(Reading time: 47 - 93 minutes)

25. காதல் பயணம்... - Preethi

KANNAN AND MRS.THULASI KANNAN & MR.VENKAT AND MRS.HEMA VENKAT & MR.RAVI AND MRS.LATHA RAVI FAMILIES

HEARTLY INVITES YOU TO BLESS OUR BUDDIES….

ய்யரே எல்லாம் சரியா இருக்கா? இல்லை ஏதாவது தேவைபடுமா?”

Kaathal payanam

  1. “எல்லாம் சரியா இருக்கு... வெளியே போறேல்ன்னா அப்படியே வெத்தலை வாங்கிட்டு வர சொல்லுங்க...”

“அதான் தாம்பூலத்தில இருக்கே...”

“அது இருக்கு... இது எனக்கு கேட்குறேன்...”

“அது சரி... நிச்சயம் முடியுற வரை நீங்க வெத்தலை போட வேணாம்... சும்மா இருங்கோ..” என்று நக்கலாக அய்யரும் வெங்கட்டும் பேசிக்கொண்டிருந்தனர்.

“வாங்க அத்தை எப்போ வந்தீங்க... மாமா எங்க?”

“இதோ பின்னாடிதான் வறாரு.. காலைல தான் வந்தேன்.. நம்ம இன்பா வீட்டில தான் தங்கியிருந்தேன்...”

“அப்படியா சரி சரி வாங்க வந்து ஒக்காருங்க...” என்று கண்ணனும் துளசியும் மாறி மாறி வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

“அஹல்... அஹல்... எங்கம்மா இருக்க?”

“இதோ இங்க அத்தை...”

“அது சரி நீங்க ரெண்டு பேருமே இப்படி ரெடி ஆனா எங்க இருந்து கல்யாண பொண்ணுங்க ரெடி ஆகுறது” என்று கூறியவாரே எட்டி பார்த்தார். பட்டு புடவைகளிலேயே புது விதம் தான்... மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த சேலை கட்டி உடல் முழுதும் தாமரை கொடியோடு செய்யபட்டிருந்த பட்டணிந்து அந்த வண்ணத்திலேயே கற்கள் பதித்த அணிகலன்கள் அணிந்து இவள் திருமணம் ஆன பெண்தானா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு இருந்தாள் அஹல்... அதே போன்ற சேலையில் பச்சை மற்றும் ரோஸ் நிறத்தில் சிறு சிறு பூக்களும், அதை கொஞ்சி தழுவும்படி இரு அன்னமும் இருக்கும் படி கைவேலை கொண்ட பட்டணிந்து அஹல்யாவிற்கு குறைந்து போகாமல் இருந்தாள் அர்ச்சனா.

வந்த மாமியார்களும் சரி, அன்னைகளும் சரி அவர்களை கண்டு மெச்சித்தான் போனனர். “ஹப்பா கண்ணே பட்டுடும் போங்க... நீங்களே இப்படி ரெடி ஆனால் எங்க என்னோட மருமகள்ங்க” என்று கேட்டார் துளசி... மற்ற திருமணத்திற்கே பார்த்து பார்த்து தயாராகும் இவர்களா சளைத்தவர்கள் என்பது போல், இரு நீள கண்ணாடிகளின் முன் அமர்ந்து வெள்ளை புடவையில் அடர் பச்சை நிறத்தில் உடல் முழுதும் மெல்லிய கொடிக்கொண்டு இருக்க, பச்சை நிற borderஇல் சிவப்பு கற்கள் வைத்து நாதஸ்வரம், மத்தளம் என்று விழா கோலம் பூண்டது அனுவின் சேலையில்.. உடலில் உள்ள பச்சை நிற கொடிகளை இன்னும் எடுத்து காட்ட, அதே நிற கற்கள் பதிக்க பட்டிருந்தது... அவளிடம் மயங்கி கண்கள் தேஜுவிடம் திரும்ப, அவளை போன்றே அலங்காரத்தில், சொல்லிவைத்து ஒன்று போல் வாங்கிய புடவையில் ஆனால் வேறு நிறத்தில் இருந்தாள் அவள். வெள்ளை புடவையில் மஞ்சள் நிற border வைத்து உடல் முழுதும் கொடிபோன்று வேலைபாடு கொண்டிருக்க, மஞ்சள் நிற borderil சிவப்பு நிற கற்கள் கொண்டு நாதஸ்வரம், மத்தளம் என்று விழா கோலம் பூண்டது தேஜுவின் சேலையில்.. உடலில் உள்ள மஞ்சள் நிற கொடிகளை இன்னும் எடுத்து காட்ட, அதே நிற கற்கள் பதிக்க பட்டிருந்தது...

அதே பொருத்ததில் செய்த அணிகலன்கள் அணிந்து இன்னும் மெருகேத்திக்கொள்ள முகத்தில் எல்லை இல்லா ஆவலும் மகிழ்ச்சியும் தெரிந்தது இருவருக்கும். திரும்பும் போதெல்லாம் புடவை ஜொலிக்க, அதோடு சேர்ந்து அவர்களும் ஜொலித்தார்கள். “அம்மா... அம்மா... என்ன எல்லாரும் இப்படி ஒரஞ்சு போய் நிக்குரிங்க? நல்லா இருக்கா? இன்னும் ஏதாவது மிஸ் ஆகுதா?” என்று தங்களையே சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு கேட்டனர் இருவரும். அவர்கள் வார்த்தையில் சிரித்த பெரியவர்கள்... “இதுக்கு மேலையும் நீங்க ஏதாவது செஞ்சிங்கனா என் பசங்கள என்னால கட்டுபடுத்த முடியாதும்மா அப்பறம் இப்பயே தாலி கட்டி honeymoon கூட்டிட்டு போய்டுவாங்க ஜாக்ரதை... அப்பறம் எடுத்த புடவையெல்லாம் வீணா போயிடும்” என்று கிண்டல் செய்து துளசி சிரிக்க, வெட்கம் எனும் போர்வை இருவருக்கும் துணையாய் வந்து தழுவிக்கொண்டது.

“சரி சரி வாங்க” என்று அவசரப்படுத்த அய்யர் கூப்பிடும் நேரத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் மேடைக்கு போக எத்தனிக்க (இருங்க இருங்க மாப்பிள்ளைகள பார்க்க வேண்டாமா??? வாங்க முதல்ல அங்க போகலாம்...) அளவெடுத்து செதுக்கினார் போல உடல் கொண்ட மாப்பிளைகளுக்கு தேர்ந்தெடுத்து தைத்து அணிந்து இருந்தனர் ஷர்வானியில் பாதி.. பட்டு வேஷ்டியை பிராமணர் திருமணம் போல் கட்டிக்கொள்ள அது வேஷ்டியா அல்லது pantஆ என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது தான்.. அந்த பட்டு வேஷ்டிகளுக்கு ஏற்ற ஜிப்பாக்கள்.. (ஜிப்பவானு... யோசிக்ககூடாது) தன்னில் பாதி ஆனவளின் உடை நிறத்திற்கு எதுவாக அடர் பச்சை நிறத்தில் தொடை வரை தொட்டு முழுக்கை சட்டைபோல் வடிவமைக்க பட்டிருந்த ஜிப்பாவில் சிவப்பு கொடிகள் போல் கழுத்து வளைவில் மட்டும் சின்ன வேலைபாடு கொண்டு, கொஞ்சம் பளபளப்பாக மின்னினான் அஸ்வத். அவனை போலவே நிரஞ்ஜன் அவனது பாதி ஆனவளின் உடை நிறத்தில் அடர்ந்த சிகப்பில் மெல்லிய பட்டு வேலைப்பாடு கொண்டு அவனின் நிறத்தை இன்னும் ஏற்றி காட்டியது அந்த ஜிப்பா.. ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சி தங்காமல் இருவரும் தழுவிக்கொண்டனர்.

“மாப்ள congratsடா...”

“உனக்கும் தான்டா..” என்று மாறி மாறி அணைத்துக்கொள்ள அதை பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுனுக்கும் நவீனுக்கும் சிரிப்பாக இருந்தது.

“ஏன் ரெண்டு பேரும் இப்படி சிரிக்குரிங்க?”

“பின்ன இப்படி ஓவரா சீன் போட்டால் சிரிப்பு வராதா?”

“நீங்க கல்யாணத்தில் பண்ணின கூத்துக்கு நாங்க பரவா இல்லை மாமா” என்று கிடைத்த நேரத்தில் கிண்டல் செய்தான் நிரஞ்ஜன்.

“அது சரி... நீங்க ரெண்டு பேரும் ஏன் சம்பந்தமே இல்லாத கலர்ல ஜிப்பா போட்டுருக்கிங்க? அக்காங்க இந்த கலர் புடவை கட்டளையே...”

“ஆமாம்டா உன் அக்கா பச்சை கலர், பிங்க் கலர்னு போடுவாள் அதே கலர்ல நான் ஜிப்பா போட்டால் நாய் தான் துரத்தும்” என்று நவீன் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தான். “விடுங்க மாமா விடுங்க இந்த டார்க் ப்ளூ ஜிப்பா உங்களுக்கு கன பொருத்தமாக இருக்கு” என்று உண்மையாக பாராட்டினான் அஸ்வத்.

“அப்போ நீங்க மாமா?”

“ம்ம்ம்ம்.. மஞ்சள் கலர்ல போட முடியாது சிவப்பு போட்டா அப்பறம் நீ மாப்பிள்ளையா இல்லை நான் மாப்பிள்ளையான்னு ஒரே குழப்பமாக போயிடும் அதான் போடலை” என்று கொஞ்சம் நக்கல் கலந்த குரலில் கூறவும் நிரஞ்ஜனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“டேய் பாருடா... அங்கிள்க்கு இந்த ஆசை வேற இருக்கு, அர்ஜுன் அங்கிள் உங்களுக்கு இந்த நீல நிற ஜிப்பாவே போதும்... வாங்க வாங்க...”

“டேய் ரொம்ப பேசாதிங்க... ஏதோ நாங்க கொஞ்சம் கம்மியா ரெடி ஆனதால தான் நீங்க மாப்பிள்ளைன்னு தெரியுது” என்று பதிலுக்கு கிண்டல் செய்துகொண்டிருந்தனர் அர்ஜுனும் நவீனும்.       

(அச்சச்சோ நம்ம ரெண்டு முக்கியமான ஆட்களை விட்டுட்டோமே...)

“பாரு சீகா நம்மளை யாருமே கண்டுக்க மாட்டிங்குறாங்க...”

“கவல படாதண்ணா, நம்மள அவங்க கண்டுக்கல சோ நம்மளும் அவங்களை கண்டுக்க வேணா...”

“ம்ம்ம்ம்... சரி...”

“அச்சோ என் குட்டி செல்லங்க இங்க தனியா என்ன பண்ணுறாங்க?” என்று கொஞ்சியபடி அருகே வந்தார் நவீனின் தந்தை...

“ஒன்னும் பேசாதிங்க நாங்க கோவமா இருக்கோம் ஹ்ம்ம்” என்று அண்ணனும் தங்கையும் ஒருங்கே முகத்தை திருப்பிக்கொண்டனர்.

“அச்சோ அப்படி என் குட்டீஸ்க்கு கோவம் வர அளவுக்கு என்ன தப்பு பண்ணிட்டோம்?”

“யாருமே எங்கள கண்டுக்கல... பாருங்க சீகா எவ்ளோ அழகா ஆரஞ்சு கலர் பட்டுபாவட போட்டுருக்கா!!! அண்ணா கூட அஸ்வத் மாமா மாதிரியே குட்டி வேட்டி சட்ட கட்டிருக்கான் ஆனா யாருமே எங்கள கொஞ்சவே இல்ல...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.