தானே செல்வான் அதுவும் இல்லாததால் தானாகவே அதற்கு ஒரு எதிர்மறை காரணம் கண்டது அனுவின் மனம். அந்த நிறுவனத்தில் அவள் இருப்பதே 5 மணி நேரம் என்றால் அதில் 2 மணி நேரம் அஸ்வத் காணாமல் போனான். யோசித்து யோசித்து அவனிடமே நேரடியாக கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.